search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குறுக்கு வழியை யாரும் பின்பற்ற வேண்டாம்-  அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
    X

    கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடந்த போலீஸ் உடல் தகுதி தேர்வை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    குறுக்கு வழியை யாரும் பின்பற்ற வேண்டாம்- அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

    • புதுவை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • முழுமையான கணினி முறையில் தேர்வு செய்யப்படுகிறது. ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், அகலம் தாண்டுதல் உள்ளிட்ட தேர்வுகள் கண்காணிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுவை போலீஸ் துறையில் காலியாக உள்ள 279 போலீஸ் பணியிடங்களுக்கு முதல் 31-ந் தேதி வரை ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. 279 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

    இதில் போலீஸ் பணிக்காக 14 ஆயிரத்து 173 பேரும், டிரைவர்களுக்கு 877 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான உடல்தகுதி தேர்வு கோரிமேடு போலீஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. வருகிற 31-ந் தேதி வரை உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது.

    இவர்களுக்கு உடல் எடை, உயரம், மார்பக அளவு எடுக்கப்படும். அதற்கு முழுமையான கணினி முறையில் தேர்வு செய்யப்படுகிறது. ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், அகலம் தாண்டுதல் உள்ளிட்ட தேர்வுகள் கண்காணிக்கப்பட்டு தேர்வு நடைபெறுகிறது.

    2 நாட்கள் 500 பேருக்கும், அதன் பிறகு ஒரு நாளைக்கு ஆயிரம் பேருக்கும் உடல் தகுதி தேர்வு நடக்கிறது.

    இதை ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகன், ஐ.ஜி. சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பெண் போலீஸ்சாருக்கான தேர்வு வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. 31-ந் தேதி டிரைவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடக்கிறுது. இந்த தேர்வுகள் மூலம் போலீசாராக 253 பேர், ஓட்டுநராக 26 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    புதுவையில் தொடங்கிய போலீஸ் தேர்வை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் தேர்வுக்கான ஓட்ட பந்தையத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நேர்மையான முறையில் தேர்வு நடைபெறும். எந்த ஒரு குறுக்கு வழியையும் யாரும் பின்பற்ற வேண்டாம். இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். தகுதியுடைய இளைஞர்களே தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த கட்டமாக 200 கடலோர காவல் படை, ஊர்காவல் படை வீரர்களும், காவல் துறையில்60 சப்-இன்ஸ்பெக்டர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×