search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்
    X

    கோப்பு படம்.

    தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம்

    • புதுவை கல்வித்துறையில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதா? புதிய கல்வி கொள்கையின் கீழ் எவ்வித பயிற்று மொழி நடைமுறையில் உள்ளதா?
    • கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கட்டண தொகையை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம் வருமாறு:-

    ஏ.கே.டி.ஆறுமுகம்(என்.ஆர்.காங்): புதுவை கல்வித்துறை யில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளதா? புதிய கல்வி கொள்கையின் கீழ் எவ்வித பயிற்று மொழி நடை முறையில் உள்ளது? தனியார் பள்ளிகளில் புதிய கல்வி கொள்கையின் கீழ் மாணவர் சேர்க்கை விதிகள் கடை பிடிக்கப் படுகிறதா? கட்டண தொகையை கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதா?

    அமைச்சர் நமச்சிவாயம்: புதுவை கல்வித்துறையில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுவை பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, பிரெஞ்சு ஆகிய மொழிகள் பயிற்று மொழிகளாக உள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கட்டண தொகையை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அரசு உதவி ெபறும், உதவி பெறாத தனியார் பள்ளிகளுக்கு 3 கல்வி யாண்டுக்கான 2022 முதல் 2025 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை கண்காணிக்க தனி குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவினர் பள்ளிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த ஆய்வறிக்கை மேல் உத்தரவுக்காக கட்டண குழுவில் வைக்கப்படும். கூடுதல் கட்டணம் பெறுவது தொடர்பாக பெற்றோர் களின் தனிப்பட்ட புகாரின்பேரில் ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தலைமையிலான குழுவால் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

    ஏ.கே.டி. ஆறுமுகம்: அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.

    Next Story
    ×