என் மலர்
புதுச்சேரி

அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பங்களிப்பு தரும்படி தனியார் நிறுவனங்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம் கடிதம் வழங்கிய காட்சி.
தனியார் சமூக பங்களிப்புடன் அரசு பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றம்-அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை
- தொழில் துறை அமைச்சர் நமச்சிவாயம் அழைப்பின் பேரில் புதுவையில் உள்ள 25-க்கும் மேற்பட்ட தனியார் பெரு நிறுவன நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
- அரசு பள்ளிகளை சமூக பங்களிப்பு நிதியின் கீழ் தரம் உயர்த்த நிறுவனங்கள் பங்களிப்பு தர வேண்டும் என பேசினார்.
புதுச்சேரி:
புதுவையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளையும் சமூக பங்களிப்பு பொறுப்பு திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் பள்ளியாக மாற்றுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
தொழில் துறை அமைச்சர் நமச்சிவாயம் அழைப்பின் பேரில் புதுவையில் உள்ள 25-க்கும் மேற்பட்ட தனியார் பெரு நிறுவன நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
புதுவையில் உள்ள அரசு பள்ளிகளை அடுத்த தலைமுறை கல்வி என்ற திட்டத்தின் மூலம் சமூகபங்களிப்பு நிதியின் கீழ் தரம் உயர்த்த வேண்டும் என தனியார் நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்து அமைச்சர் கடிதம் வழங்கினார்.
மேலும் அமைச்சர் பேசும்போது, புதுவையில் தொழில் தொடங்க ஏதுவான சூழல் உள்ளது. தொழில் தொடங்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளது. அரசு பள்ளிகளை சமூக பங்களிப்பு நிதியின் கீழ் தரம் உயர்த்த நிறுவனங்கள் பங்களிப்பு தர வேண்டும் என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சமூக பங்களிப்பு நிதி மண்டல மேலாளர் மதன் குமார், மேலாளர் மகேஷ்குமார், துணைத்தலைவர் மன்கோகன் லால்வாணி மற்றும் பலர் பங்கேற்றனர்.






