என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அமித்ஷா தலைமையில் தேச பாதுகாப்பு மாநாடு-அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு
    X

    மாநாட்டில் மத்திய மந்திரி அமித்ஷாவை அமைச்சர் நமச்சிவாயம் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற காட்சி.

    அமித்ஷா தலைமையில் தேச பாதுகாப்பு மாநாடு-அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு

    • தென் மாநிலத்திற்கான போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேச பாதுகாப்பு குறித்த பிராந்திய மாநாடு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தனியார் நட்சத்திர விடுதியில் நடந்தது.
    • முன்னதாக அமித்ஷாவை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் பூங்கொத்து வழங்கினார்.

    புதுச்சேரி:

    தென் மாநிலத்திற்கான போதைப்பொருள் கடத்தல் மற்றும் தேச பாதுகாப்பு குறித்த பிராந்திய மாநாடு கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தனியார் நட்சத்திர விடுதியில் நடந்தது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மாநாடு தொடங்கியது. மாநாட்டில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் புதுவை மாநிலம் சார்பாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார்.

    முன்னதாக அமித்ஷாவை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் பூங்கொத்து வழங்கினார்.

    தொடர்ந்து நடந்த மாநாட்டில், அமைச்சர் நமச்சிவாயம் புதுவையின் பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு ஒழுங்கு நடவடிக்கையில் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார்.

    Next Story
    ×