என் மலர்
புதுச்சேரி

போலீஸ் ஐ.ஜி. சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கிய காட்சி.
தேசிய 'கிக் பாக்சிங்' போட்டி-அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
- உப்பளம் ராஜீவ்கா ந்தி உள்விளையாட்டு அரங்கத் தில் தேசிய அளவிலான கராத்தே , கிக் பாக்சிங், தே க்வாண்டோ போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்கவிழா நடந்தது.
- இந்த போட்டிகளில் நூற்றுக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
புதுச்சேரி:
உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத் தில் தேசிய அளவிலான கராத்தே , கிக் பாக்சிங், தேக்வாண்டோ போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்கவிழா நடந்தது.
புதுவை மாநில அனைத் து விளையாட்டு வீரர்களின் நலச்சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத் தார். நிகழ்ச்சியில் ரிச்சர்ட் எம்.எல்.ஏ., விளையாட்டு சங்க கவுரவத்தலைவர் திருவேங்கடம், பா.ஜனதா பிரமுகர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போட்டிகளில் நூற்றுக்கணக்கான வீரர்கள் , வீராங்கனை கள் பங்கே ற்கிறார்கள். போட்டிகள் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் பொதுப்பிரிவுகளில் நடக்கிறது. போட்டிகளில் வெ ற்றி பெ றுபவர்களுக்கு பரிசளிப்பு விழா 4 மணிக்கு நடக்கிறது. போலீஸ் ஐ.ஜி. சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.






