என் மலர்
புதுச்சேரி

கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசிய காட்சி. அருகில் அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் சி.ஐ.ஐ. நிர்வாகிகள் பலர் உள்ளனர்.
முதலீட்டாளர்களுக்கு புதுவை அரசு பக்க பலமாக இருக்கும்-அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
- புதுவை சுற்றுலாவில் வளரும் போக்குகள் என்ற தலைப்பில் இந்திய தொழிலகங்கள் கூட்டம் நடைபெற்றது.
- ஐ.டி. தொழில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
புதுச்சேரி:
புதுவை சுற்றுலாவில் வளரும் போக்குகள் என்ற தலைப்பில் இந்திய தொழிலகங்கள் கூட்டம் (சி.ஐ.ஐ.) அண்ணா சாலை ரெசிடென்சி ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பேசியதாவது:
கடந்த 2017 முதல் 2019ம் ஆண்டு வரை முதலீட்டாளர்களுக்கு புதுவை அரசு ரூ.25 கோடி இன்சண்ட்டிவ் கொடுத்துள்ளது. இன்னும் 42 பேருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும். அதற்கான கோப்பும் நிதி துறைக்கு அனுப்பி உள்ளோம். நல்ல செய்தி விரைவில் கிடைக்கும். தொழில் முதலீட்டாளர்களுக்கு பக்க பலமாக இந்த அரசு இருக்கும். கரசூர் நிலங்களை தொழில் துறையினருக்கு கொடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பிரெஞ்ச் முதலீட்டாளர்களும் இடம் கேட்கிறார்கள். அதையும் பரிசீலிக்கிறோம். ஐ.டி. தொழில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதல் அமைச்சரை ஒரு குழு இதற்காக வந்து பார்த்துள்ளது. தொழில் செய்ய ஏதுவான மாநிலமாக, புதுவையை மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் சி.ஐ.ஐ. உடன் சேர்ந்து செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் சி.ஐ.ஐ. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






