search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbai Airport"

    மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து அந்த விமானம் தீவிரமாக சோதனையிடப்பட்டது. #IndiGO #BombThreat
    மும்பை:

    மும்பையில் இருந்து லக்னோவுக்கு இண்டிகோ பயணிகள் விமானம் இன்று காலை 6.05 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த  விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து விமான புறப்பாடு நிறுத்தப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, விமானம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில், சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கண்டறியப்படவில்லை.

    விமானம் பாதுகாப்பாக இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பிறகு, பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்டது. வெடிகுண்டு சோதனை காரணமாக சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


    இதுபற்றி இண்டிகோ செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “வேறு ஒரு தனியார்  விமானத்தில் வந்த பயணி, இண்டிகோ சோதனை மையத்திற்கு வந்து சில நபர்கள் இருக்கும் புகைப்படங்களைக் காட்டி, அந்த நபர்கள் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என்று கூறினார். இதையடுத்து வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. தகவல் தெரிவித்த அந்த பயணி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது” என்றார். #IndiGO #BombThreat
    ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் நேற்று இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. #AirIndiaStaff #AirIndiaStrike #MumbaiAirport
    மும்பை:

    மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றும் ஏர் இந்தியா ஒப்பந்த ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் நேற்று இரவு திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். சுமார் 400 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமான நிலைய பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    ஒப்பந்த ஊழியர்களின் திடீர் போராட்டம் காரணமாக ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து புறப்பட வேண்டிய பல்வேறு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பாங்காக் செல்லும் விமானம் கிட்டத்தட்ட 7 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. நள்ளிரவு 1.30 மணிக்கு  புறப்படவேண்டிய மும்பை-மேவார்க் விமானம் அதிகாலை 4.08க்கு புறப்பட்டுச் சென்றது.



    விமான பயணிகள் பரிசோதனை, சரக்குகள் ஏற்றி இறக்கும் பணி மற்றும் விமானத்தை சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட முக்கிய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலைமையை சரிசெய்ய ஏர் இந்தியா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #AirIndiaStaff #AirIndiaStrike #MumbaiAirport
    ஓடுபாதை பராமரிப்பு பணிகளுக்காக மும்பை விமான நிலையம் இன்று 6 மணி நேரம் மூடப்படுகிறது. இதனால் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #MumbaiAirport
    மும்பை:

    மும்பை விமான நிலையத்தில் அக்டோபர் மற்றும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இரண்டு கட்டங்களாக ஓடுபாதை பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக இன்று பராமரிப்பு பணி மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வைர விமான நிலையம் மூடப்படுகிறது.



    பராமரிப்பு பணிகளுக்காக பிரதான ஓடுபாதை மற்றும் இரண்டாம் நிலை ஓடுபாதை மூடப்படுவதால் விமான சேவை பாதிக்கப்படும். ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    பராமரிப்பு பணி தொடர்பாக ஏற்கனவே விமான நிலையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ரத்து செய்யப்பட்ட மற்றும் நேரம் மாற்றியமைக்கப்பட்ட விமானங்கள் தொடர்பாக அந்தந்த விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளது. இணையதளம் மூலமாகவும் பயணிகள் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

    மும்பை விமான நிலையத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 1000 விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. #MumbaiAirport
    விமானத்தில் காற்றழுத்தத்தால் அதிக ரத்த இழப்பை சந்தித்த பயணி தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ரூ.30 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என கூறியுள்ளார். #JetFlight #MumbaiAirport #JetFlight #MumbaiAirport
    மும்பை:

    மும்பையில் இருந்து ஜெய்ப்பூருக்கு நேற்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்றது.

    விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

    விமானம் வானில் பறக்கும் போது, விமானத்துக்குள் காற்றழுத்தத்தை சீராக வைத்திருப்பதற்கு இரு பொத்தான்கள் உண்டு. அந்த பொத்தான்களை பைலட்டுகள் இயக்காமல் விட்டதே பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட காரணம் என்று தெரிய வந்தது.

    அடுத்த சில நிமிடங்களில் சுமார் 30 பயணிகளின் காது, மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. உடனே அவர்களுக்கு விமான பணிப்பெண்கள் மாஸ்க் கொடுத்தனர். என்றாலும் பெரும்பாலான பயணிகள் தலைவலி, ரத்த கசிவால் கடுமையாக துடித்தனர்.

    இதையடுத்து அந்த விமானம் மீண்டும் மும்பை திரும்பி வந்தது. பயணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். ரத்தக் கசிவால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அன்கூர் கலா, அன்வே ‌ஷன்ராய், முகேஷ் சர்மா, விகாஸ் அகர்வால், தாமோ தர்தாஸ் ஆகிய 5 பயணிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு வாரத்துக்கு விமான பயணம் செய்யக் கூடாது என்று டாக்டர்கள் அவர்களிடம் அறிவுறுத்தி நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்தனர்.

    இந்த நிலையில் காது - மூக்கில் இருந்து அதிக ரத்த இழப்பை சந்தித்த பயணி கலா, ஜெட் ஏர்வேஸ் மீதும் அதன் ஊழியர்கள் மீதும் கடும் குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்பட்ட பாதிப்புக்கு 30 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.



    இதையடுத்து அந்த விமானத்துக்குள் என்ன நடந்தது என்பது பற்றி விசாரிக்க ஜெட்ஏர்வேஸ் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. மத்திய மந்திரி சுரேஷ்பிரபுவும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். #JetFlight #MumbaiAirport
    மும்பையில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கேபின் அழுத்தத்தால் பயணிகளின் மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் வழிந்து உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #JetFlight #MumbaiAirport
    புதுடெல்லி:

    மும்பையில் இருந்து இன்று காலை ஜெய்ப்பூருக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 166 பயணிகளுடன் புறப்பட்டது. டேக் ஆப் ஆன சிறிது நேரத்திலேயே மீண்டும் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. பயணிகள் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டனர். இதனால் விமான நிலையத்தில் திடீர் பரப்பரப்பு ஏற்பட்டது.

    விமானம் புறப்படும் போது, விமான கேபின் அழுத்தத்தை பராமரிக்கும் சுவிட்சை ஆன் செய்ய விமான சிப்பந்தி மறந்துவிட்டதால், அதிக அழுத்தம் காரணமாக 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காது மற்றும் மூக்கு வழியாக இரத்தம் வழிந்துள்ளது.  சில பயணிகளுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மும்பை விமான நிலையத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.


    இந்த சம்பவம் தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. விமானத்தினுள் உள்ள காற்றின் அழுத்தத்தை பரிசோதிக்காமல் விமானத்தை இயக்கியதே பயணிகளின் உடல் உபாதைகளுக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #JetFlight #MumbaiAirport
    துபாயில் இருந்து இன்று மும்பை வந்து சேர்ந்த விமானத்தின் கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த 8 தங்கக் கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். #MumbaiAirport #Rs26lakhsgold
    மும்பை:

    துபாயில் இருந்து இன்று மும்பை வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ரகசியமாக தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    இதையடுத்தும், அந்த விமானத்தில் வந்த பயணிகள் தரையிறங்கியதும் தீவிரமாக அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இதில் பெரிதாக ஒன்றும் பிடிபடாததால் அவர்கள் வந்த விமானத்தின் இருக்கை மற்றும் கழிப்பறைகளை அதிகாரிகள் துல்லியமாக சோதனையிட்டனர்.

    அப்போது,  கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த 8 தங்கக் கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றின் உள்நாட்டு சந்தை மதிப்பு சுமார் 26 லட்சம் என தெரிவித்த அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர். #MumbaiAirport #Rs26lakhsgold
    மும்பையில் இருந்து டெல்லிக்கு கடத்த இருந்த ரூ.2½ கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #MumabiAirport #Cocaine
    புதுடெல்லி:

    எத்தியோப்பியா நாட்டில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது பிரேசில் நாட்டை சேர்ந்த பெரியா நசிமென் என்பவரை சந்தேகத்தின் பேரில் தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அவர் கொண்டு வந்த பையில் மாத்திரை வடிவில் 457 கிராம் கோகைன் என்ற போதைப்பொருள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.2½ கோடி ஆகும்.

    மும்பையில் இருந்து டெல்லிக்கு அவர் விமானத்தில் செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் அதை கடத்தி வந்த பிரேசிலை சேர்ந்தவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.  #MumabiAirport #Cocaine  #tamilnews 
    மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் செக்-இன்கள் பணியாளர்களால் கைமுறையாக செய்து வருகின்றனர். இதனால், விமானங்களின் புறப்பாடு தாமதமாகியுள்ளது. #MumbaiAirport
    மும்பை:

    நாட்டின் இரண்டாவது பிஸியான மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் புறப்பாடு பகுதிகளில் உள்ள கணினிகளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, பயணிகளை செக்-இன் செய்வது பணியாளர்களால் கைமுறையாக செய்யப்படுகிறது.

    இதன் காரணமாக பயணிகள் அவதியடைந்துள்ளனர். சில விமானங்களின் புறப்பாடு ஒரு மணிநேரம் தாமதமாகியுள்ளது. கோளாறை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    மும்பை விமான நிலையத்தில் மழை பெய்துகொண்டிருந்தபோது தரையிறங்கிய விமானம், ஓடுபாதையை விட்டு தாண்டிச் சென்று புல்வெளியில் தரையிறங்கியது. #MumbaiRains #MHRains
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தில் ஜூன் மாதம் முதல் பருவ மழை பெய்து வருகிறது. இந்த மழை தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பை, அதன் புறநகர் பகுதிகளில் நெடுஞ்சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில் நிலையங்கள், உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து அடியோடு முடங்கியுள்ளது.

    இதேபோல் விமான நிலையம் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. இந்த விமான நிலையம் இப்போது படகுகள் செல்லும் துறைமுகமாக மாறியிருப்பதாக டுவிட்டரில் சிலர் பதிவிட்டுள்ளனர்.

    மழை பெய்துகொண்டிருந்தபோது, விஜயவாடாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஆனால், மழை காரணமாக ஓடுபாதை அதிக அளவில் வழுக்கியது. இதனால் விமானம் ஓடுபாதையை தாண்டி 10 அடி தூரம் சென்று புல்வெளியில்  நின்றது. எனினும் விமானத்திற்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. எனவே, அதில் இருந்த 82 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ஓடுபாதை இந்த அளவுக்கு வழுக்கும் நிலைமையில் வைத்திருந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.



    நாலா சோபாரா மற்றும் வசாய் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தண்டவாளத்தில் மழைநீர் 2 மீட்டர் உயரத்திற்கு தேங்கியதால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின்னர் படகுகள் மூலம் பயணிகள் மீட்கப்பட்டனர். நாலா சோபாரா ரெயில் நிலையத்தில் சிக்கிய பயணிகளை மீட்க கடற்படை வீரர்கள் இன்று வரவழைக்கப்பட்டுள்ளனர். #MumbaiRains #MHRains
    அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால், மும்பை விமான நிலையத்தில் முழு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. #AirIndia #MumbaiIndia
    மும்பை:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று மாலை மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இரவு 8.15 மணிக்கு விமானம் தரையிறங்க முயன்ற போது, பிரேக் பகுதியில் உள்ள ஹைட்ராலிக் இயங்கவில்லை. இதனால், விமான நிலையத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.

    தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 15 நிமிடங்களுக்கு பின்னர் விமானம் பத்திரமாக தரையிறங்கியதை அடுத்து, விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பியது. 
    ×