என் மலர்
நீங்கள் தேடியது "cocaine"
- எத்தியோப்பியாவில் இருந்து 2 இந்தியரால் சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளது.
- மும்பை மற்றும் டெல்லியில் இயங்கி வரும் சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் உடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நூதன முறையில் கடத்தி வரப்பட்ட கொகைனை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சுமார் ரூ.60 முதல் 70 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ கிராம் கொகைன் எத்தியோப்பியாவில் இருந்து 2 இந்தியரால் சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகம் வராமல் இருக்க, Ferrero Rocher என்ற பிரபல வெளிநாட்டு சாக்லேட் உடைய தங்க நிற தாளில் கொக்கைன் சுற்றப்பட்டு பெட்டிகளில் கடத்தி கடத்தி வரப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முதற்கட்ட விசாரணையில் கடத்துவரப்பட்ட கொகைன், மும்பை மற்றும் டெல்லியில் இயங்கி வரும் சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் உடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது. தற்போது பிடிபட்டுள்ள கொகைன் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட இருந்ததும் தெரியவந்துள்ளது.

அண்மையில் இதேபோல் வெளிநாட்டு சாக்லேட் போர்வையில் டெல்லிக்கு கடத்தி வரப்பட்ட 5.4 கிலோகிராம் கோகைன் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கொகோ என்கிற தாவரத்தில் இருந்துதான் கொக்கையின் போதைப்பொருள் தயாரிக்கப்படுகிறது.
- கொக்கைன் போதைப்பொருளை மூன்று விதமாக பயன்படுத்துகிறார்கள்.
தமிழ் திரை உலகில் பிரபல நடிகராக இருந்து வரும் ரோஜா கூட்டம் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்த குற்றத்திற்காக கைது செய்யப் பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொகைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்களை இவர் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து இவரது பின்னணியில் இருப்பவர்களை பிடிப்பதற்கு போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள்.
இந்த இரண்டு போதைப்பொருள்களும் சென்னை மாநகரில் அதிக அளவில் புழக்கத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது.
சென்னையில் வார இறுதி நாட்களில் பண்ணை வீடுகள் மற்றும் நடன அரங்குகளில் நடைபெறும் விருந்துகளில் மதுவுடன் கொகைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்கள் இரண்டுமே சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
இளைஞர்களின் உடல் நலனை பாதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட இந்த இரண்டு போதைப்பொருட்களும் சென்னை மாநகரத்தில் எப்படி ஊடுருவி வருகின்றன?
அவற்றின் பின்னணி என்ன என்பது பற்றிய பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம் வருமாறு:-
அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட கொகோ என்கிற தாவரத்தில் இருந்துதான் கொக்கையின் போதைப்பொருள் தயாரிக்கப்படுகிறது. கொக்கைன் இலைகளை பறித்து நன்றாக காய வைத்து பின்னர் அதனை பொடியாக்கி கொக்கைன் போதைப்பொருளாக பயன்படுத்துகிறார்கள்.
அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளின் பழங்குடி மக்கள் இதனை அதிக அளவில் தொடக்க காலத்தில் மயக்க மருந்துக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இது நாளடை வில் போதைப்பொருட்களாக பயன்படுத்த தொடங்கியதும் பல்வேறு நாடுகளும் தடை விதித்தன.
இருப்பினும் தடையை மீறி கொக்கையின் போதைப்பொருள் சர்வதேச அளவில் மிகப்பெரிய கடத்தல் சந்தையாகவே மாறி இருக்கிறது. அந்த வகையில் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது.
அந்த வகையில் நைஜீரியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சென்னைக்கு சுற்றுலா விசாக்களில் வரும் வாலி ர்கள் கொகைன் போதைப்பொருளை கடத்தி வந்து இங்குள்ள போதைப்பொருள் விற்பனையாளர்கள் மூலமாக படித்த இளைஞர்கள் மற்றும் திரைப்பிரபலங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்த கொக்கைன் போதைப்பொருளை மூன்று விதமாக பயன்படுத்துகிறார்கள். பவுடராக மூக்கு வழியாக நுகர்ந்தும், பல் ஈறுகளுக்கு இடையில் வைத்தும் போதை ஏற்றுகிறார்கள்.
அதே நேரத்தில் கொகைனை ஒரு சில்வர் பேப்பரில் வைத்து அதன் கீழே லைட்டரில் தீயை காட்டி அதன் மூலமாக வெளியேறும் புகையை நுகர்ந்தும் கொக்கைன் போதையை அனுபவிக்கிறார்கள். பவுடர் வடிவிலான கொகைன் வெள்ளைப் பொடி போன்ற தோற்றத்தில் இருக்கும். இதனை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்துவார்கள்.
அடுத்ததாக புகைக்கக்கூடிய வகையில் சற்று திடப்பொருளாக கொக்கையினை மாற்றியும் பயன்படுத்துகிறார்கள் பேக்கிங் சோடா அல்லது அம்மோனியாவுடன் கலந்து இதனை உருவாக்குகிறார்கள். இதனை சூடுபடுத்தி புகையாக உறிஞ்சுவதன் ரத்தத்தில் கொகைன் விரைவாக கலந்து அதிக போதையை ஏற்படுத்துகிறது.
இதேபோன்று சில ரசாயனங்களை கொண்டு வீடுகளிலேயே தயாரிக்கப்படும் மெத்த பெட்டமைன் போதைப்பொருளும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு போதைப்பொருட்களையும் தான் நடிகர் ஸ்ரீகாந்த் அதிக அளவில் வாங்கி பயன்படுத்தி இருக்கிறார்.
இவரைப் போன்று பிரபலங்கள் பலரும் கொக்கைன் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்களை அதிக அளவில் பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி உள்ளன.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் தவறான பழக்க வழக்கங்கள் அதிகமாகவே இருந்து வருகிறது.
அந்த வகையில் வார இறுதி நாட்களில் அவர்கள் பாலியல் அழகிகளை தேடிச் சென்று இன்பம் அனுபவிப்பதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் அந்த விஷயத்தில் மிகவும் வீக்கான சினிமா பிரபலங்கள் பலரும் கொக்கையின் மற்றும் மெத்த பெட்டமைன் போதைப்பொருட்களை நீண்ட நேர பாலியல் இன்பத்துக்காகவும் அதிக அளவில் பயன்படுத்தி வருவதாகவும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளன.
ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து மேலும் பல திரைபிரபலங்கள் இந்த வழக்கில் சிக்கும்போது போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையின் பின்னணியில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- அதிகாரிகள் அவரை விமான நிலைய போலீசாரிடம் ஓப்படைத்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை:
மும்பை விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் பயணி ஒருவர் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி வெளிநாட்டில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது, உகாண்டா நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் பதற்றத்துடன் காணப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரது உடைமைகளில் சோதனை நடத்தினர். இதில் எந்த பொருளும் சிக்காததால் அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இதில், அவர் போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்ததாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரை விமான நிலைய போலீசாரிடம் ஓப்படைத்தனர்.
போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருளை கேப்சூல் வடிவில் விழுங்கி கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் கடந்த 13-ந்தேதி இனிமா கொடுத்து அவரது வயிற்றில் இருந்த 785 கிராம் கோகைன் என்ற போதைப்பொருளை வெளியே எடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
இதன் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடியே 85 லட்சம் ஆகும். இது குறித்து உகாண்டா நாட்டை சேர்ந்த பயணியை கைது செய்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இதே மாவட்டத்தில் சர்வதேச சந்தையில் ரூ.800 கோடி மதிப்புள்ள 80 கோக்கேன் பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றியிருந்தனர்.
- சுமார் ரூ.130 கோடி மதிப்புள்ள 13 பாக்கெட் கொக்கைன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுள்ளது.
குஜராத்தில் ரூ.130 மதிப்புள்ள போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள காந்திதாம் நகரின் அருகே மிதி ரோகார் கிராமத்தில் வைத்து சர்வதேச சந்தையில் சுமார் ரூ.130 கோடி மதிப்புள்ள 13 பாக்கெட் கொக்கைன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இதே மாவட்டத்தில் சர்வதேச சந்தையில் ரூ.800 கோடி மதிப்புள்ள 80 கோக்கேன் பாக்கெட்டுகளை போலீசார் கைப்பற்றியிருந்தனர். அதுதொடர்பான விசாரணை நடந்து வந்த நிலையில் தற்போது இரண்டாவது அதிகபட்ச கொக்கைன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதுதொடர்பான விசாரணை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது

இந்தியாவில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கலாச்சாரத்துக்கு மத்தியில் நிழலுலகில் செயல்பட்டுவரும் வரும் சர்வதேச போதைப்பொருள் மாஃபியா இந்தியாவிலும் சந்தையை திறக்கத் தொடங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கியையும், கோகைன் உள்ளிட்ட பொருட்களைக் கண்டெடுத்தார்.
- எங்களது குடும்பம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது, ஒரு தந்தையாக எனது மகனுக்கு எப்போதும் பக்கத்துணையாக நிற்பேன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கி வைத்திருந்த வழக்கில் சிக்கி நீதிமன்றத்துக்கு நடையாக நடந்து வருகிறார். மூளை கேன்சரால் கடந்த 2015 ஆம் ஆண்டு உயிரிழந்த ஜோ பைடனின் இளைய மகன் பீயு பைடனின் மாணவி கடந்த 2018 ஆம் ஆண்டு ஹண்டர் பைடனின் காரில் இருந்து கோல்ட் ரிவால்வர் துப்பாக்கியையும், கோகைன் உள்ளிட்ட போதைப்பொருட்களையும் கண்டெடுத்தார்.
இதுதொடர்பாக அவர் போலீசுக்கு வாக்குமூலம் அளித்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. போதைப்பழக்கத்துக்கு அடிமையான அதிபரின் மகன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தார் என்பதே இந்த வழக்கு ஊடக வெளிச்சம் பெற போதுமான காரணாமாக அமைந்தது.
அதன்படி அமெரிக்காவில் அதிகம் பேசப்பட்டு வரும் இந்த வழக்கில் ஹண்டர் பைடன் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டால் அவரை மன்னிக்கப் போவதில்லை என்று ஹண்டரின் தந்தையும் அமெரிக்க அதிபருமான ஜோ பைடன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நான் அதிபராக இருந்தாலும் ஒரு தந்தையாக, எனது மகன் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன், எங்களது குடும்பம் நிறைய கஷ்டங்களை சந்தித்துள்ளது, ஒரு தந்தையாக எனது மகனுக்கு எப்போதும் பக்கத்துணையாக நிற்பேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் உள்ள அதிபரின் மகன் மீது குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். நவம்பர் மாதம் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதர்க்கனா தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஒரு கிராம் போதைப்பொருள் வைத்திருந்ததாக போலீசார் கைது செய்துள்ளனர்.
- ஆஸ்திரேலியா ஒலிம்பிக் கமிட்டி கைது செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளது.
போதைப்பொருள் விற்பனையாளரிடம் இருந்து கோகைன் போதைப்பொருள் வாங்கியதாக ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர் டாம் கிரேக் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணி காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைந்தது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு (இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு) கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசார் அவரை கைது செய்தபோது ஒரு கிராம் போதைப்பொருள் கையில வைத்திருந்தார். புதன்கிழமை காலை வரை அவரை காவலில் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாத்திரை வடிவிலான போதைப்பொருள், கோகைன் போதைப்பொருள் வைத்திருந்த விற்பனையாளர் (வயது 17) கைது செய்யப்பட்டுள்ளார்.
விற்பனையாளரிடம் அதிகப்படியான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் போலீசார் இந்த வழக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்ட டாம் கிரேக், புதன்கிழமை போலீஸ் காவலில் வைக்கப்பட்டார் என்பது ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கமிட்டி பதில் கூற மறுத்துள்ளது.
- டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.7,500 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்
- கொக்கைன் கடத்தி வந்த வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
டெல்லி ரமேஷ் நகர் பகுதியில் அமைந்துள்ள கிடங்கில் இருந்து ரூ.2000 கோடி மதிப்புள்ள சுமார் 200 கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருட்களை டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸ் இன்று பறிமுதல் செய்தனர்.
கொக்கைன் கடத்த பயன்படுத்தப்பட்ட காரில் ஜிபிஎஸ் பொருத்தி கண்காணித்து போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் சிற்றுண்டி பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர் .
டெல்லிக்கு கொக்கைன் கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
அக்டோபர் 2 ஆம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள மஹிபால்பூரில் உள்ள ஒரு குடோனில் இருந்து 5,620 கோடி ரூபாய் மதிப்பிலான 560 கிலோ கோகைன் மற்றும் 40 கிலோ ஹைட்ரோபோனிக் மரிஜுவானா பறிமுதல் செய்யப்பட்டது.
துஷார் கோயல் (40), ஹிமான்சு குமார் (27), அவுரங்கசீப் சித்திக் (23), பரத் குமார் ஜெயின் (48) ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டனர், மேலும் 3 பேர் அமிர்தசரஸ், சென்னை மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ஹாபூரில் இருந்து கைது செய்யப்பட்டனர்.
5,620 கோடி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துபாய் தொழிலதிபர் வீரேந்தர் பசோயாவுக்கு எதிராக டெல்லி காவல்துறை லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
டெல்லியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.7,500 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது
- சுமார் 2.3 டன் அளவிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- இந்த விவகாரத்தில் 2 சிறுவர்கள் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து கடற்கரையில் பழுதடைந்த படகு ஒன்றில் இருந்து 2.3 டன் அளவிலான போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த விவகாரத்தில் 2 சிறுவர்கள் உட்பட 13 பேரை கைது செய்துள்ள போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு இந்திய ரூபாயில் 4,157 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
- மும்பை விமான நிலையத்தில் ரூ.9.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த நபரை சுங்கத்துறையினர் கைதுசெய்தனர்.
- போதைப்பொருள் மதிப்பு 9.8 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அடிஸ் அபாபாவில் இருந்து மும்பை வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 980 கிராம் கோகோயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதையடுத்து அவரிடம் இருந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மதிப்பு 9.8 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொலம்பிய தலைநகர் பொகோடாவில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 199 பயணிகள் பயணம் செய்தனர்.
விமானம் மெக்சிகோ நாட்டின் சொனேரா மாகாணத்தின் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்த ஜப்பானைச் சேர்ந்த 42 வயது பயணி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

மனிதர்களின் உடலுக்குள் போதைப் பொருளை மறைத்து கடத்தும் தந்திரத்தை, போதை மருந்து கடத்தல் கும்பல் பரவலாக கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
டெக்சாஸில் உள்ள ஹோஸ்டான் நகரில் உள்ள சிறைச்சாலைக்கு வாழைப்பழங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. 50--க்கும் மேற்பட்ட பெட்டிகளில் வந்த வாழைப்பழங்களை சிறைக்காவலர்கள் வாங்கி பெட்டிக்குள் பரிசோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது வாழைப்பழங்களுக்கு கீழே வெள்ளை நிற பொடி போன்ற பொட்டலங்களை கண்ட அதிகாரிகள், சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து அனைத்து பெட்டிகளிலும் சோதனை நடத்தியபோது, சுமார் 45 பெட்டிகளில் இருந்து 540 கொகைன் எனும் போதைப்பொருள் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் மதிப்பு சுமார் 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Cocaine #Texas
எத்தியோப்பியா நாட்டில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது பிரேசில் நாட்டை சேர்ந்த பெரியா நசிமென் என்பவரை சந்தேகத்தின் பேரில் தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அவர் கொண்டு வந்த பையில் மாத்திரை வடிவில் 457 கிராம் கோகைன் என்ற போதைப்பொருள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.2½ கோடி ஆகும்.
மும்பையில் இருந்து டெல்லிக்கு அவர் விமானத்தில் செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் அதை கடத்தி வந்த பிரேசிலை சேர்ந்தவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். #MumabiAirport #Cocaine #tamilnews






