என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரூ.70 கோடி போதை மிட்டாய்.. வெளியே வெளிநாட்டு சாக்லேட் - உள்ளே கொகைன் - சென்னையில் சிக்கிய டெல்லி சரக்கு
- எத்தியோப்பியாவில் இருந்து 2 இந்தியரால் சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளது.
- மும்பை மற்றும் டெல்லியில் இயங்கி வரும் சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் உடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நூதன முறையில் கடத்தி வரப்பட்ட கொகைனை அதிகாரிகள் கைப்பற்றினர்.
சுமார் ரூ.60 முதல் 70 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ கிராம் கொகைன் எத்தியோப்பியாவில் இருந்து 2 இந்தியரால் சென்னைக்கு கடத்தி வரப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சந்தேகம் வராமல் இருக்க, Ferrero Rocher என்ற பிரபல வெளிநாட்டு சாக்லேட் உடைய தங்க நிற தாளில் கொக்கைன் சுற்றப்பட்டு பெட்டிகளில் கடத்தி கடத்தி வரப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முதற்கட்ட விசாரணையில் கடத்துவரப்பட்ட கொகைன், மும்பை மற்றும் டெல்லியில் இயங்கி வரும் சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்க் உடன் தொடர்புடையது என்று தெரியவந்துள்ளது. தற்போது பிடிபட்டுள்ள கொகைன் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட இருந்ததும் தெரியவந்துள்ளது.

அண்மையில் இதேபோல் வெளிநாட்டு சாக்லேட் போர்வையில் டெல்லிக்கு கடத்தி வரப்பட்ட 5.4 கிலோகிராம் கோகைன் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.






