என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி போதைப்பொருள் பறிமுதல்
    X

    மும்பை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி போதைப்பொருள் பறிமுதல்

    மும்பையில் இருந்து டெல்லிக்கு கடத்த இருந்த ரூ.2½ கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #MumabiAirport #Cocaine
    புதுடெல்லி:

    எத்தியோப்பியா நாட்டில் இருந்து மும்பைக்கு நேற்று முன்தினம் ஒரு விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அப்போது பிரேசில் நாட்டை சேர்ந்த பெரியா நசிமென் என்பவரை சந்தேகத்தின் பேரில் தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அவர் கொண்டு வந்த பையில் மாத்திரை வடிவில் 457 கிராம் கோகைன் என்ற போதைப்பொருள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.2½ கோடி ஆகும்.

    மும்பையில் இருந்து டெல்லிக்கு அவர் விமானத்தில் செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் அதை கடத்தி வந்த பிரேசிலை சேர்ந்தவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.  #MumabiAirport #Cocaine  #tamilnews 
    Next Story
    ×