மும்பை விமான நிலையத்தில் ரூ.9.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்- பயணி கைது

மும்பை விமான நிலையத்தில் ரூ.9.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தி வந்த நபரை சுங்கத்துறையினர் கைதுசெய்தனர்.போதைப்பொருள் மதிப்பு 9.8 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் ரூ.9.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்- பயணி கைது
Published on

எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அடிஸ் அபாபாவில் இருந்து மும்பை வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 980 கிராம் கோகோயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதையடுத்து அவரிடம் இருந்த போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மதிப்பு 9.8 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள நபர் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com