search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MGR Century festival"

    நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, எல்லைகள் மறுசீரமைப்பு பணிகள் முடிந்ததும் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். #MGRCenturyFestival #Edappadipalaniswami
    நாகர்கோவில்:

    தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
     
    ஒகி புயலில் இறந்த, மாயமான 136 மீனவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது, ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதி, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுக பணி முடியும் நிலையில் உள்ளது. 

    விவசாய பயிரிழப்புகளுக்கு ரூ.36 கோடி வழங்கப்பட்டது. குளச்சலில் ரூ.96.2 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும், சின்ன முட்டம் துறைமுகம் மேம்படுத்தப்படும்.



    தற்போது எல்லைகள் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிந்ததும் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர், ஆனால் ஒருசிலர் தேவையில்லாமல் விமர்சனம் செய்கின்றனர்.

    எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை, விமர்சனங்கள் அனைத்தும் அவர்களுக்கு திரும்ப செல்லும்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லும் குற்றச்சாட்டுகளில் ஒன்று கூட உண்மையல்ல. பொய் பேசுவதற்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் அது ஸ்டாலினுக்கே பொருந்தும் என அவர் அறிவித்தார். #MGRCenturyFestival #Edappadipalaniswami
    நாகர்கோவில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று பங்கேற்றனர். #MGRCenturyFestival #Edappadipalaniswami #ADMK
    நாகர்கோவில்:

    தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    விழாவில் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி குமரி மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் அலங்கார வளைவுகளும், கொடி தோரணங்களுமாக காட்சி அளிக்கின்றன.

    விழா நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பந்தலின் முன்பகுதியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. விழா பந்தலின் முகப்பு பகுதியும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது.



    விழாவையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரையில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல நாகர்கோவில் நகர் முழுவதும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது.

    நூற்றாண்டு விழா நடைபெறும் மைதானத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. #MGRCenturyFestival #Edappadipalaniswami #ADMK
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் ஜெயிலில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 30 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
    கொண்டலாம்பட்டி:

    அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பிறந்த நாள் மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவு விழா சென்னையில் நடக்கிறது.

    இந்த நிலையில், எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து சேலம் மத்திய ஜெயிலில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 30 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது பெயர் விபரம் வருமாறு:-

    1.அய்யனார்
    2.செல்வம்
    3.ஈஸ்வரன்
    4.சேகர்
    5.மாது
    6.மணிகண்டன்
    7.சின்னதுரை
    8.சுந்தரம்
    9.அய்யனார்
    10.வரதராஜன்
    11.ஜோசு ஆசீர் சிங்
    12.ரவி என்கிற ரவிக்குமார்
    13.சுபாஷ்
    14.பிரகாஷ்
    15.சண்முகம்
    16.சின்னதம்பி
    17.விஜயசங்கர்
    18.நடேசன்
    19.குப்புசாமி
    20.பத்மநாபன்
    21.பெரியண்ணன்
    22.புதராசு
    23.மண்ணாதன்
    24.மணியசாகம்
    25.அண்ணாமலை
    26.ராஜூ
    27.பெரியண்ணன்
    28.மாது
    29.அபிமன்யூ
    30.திம்மராயன்
    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானத்தில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
    நாகர்கோவில்:

    தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நாளை (22-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

    விழாவில் 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். மேலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி பேசுகிறார்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி குமரி மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் அலங்கார வளைவுகளும், கொடி தோரணங்களுமாக காட்சி அளிக்கின்றன.

    விழா நடைபெறும் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பந்தலின் முன்பகுதியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. விழா பந்தலின் முகப்பு பகுதியும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை குமரி மாவட்டம் வருகிறார். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வரும் அவர் பின்னர் அங்கிருந்து காரில் நாகர்கோவில் வருகிறார்.

    வரும் வழியில் அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். இரவில் நாகர்கோவில் சுற்றுலா மாளிகையில் தங்கும் எடப்பாடி பழனிசாமி, நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்கிறார்.

    முன்னதாக நேற்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் நாகர்கோவில் வந்து விழா மைதானத்தை பார்வையிட்டு ஏற்பாடுகளை துரிதப்படுத்தினர்.

    விழாவையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். குமரி மாவட்டம் மட்டுமல்லாது நெல்லை, தூத்துக்குடி, மதுரையில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள். தென்மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன், டி.ஐ.ஜி கபில்குமார் சரத்கார் ஆகியோர் நாகர்கோவிலில் முகாமிட்டு பாதுகாப்பு பணியை கவனித்து வருகிறார்கள்.

    நூற்றாண்டு விழா நடைபெறும் மைதானத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    குமரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. பள்ளிகளில் நாளை நடைபெற இருந்த காலாண்டு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு அக்டோபர் மாதம் 3-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல நாகர்கோவில் நகர் முழுவதும் நாளை போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது. #MGRCenturyFestival
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவுவிழாவையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற கால்கோள் விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். #MGRcentenaryfunction

    சென்னை:

    எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு வந்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் சென்னை மாவட்டத்திலும் நடத்தப்படாமல் இருந்தது.

    இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற 22-ந்தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா நடைபெற உள்ளது.

    இதைதொடர்ந்து சென்னையில் 30-ந்தேதி நிறைவுவிழா நடைபெற உள்ளது. இதற்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலையில் கால்கோள் விழா நடைபெற்றது.

    இதில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பூமி பூஜை நடத்தப்பட்டு முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    இதையொட்டி அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

    கண்காட்சி அரங்கம், மேடை அமைக்கும் பணிகள் பிரமாண்டமாக செய்யப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    30-ந்தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேசிய தலைவர்களும் பலர் சிறப்ப்புரையாற்ற உள்ளனர். #MGRcentenaryfunction

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் இருந்து 68 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். #MGRcentenaryfunction

    மதுரை:

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதனை முன்னிட்டு சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாடும் கைதிகளை பொதுமன்னிப்பின் பேரில் விடுதலை செய்ய அரசு முடிவு எடுத்தது.

    இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறையில் இருந்து இன்று 7-வது கட்டமாக 68 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் பெண் கைதியும் ஒருவர்.

    மதுரை மத்திய சிறையில் இருந்து 6 கட்டமாக 100 பேர் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் 68 பேர் விடுவிக்கப்பட்டு உள்ளனர். #MGRcentenaryfunction

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் 68 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
    சென்னை:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் முதற்கட்டமாக 67 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 6-ந் தேதி, சென்னை புழல் சிறைச்சாலையில் 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு பெற்ற (25.2.2018 அன்றைய தேதி அடிப்படையில்) 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்யப்பட உள்ளனர். அதன்படி புழல் மத்திய சிறையில் 44 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 52 பேரும், இதர சிறைச்சாலைகளில் இருந்து 16 பேரும் என மொத்தம் 68 கைதிகள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

    இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. 
    ×