search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayank Agarwal"

    மயாங்க் அகர்வாலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காததற்கு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கடும் விமர்சனம் செய்துள்ளார். #HarbhajanSingh
    இந்தியா ஒருநாள் கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் 15-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் அணி களம் இறங்க இருக்கிறது. இதற்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    இதில் ரஞ்சி டிராபி மற்றும் உள்ளூர் ஒருநாள் தொடர், இந்தியா ஏ அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மயாங்க் அகர்வாலுக்கு இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார்.

    ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மயாங்க் அகர்வாலை எங்கே? ஏகப்பட்ட ரன்களைக் குவித்த பின்னரும், அவரை இந்திய தேசிய அணிக்காக வீரர்கள் பட்டியலில் பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு விதிமுறை என்று நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
    இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி மயாங்க் அகர்வால் சதத்தால் 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #INDA
    இங்கிலாந்தில் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்தயா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதின. இந்தியா ‘ஏ’ அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் மயாங்க் அகர்வால், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிராக கடந்த போட்டியில் சதம் அடித்த மயாங்க் அகர்வால் இந்த போட்டியிலும் சதம் அடித்தார். அவர் 104 பந்தில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 112 ரன்கள் குவித்தார். மறுமுனையில் விளையாடிய ஷுப்மான் கில் 72 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 28.2 ஓவரில் 165 ரன்கள் சேர்த்தது.


    ஹனுமா விஹாரி

    அடுத்து களம் இறங்கிய ஹனுமா விஹாரி 69 ரன்களும், தீபக் ஹூடா 33 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்தது.

    பின்னர் 310 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து லயன்ஸ் அணி களம் இறங்கிறது. சர்துல் தாகூர் (3), கலீல் அஹமது (2) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து லயன்ஸ் 207 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா ஏ அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக இந்தியா ஏ அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
    வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் சாஹர் ஐந்து விக்கெட்டும், அகர்வால் சதம் அடிக்கவும் இந்தியா ‘ஏ’ அணி எளிதில் வெற்றி பெற்றது. #INDA
    இந்தியா ‘ஏ’, வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா ‘ஏ’ அணிகள் மோதின.

    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். 10 ஓவரில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ 49.1 ஓவரில் 221 ரன்னில் ஆல்அவுட் ஆனது.



    பின்னர் 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 112 ரன்களும், அடுத்து வந்த ஷுப்மான் கில் அவுட்டாகாமல் 58 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ அணி 38.1 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்பிற்க 222 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக கர்நாடகத்தைச் சேர்ந்த மூன்று பேரும் ஒன்றாக விளையாடுவது சிறந்த தருணம் என கருண் நாயர் தெரிவித்துள்ளார். #IPL2018 #KXIP
    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சேவாக்கிற்கு அடுத்தபடியாக முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தவர் கர்நாடகாவைச் சேர்ந்த கருண் நாயர். இவர் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இவருடன் கேஎல் ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோரும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடி வருகிறார்கள்.



    இவர்கள் மூன்று பேரும் ஜூனியர் அணியில் இருந்தே ஒன்றாக இணைந்து விளையாடியவர்கள். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக இணைந்து விளையாடுவது சிறந்த தருணம் என்றும், சிறந்த உணர்வாக இருக்கிறது என்றும் கருண் நாயர் கூறியுள்ளார்.



    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டெஸ்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றதால், கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக முச்சதம் அடித்தபின், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×