search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahalakshmi"

    • ஆதிகாலத்தில் வெட்ட வெளிகளில்தான் ஹோமங்கள், யாகங்கள் நடத்தப்பட்டன.
    • செல்வம் சேர்க்கும் தர்ம வழியே தனாகர்ஷண ஹோமம் ஆகும்.

    ஹோமங்கள் பல்வேறு நன்மைகளை வேண்டி நடத்தப்படுகிறது.

    ஆதிகாலத்தில் வெட்ட வெளிகளில்தான் ஹோமங்கள், யாகங்கள் நடத்தப்பட்டன.

    தற்போது எல்லா இடங்களிலும் தேவைக்கு ஏற்ப ஹோமம் செய்யப்படுகிறது.

    ஆயுள் பெற, பித்ருக்கள் ஆசி பெற என்று பலவகை ஹோமங் கள் உள்ளது.

    அந்த வகையில் செல்வம் பெறவும் ஹோமம் இருக்கிறது.

    அந்த வகை ஹோமத்துக்கு தானகர்ஷன ஹோமம் என்று பெயர்.

    செல்வம் சேர்க்கும் தர்ம வழியே தனாகர்ஷண ஹோமம் ஆகும்.

    வடநாட்டில் தனலட்சுமி பூஜை தீபாவளி சமயத்தில் கொண்டாடப்படுகிறது.

    தாம் சேர்த்த பொருளையெல்லாம் வட நாட்டவர்கள் அந்த யாக பூஜையில் வைத்து வழிபடுவர்.

    ஸ்ரீரங்கத்தில் தீபாவளியன்று 'ஜாலி அலங்காரம்' என கொண்டாடப்படுகிறது.

    தை மாத வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்தத்தில் தானகர்ஷன ஹோமத்தைச் செய்யலாம்.

    இதனால் தொழில், வியாபாரம், வேலை இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானமும், செல்வமும் பெருகும்.

    தனம் சேர்வது தானம் செய்ய, தானம் செய்வது தர்மம் தலை காக்க என்று சொல்லுவார்கள்.

    எனவே மற்ற அருளைவிட லட்சுமியின் அருள் ஒன்றே தலை சிறந்தது.

    அதை பெற்றுத் தர வழி வகுக்கும் ஹோமம் இதுவாகும்.

    இந்த ஹோமம் செய்யும் தினத்தன்று அதிகாலையில் குளித்து, சுத்தமான துணி உடுத்தி, திலகமிட்டுக் கொண்டு ஹோமத்திற்குத் தயாராக வேண்டும். முதலில் பூஜையில் அமர்ந்து உரிய முறையில் சங்கல்பம் செய்து கொள்ளவும்.

    பிறகு நம் செல்வத்தையெல்லாம் ஒரு குடத்திலிட்டு அதில் சுவர்ண லட்சுமியை ஆவாஹனம் செய்ய வேண்டும்.

    வட்டமான ஹோம குண்டத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜிக்க வேண்டும்.

    தேவதா ஆஜ்யபாகம், சமீதா தானம் செய்யவும். பிறகு சுத்தமான பசுநெய், தாமரைப்பூ, தங்கக்காசு, சர்க்கரைப் பொங்கல் மூலம் 108 தடவை ஆவர்த்தி 'ஹிரண்யவர்ணா..-.' என்ற வேத மந்திரம் மூலம் ஹோமம் செய்யவும்.

    அடுத்து பிராயச்சித்த ஹோமம் செய்யவும். சொக்கத் தங்கம், பட்டு முதலியவற்றுடன் மட்டைத் தேங்காய் வைத்து பூர்ணாஹுதி செய்து ஹோமம் முடிக்கவும்.

    • அன்னை லட்சுமி தேவர்களுக்கு ஸ்ரீ என்னும் 10 வரிகள் உடைய சக்திமிக்க துதியை உபதேசித்தாள்.
    • முயற்சி செய்து மனப்பாடம் செய்து படித்தால் பெண்களுக்கு நல்ல காலம் வரும்

    அன்னை லட்சுமி தேவர்களுக்கு ஸ்ரீ என்னும் 10 வரிகள் உடைய சக்திமிக்க துதியை உபதேசித்தாள்.

    இந்த 10 வரி துதியை வெள்ளிக்கிழமைகளில் கூறுவோர் என் அருள்பெற்று அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெறுவர் என்று சொல்லி மறைந்தாள்.

    அந்த 10 வரி வருமாறு:

    நமோ லக்ஷ்மியை மகாதேவ்யை பத்மாயை ஸததும் நம!

    நமோ விஷ்ணு விலாசின்யை பத்மஸ்தாயை நமோ நம!!

    த்வம் சாட்சாத் ஹரிலட்சஸ்தா ஸீரே ஜ்யேஷ்டா வரோத்பவா!

    பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ!!

    பரமானந்ததா அபாங்கீ ஹ்ருத சம்ஸ்ருத துர்க்கதி

    அருணா நந்தினீ லக்ஷ்மீ மகாலக்ஷ்மீ த்ரிசக்திகா

    ஸாம்ராஜ்யா ஸர்வஸீகதா நிதிநாதா நிதிப்ரதா

    நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்ய மகோந்நதி!!

    ஸம்பத்தி ஸம்மதா சர்வ சுபகா சம்ஸ்துதேஸ்வரி

    ரமா ரட்சாகரீ ரம்யா ரமணி மண்டலோத்தமா!!

    இந்த துதி 10 வரிகள் தான்.

    முயற்சி செய்து மனப்பாடம் செய்து படித்தால் பெண்களுக்கு நல்ல காலம் வரும் என்று இதன் விதி கூறுகிறது.

    • மந்திரத்தை வரலட்சுமி விரத நாளில் தொடங்கி ஒரு வருட காலம் வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வாருங்கள்.
    • உங்கள் முகத்தில் அழகும், முகவசீகரமும், தாராளமான பணவரவும், நிதிச்சேர்க்கையும் இருப்பதைக் காணலாம்.

    ஸ்ரீ த்ரிபுர ரகஸ்யம் என்னும் ரிக்வேத பகுதி நூலில் சொல்லப்பட்ட ஸ்ரீ என்னும் ஐஸ்வர்ய லட்சுமி வஸ்யரகஸ்ய

    மந்திரத்தை வரலட்சுமி விரத நாளில் தொடங்கி ஒரு வருட காலம் வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வாருங்கள்.

    உங்கள் முகத்தில் அழகும், முகவசீகரமும், தாராளமான பணவரவும், நிதிச்சேர்க்கையும் இருப்பதைக் காணலாம்.

    ஒரு சமயம் தேவர்கள் மகாலட்சுமியைக் குறித்துத் தவம், யாகம் செய்து கொண்டிருந்தனர்.

    அங்கு வந்த அசுரர்கள் அவர்களை கேலியும்,கிண்டலும் செய்து யாகப்பொருட்களையும், யாக மேடையையும் நாசப்படுத்தினர்.

    சிதறி ஓடிய தேவர்கள் மகாலட்சுமியை குறித்து தியானித்தனர்.

    அப்போது அன்னை லட்சுமி அஷ்டாதசபுஜ துர்க்கையாக (18 கைகளுடைய துர்க்கை) அவதாரம் எடுத்து அசுரர்களை விரட்டி வதம் செய்தாள்.

    உடனே தேவர்கள் பக்கம் திரும்பியவள் யாகத்தை சாஸ்திர விதியுடன் நடத்துங்கள் என்று கூறி அங்கே சாந்த சொரூபினியாக ஐஸ்வர்ய லட்சுமி வடிவம் கொண்டு அருளினாள்.

    • திருமகளோடு தொடர்புடைய சிவத் தலங்களின் தீர்த்தங்கள் ‘லட்சுமி தீர்த்தம்’ என்றழைக்கப்படுகின்றன.
    • ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதர் ஆலயத்தில் லட்சுமி தீர்த்தம் என்ற பெரிய திருக்குளம் உள்ளது.

    சோழர்கள் தாங்கள் அமைத்த சிவா லயங்களில் பெருமாளுக்குரிய அஷ்ட பரிவாரங்களில் ஒருத்தியாக

    மகா லட்சுமியை அமைத்து வழிபட்டனர்.

    தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அமைந்துள்ள பெரும்பாலான சோழர் காலச்சிவன் திருக்கோவில்களில்

    பிரகாரத்தின் வடமேற்கு மூலையில் தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கிக் கஜலட்சுமி அமைந்திருப்பதைக் காணலாம்.

    லட்சுமியின் தவ வலிமை கண்ட சிவன் பத்துக் கரங்களுடன் 'லட்சுமி தாண்டவம்' என்ற நடனத்தை ஆடினார்

    எனத் திருப்புத்தூர்ப் புராணம் எடுத்துரைக்கிறது.

    திருமகளோடு தொடர்புடைய சிவத் தலங்களின் தீர்த்தங்கள் 'லட்சுமி தீர்த்தம்' என்றழைக்கப்படுகின்றன.

    திருப்புத்தூர், பனையூர், திருவாரூர் (கமலாலயம்), திருநின்றவூர் முதலிய தலங்களில் லட்சுமி தீர்த்தங்கள்" உள்ளன.

    ராமேஸ்வரத்திலுள்ள ராமநாதர் ஆலயத்தில் லட்சுமி தீர்த்தம் என்ற பெரிய திருக்குளம் உள்ளது.

    அக்குளக் கரையில் லட்சுமி தேவியின் ஆலயம் உள்ளது.

    • ஆவலோடு பூஜை அறைக்கு சென்று பேழையை திறந்து பார்த்த மண்டோதரி திகைப்புற்றாள்.
    • மகாலட்சுமியே குழந்தை வடிவில் வந்தருளியிருப்பதாக தோன்றுகிறது.

    ஒரு சமயம் லட்சுமிதேவி யாக குண்டத் தின் முன்னால் அமர்ந்து வழிபாடு நடத்திக்கொண்டிருந்தாள்.

    அப்போது லங்கேஸ்வரனான ராவணன் தன்னுடைய புஷ்பக விமானத்தில் அமர்ந்து ஆகாய மார்க்கமாக பயணம் செய்து கொண்டிருந்தான்.

    தற்செயலாகக் கீழே நோக்க, யாக குண்டத்துக்கு முன் அமர்ந்திருந்த லட்சுமிதேவி அவன் கண்களுக்கு பட்டாள்.

    அவளுடைய பேரழகைக் கண்டு மோக வெறி கொண்ட ராவணன் அவளை அடையும் நோக்கத்துடன் விமானத்தை கீழே இறக்கினான்.

    லட்சுமியை நெருங்கி அவளிடம் சல்லாபம் செய்ய முற்பட்டான்.

    அவனுடை தொல்லை பொறுக்க மாட்டாத லட்சுமி தேவி திடீரென யாக குண்ட அக்கினிக்குள் இறங்கி மறைந்து போனாள்.

    ராவணன் தன்னுடன் வந்த வீரர்களை விட்டு யாக குண்டத்தில் நீர் விட்டு யாகத்தை அணைக்கச் செய்தான். பிறகு அந்த இடத்தைத் தோண்டி பார்க்க சொன்னான்.

    வீரர்கள் யாக குண்டத்தை தோண்டிப் பார்த்தபோது கண்களை பறிக்கும் விதத்தில் ஒரு ரத்தினக் கல் இருப்பதை ராவணன் கண்டான்.

    அந்த ரத்தினக் கல்லை ஓர் அழகிய பேழையில் வைத்து மூடி தன்னுடன் எடுத்துக்கொண்டு இலங்கையை நோக்கி புறப்பட்டான்.

    இலங்கையின் அரண்மனையை சென்றடைந்த ராவணன் ரத்தினக் கல் அடங்கிய பேழையை பூஜை அறையில் வைத்து விட்டு வெளியே வந்தான்.

    உணவுக்கு பிறகு ராவணனும் அவனுடைய வாழ்க்கை துணைவி மண்டோதரியும் பள்ளியறையில் அமர்ந்து

    உரையாடிக் கொண்டிருந்த போது ராவணன் மண்டோதரியை நோக்கி, "பூஜை அறையில் ஒரு பேழைக்குள் பரிசு

    பொருளை வைத்திருக்கிறேன் நீ சென்று பேழையைத் திறந்து அந்த பரிசுப் பொருளை எடுத்துக்கொள்" என்று கூறினான்.

    ஆவலோடு பூஜை அறைக்கு சென்று பேழையை திறந்து பார்த்த மண்டோதரி திகைப்புற்றாள்.

    அங்கே பேழைக்குள் ரத்தினக்கல் ஏதும் இருக்கவில்லை.

    அழகிய சிறு பெண் குழந்தை ஒன்று கை கால்களை உதைத்துக்கொண்டு சிரித்தவாறு கிடந்தது.

    அப்போது வானில் அசரீரி குரல் ஒன்று ஒலித்தது.

    எதிர் காலத்தில் உயிரை வாங்கி உன்னை ஒழிப்பதற்கென்ற வந்திருக்கும் மகாலட்சுமி இவள்.

    ஆனால் இந்த சிறு குழந்தையை கொல்ல இப்போது ஏதாவது முயற்சி செய்தால் இக்கணமே உன்னுடைய இலங்காபுரி ராஜ்ஜியமும், நீயும் உனது குடும்பத்தினரும், மக்களும் நீர்மூலமாகி விடுவீர்கள்...

    இவ்வாறு அசரீரி குரல் ஒலித்தது.

    திகைப்படைந்த ராவணன் தன்னுடைய பணியாளர்களிடம் குழந்தை அடங்கிய ரத்தின பேழையை ஒப்படைத்து

    அதை வெகு தொலைவில் கொண்டு சென்று மண்ணில் புதைத்துவிட உத்தரவிட்டான்.

    பணியாளர்கள் குழந்தை அடங்கிய அந்தப் பேழையை எடுத்துக் கொண்டு வெகு தொலைவு பயணம் செய்து ஜனக

    மாமன்னன் ஆட்சி புரியும் மிதிலை நகரின் எல்லையை ஒட்டிய நிலத்தில் புதைத்துவிட்டனர்.

    பல்லாண்டு களுக்கு பிறகு ஜனக மாமன்னன் தாம் நடத்திய யாகத்தின் பொருட்டு பேழை புதைக்கப்பட்ட நிலத்தை ஒரு வேதியருக்கு தானமாகத் தந்தான்.

    பல காலத்திற்குப் பிறகு வேதியன் தமக்குத் தானமாக அளிக்கப்பட்ட நிலத்தை உழுது உயிரிட விரும்பினான்.

    ஒரு குடியானவனை அழைத்து அவனுக்குக் கூலி கொடுத்து நிலத்தை உழுமாறு கேட்டுக் கொண்டான்.

    குடியானவன் அந்தப் பூமியை உழும்போது கலப்பையின் நுனி பூமியின் அடியில் ஏதோ ஒன்றால் தடைப்பட்டு மாட்டிக் கொண்டு நின்று விட்டது.

    எவ்வளவு முயன்றும் கலப்பையை நகர்த்த முடியாமல் போகவே, அந்த இடத்தை தோண்டிப் பார்த்த போது ஒரு பேழை வெளிப்பட்டது.

    பேழை கிடைத்த தகவலை குடியானவன் வேதியரிடம் தெரிவித்தான்.

    வேதியர் அந்தப் பேழையை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குப் புறப்பட்டார்.

    மன்னனின் கட்டளைப்படி பணியாளர்கள் பேழையைத் திறந்தனர்.

    பேழைக்குள் கண்களை கூசச் செய்யும் பேரொளி மின்ன, அழகிய பெண் குழந்தையொன்று சிரித்து விளையாடியவாறு கிடந்தது.

    வேதியர் மன்னரின் பாதங்களில் விழுந்து வணங்கி "மன்னா, இது மானிடக் குழந்தை என்று தோன்றவில்லை.

    மகாலட்சுமியே குழந்தை வடிவில் வந்தருளியிருப்பதாக தோன்றுகிறது.

    இந்தத் தெய்வக் குழந்தையை தாங்கள் தான் பொறுப்பேற்று வளர்க்க வேண்டும்" என வேண்டிக் கொண்டார்.

    வேதியருடைய கருத்தையே சபைலிருந்த அனைவரும் பிரதிபலித்தனர்.

    அவர்கள் கருத்தை ஏற்றுக் கொண்ட ஜனக மாமன்னன் குழந்தையாக அவதரித்த மகாலட்சுமியை வளர்க்கும் பொறுப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான்.

    அந்த குழந்தை தான் சீதையாக அவதாரம் எடுத்தாள்.

    • செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும்.
    • காலையிலும், மாலையிலும் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.

    பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும்,

    பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது.

    காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற வேண்டும்.

    காலையில் 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் வீட்டு வாசலில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும்.

    இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

    காலையிலும், மாலையிலும் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும்.

    மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக்கூடாது.

    விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது.

    விளக்கு வைத்த பிறகு குப்பையை வெளியே போடக் கூடாது.

    பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் கூடாது.

    நெற்றியில் எப்போதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்கும் முன்பு குடும்பத்தலைவி முதலில் தனக்குத் தானே குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.

    பிறகு வந்தவர்களுக்கு கொடுக்க வேண்டும். பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும்.

    வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக் கூடாது.

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும்.

    பெண்கள் சனிக்கிழமை எண்ணை தேய்த்து குளிக்கக் கூடாது.

    வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும்.

    ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுக்க வேண்டும்.

    இதையெல்லாம் மறக்காமல் பெண்கள் கடைபிடிக்க வேண்டும்.

    • மகாலட்சுமி பூஜையை ஒரு வெள்ளிக்கிழமை தொடங்கி எட்டு வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும்.
    • மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் பூஜையைத் தொடங்க வேண்டும்.

    மகாலட்சுமி பூஜையை ஒரு வெள்ளிக்கிழமை தொடங்கி எட்டு வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும்.

    இடையில் ஒரு வெள்ளிக்கிழமை விட்டுப் போனாலும் பரவாயில்லை.

    அடுத்து வரும் வெள்ளிக்கிழமை செய்யலாம். தனியாகவோ, சுமங்கலிகள் பலர் சேர்ந்தோ இப்பூஜையைச் செய்யலாம்.

    காலையில் எழுந்து குளித்து தினசரி வேலைகளுடன் மனதிற்குள் 'ஜெய மகாலட்சுமி' என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

    மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் பூஜையைத் தொடங்க வேண்டும்.

    மகாலட்சுமி படம், யந்திரம், அரிசி, தேன், பஞ்சாமிர் தம், மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், வெற்றிலை, பாக்கு,

    பழம், ஊதுபத்தி, சூடம், நல்ல உயர்தர சாம்பிராணி, தேங்காய், கற்பூரம், நைவேத்தியத்திற்கு சர்க்கரைப் பொங்கல்,

    ஆசன பலகை, வெள்ளி அல்லது பித்தளை சிறிய குடம் அல்லது செம்பு, அர்ச்சனை செய்ய வெள்ளி அல்லது

    சாதாரண காசுகள், தூய்மையான தண்ணீர் இவற்றை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    மகாலட்சுமி படம், யந்திரம் வைத்திருக்கும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும். அதற்கு முன்பாக ஆசனபலகை வைத்து அதற்கு முன்புறம் கோலம் போட வேண்டும்.

    ஆசனப் பலகை மீது அரிசியை சதுரமாகப் பரப்ப வேண்டும். வெள்ளி அல்லது பித்தளை செம்பில் தூய்மையான தண்ணீரை விட்டு அதில் ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, கற்பூரம் போட வேண்டும்.

    இதன் மேல் சிறு பித்தளைத் தட்டை வைத்து அதன் மேல் நாணயங்களை வைக்க வேண்டும்.

    எக்காரணம் கொண்டும் எவர்சிலர் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம்.

    மகாலட்சுமி படம், யந்திரம் ஆகியவற்றிற்கு மஞ்சள், குங்குமம் வைத்து சிகப்பு நிற மலர்களால் அலங்கரிக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்கவும். ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்.

    முதலில் விநாயகரை வழிபட்டு கணபதி மந்திரம் தெரிந்ததைக் கூறவும்.

    பின்னர் லட்சுமி அஷ்டோத்திரம் (108) கூறவும்.

    பிறகு நைவேத்தியம் செய்து கற்பூரம் காட்டவும். பிரசாதத்தை நிவேதனம் செய்வதுடன் சுமங்கலிகளுக்கு குங்குமம் மற்றும் தாம்பூலம் கொடுக்கவும்.

    பூஜையில் வைத்த நாணயத்தை செலவழிக்காமல் எல்லா பூஜைகளுக்கும் அதைப் பயன்படுத்தவும்.

    பிறகு அதை பீரோவில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுத்து தேவைப்படும் பொழுது பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

    மகாலட்சுமி பூஜையை இப்படி செய்து வந்தால் எல்லாவித செல்வங்களும் கிடைக்கும்.

    நினைத்த காரியம் தடையின்றி நிறைவேறும்.

    • தென்பாண்டி நாட்டில் திரிகூட மலை என்று அழைக்கப்படுவது சிவசைலம்.
    • இவன் மகா விஷ்ணு குடி கொண்ட அந்த இடத்தினை கண்டு மெய்மறந்தான்.

    தென்பாண்டி நாட்டில் திரிகூட மலை என்று அழைக்கப்படுவது சிவசைலம்.

    இந்த மலை அடிவாரத்தில் ஆதி மூலமான மகா விஷ்ணு குடி கொண்டிருந்தார்.

    அவர் குடி கொண்டிருந்த இடம் அழகான மிக நெருக்கமான பூக்கள் நிறைந்த இடம்.

    எனவே அந்த இடத்தினை மொய்மாம் பூம்பொழில் என்று அழைத்தனர்.

    பாண்டிய மன்னன் இந்திர துய்மன் பெருமானின் பக்தன்.

    இவன் மகா விஷ்ணு குடி கொண்ட அந்த இடத்தினை கண்டு மெய்மறந்தான்.

    அங்கு வந்து தினமும் தன்னை மறந்து வணங்கி நின்றான்.

    இவனின் பக்தியை கேள்விப்பட்டார் அகத்திய மாமுனிவர்.

    தான் வாழ்ந்த பொதிகை மலையை விட்டு மொய்மாம் பூம்பொழில் நோக்கி வந்தார்.

    அந்த மகாபக்தனை பார்த்து அவனுக்கு பாராட்டு தெரிவிக்க வந்த மாமுனிக்கு அவனை பார்த்தவுடன் கோபம் வந்தது.

    முனிவர் வந்தது கூட தெரியாமல் பாண்டிய மன்னன் பக்தியில் தன்னை மறந்த நிலையில் பெருமாளுடன் ஐக்கியமாகி இருந்தார்.

    இதைக்கண்டு வெகுண்டமுனிவர் தான் நேரில் வந்தும் கூட இந்த மன்னன் அகந்தையால் தன்னை மதிக்கவில்லையே என கோபம் கொண்டார்.

    நீ யானையாக போக கடவது என்று பாண்டிய மன்னனை நோக்கி சபித்தார்.

    மறுநிடமே அரசன் யானையாக மாறிவிட்டார்.

    அகத்தியர் அதன்பின் தன் யோக நெறியால் நினைத்துப் பார்த்தபோது மன்னனின் தவறு இல்லாத நிலையை உணர்ந்தார்.

    அரசன் மீது கருணை கொண்டு கஜேந்திரா என்று அழைத்து ஆசி கூறினார்.

    இதற்கிடையில் தாமிரபரணி நதியில் மேலே நின்று தவம் செய்துகொண்டிருந்தார்.

    தேவலன் என்ற முனிவர்.

    இவரை வான் வழி சென்ற கந்தர்வன் என்பவன் விளையாட்டாய் பார்த்து சிரித்தான்.

    அவரை கேலி செய்யும் பொருட்டு ஆற்று நீர் வழியாக முனிவரின் காலை பிடித்து இழுத்து விளையாடினான்.

    இதனால் மிரண்டு போன முனிவர் அவன் மீது கோபம் கொண்டார்.

    கந்தர்வனை முதலையாக போவது என்று சபித்தார்.

    அந்த சபிக்கப்பட்ட கந்தர்வன் முதலை மொய்மாம் பூம்பொழிலில் வாழ்ந்து வந்தது.

    கஜேந்திரன் யானையாக இருந்தாலும் பல ஆண்டுகளாக சாபத்தினால் யானை கூட்டத்தோடு கூட்டமாக அரசனாக வாழ்த்து வந்தார்.

    ஆனாலும் தினமும் பகவானை பூஜை செய்ய மட்டும் தவறுவதில்லை.

    ஒரு நாள் பொழிந்த நாதரை வழிபட தாமரை மலரை பறிக்க பூம்பொழினுள் யானை இறங்கும் போது

    அங்கு முதலையாய் வாழ்ந்து வந்த கந்தர்வன் கஜேந்திரன் காலை பற்றினான்.

    உயிர் போகும் நிலையில் கதறினார் யானை உருவத்தில் இருந்த அரசன்.

    அப்போது அவருக்கு முற்பிறவி நினைவுக்கு வந்தது.

    தன்னிலை உணர்ந்து ஆதி மூலத்திடம் உதவி கேட்டார்.

    இவரின் அபயக்குரல் மகாவிஷ்ணுவின் காதுக்கு கேட்டது.

    உடனே மகாவிஷ்ணு கருடன் மீதேறி தனது சக்கரத்தை ஏவினார்.

    பின் அவர்தாமிரபரணி நதியில் திருவலஞ்சுழியில் வந்து இறங்கினார்.

    பின்பு அங்கு கோவில் கொண்டுள்ள சிவ பெருமானின் அருள் பெற்று, யானையின் காலை பிடித்த முதலையை சக்கரம் மூலம் தலையறுத்தார்.

    இதனால் கந்தர்வனுக்கு சாப விமோசனம் அளித்தார்.

    அதன் பின்பு யானையான கஜேந்திரனை தன் கரத்தால் தூக்கி விட்டார்.

    பகவான் கரம் பட்டதும் கஜேந்திரன் அஞ்ஞான பந்தம் அகன்று மகாவிஷ்ணு மூலம் பழைய உருவமான அரசன் ஆனான்.

    கஜேந்திரனான அத்தியை (யானையை) பகவான் ஆட்கொண்டதால் இவ்வூருக்கு அத்தி+யாள+நல்லூர் என்று பெயர் பெற்றது.

    அதுவே மருவி அத்தாளநல்லூர் ஆனது.

    இங்கு கஜேந்திர வரதன் என்ற திருநாமத்துடன் ஆதிமூலம் திருக்கோவில் கொண்டுள்ளார்.

    புரட்டாசி சனிக்கிழமை தோறும் கருட சேவை நடைபெறும்.

    பக்தர்கள் மாதம் தோறும் கடைசி சனிக்கிழமை இந்த கோவிலுக்கு கூட்டம் கூட்டமாக வந்து வேண்டும் வரம் பெற்று பலன் பெறுகிறார்கள்.

    இந்த கோவில் நடை திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் 10 மணி வரை. மாலை 4 மணி முதல் 7 மணி வரை.

    இந்த கோவிலுக்கு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்தும், சேரன் மகாதேவி மற்றும்

    நெல்லை சந்திப்பில் இருந்தும் டவுண் பஸ் வசதி உள்ளது.

    இல்லையென்றால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் பேருந்துகளில்

    நாகர்கோவில் வள்ளியூர் பாபநாசம் தென்காசி செல்லும் பேருந்துகளிலும் சேரன் மகாதேவி

    அல்லது வீரவநல்லூரில் இறங்கி வந்து அங்கிருந்து ஆட்டோவிலும் செல்லலாம்.

    முக்கூடல் வந்தால் கூட ஆட்டோவில் செல்லலாம்.

    • ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
    • வந்து பார்த்தபோது, அந்த அம்மாள் இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடக்கிறது.

    ஒரு சமயம் லட்சுமி தேவி எந்த வீட்டில் வாசம் செய்யலாம் என்று பார்க்க வீடு, வீடாக சென்றாள்.

    ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

    இன்னொரு வீட்டில் மாடும், கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும், குப்பையுமாக இருந்தது.

    மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை. மனைவி தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தாள்.

    நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி, அந்த இல்லத்தரசி ஸ்லோகங்களை சொல்லிக் கொண்டு இருந்தாள்.

    வாசலில் நின்ற லட்சுமியைப் பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள்.

    மனையைப் போட்டு அமர வைத்து விட்டு உள்ளே போய் பால் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

    வந்து பார்த்தபோது, அந்த அம்மாள் இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடக்கிறது.

    அதாவது லட்சுமி தேவி எங்கும், எப்பொழுதும் வேண்டுமானாலும் வருவாள்.

    வரலட்சுமி பூஜை செய்ய முடியாதவர்கள் மனம் உருகி வெள்ளிக்கிழமை பூஜை, வைபவ லட்சுமி பூஜை,

    குபேர லட்சுமி பூஜை என்று செய்து லட்சுமியை என்றும் அழைக்கலாம்.

    • பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.
    • வம்ச விருத்தி ஏற்படும்.

    லட்சுமியை மனம் உருகி வழிபடுபவர்களுக்கு பதினைந்து பேறுகள் கிடைக்கும் அவை வருமாறு:

    1. உடல் அழகு பெற்று ஒளிமயமாகும்.

    2. பசுக்களும், வேலைக்காரர்களும் கிடைப்பார்கள்.

    3. பகை அழிந்து அமைதி உண்டாகும்.

    4. கல்வி ஞானம் பெருகும்.

    5. பலவிதமான ஐசுவரியங்கள் செழிக்கும்.

    6. நிலைத்த செல்வம் அமையும்.

    7. வறுமை நிலை மாறும்.

    8. மகான்களின் ஆசி கிடைக்கும்.

    9. தானிய விருத்தி ஏற்படும்.

    10. வாக்கு சாதுரியம் உண்டாகும்.

    11. வம்ச விருத்தி ஏற்படும்.

    12. உயர் பதவி கிடைக்கும்.

    13. வாகன வசதிகள் அமையும்.

    14. ஆட்சிப்பொறுப்பேற்கும் யோகம் கிடைக்கும்.

    15. பல்வேறு வகையான ஞானங்கள் ஏற்படும்.

    • வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கை கூடும்.
    • எட்டுவித செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரட்சுமி வழங்குகிறாள்.

    1. லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ,

    அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.

    2. வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.

    3. லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

    4. வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கை கூடும்.

    5. எட்டுவித செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள்.

    இதனால் தான் மணமான பெண்கள் இத்தினத்தில் மகாலட்சுமியை போற்ற இவ்விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.

    6.  காலையில் உபவாசத்துடன் பூஜை அறையை கோலமிட்டு அலங்காரம் செய்ய வேண்டும்.

    கலசத்தில் லட்சுமியை ஆவாகனம் செய்து நிவேதனங்கள் படைத்து வழிபட வேண்டும்.

    7. மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும்.

    சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக் கூடாது.

    8. பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.

    9. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

    10. இது ஒரு மங்களகரமான விரதம், மனதிற்கு நிம்மதி தரும் விரதம். இம்மையும் மறுமையும் தரும் இனிய விரதமாகும்.

    • ஸ்ரீ லட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம்.
    • நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் உண்டாகும்.

    வரலட்சுமி விரதத்தை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், விக்ரமாதித்த மன்னன் அனுஷ்டித்து

    சகல சவுபாக்கியங்களையும் பெற்றனர்.

    ஸ்ரீ லட்சுமிக்கு அருகம்புல் மிகவும் விசேஷம்.

    அருகம் புல்லால் அஷ்ட லட்சுமியை பூஜிப்பதால் "நாம் அருகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து பெருவாழ்வு வாழ்வோம்" என்பது சான்றோர் வாக்கு!

    கும்ப கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சம்பழம், பொற்காசுகள் ஆகியவற்றை இடவேண்டும்.

    கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைக்க வேண்டும்.

    மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும்.

    அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளச் செய்ய வேண்டும்.

    நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

    மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.

    பூக்களாலும், தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும்.

    உற்றார் உறவினர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகுதான் நாம் நிவேதனம் உண்ண வேண்டும்.

    அன்று முழுவதும் பக்தி சிந்தனையுடன் அஷ்டலட்சுமி தோத்திரங்களைச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

    இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம்.

    அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்திரமாக நிறைந்திருக்கும்!

    அட்சயமாக இருப்பவள் அம்பாள்! கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயசம் செய்யலாம்.

    இவ்விரதத்தை கடை பிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும்.

    நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும். புத்திரபாக்கியம் உண்டாகும்.

    வரலட்சுமி விரத மகிமையால், நாம் சகல சவுபாக்கியங்களையும் பெற்று செல்வ செழிப்புடன் வாழலாம்.

    ×