search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    லட்சுமியின் சீதை அவதாரம்
    X

    லட்சுமியின் சீதை அவதாரம்

    • ஆவலோடு பூஜை அறைக்கு சென்று பேழையை திறந்து பார்த்த மண்டோதரி திகைப்புற்றாள்.
    • மகாலட்சுமியே குழந்தை வடிவில் வந்தருளியிருப்பதாக தோன்றுகிறது.

    ஒரு சமயம் லட்சுமிதேவி யாக குண்டத் தின் முன்னால் அமர்ந்து வழிபாடு நடத்திக்கொண்டிருந்தாள்.

    அப்போது லங்கேஸ்வரனான ராவணன் தன்னுடைய புஷ்பக விமானத்தில் அமர்ந்து ஆகாய மார்க்கமாக பயணம் செய்து கொண்டிருந்தான்.

    தற்செயலாகக் கீழே நோக்க, யாக குண்டத்துக்கு முன் அமர்ந்திருந்த லட்சுமிதேவி அவன் கண்களுக்கு பட்டாள்.

    அவளுடைய பேரழகைக் கண்டு மோக வெறி கொண்ட ராவணன் அவளை அடையும் நோக்கத்துடன் விமானத்தை கீழே இறக்கினான்.

    லட்சுமியை நெருங்கி அவளிடம் சல்லாபம் செய்ய முற்பட்டான்.

    அவனுடை தொல்லை பொறுக்க மாட்டாத லட்சுமி தேவி திடீரென யாக குண்ட அக்கினிக்குள் இறங்கி மறைந்து போனாள்.

    ராவணன் தன்னுடன் வந்த வீரர்களை விட்டு யாக குண்டத்தில் நீர் விட்டு யாகத்தை அணைக்கச் செய்தான். பிறகு அந்த இடத்தைத் தோண்டி பார்க்க சொன்னான்.

    வீரர்கள் யாக குண்டத்தை தோண்டிப் பார்த்தபோது கண்களை பறிக்கும் விதத்தில் ஒரு ரத்தினக் கல் இருப்பதை ராவணன் கண்டான்.

    அந்த ரத்தினக் கல்லை ஓர் அழகிய பேழையில் வைத்து மூடி தன்னுடன் எடுத்துக்கொண்டு இலங்கையை நோக்கி புறப்பட்டான்.

    இலங்கையின் அரண்மனையை சென்றடைந்த ராவணன் ரத்தினக் கல் அடங்கிய பேழையை பூஜை அறையில் வைத்து விட்டு வெளியே வந்தான்.

    உணவுக்கு பிறகு ராவணனும் அவனுடைய வாழ்க்கை துணைவி மண்டோதரியும் பள்ளியறையில் அமர்ந்து

    உரையாடிக் கொண்டிருந்த போது ராவணன் மண்டோதரியை நோக்கி, "பூஜை அறையில் ஒரு பேழைக்குள் பரிசு

    பொருளை வைத்திருக்கிறேன் நீ சென்று பேழையைத் திறந்து அந்த பரிசுப் பொருளை எடுத்துக்கொள்" என்று கூறினான்.

    ஆவலோடு பூஜை அறைக்கு சென்று பேழையை திறந்து பார்த்த மண்டோதரி திகைப்புற்றாள்.

    அங்கே பேழைக்குள் ரத்தினக்கல் ஏதும் இருக்கவில்லை.

    அழகிய சிறு பெண் குழந்தை ஒன்று கை கால்களை உதைத்துக்கொண்டு சிரித்தவாறு கிடந்தது.

    அப்போது வானில் அசரீரி குரல் ஒன்று ஒலித்தது.

    எதிர் காலத்தில் உயிரை வாங்கி உன்னை ஒழிப்பதற்கென்ற வந்திருக்கும் மகாலட்சுமி இவள்.

    ஆனால் இந்த சிறு குழந்தையை கொல்ல இப்போது ஏதாவது முயற்சி செய்தால் இக்கணமே உன்னுடைய இலங்காபுரி ராஜ்ஜியமும், நீயும் உனது குடும்பத்தினரும், மக்களும் நீர்மூலமாகி விடுவீர்கள்...

    இவ்வாறு அசரீரி குரல் ஒலித்தது.

    திகைப்படைந்த ராவணன் தன்னுடைய பணியாளர்களிடம் குழந்தை அடங்கிய ரத்தின பேழையை ஒப்படைத்து

    அதை வெகு தொலைவில் கொண்டு சென்று மண்ணில் புதைத்துவிட உத்தரவிட்டான்.

    பணியாளர்கள் குழந்தை அடங்கிய அந்தப் பேழையை எடுத்துக் கொண்டு வெகு தொலைவு பயணம் செய்து ஜனக

    மாமன்னன் ஆட்சி புரியும் மிதிலை நகரின் எல்லையை ஒட்டிய நிலத்தில் புதைத்துவிட்டனர்.

    பல்லாண்டு களுக்கு பிறகு ஜனக மாமன்னன் தாம் நடத்திய யாகத்தின் பொருட்டு பேழை புதைக்கப்பட்ட நிலத்தை ஒரு வேதியருக்கு தானமாகத் தந்தான்.

    பல காலத்திற்குப் பிறகு வேதியன் தமக்குத் தானமாக அளிக்கப்பட்ட நிலத்தை உழுது உயிரிட விரும்பினான்.

    ஒரு குடியானவனை அழைத்து அவனுக்குக் கூலி கொடுத்து நிலத்தை உழுமாறு கேட்டுக் கொண்டான்.

    குடியானவன் அந்தப் பூமியை உழும்போது கலப்பையின் நுனி பூமியின் அடியில் ஏதோ ஒன்றால் தடைப்பட்டு மாட்டிக் கொண்டு நின்று விட்டது.

    எவ்வளவு முயன்றும் கலப்பையை நகர்த்த முடியாமல் போகவே, அந்த இடத்தை தோண்டிப் பார்த்த போது ஒரு பேழை வெளிப்பட்டது.

    பேழை கிடைத்த தகவலை குடியானவன் வேதியரிடம் தெரிவித்தான்.

    வேதியர் அந்தப் பேழையை எடுத்துக் கொண்டு அரண்மனைக்குப் புறப்பட்டார்.

    மன்னனின் கட்டளைப்படி பணியாளர்கள் பேழையைத் திறந்தனர்.

    பேழைக்குள் கண்களை கூசச் செய்யும் பேரொளி மின்ன, அழகிய பெண் குழந்தையொன்று சிரித்து விளையாடியவாறு கிடந்தது.

    வேதியர் மன்னரின் பாதங்களில் விழுந்து வணங்கி "மன்னா, இது மானிடக் குழந்தை என்று தோன்றவில்லை.

    மகாலட்சுமியே குழந்தை வடிவில் வந்தருளியிருப்பதாக தோன்றுகிறது.

    இந்தத் தெய்வக் குழந்தையை தாங்கள் தான் பொறுப்பேற்று வளர்க்க வேண்டும்" என வேண்டிக் கொண்டார்.

    வேதியருடைய கருத்தையே சபைலிருந்த அனைவரும் பிரதிபலித்தனர்.

    அவர்கள் கருத்தை ஏற்றுக் கொண்ட ஜனக மாமன்னன் குழந்தையாக அவதரித்த மகாலட்சுமியை வளர்க்கும் பொறுப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான்.

    அந்த குழந்தை தான் சீதையாக அவதாரம் எடுத்தாள்.

    Next Story
    ×