search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lyca kovai kings"

    • மதுரை அணியின் கேப்டன் சதுர்வேத் அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 4 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 75 ரன்கள் குவித்தார்.
    • கோவை அணிக்கு எதிராக மதுரை அணியின் சிலம்பரசன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கலில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. முகிலேஷ் அபாரமாக ஆடி 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சுரேஷ் குமார் 22 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் குவித்தார்.

    மதுரை அணி சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டும், சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆதித்யா, பால்சந்ஹர் அனிருத் ஆகியோர் டக் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் அருண் கார்த்திக் நிதானமாக ஆடினார்.

    கேப்டன் சதுர்வேத் பொறுப்புடன் ஆடினார். இவர் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தார். கார்த்திக் 38 ரன்னில் அவுட்டானார்.

    அபாரமாக ஆடிய சதுர்வேத் அரை சதமடித்து, 75 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், மதுரை பாந்தர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜெகதீசன் கவுசிக் 27 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். மதுரை அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.

    • கோவை அணியில் அதிரடியாக ஆடிய முகிலேஷ், 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் குவித்தார்.
    • மதுரை அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட், சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கலில் நடைபெறும் 2வது ஆட்டத்தில் லைக்கா கோவை கிங்ஸ், சீசம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி கேப்டன், பீல்டிங்கைத் தேர்வு செய்ய, கோவை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    கோவை அணியின் துவக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜு, சாய் சுதர்சன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தனர். சஜித் சந்திரன் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம், மறுமுனையில் சுரேஷ் குமார் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆறுதல் அளித்தார். அவர் 22 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் குவித்தார்.

    அதன்பிறகு முகிலேஷ் அபாரமாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. தொடர்ந்து அதிரடி காட்டிய முகிலேஷ், 38 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது.

    மதுரை அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட் கைப்பற்றினார். சன்னி சந்து, கிரன் ஆகாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்றில் காரைக்குடி காளையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது லைகா கோவை கிங்ஸ். #TNPL2018 #LKKvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் எலிமினேட்டர் சுற்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. கோவை கிங்ஸ் அணிக்கெதிராக காரைக்குடி காளை டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    கோவை கிங்ஸ் அணியின் ஷாருக்கான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷாருக்கான 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அபிநவ் முகுந்த் 51 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் வெளியேற கோவை கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. காரைக்குடி காளை அணியின் ராஜ்குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.



    இதையடுத்து, 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை களமிறங்கியது. கோவை கிங்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சில் சிக்கி திணறியது.

    அந்த அணியின் மான் பாவ்னா ஓரளவு தாக்குப்பிடித்து 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். கிஷன் குமார் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகி வெளியேறினர். இதனால் காரைக்குடி காளை 20 ஓவரில் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    கோவை கிங்ஸ் அணி சார்பில் நடராஜன் 4 விக்கெட்டும், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் கோவை கிங்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன. #TNPL2018 #LKKvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது கோவை கிங்ஸ் அணி. #TNPL2018 #LKKvSMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 26 - வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் கோவை கிங்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதையடுத்து, மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக், ரோஹித் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆனால், கோவை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

    அந்த அணியின் ஜெகதீசன் கவுசிக் 32 ரன்களும், கடைசியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 20 ரன்களும் எடுத்தனர். கோவை அணி சார்பில் கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 2 விக்கெட் வீழ்த்தினார். 
    இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் ஷாருக் கான், அபினவ் முகுந்த் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    அபினவ் முகுந்த் 12 ரன்களில் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 27 ஆக இருந்தது. அடுத்து இறங்கிய ரவிகுமார் ரோஹித் ஷாருக் கானுடன் ஜோடி சேர்ந்தார். அணியின் எண்ணிக்கை 52 ஆன போது ஷாருக் கான் 29 ரன்களில் அவுட்டானார்.

    அடுத்து ஆடிய அஷ்வின்  வெங்கட்ராமன் ரோஹித்ஹுடன் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், கோவை கிங்ஸ் அணி 17. 2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரவிகுமார் ரோஹித் 34 ரன்களுடனும், அஷ்வின் வெங்கட்ராமன் 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். #TNPL2018 #LKKvSMP 
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மதுரை பாந்தர்ஸ் அணி. #TNPL2018 #LKKvMP
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 26 - வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் கோவை கிங்ஸ் அணியும், மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதையடுத்து, மதுரை பாந்தர்ஸ் அணியின் அருண் கார்த்திக், ரோஹித் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

    ஆனால், கோவை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் மதுரை பாந்தர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.

    அந்த அணியின் ஜெகதீசன் கவுசிக் 32 ரன்களும், கடைசியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 20 ரன்களும் எடுத்தனர்.

    கோவை அணி சார்பில் கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. #TNPL2018 #LKKvMP 
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் கோவை கிங்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது காஞ்சி வீரன்ஸ். #TNPL2018 #VKVvLKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 20-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் கோவை கிங்ஸ் அணியும், காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணியினர் பேட்டிங் தேர்வு செய்தனர். அந்த அணியின் பாபா அபராஜித் 41 ரன்களும், அருண் 29 ரன்களும், தீபன் லிங்கேஷ் 16 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க எண்ணில் அவுட்டாகினர்.

    இறுதியில், காஞ்சி வீரன்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளனர்.

    கோவை கிங்ஸ் சார்பில் அஜித் ராம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கோவை கிங்ஸ் களமிறங்கியது. காஞ்சி வீரன்ஸ் அணியினரின் பந்து வீச்சில் சிக்கி திணறினர்.

    கோவை கிங்ஸ் சார்பில் அஷ்வின் வெங்கட்ராமன் 35 ரன்களும், பிரசாந்த் ராஜேஷ் 21 ரன்களும் ரவிகுமார் ரோஹித் 18 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், கோவை கிங்ஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 102 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் காஞ்சி வீரன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    காஞ்சி வீரன்ஸ் சார்பில் ஆஷிக் ஸ்ரீனிவாஸ் 3 விக்கெட்டுகளும், திவாகர் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஆஷிக் ஸ்ரீனிவாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #VKVvLKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. #TNPL2018 #CSGvKK
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 16-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக கோவை கிங்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    கோவை அணியின் ஷாருக் கான், அபிநவ் முகுந்த் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அபிநவ் முகுந்த் 34 ரன்களும், ஷாருக் கான் 59 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இறுதியில், அந்தோணி தாஸ் 28 ரன்கள் சேர்க்க கோவை கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.

    சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில்  பி.அருண், ஹரிஸ் குமார் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    இதையடுத்து, 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் களமிறங்கியது. சூப்பர் கில்லீஸ் அணியில் முருகன் அஷ்வின் அதிகமாக 34 ரன்கள் எடுத்தார். சசிதேவ் 23 ரன்கள் எடுத்தார்.

    மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் சூப்பர் கில்லீஸ் அணி 18 ஓவரில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதைத்தொடர்ந்து 53 ரன்கள் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஷாருக் கான் தேர்வு செய்யப்பட்டார். #TNPL2018 #CSGvKK
    தொடக்க வீரர்களின் அதிரடியால் கோவை கிங்ஸ்க்கு 183 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டூட்டி பேட்ரியாட்ஸ். #TTvLKK #TUTIPatriots
    தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டூட்டி பேட்ரியாட்ஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் கவுசிக் காந்தி, எஸ் தினேஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கவுசிக் காந்தி 25 பந்தில் தலா மூன்று பவுண்டரி, மூன்று சிக்சருடன் 43 ரன்களும், எஸ் தினேஷ் 42 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    அடுத்து வந்த சுப்ரமணியன் ஆனந்த் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். 4-வது வீரராக களம் இறங்கிய அக்சேய் ஸ்ரீனிவாசன் அதிரடியாக விளையாடி 21 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 45 ரன்கள் குவித்தார். அக்சேய் ஸ்ரீனிவாசன் அவுட்டாகும்போது டூட்டி பேட்ரியாட்ஸ் 15.4 ஓவரில் 152 ரன்கள் குவித்திருந்தது.



    அதன்பின் டூட்டி பேட்ரியாட்ஸின் ரன்குவிப்பில் சற்று தொய்வு ஏற்பட்டது. கடைசி 26 பந்தில் 30 ரன்கள் மட்டுமே எடுத்ததால், டூட்டி பேட்ரியாட்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. கோவை கிங்ஸ் அணி சார்பில் நடராஜன், அஜித் ராம், பிரசாந்த் ராஜேஷ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லைகா கோவை கிங்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    தமிழ்நாடு பிரீமியர் கிரிக்கெட் போட்டியின் 9-வது ‘லீக்’ ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. #TNPL2018 #NammaOoruNammaGethu
    நத்தம்:

    3-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் இன்று இரவு நடக்கும் 9-வது ‘லீக்’ ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கவுசிக் காந்தி தலைமையிலான தூத்துக்குடி தொடக்க ஆட்டத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று தனது 2-வது ‘லீக்’ ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    அந்த அணியில் கவுசிக் காந்தி, தினேஷ், ஆனந்த் சுப்பிரமணியம், ஆர்.சதீஷ், சாய்கிஷோர், அபிஷேக், ஆதிசயராஜ், டேவிட்சன் போன்ற வீரர்கள் உள்ளனர்.

    இதில் கவுசிக் காந்தி முதல் ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தி இருந்தார். இதனால் பேட்டிங் வரிசை பலமுடன் காணப்படுகிறது. பந்துவீச்சிலும் தூத்துக்குடி திறமையுடன் இருக்கிறது. இதனால் 2-வது வெற்றியை ருசிக்கும் ஆர்வத்தில் உள்ளது.

    அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி 2 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்று உள்ளது. காரைக்குடி அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. திண்டுக்கல்லிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    அந்த அணியில் அபினவ் முகுந்த், ஷாருக்கான், அகில் ஸ்ரீநாத், ரோகித், அந்தோணிதாஸ், நடராஜன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    கடந்த இரண்டு சீசனில் தூத்துக்குடி அணியில் விளையாடிய அபினவ் முகுந்த் இன்று அந்த அணிக்கு எதிராக களம் இறங்குகிறார்.

    திண்டுக்கல்லுக்கு எதிரான கடந்த போட்டியில் 185 ரன் குவித்தும் கோவை தோற்றது. இதனால் அந்த அணி பந்துவீச்சில் முன்னேற்றம் காண்பது அவசியம். இப்போட்டி இரவு 7.15 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #TNPL2018 #NammaOoruNammaGethu
    திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் காரைக்குடிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் லைகா கோவை கிங்ஸ் வெற்றி பெற்றது. #TNPL2018 #LycaKovaiKings #KaraikudiKaalai
    தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 3-வது சீசன் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடைபெற்ற லீக் போட்டியில் காரைக்குடி காளை மற்றும் கோவை லைகா கிங்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற காரைக்குடி காளை பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் மான் மாப்னா 22 பந்தில் 44 ரன்கள் அடித்தார். அவருக்கு ஆதித்யா ஒத்துழைப்பு தந்தார். அவர் 36 ரன்களில் அவுட்டானார். மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடாததால் காரைக்குடி காளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது.



    கோவை கிங்ஸ் சார்பில் பிரசாந்த் ராஜேஷ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, கோவை கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். ஷாருக் கான் 32 ரன்களும், அஷ்வின் வெங்கட்ராமன் 34 ரன்களும் எடுத்தனர்.

    மற்றவர்கள் நிலைத்து நிற்காததால் கோவை அணியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவருக்கு சென்றது.

    சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய கோவை கிங்ஸ் ஒரு ஓவரில் 1 விக்கெட்டுக்கு 14 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய காரைக்குடி காளை 9 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கோவை கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
    ×