search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kamal hassan"

    கமல்ஹாசன் கூட்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்காது என திருமாவளவன் தெரிவித்தார்.#Kamalhassan #thirumavalavan
    ஆலந்தூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில் தற்போது நடந்து இருப்பது ஜனநாயக படுகொலை. இதற்கு கவர்னர் மட்டும் பொறுப்பல்ல. பிரதமர் மோடிதான் முழு பொறுப்பு. மணிப்பூர், மேகாலயா, கோவா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை கட்சியாக இருந்தபோதும் காங்கிரசை அழைக்காமல் பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது.

    குறிப்பாக மேகாலயாவில் 2 இடங்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க கால அவகாசம் தரப்பட்டது. கர்நாடகாவில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது என்றால், இந்த நடைமுறையை கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் ஏன் நடைமுறைப்படுத்தவில்லை?.

    இதில் மத்திய அரசு மற்றும் பிரதமரின் தலையீடு உள்ளது. கவர்னர்கள் மத்திய அரசின் கைப்பாவைகள் என்பதை இந்த சம்பவங்கள் உறுதிபடுத்துகின்றன.

    யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தற்போது காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரை மாற்றி இருப்பது ஏன்? எதனால்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. மத்திய அரசு வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் அவ்வப்போது நிலைபாடுகளை மாற்றி வருகிறது. இந்த போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் பின்னடைவு ஏற்பட்டால் மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

    நடிகர் கமல்ஹாசன் காவிரி தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். தொலைபேசி மூலமாக அழைப்பு விடுத்தார். நேரிலும் கடிதம் வழங்கப்பட்டது. இதற்காக நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.



    ஆனால் அந்த கூட்டத்தில் தோழமை கட்சிகள் சார்பில் யாரும் கலந்து கொள்ள போவதில்லை என்ற முடிவை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்து உள்ளார். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்க வாய்ப்பு அமையவில்லை. அதற்காக வருந்துகிறேன்.

    அமைச்சர் ஜெயக்குமார் கச்சத்தீவை மீட்டால் அது தமிழர்களுக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றி. பெரிய சாதனை. ஜெயக்குமார் வரலாற்றில் சிறப்பு இடத்தை பிடிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kamalhassan #thirumavalavan
    கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #MKStalin #KamalHaasan
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:-கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாத பா.ஜ.க.வுக்கு கவர்னர் வாய்ப்பு வழங்கியிருப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?.

    பதில்:-பிரதமர் மோடி தமிழ்நாட்டில் உள்ள கவர்னரையும், கவர்னர் அலுவலகத்தையும் பயன்படுத்தி, எந்தளவுக்கு ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறார் என்பது ஏற்கனவே நாடறிந்த உண்மை. அதேநிலையை, இப்போது கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி அரங்கேற்றி இருக்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. பிரதமராக இருக்கும் மோடி இப்படி தொடர்ந்து ஜனநாயகத்தை படுகொலை செய்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.



    கேள்வி:-திமுக தலைமையில் நடைபெறவிருந்த அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில், 19-ந் தேதி (நாளை) கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பீர்களா?.

    பதில்:-தி.மு.க. தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தாலும், அனைத்து கட்சிகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பேசியபோது, கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவையில்லை என்று அனைவரும் தெரிவித்து இருக்கின்றனர். எனவே, தி.மு.க. உள்ளிட்ட 9 கட்சிகளும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடக மாநில கவர்னர், தேர்தலுக்கு பிறகு அமைந்துள்ள காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், பா.ஜ.க.வை ஆட்சியமைக்க அவசரமாக அழைத்திருப்பது தன்னிச்சையானது மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமானது. இந்த நடவடிக்கை குதிரை பேரத்துக்கு வழிவகுத்து, நமது ஜனநாயக அடிப்படைகளை தகர்க்கும்.

    சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெறாத, ஊழல் மிகுந்த அ.தி.மு.க. அரசை பாதுகாக்க பா.ஜ.க. எடுத்துவரும் முயற்சிகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். அரசியலமைப்பு நிறுவனங்கள் மற்றும் கொள்கைகள் அனைத்தும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    ×