search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Juice"

    வெயில் காலத்தில் உடல் சூட்டை குறைக்க பால் சர்பத் குடிக்கலாம். இன்று இந்த ஜூஸை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பால் - 1/2 லிட்டர்,
    நன்னாரி சர்பத் - 100 மிலி,
    சப்ஜா விதை - 1 டேபிள் ஸ்பூன்,
    பாதாம் பிசின் - 1 டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    சப்ஜா விதைகள் மற்றும் பாதாம் பிசினை தண்ணீரில் முதல் நாள் இரவே தனித்தனியாக ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.

    இவை இரண்டும் குளுமையான பொருள் என்பதால், வெயில் காலத்தில் காலை வெறும் வயிற்றில் இதனை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். வயிறு சம்பந்தமான பிரச்னை ஏற்படாது.

    பாலை காய்ச்சி நன்கு குளிர வைக்கவேண்டும்.

    குளிர வைத்த பாலில் நன்னாரி சர்பத், சப்ஜா விதை மற்றும் பாதாம் பிசின் சேர்த்து நன்கு கலக்கவும்.

    கலந்த ஜூஸை ஃபிரிட்ஜில் வைத்து குடிக்கலாம்.

    குளுகுளு பால் சர்பத் ரெடி.

    சப்ஜா மற்றும் பாதாம் பிசினை மட்டும் தனியாக ஊறவைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது பாலில் கலந்து குடிக்கலாம். 
    இனிப்பு சாப்பிட முடியாமல் மனஅழுத்தத்திற்கு உள்ளாகும் சர்க்கரை நோயாளிகள் கூட இதை குடிக்கலாம். இன்று இந்த லஸ்ஸி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    தயிர் - 1 கப்
    இந்துப்பு  - ஒரு சிட்டிகை
    சீனி துளசி பவுடர் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு



    செய்முறை :

    சட்டியில் தயிரை ஊற்றி இந்துப்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கடையவும்.

    சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கடையவும்.

    சூப்பரான சத்தான லஸ்ஸி ரெடி.

    குறிப்பு - சீனி துளசி பவுடர் உபயோகித்தால் 10 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம். ஏனெனில் இந்த பவுடர் தயிரில் கரைவதற்கு 10 நிமிடங்கள் ஆகும். 
    குழந்தைகளுக்கு வெயில் காலத்தில் வித்தியாசமான, சுவையான, ஆரோக்கியமான மில்க்‌ஷேக் செய்து கொடுக்க விரும்பினால் நாவல்பழ மில்க்‌ஷேக் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நாவல்பழக்கூழ் - அரை கப்
    குளிர்ந்த பால் - தேவையான அளவு (காய்ச்சி  ஆறவைத்தது)
    தூளாக்கிய ஐஸ்கட்டிகள் - சிறிதளவு
    விருப்பமான ஐஸ்க்ரீம் - ஒரு ஸ்கூப்
    சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
    கண்டன்ஸ்டு மில்க் - ஒரு டேபிள்ஸ்பூன்
    கோகோ சிரப் - ஒரு டேபிள்ஸ்பூன்    



    செய்முறை :

    குளிர்ந்த பாலுடன் நாவல்பழக்கூழ் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடிக்கவும்.

    இதனுடன் கண்டன்ஸ்டு மில்க், ஐஸ்க்ரீம், ஐஸ்கட்டிகள், சர்க்கரை சேர்த்து மீண்டும் அடித்து பெரிய கண்ணாடி டம்ளரில் ஊற்றவும்.

    மேலே கோகோ சிரப் ஊற்றிப் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆரஞ்சில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.
    உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். சோர்வை விரட்டி மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றலும் அதற்கு இருக்கிறது. காலை உணவை சாப்பிட்ட பிறகோ அல்லது உடற்பயிற்சி செய்த பிறகோ ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். அதில் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் ஏராளம் உள்ளன.

    தினமும் ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் மூளை உறைவு பாதிப்பு 24 சதவீதம் குறையும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பக்கவாதம் வராமல் தடுக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் ஆரஞ்சுக்கு இருக்கிறது. அதில் இருக்கும் வைட்டமின் சி சத்து இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நேராமல் காக்கும். ஆரஞ்சு சாறில் ஆன்டி ஆக்சிடெண்ட் நிறைந்திருக்கிறது.

    அது சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். சுருக்கங்கள் நேராமல் தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும். இளமையை பாதுகாக்கும். கோடை காலங்களில் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருக வேண்டும். சூரிய கதிர்வீச்சு பிரச்சினையில் இருந்து சருமத்தை காக்க உதவும். ஆரஞ்சு ஜூஸில் கலோரி குறைவாகவே இருக்கிறது. அதில் கொழுப்பு இல்லை. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருகி வரவேண்டும்.

    ஆரஞ்சில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். மூட்டு வலிக்கும் நிவாரணம் தேடி தரும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சிட்ரேட் அதிக செறிவு கொண்டவை. ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் சிறுநீரக கற்களால் ஏற்படும் வலியில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.
    உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? அப்படியெனில் அத்திப்பழ ஜூஸை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த ஜூஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அத்திப்பழம் - கால் கிலோ
    பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    இஞ்சி - 1 துண்டு
    தேன் - 1 டீஸ்பூன்
    பால் - 1 கப்



    செய்முறை :

    அத்திப்பழத்தை சுத்தம் செய்து கொள்ளவும்.

    மிக்சியில் அத்திப்பழத்தை போட்டு அதனுடன் பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை, இஞ்சி, தேன், பால் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த ஜூஸை ஒரு தம்ளரில் ஊற்றி பருகலாம்.

    சூப்பரான சத்தான அத்திப்பழ ஜூஸ் ரெடி.

    தேவைப்பட்டால் ஐஸ் கியூப்ஸ் போட்டு பருகவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஜூஸை தொடர்ந்து பருகி வந்தால் நல்ல பலனை காணலாம். இன்று ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கறிவேப்பிலை - 1 கைப்பிடி
    கொத்தமல்லி - 1 கைப்பிடி
    புதினா - 1 கைப்பிடி
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    இஞ்சி - சிறிய துண்டு
    உப்பு - சிறிதளவு



    செய்முறை :

    கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினாவை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.

    மிக்சியில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி கொள்ளவும்.

    வடிகட்டிய ஜூசுடன் எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து பருகவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    எலுமிச்சை உடலில் ஏற்படும் நீர்சத்து இழப்பை சரி செய்து உடலுக்கு உற்சாகம் தரும். இன்று எலுமிச்சை, புதினா சேர்த்து ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலுமிச்சை - 1
    புதினா இலைகள் - ஒரு கைப்பிடி
    தேன் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    உப்பு - கால் டீஸ்பூன்



    செய்முறை :

    எலுமிச்சை பழத்தில் சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.

    ஜூஸ் ஜாரில் புதினா இலைகள், உப்பு, தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

    பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் அடித்து பருகவும்.

    இந்த ஜூஸ் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    வெயில் காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் ஜூஸ் குடிப்பது நல்லது. இன்று பாலப்பழம், தேங்காய்ப்பால் சேர்த்து ஸ்மூர்த்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பலாப்பழம் - 10
    தேங்காய்ப் பால் - 1 கப்
    பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவை பொடித்தது (நட்ஸ் பொடி) - 1 ஸ்பூன்
    தேன் - சுவைக்கேற்ப (தேவைப்பட்டால்)



    செய்முறை :

    மிக்சியில் பலாப்பழத்தையும், தேங்காய்ப் பாலையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.

    அரைத்த ஜூஸில் நட்ஸ் பொடி சேர்த்துக் கலக்கவும்.

    இதை அப்படியே கிளாஸில் ஊற்றிக் கொடுக்கலாம்.

    தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொடுக்கலாம்.

    சூப்பரான பலாப்பழம் நட்ஸ் ஸ்மூர்த்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    கோடை வெயில் ஆரம்பித்து விட்டது. கோடையில் உடல் சூட்டை குறைக்க அடிக்கடி ஜூஸ் குடிப்பது நல்லது. இன்று தர்பூசணி லெமன் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தர்பூசணி துண்டுகள் - 3
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    நாட்டு சர்க்கரை அல்லது தேன் - தேவையான அளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு



    செய்முறை :

    இஞ்சி துண்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    தர்பூசணித் துண்டுகளின் தோலை சீவி, விதைகளை நீக்கிய பின் அதனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

    மிக்ஸியில் தர்பூசணித் துண்டுகள், தேன், துருவிய இஞ்சி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அரைத்த ஜூஸை பாத்திரத்தில் ஊற்றி, ஐஸ் கட்டிகளைப் போட்டு, சிறிது நேரம் கழித்து பருகவும்.

    சூப்பரான தர்பூசணி - லெமன் ஜூஸ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சத்துகள் நிறைந்த சாத்துகுடி சகல நோய்களை தீர்க்கும் சஞ்சீவினியாக திகழ்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சாத்துகுடி ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறமுடியும்.
    சாத்துகுடி பழத்தில் அபரிமிதமான விட்டமின்-சி சத்து நிறைந்துள்ளது. இது உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. சாத்துகுடியில், நார்சத்து நிறைந்துள்ளது. சிறந்த செரிமானம் மற்றும் வயிற்று கோளாறுகளை நீக்க உதவுகிறது. எலும்புகளுக்கு வலுவூட்டுவதுடன், வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது.

    சாத்துகுடியில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மினரல்கள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சாத்துகுடி ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறமுடியும். உடலில் புதிய ரத்தம் விருத்தியாக தினம் இரண்டு சாத்துகுடி பழச்சாறு அருந்தவேண்டும். உடல் அசதி பறந்துவிடும். அதனால்தான், நோயுற்றவர்களுக்கு சாத்துகுடி ஜூஸ் அருந்த தரப்படுகிறது. மேலும், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ரத்த சோகை உள்ளவர்கள் தினசரி சாத்துகுடி ஜூஸ் அருந்தலாம்.

    குழந்தைகளின் வளர்ச்சிக்கும், பெரியவர்களின் எலும்புகளின் வலுவிற்கும் இன்றியமையாதது கால்சியம் சத்து. எனவே குழந்தைகள் தினசரி சாத்துகுடி ஜூஸ் அருந்த நல்ல வளர்ச்சி பெறுவர். பெரியவர்கள் மற்றும் பெண்களின் எலும்பு தேய்மானம் மற்றும் வலுவற்ற எலும்பிற்கு வலு சேர்க்க சாத்துகுடி ஜூஸ் சிறந்த பலனை தரும்.பெரியவர்களுக்கு ஞாபகமறதி என்பது பெரிய தொந்தரவாக உள்ளது.

    ஞாபக திறனை மேம்படுத்தி நினைவாற்றலுடன் செயல்பட சாத்துகுடி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. பசி எடுக்கவில்லை என்பவர்களுக்கு சாத்துகுடி ஜூஸ் அருந்த கொடுக்க பசித்தீயை தூண்டி, உணவு உண்ண வகை செய்யும். அத்துடன் சீரான ஜீரண சக்தியை அளிப்பதுடன், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல தீர்வாக அமைகிறது. சாத்துகுடி பழமா? என சாதாரணமாக கேட்கும் பலருக்கு, அதன் பெருமை தெரியவில்லை. சாத்துகுடி, சத்துகள் நிறைந்து சகல நோய்களை தீர்க்கும் சஞ்சீவினியாக திகழ்கிறது.

    சுலபமாக செய்யக்கூடிய மிகவும் ருசியான பருத்தி பால் உடல் நலத்திற்கும் ஏற்றது, (சர்க்கரை நோயாளிகளை தவிர). இன்று இந்த பருத்தி பாலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பருத்தி விதை - அரை கப்
    பச்சரிசி - கால் கப்
    சுக்குத்தூள் - சிறிதளவு
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    தூளாக்கப்பட்ட வெல்லம் - தேவைக்கு



    செய்முறை:

    பருத்தி விதையை சுத்தம் செய்து தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

    அதுபோல் பச்சரிசியையும் ஊறவைக்க வேண்டும்.

    விதைகளை மிக்சியில் அரைத்து அதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து பருத்தி பால் எடுத்துக்கொள்ளவும்.

    பச்சரிசியையும் மிக்சியில் அரைத்து மாவாக்கிக்கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் பருத்தி பால் மற்றும் பச்சரிசி மாவை கொட்டி கொதிக்க விடவும்.

    கொதிக்க தொடங்கியதும் வெல்லத்தை சேர்த்து கிளறிவிடவும்.

    அதனுடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி ருசிக்கலாம்.

    அருமையான பருத்தி பால் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காலையில் குழந்தைகளுக்கு கேரட் - தேங்காய் பானம் கொடுப்பதன் மூலம் சுறுசுறுப்பு, புத்துணர்ச்சி கிடைக்கும். இன்று இந்த ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 2
    தேங்காய் - அரை மூடி
    தேன் அல்லது பனங்கற்கண்டு - 2 டேபிள் ஸ்பூன்
    ஏலக்காய் - 2



    செய்முறை :

    கேரட், தேங்காயை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    நறுக்கிய இரண்டையும் மிக்ஸியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டவும்.

    தேன் அல்லது பனங்கற்கண்டு, பொடித்த ஏலக்காய் சேர்த்து கலந்து சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும்.

    சத்து நிறைந்த கேரட் - தேங்காய் பானம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×