search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelry money robbery"

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வியாபாரி வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை வடக்கு பாளையம் பொட்டக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). இவரது மனைவி பழனியம்மாள் (37). இவர்களுக்கு காயத்ரி செல்வி என்ற மகள் உள்ளார். இவர் உளுந்தூர்பேட்டையில் தங்கி படித்து வருகிறார்.

    மாரியப்பன் அவரது வீட்டுக்கு அருகில் குடோன் ஒன்று அமைத்து மிக்சர் உள்பட பல்வேறு தின்பண்டங்களை தயாரித்து வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை மாரியப்பன் வியாபாரம் தொடர்பாக மதுரைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மகளை பார்ப்பதற்காக பழனியம்மாள் உளுந்தூர்பேட்டைக்கு செல்வதற்காக வீட்டை பூட்டினார். ஆனால் கதவில் இருந்த சாவியை எடுக்க மறந்து சென்று விட்டார். பின்னர் வெளிகேட்டை பூட்டி விட்டு புறப்பட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் மாரியப்பன் வீட்டின் மெயின் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அதனை தொடர்ந்து வீட்டின் முன்பக்க கதவில் இருந்த சாவியால் கதவை திறந்து வீட்டுக்குள் புகுந்தனர்.

    பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 40 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.


    வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடக்கிறது.

    இந்த நிலையில் மகளை பார்க்க உளுந்தூர்பேட்டை சென்றிருந்த பழனியம்மாள் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தார். உள்ளே சென்ற அவர் வீட்டின் கதவும் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டுக்குள் சென்று பார்த்த போது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகையும் கொள்ளை போய் இருந்தது.

    இது குறித்து பழனியம்மாள் தனது கணவர் மாரியப்பனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக ஊர் திரும்பினார். மேலும் இது தொடர்பாக பழனியம்மாள் சோழத்தரம் போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மேலும் கடலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு பின்புறம் உள்ள வயல்வெளி வழியாக சிறிது தூரம் ஓடி சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

    கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
    சிங்கம்புணரியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி கீழைக்காடு சாலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி. உடல்நலம் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் சிகிச்சை பெறுவதற்காக மதுரைக்கு சென்றார். இதனை அறிந்த யாரோ மர்ம மனிதர்கள் சுப்பிரமணியன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோக்களை உடைத்து அதிலிருந்த 15 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து சிங்கம்புணரி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார். சுப்பிரமணியன் மதுரைக்கு சென்றிருப்பதை அறிந்தே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
    நெல்லையில் பிளஸ்-1 மாணவியை காதலிப்பது போல் நடித்து ரூ.6 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லை:

    நெல்லை டவுன் ஆசாத் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் பிலிப் (வயது18). இவர் பள்ளியில் படிக்கும் போதே ஒழுங்காக படிக்காமல் சக மாணவர்களுடன் தகராறு செய்து மோதலில் ஈடுபட்டார். இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்து சிறுவர் சிறையில் அடைத்திருந்தனர்.

    தற்போது விடுதலையாகி வெளியே வந்த பிலிப் படிக்காமல் ஊர் சுற்றி வந்தார். நெல்லை டவுனை சேர்ந்த ஒரு பிளஸ்-1 மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், வரும் போதும் பிலிப் அந்த மாணவியின் பின்னால் சென்று தான் உயிருக்கு உயிராக காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறினார். அதில் மயங்கிய அந்த மாணவியை தனது காதல் வலையில் வீழ்த்தி சினிமா தியேட்டர் உள்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார்.

    மேலும் பிலிப் உல்லாசமாக சுற்றுவதற்கு பணம் தேவைப்பட்டதால், தனது காதலியான பிளஸ்-1 மாணவியிடம் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. இல்லாவிடில் தற்கொலை செய்து கொள்வேன் என்று அடிக்கடி பணம்- நகைகளை கேட்டுள்ளார். சில நேரங்களில் கையில் கத்தியை வைத்து கொண்டு இப்பொழுதே கையை வெட்டி தற்கொலை செய்ய போகிறேன் என்றும் நாடகமாடியுள்ளார்.

    சில நேரங்களில் மாணவியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட செல்போன் படத்தை காட்டி இதை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியும் நகை- பணம் கேட்டுள்ளார். இப்படியே கடந்த 6 மாதத்தில் அந்த மாணவியின் வீட்டிலிருந்து 28 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை ஏமாற்றி பெற்றுள்ளார். அந்த நகைகளை விற்று தனக்கு ஒரு மோட்டார் சைக்கிள், விலை உயர்ந்த செல்போன் மற்றும் காதலியுடன் தொடர்பு கொள்ள அவருக்கும் ஒரு செல்போன் என்று வாங்கி கொடுத்துள்ளார். மற்ற பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து உல்லாசமாக செலவழித்துள்ளார்.

    இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் ஒரு விசே‌ஷ நிகழ்ச்சிக்காக நகைகளை தேடினர். அப்போது வீட்டிலிருந்த 28 பவுன் தங்க நகைகளும், ரூ.45 ஆயிரம் ரொக்க பணமும் மாயமானதால் அதிர்ச்சியடைந்தனர். பீரோவில் இருந்த நகை- பணம் எப்படி மாயமானது என்று தங்களது மகளான பிளஸ்-1 மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அந்த மாணவி நகை-பணத்தை தனது காதலன் பிலிப்பிடம் கொடுத்ததாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, நெல்லை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் வேல்கனி, சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வாலிபர் பிலிப் மாணவியை ஏமாற்றி நகைகளை விற்று உல்லாசமாக செலவழித்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் பிலிப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புதுவையில் கணவன், மனைவியை கொன்று நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #PuducherryMurder
    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு அண்ணாநகர் 14-வது குறுக்கு தெருவை சேர்ந்த வக்கீல் பாலகிருஷ்ணன் (வயது 72). இவரது மனைவி ஹேமலதா (65).

    இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் வெளிநாடுகளில் வசித்து இருக்கும் நிலையில், கணவன் - மனைவி மட்டும் தனியாக புதுவை வீட்டில் வசித்து வந்தனர். பாலகிருஷ்ணன் முன்னாள் அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் சம்பந்தி ஆவார்.

    நேற்று முன்தினம் யாரோ மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கணவன் - மனைவி இருவரையும் கொலை செய்து விட்டு நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இது பற்றி உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசெல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் நியூட்டன், முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    மேலும் கொலையை கண்டு பிடிக்க அதிரடிப் படையின் உதவியும் நாடப்பட்டது. இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், சந்தோஷ் மற்றும் போலீசார் தனியாக விசாரித்தார்கள்.

    பாலகிருஷ்ணன் வீட்டுக்கு யார்- யார் அடிக்கடி வந்து செல்வார்கள் என்ற விவரங்களையும், வீட்டில் வேலை பார்ப்பவர்களின் விவரங்களையும் சேகரித்தனர். அதன்படி விசாரணை நடைபெற்றது.

    பாலகிருஷ்ணன் சொந்தமாக கார் வைத்துள்ளார். இந்த காரை தேனீ.ஜெயக்குமாரின் டிரைவர்தான் ஓட்டுவது வழக்கம்.

    தேனீ.ஜெயக்குமாரின் டிரைவர் வர முடியாத நேரத்தில் கோட்டக்குப்பத்தை சேர்ந்த முகமது காசிம் என்பவர் டிரைவராக வருவார்.

    கடந்த 4 மாதமாக தொடர்ந்து முகமது காசிம் தான் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அதிரடிப்படை போலீசார் முதலில் தேனீ.ஜெயக் குமாரின் டிரைவரை அழைத்து விசாரித்தனர்.

    அடுத்ததாக முகமது காசிமை விசாரிப்பதற்காக அவரை தொடர்பு கொள்ள முயன்றனர். அவருடைய செல்போன் ‘சுவிட்ச்-ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

    எனவே, அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவருடைய செல்போன் கடந்த 2 நாட்களில் எந்தெந்த பகுதிகளில் எல்லாம் நடமாடி உள்ளது என்பதை செல்போன் நிறுவனம் மூலம் திரட்டினார்கள்.

    நேற்று முன்தினம் மதியம் நீண்ட நேரமாக கொலை நடந்த பகுதியில் அந்த செல்போன் நடமாட்டம் இருந்தது தெரிந்தது.

    எனவே, போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அவர் யார்- யாருடன் இந்த 2 நாட்களும் போனில் பேசினார் என்றும் விசாரித்தனர்.

    அப்போது கோட்டக்குப்பத்தை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவருடன் அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது. எனவே, அவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. எனவே, அவருடைய நடமாட்டத்தையும் போலீசார் கண்காணித்தனர்.

    இதற்கிடையே முகமது காசிம் வேரு ஒரு காரில் டிரைவர் பணிக்காக சென்னை சென்று இருப்பது தெரிய வந்தது. எனவே, அவர் வருகைக்காக போலீசார் ரகசியமாக காத்து இருந்தனர்.

    அவர் காரில் சென்னையில் இருந்து திரும்பி வந்தார். உடனே டிரைவர் முகமது காசிமை சுற்றி வளைத்த போலீசார் அவரை தனியாக அழைத்து சென்று விசாரித்தனர்.

    முதலில் கொலைக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். போலீசார் விசாரணையின் யுக்தியை மாற்றி கிடுக்கிப்பிடி போட்டு விசாரித்தனர்.

    அப்போது நான்தான் கொலை செய்தேன் என்று முகமது காசிம் ஒத்துக் கொண்டார். அவரது நண்பர் முகமது இலியாசுடன் சேர்ந்து கொலை செய்ததாக தெரிவித்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.

    முகமது இலியாஸ் கோட்டக்குப்பத்தில் கோழிக்கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

    பாலகிருஷ்ணன் வீட்டுக்கு டிரைவராக வந்த முகமது காசிம் அந்த வீட்டில் உள்ள வசதியான நிலையை பார்த்து ஏராளமான பணம் - நகைகள் இருக்கும் என்று கருதி உள்ளார்.

    எனவே, அவற்றை கொள்ளையடிக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இது சம்பந்தமாக நண்பர் முகமது இலியாசிடம் கூறினார். அவரும் இந்த திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்தார்.

    அதன்படி நேற்றுமுன் தினம் மதியம் மோட்டார் சைக்கிளில் அவர்கள் இருவரும் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தனர். அருகில் காலி மனையில் உள்ள மா மரம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வீட்டுக்குள் சென்றனர்.

    முகமது காசிம் ஏற்கனவே அறிமுகம் ஆன நபர் என்பதால் நாய் அவரை பார்த்து குரைக்கவில்லை. இதனால் 2 பேரும் உள்ளே சென்றனர்.

    பாலகிருஷ்ணன் வீட்டில் உள்ள படுக்கை கிழிந்து இருந்தது. இதை தைப்பதற்கு ஆள் வேண்டும் என்று ஏற்கனவே பாலகிருஷ்ணன் முகமது காசிமிடம் கூறி இருந்தார்.

    எனவே, முகமது இலியாசை படுக்கையை தைப்பதற்காக வந்த தொழிலாளி என்று பாலகிருஷ்ணனிடம் அறிமுகப்படுத்தினார்.

    எனவே, இருவரையும் படுக்கை அறைக்குள் அனுமதித்தனர். அங்கு கணவன் - மனைவி இருவரும் சென்று படுக்கையை எப்படி தைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்தனர்.

    இந்த நேரத்தில் முகமது காசிம் படுக்கை கதவை திடீரென பூட்டினார். பின்னர் கணவன் -மனைவி இருவரையும் அந்த 2 பேரும் அடித்து உதைத்து நகை- பணம் எங்கே இருக்கிறது? என்று கேட்டனர்.

    அதற்கு நகை- பணம் எதுவும் பெரிய அளவில் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் கோபம் அடைந்த அவர்கள் கணவன் - மனைவி இருவரையும் சித்ரவதை செய்தனர்.

    பின்னர் அவர்களை கழுத்தை இறுக்கியும், காலால் கழுத்து மற்றும் மார்பில் மிதித்தும் கொலை செய்தனர். அதன் பின்னர் வீட்டில் இருந்த பீரோ, அலமாரி அனைத்திலும் பணம்- நகை இருக்கிறதா? என தேடினார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல் அதிக நகை - பணம் எதுவும் கிடைக்கவில்லை.

    ரூ.1¾ லட்சம் மதிப்புள்ள சிங்கப்பூர் பணம், சில ஆயிரம் இந்திய ரூபாய் நோட்டுகள், சில வெள்ளி பொருட்கள் ஆகியவை மட்டுமே அவர்களுக்கு கிடைத்தது.

    அதன் பிறகு ஹேமலதா கழுத்தில் இருந்த தாலி சங்கிலி, வளையல், கம்மல் ஆகியவற்றையும் எடுத்து கொண்டனர்.

    11.30 மணிக்கு உள்ளே வந்த அவர்கள் மாலை 4 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருந்து வேறு ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா? என்று தேடினார்கள்.

    இடையில் சமையல் அறைக்கு சென்று டீ தயாரித்து குடித்தனர். அறைக்குள்ளேயே ஆங்காங்கே சிறுநீர் கழித்து அசுத்தப்படுத்தினார்கள்.

    பின்னர் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே சென்றனர். இரவு இருவரும் புதுவையில் உள்ள மதுக்கடைக்கு சென்று மது குடித்தனர். கொள்ளையடித்த பொருட்களை ஒரு இடத்தில் மறைத்து வைத்தனர்.

    மறுநாள் காலை (நேற்று) இருவரும் வழக்கம் போல் தங்கள் பணிக்கு சென்றனர். ஆனால், போலீசார் துப்பு துலக்கி இருவரையும் கைது செய்து விட்டனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டன.

    தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரித்து வருகிறார்கள்.

    கொலை நடந்த தகவல் தெரிந்த 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    இதனால் போலீசாரை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினார்கள். #PuducherryMurder
    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் விவசாயி வீட்டுக்குள் புகுந்து 13 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள எட்டியத்திடல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேத சூசைமாணிக்கம் (வயது 81). விவசாயியான இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 13 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பினர்.

    மாலையில் வீடு திரும்பிய வேத சூசைமாணிக்கம் நகை, பணம் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து அவர் ஆர்.எஸ்.மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதில், எட்டியத்திடலை சேர்ந்த ஒரு நபர் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    சென்னை அமைந்தகரையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    சென்னை:

    கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் சசிகாந்த் ரெட்டி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சைலஜா ரெட்டி.

    கணவன்-மனைவி இருவரும் கடந்த மூன்று மாதங்களாக சென்னை அமைந்தகரை வெற்றி விநாயகர் கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குழந்தையின்மைக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு இருவரும் மருத்துவமனைக்கு சென்றனர். மாலையில் திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10சவரன் நகை, லேப்டாப் மற்றும் 4ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி அருகே பழவியாபாரி வீட்டு கதவின் தாழ்ப்பாளை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த தம்புரெட்டிபாளையம் கிராமத்தைச்சேர்ந்தவர் செல்வமணி. இவர்சென்னை திருவெற்றியூரில் பழவியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில் 2 தனி அறைகளில் மகன்கள் பிரசாந்த் மற்றும் நவீன் ஆகியோர் தனித்தனியே குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.

    கடந்த 6-ந்தேதி பழ  வியாபாரத்திற்கு சென்ற செல்வமணி, சென்னையிலேயே தங்கி விட்டார். சிப்காட் அடுத்து முத்து ரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மகன்கள் மற்றும் குடும்பத்துடன் சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை பிரசாந்த் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவின் தாழ்ப்பாள் கடப்பாரை கொண்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. 3 பீரோக்களில் இருந்த 14 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ. 45 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் அள்ளிச் சென்றிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திண்டுக்கல்லில் தாசில்தார் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நாகல்நகர் பால்சாமி அய்யர் சந்து பகுதியைச் சேர்ந்தவர் தாஜூதீன். இவர் தனி தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு தாஜூதீன் மற்றும் அவரது மனைவி ஷாகிதா பானு ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு தூங்கி விட்டனர்.

    இன்று காலை எழுந்து பார்த்தபோது ஷாகிதா பானுவின் 6½ பவுன் தங்க சங்கிலி மற்றும் தாஜூதீன் பையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    தாசில்தார் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால் வீட்டின் கதவு பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை. கொள்ளையர்கள் எவ்வாறு வீட்டுக்குள் புகுந்து திருடிச் சென்றனர் என்பது தெரியாமல் அவர்கள் குழம்பினர். தாசில்தாருக்கு தெரிந்த நபர்கள் யாரும் கைவரிசை காட்டியுள்ளனரா? என தெரியவில்லை.

    இது குறித்து திண்டுக்கல் தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    ராமநாதபுரத்தில் பூட்டிய வீட்டில் இருந்து 32 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் பட்டணம் காத்தானில் உள்ள மீனாட்சி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் மாலதி (வயது 60). தனியாக வசித்து வந்த இவர் கடந்த 19-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த 32 பவுன் நகை, ரூ. 80 ஆயிரம் ரொக்கம், வெள்ளி பொருட்களை திருடிக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    போலீஸ் தகவல் அறிக்கையில் கொள்ளைபோன நகை, பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 500 என குறிப்பிடப்பட்டுள்ளது.
    சென்னை விருகம்பாக்கத்தில் என்.எல்.சி. நிறுவன அதிகாரி வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    போரூர்:

    விருகம்பாக்கம் சாய் நகர் 6-வது தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது வீடு முதல் தளத்தில் உள்ளது. இங்கு அவர் விடுமுறை நாட்களில் தங்கி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை பிரபாகரனின் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனை கண்ட கீழ் தளத்தில் வாடகைக்கு குடியிருக்கும் பத்மா என்பவர் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அவர் சென்னை திரும்பினார். அப்போது, பீரோவில் இருந்த ரூ.40ஆயிரம், 10 சவரன் நகை, எல்.இ.டி. டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் பிரபாகரன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிரபாகரன் பெங்களூரில் வசித்து வரும் நீதிபதி ஒருவரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
    மாங்காடு அடுத்த அம்பாள் நகரில் தனியார் நிறுவன என்ஜினீயர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர்கள் கொள்ளைடித்துச் சென்றுள்ளனர்.
    பூந்தமல்லி:

    மாங்காடை அடுத்த அம்பாள் நகர் பாலாஜி அவென்யூவில் வசித்து வருபவர் ரமேஷ். பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 13-ந்தேதி இவரது மனைவியும், குழந்தைகளும் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சென்று விட்டனர். கடந்த 21-ந் தேதி ரமேசும் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்த போது கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 32 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணவில்லை.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை-பணத்தை திருடி சென்றிருப்பது தெரிந்தது. இது குறித்து மாங்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நள்ளிரவில் கணவன் மற்றும் மனைவியை கட்டிப்போட்டு 20 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள பரந்தாமன் நகரில் வசித்து வருபவர் காதர் மைதீன் (வயது 54). இவரது மனைவி சம்சாத்பேகம் (50). இவர்களது மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று இரவு வழக்கம் போல் காதர் மொய்தீன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டின் முன்புள்ள இரும்பு கதவின் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு காதர் மொய்தீன் பதறி எழுந்தார். பின்னர் வெளியே வந்து பார்த்தார்.

    அதற்குள் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருந்தனர். இதில் ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காதர் மைதீனின் கழுத்தில் வைத்து அழுத்தினான். சத்தம் போட்டால் வெட்டி கொன்று விடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர்.

    பின்னர் அவரின் கை, கால்களை கட்டிப் போட்டனர். மேலும் வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த சம்சாத் பேகத்தின் தலையில் கட்டையால் தாக்கினர். இதில் அவர் மயங்கினார்.

    வீட்டில் நகை, பணம் எங்கு உள்ளது எனவும், பீரோ சாவியை தருமாறு கேட்டுள்ளனர். காதர் மைதீன் கூற மறுத்ததால் அவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த பொருட்களை எடுத்து வெளியே வீசினர்.

    பீரோவில் இருந்த நகை, பணம், செல்போன்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டனர். மேலும் காதர் மைதீனின் மோட்டார் சைக்கிளையும் திருடிக்கொண்டு அந்த கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பியது.

    பின்னர் கணவன்- மனைவி இருவரும் சத்தம் போட்டனர். அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காதர் மைதீனின் வீட்டிற்கு வந்து பார்த்தனர். அப்போதுதான் இருவரையும் தாக்கி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்தனர்.

    இது குறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ், கீரனூர் டிஎஸ்.பி. பிரான்சிஸ், இன்ஸ்பெக்டர் நாஞ்சில் உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது 3 பேர் கொண்ட கும்பல் எனவும், அவர்கள் வீட்டில் இருந்த 8 மோதிரம், கைச்செயின், சம்சாத் பேகம் கழுத்தில் கிடந்த 7½ பவுன் செயின் மற்றும் தோடு என மொத்தம் 20 பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த இருவருக்கும் கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து காதர் மைதீன் கூறுகையில், நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்தது. அவர்கள் டவுசர்கள் மட்டும் அணிந்திருந்தனர். மேலும் முகத்தினை துணியால் மறைத்து கட்டியிருந்தனர். தன்னை தாக்கும்போது, ஒருவர் முகத்தில் இருந்த துணி விலகியது.

    மேலும் போலீசார் காட்டிய கொள்ளையர்கள் படங்களில் 2 பேரை அடையாளம் காட்டியதாகவும் கூறினார்.
    ×