என் மலர்
நீங்கள் தேடியது "Sivagangai robbery"
- வீட்டில் திருட வந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து பார்த்துள்ளனர்.
- பீரோவில் நகை, பணம் இல்லாததால் வீட்டில் உள்ள பொருட்களுக்கு தீயை வைத்து விட்டு சென்றுள்ளனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை ராம்நகர் 4 வீதியில் புதுக்கோட்டை மாவட்டம் கண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது70) என்பவரும், அவரது மனைவி குழந்தை திரோஸ் (65) ஆகியோர் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் குழந்தை திரோஸ் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு காணத்தங்காடு கிராமத்தில் உறவினர் திருமணத்திற்காக சென்று விட்டார்.
அப்போது அவரது வீட்டிலிருந்து தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்து புகை வெளிவந்ததை கண்டு பொதுமக்கள் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே இச்சம்பவம் குறித்து அறிந்த இன்ஸ்பெக்டர் சரவணன் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் அணைத்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் வீட்டில் திருட வந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து பார்த்துள்ளனர். அதில் நகை, பணம் இல்லாததால் வீட்டில் உள்ள பொருட்களுக்கு தீயை வைத்து விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்கம்புணரி கீழைக்காடு சாலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி. உடல்நலம் பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் சிகிச்சை பெறுவதற்காக மதுரைக்கு சென்றார். இதனை அறிந்த யாரோ மர்ம மனிதர்கள் சுப்பிரமணியன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோக்களை உடைத்து அதிலிருந்த 15 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சிங்கம்புணரி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார். சுப்பிரமணியன் மதுரைக்கு சென்றிருப்பதை அறிந்தே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.






