search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "invite"

    • கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கரூர் மாவட்டத்தில் உதவி மையங்கள் அமைப்பு
    • பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள கலெக்டர் பிரபுசங்கர் அழைப்பு

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பத்தின் நிலை ஆகியவற்றினை பின்வரும் அலுவலகங்களில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை அழைத்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - 9489984960, கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்- 9489984961, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்- 9489984962, கரூர் வட்டாட்சியர் அலுவலகம்- 9489984963, அரவக்குறிச்சி - 9489984964, மண்மங்கலம் - 9489984965-, புகளூர் - 9489984966, கிருஷ்ணராயபுரம் - 9489984967, குளித்தலை - 9489984968, கடவூர் - 9489984969.

    மேலும் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் இ-சேவை மையத்தில் தங்களது குடும்ப அட்டை எண்ணை அளித்து, தங்களின் விண்ணப்பத்தின் நிலையினை அறிந்து கொள்ளலாம். பொதுமக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களின் பேரில் மேல்முறையீடு செய்ய விரும்பும் பட்சத்தில் தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தின் வாயிலாக மேல்முறையீடு செய்து கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இச்சேவை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறே https://kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உட்செலுத்தி விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி முதல்வரின் முகவரி திட்டத்தின் இலவச அழைப்பேசி எண் 1100–ல் அழைத்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்து விபரங்களை அறிந்து கொள்ளலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு விண்ணப்பங்கள் அனைத்தும் இ-சேவை மையத்தில் இணையதளம் மூலமாக மட்டுமே மேற்கொள்ள இயலும். இச்சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்க தமிழ்நாடு அரசின் ஆணையின்படி கரூர் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • அரியலூர் சுற்றுலாத் தொழில் நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு
    • அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி சுவர்ணா அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இருக்கும் சுற்றுலா சார்ந்த நிறுவனங்கள் உடனடியாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்தது:உணவுடன் கூடிய உறைவிட வசதி, சாகச சுற்றுலா ஏற்பாடு, கேம்பிங் ஆப்ரேட்டர் மற்றும் கேரவன் ஆப்ரேட்டர் ஆகியவற்றை நடத்தும் நிறுவனங்கள் தமிழக அரசால் வெளியி டப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின்படி சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இது குறித்து அரசாணைகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.எனவே அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மேற்கண்ட நிறு வனங்கள் சுற்றுலாத்துறை இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.மேலும், விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் 2 ஆவது தளத்தில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி 9787484754, 7397715685 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

    • அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
    • முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்று அறிவிப்பு

    அரியலூர், 

    அரியலூர் மற்றும் ஆண்டிமடம் ஆகிய பகுதியிலுள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் இந்த நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.50-ம், சேர்க்கை கட்டணமாக ஒரு ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.185-ம், இரண்டாண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195-ம் செலுத்த வேண்டும்.இணையதளம் வாயிலாக நேரடி சேர்க்கை வரும் 16-ந் தேி வரை நடைபெறுகிறது.

    • அரியலூர் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு மூலம் அழைத்துள்ளார்

    அரியலூர், 

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,அரியலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி கல்வி உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற விரும்பும், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினத்தை சேர்ந்த 9, 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.75 ஆயிரமும், 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர் இணையதள முகவரியில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டு இருக்க வேண்டும்.விண்ணப்பதாரரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 10-ம் தேதி ஆகும். விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்காக ஆகஸ்ட் 12 -ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதற்கான எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. மாணவ,மாணவிகளின் செயல்பாட்டில் இருக்கும் செல்போண் எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    • வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் கலந்து கொள்ள புதுக்கோட்டை கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
    • திருச்சியில் மூன்று நாட்கள் வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாயிகளின்கௌ ரவ நிதித் திட்டத்தின்கீழ் 1,41,290 விவசாயிகள் பதிவு செய்து பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தின்கீழ் நேரடி சிட்டா உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000/- வீதம்ஒரு வருடத்திற்கு ரூ.6000/- மூன்று தவணைகளாக ஏப்ரல் - செப்டம்பர்,ஆக்ஸ்ட்- நவம்பர் மற்றும் டிசம்பர் - மார்ச் மாதங்களில்விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுவருகிறது. விவசாயிகள் தங்களது தவணை தொகை பெறுவதற்குதங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்து டிபிடி மோடுக்கு மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைசார்பாக திருச்சி மாநகரில் கேர் பொறியியல் கல்லூரியில் இம்மாதம்ஜூலை 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் வேளாண் சங்கமம்2023 - வேளாண் சார்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்குநடைபெறவுள்ளது. இதில் விவசாயிகள் அனைவரும் இலவசஅனுமதியில் கலந்துகொள்ளலாம். இங்கு வேளாண்மைத்துறை,தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, விதை மற்றும் அங்ககச்சா ன்றளிப்புத்துறை, வேளாண்மை விற்பனை மற்றும்வேளாண் வணிகத்துறை, தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி, வேளாண்அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் கருவி விற்பனைநிறுவனங்கள், நுண்ணீர் பாசன நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறுதுறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொழில்நுட்பங்கள்ஆகியன விவசாயிகளுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது என்று அவர் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்செல்வி, தனிமாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு)ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்நா.கவிதப்பிரியா, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, கூட்டுறவுசங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.இராஜேந்திர பிரசாத், மாவட்டவன அலுவலர் கணேசலிங்கம், மத்திய கூட்டுறவு மேலாண்மைஇயக்குநர் தனலெட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள், அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயத்திற்கான அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • 100 பேர் வரை குழுவாக இணைய முடியும் என விளக்கம்

    வேலாயுதம்பாளையம், 

    இயற்கை வேளாண் முறையில் விவசாயிகள் அங்ககச் சான்று பெறுவதற்கு தற்சமயம் கட்டணமின்றி தேசிய பங்கேற்பு உத்திரவாத திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இயற்கை விவசாயம் செய்யும் ஒரு கிராமம் அல்லது அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தாங்களாகவே 7முதல் 25 பேர் வரை கொண்ட ஒரு குழுவாக இணைய வேண்டும். இதில் அதிகபட்சம் 100 பேர் வரை குழுவாக இணைய முடியும். இவ்வாறு இணையும் குழுவினர் அங்கக முறைப்படி விவசாயம் செய்வோம் என்ற உறுதிமொழி ஏற்று இத்திட்டத்தில் இணையலாம். இவ்வாறு ஏற்படுத்தப்படும் குழுக்களுக்கு தலைவர், செயலாளர் ஆகியோரை தேர்வு செய்வதுடன் குழுவுக்கு தனியாக பெயர் வைக்க வேண்டும். பின்னர் குழு உறுப்பினர்களின் பெயர், கிராமம், பட்டா, ஆதார் எண், போட்டோ மற்றும் நிலவுடமை ஆவணங்களுடன் பங்கேற்பாளர் உறுதியளிப்பு திட்டத்தில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் அந்த விண்ணப்பத்தினை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கரூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கரூரில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்ட உள்ளது
    • போட்டியில் கலந்து கொள்ள கலெக்டர் பிரபு சங்கர் அழைப்பு விடுத்தார்

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜூலை 18-ம் தேதி "தமிழ்நாடு நாளாக" கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, மாவட்ட அளவில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 6-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கிடையே கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகின்ற 12-ம் தேதி புதன்கிழமை காலை 9.30 மணியளவில் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.இப்போட்டியில்முதன்மைக் கல்வி அலுவலரால்தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டிகளில் முதற்பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் மாநில அளவில் நடத்தப்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கரூர் மாவட்டத்தில் இ-சேவை மையம் நடத்த கலெக்டர் அழைப்பு
    • 30ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில் முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையிலும், இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்திடவும் தொடங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்த மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது. மேலும், அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது.இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இசேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையமுறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://tnesevai.tn.gov.in/ அல்லது https://tnega.tn.gov.in/ என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தவும், விண்ணப்பங்களை வருகிற 30-ந்தேதி இரவு 8 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • நாட்டுப்புற கலைஞர்களுக்கு அழைப்பு
    • கலெக்டர் பிரபுசங்கர் தகவல்

    கரூர்,

    கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் விருது பெற வரும், 29க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில்... பண்பாட்டுத்துறையின் கீழ், மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக, தமிழ கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த ஐந்து கலைஞர்களுக்கு வயது மற்றும் கலை புலமைக்கு ஏற்றவாறு கலை விருதுகள் வழங்கப்படவுள்ளது. எனவே கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பர தநாட்டியம், ஓவியம், கும்மி கோலாட்டம், மயி லாட்டம், பாவை கூத்து, தோல் பாவை, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல் கால் ஆட்டம், கலியல் ஆட்டம், புலி ஆட்டம், காளை ஆட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், கைசி லம்பாட்டம் (வீரக்கலை) ஆகிய கலைஞர்கள் விண்ணப் பிக்கலாம்.தேசிய விருது, மாநில விருது மற்றும் மாவட்ட கலைமன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள், இந்த விருதிற்கு விண் ணப்பம் செய்யக்கூடாது. மாவட்ட விருது பெற தகுதி வாய்ந்த கலைஞர்களிடமிருந்து வரும், 29க்குள், உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், நைட் சாய்ல் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சிராப் பள்ளி-6 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

    • விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்
    • 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவிக்கையில், முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களு க்கான ஓய்திவூய உதவி தொகை பெறுவதற்கான விண்ண ப்பங்கள் அளிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க குறைந்தபட்ச தகுதிகளான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். சர்வதேச, தேசிய போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும். தகுதியான விளையாட்டுப் போட்டிகள் ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அகில இந்திய பல்கலைகழகங்களுக்கு இடையேயான போட்டிகள், இந்தியப்போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் (இ) வயது வரம்பு 2023 ஆம் வருடம் ஜனவரி மாதம் (31.01.2023) 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். (ஈ) விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6000ல் இருந்து ரூ.15000க்குள் இருத்தல் வேண்டும். ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகள், வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஒய்வூதியம் பெற தகுதி இல்லை. எனவே அரியலூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் மேற்காணும் தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். விண்ணப்பங்கள் 20.03.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்.19.04.2023 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு பின் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் அவர்களை 7401703499 என்ற அலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    • அரியலூர் மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிக்கை

    அரியலூர்,

    தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புறதொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பி டத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது.மேலும், அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது. இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, அனைவருக்கும் இ-சேவைமையம் திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இசேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தி ட்டத்தின் நோக்கமானது, அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இசேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இசேவை மையங்களின் எண்ணி க்கையினை அதிகரித்து இசேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும்.எனவே, அரியலூர் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவைமையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க ப்படுகின்றன. இணையமுறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.





    • தமிழ்வளர்ச்சித்துறை அலுவலகத்தில் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
    • முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை

    பெரம்பலூர்

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அகவை (வயது) முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 1.1.2022-ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமான சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணியாற்றி வருவதற்கான தகுதிநிலை சான்று தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித்துறையின் வலைத்தளத்திலோ www.tamilvalarchithurai.tn.gov.in இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.3 ஆயிரத்து 500, மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சித் உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 31-ந் தேதிக்குள்ளும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 27-ந் தேதிக்குள்ளும் அளிக்கப்பட வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்க பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது, என்று அந்தந்த மாவட்ட 

    ×