search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Insistence"

    • மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
    • சிறு தானியங்களின் பயன்பாடு நகர, கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது.

    உடுமலை :

    உடுமலை சுற்றுப்பகுதியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரி சாகுபடி பல ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. கம்பு, தினை, சோளம், கொண்டைக்கடலை உட்பட தானியங்கள் இப்பகுதியிலேயே உற்பத்தியாகி சந்தைகளுக்கு வரத்து சீராக இருந்து வந்தது.பல்வேறு காரணங்களால் தானிய சாகுபடியும் சிறு தானிய உணவுகள் பயன்பாடும் குறைந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக சிறு தானிய உணவுகள் குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இதனால் சிறு தானியங்களுக்கான, தேவை அதிகரித்துள்ளது. ஆனால் அதற்கேற்ப உற்பத்தி இல்லாமல் பற்றாக்குறை நிலவி வருகிறது.

    இது குறித்து சிறு வியாபாரிகள் கூறியதாவது:- உடல் நலனுக்கு நன்மை தரும், சிறு தானியங்களின் பயன்பாடு நகர, கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப தரமான, அதேவேளையில் விலை குறைவாக தானியங்கள் கிடைப்பதில்லை.உடுமலை பகுதியில் இவ்வகை சாகுபடிகள் வெகுவாக குறைந்து விட்டது. முன்பு அறுவடை சீசன் சமயங்களில் நேரடியாக கிராமங்களுக்கு சென்று சிறு தானியங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வோம். தற்போது அந்நிலை இல்லை. உள்நாட்டு தேவைக்கு போதுமான அளவு தானியங்கள் கிடைப்பதில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.விவசாயிகள் கூறுகையில், சிறு தானியங்கள் சாகுபடி செய்ய ஆர்வமிருந்தாலும் தேவையான விதைகள் கிடைப்பதில்லை.

    வேளாண்துறை சார்பில் சிறப்பு திட்டங்களின் கீழ் மானியத்தில் சிறு தானிய விதைகளை வழங்க வேண்டும். பருவமழைகள் கைகொடுத்தால், இவ்வகை தானியங்கள் உற்பத்தி பழைய நிலைக்கு திரும்பும் என்றனர்.

    • தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளோம்.
    • தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்போடு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

    திருப்பூர் :

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- திராவிட அரசாங்கம் பெரியாரை பற்றி கட்டுரை போட்டி நடத்த வேண்டும் என பள்ளிகல்வி துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் , சுதந்திரம் வேண்டாம் என்றும் சொன்னவர் பெரியார். அவர் வரலாறை பாடத் திட்டத்தில் கொண்டு வர சதி திட்டம் உள்ளது.இதற்கு இந்து முன்னனி கண்டனங்களை தெரிவித்து கொள்கிறது . மேலும் , தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளோம். திருப்பூரில் 1200 இடங்களில் வைத்து வழிபட உள்ளோம். பிரிவினைவாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்போடு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

    திருப்பூரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும் , கோவையில் எச்.ராஜா போன்றோரும் கலந்து கொள்ள உள்ளனர் .வீடுகளில் விநாயகர் சிலைகள் வைப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.1983 ஆம் ஆண்டு முதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது முதலே அ.தி.மு.க., தி.மு.க., இரண்டு அரசாங்கமும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை தடை செய்ய நினைத்தார்கள். அதனை தாண்டி தான் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வந்தோம். இந்த ஆண்டு நடைபெறும் விழாவிற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் .

    மேலும், பங்களாதேஷ் போன்ற நாட்டிலிருந்து வருபவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருக்கிறார்கள். திருப்பூர் போன்ற ஊர்களில் மாவோயிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். தமிழகம் குறிவைக்கப்பட்டு எந்நேரமும் கலவரம் வரும் என்ற சூழல் நிலவுகிறது. உளவுத்துறை சரிவர செயல்படுவதில்லை .இவ்வாறு அவர் கூறினார்.

    • அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியை கண்டித்தும், விசாரணையில் இருந்து அவரை விடுவிக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    தஞ்சாவூர்:

    சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியை கண்டித்தும், விசாரணையில் இருந்து அவரை விடுவிக்க வலியுறுத்தியும் தஞ்சை ரெயிலடியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள்மாவட்ட தலைவரும்முன்னாள் ஒன்றிய பெருந்தலைவரு மான நாஞ்சி கி.வரதராஜன், முன்னாள் துணைதலைவர் கலைச்செல்வன், பொது க்குழு உறுப்பினர் ஜேம்ஸ், துணை தலைவர்கள்லட்சுமிநா ராயணன், வயலூர் ராமநாதன், மதுக்கூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜான்தனசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலிட பார்வையாளர் பாலசுப்பிரமணியம் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து கோஷ ங்கள் எழுப்பப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி கவுன்சிலர் ஹைஜாக்கனி, ஐ.என்.டி.யூ.சி. ஆரோக்கியசாமி, எஸ்.ஆர்.இ.எஸ். அசோக்ராஜன், மக்கள் நலப்பேரவை பேராசிரியர் பாலகிருஷ்ணன், சந்திர சேகரன், கரந்தை கண்ணன், செந்தில் சிவக்குமார், அடைக்கலசாமி, மேலஉளூர் ஆறுமுகம், நாஞ்சி ராஜே ந்திரன், சாமிநாததேவர், ரெயில் வடிவேல், மாரிய ம்மனகோயில் குமாரசாமி, யாத்திரை கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×