search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்

    • தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளோம்.
    • தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்போடு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

    திருப்பூர் :

    இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:- திராவிட அரசாங்கம் பெரியாரை பற்றி கட்டுரை போட்டி நடத்த வேண்டும் என பள்ளிகல்வி துறை அதிகாரிகள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் , சுதந்திரம் வேண்டாம் என்றும் சொன்னவர் பெரியார். அவர் வரலாறை பாடத் திட்டத்தில் கொண்டு வர சதி திட்டம் உள்ளது.இதற்கு இந்து முன்னனி கண்டனங்களை தெரிவித்து கொள்கிறது . மேலும் , தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க உள்ளோம். திருப்பூரில் 1200 இடங்களில் வைத்து வழிபட உள்ளோம். பிரிவினைவாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளர்ப்போம் என்ற தலைப்போடு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

    திருப்பூரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும் , கோவையில் எச்.ராஜா போன்றோரும் கலந்து கொள்ள உள்ளனர் .வீடுகளில் விநாயகர் சிலைகள் வைப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.1983 ஆம் ஆண்டு முதல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது முதலே அ.தி.மு.க., தி.மு.க., இரண்டு அரசாங்கமும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை தடை செய்ய நினைத்தார்கள். அதனை தாண்டி தான் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடி வந்தோம். இந்த ஆண்டு நடைபெறும் விழாவிற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் .

    மேலும், பங்களாதேஷ் போன்ற நாட்டிலிருந்து வருபவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருக்கிறார்கள். திருப்பூர் போன்ற ஊர்களில் மாவோயிஸ்ட்டுகள் இருக்கிறார்கள். தமிழகம் குறிவைக்கப்பட்டு எந்நேரமும் கலவரம் வரும் என்ற சூழல் நிலவுகிறது. உளவுத்துறை சரிவர செயல்படுவதில்லை .இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×