search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hotel owner"

    ஓட்டல் உரிமையாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பாகூர்:

    பாகூர் பங்களா வீதியை சேர்ந்தவர் பாபு (வயது 39). இவர் பாகூர் சிவன் கோவில் அருகே இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது கடை பக்கத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜி (35) ஆட்டோ டிரைவர். இவரது அக்கா பூக்கடை வைத்திருக்கிறார்.

    இதனால் பாபுவுக்கும், ராஜியின் அக்காவுக்கும் இட பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று பாபு சிவன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜி பீர்பாட்டிலால் பாபுவின் தலையில் அடித்தார். இதில் தலையில் காயம் அடைந்த பாபு பாகூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பாபுவை ராஜி தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டலும் விடுத்தார்.

    பின்னர் இது குறித்து பாபு பாகூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோர் வழக்குபதிவு செய்து ராஜியை தேடி வருகிறார்கள்.

    வடமதுரையில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளர் தாக்கப்பட்டார்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே வேல்வார்கோட்டை புதுகளரம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் வடமதுரை ரெயில் நிலைய சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இங்கு செங்குளத்துப் பட்டியை சேர்ந்த மகாலிங்கம், போஜனம்பட்டியை சேர்ந்த முருகபெருமாள் ஆகியோர் உணவு சாப்பிட வந்துள்ளனர். விரும்பிய பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர்.

    பின்னர் சாப்பிட்டதற்கான பில் தொகையை செந்தில்குமார் அவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் 2 பேரும் பணத்தை தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த மகாலிங்கம் மற்றும் முருகபெருமாள் செந்தில்குமாரை கடுமையாக தாக்கினர். படுகாயம் அடைந்த செந்தில்குமார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சூரியதிலகராணி 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சேலத்தில் ஓட்டல் அதிபர் கடத்தப்பட்ட சம்பவம் அம்மாப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை ராமலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 45). இவர் அம்மா உணவகம் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக அவரது குடும்பத்தினர் அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடதி வருகின்றனர்.

    விசாரணையில் கோபி கடத்தப்பட்டது தெரிய வந்தது. அவரை கடத்தியது யார்? எதற்காக அவர் கடத்தப்பட்டார்? என்பது தெரியவில்லை. அவரை தேடி கண்டு பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் அம்மாப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நைனார்மண்டபத்தில் ஓட்டலை சூறையாடி உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது43), இவர் நைனார்மண்டபம்- கடலூர் மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது ஓட்டலுக்கு முதலியார்பேட்டையை சேர்ந்த வாலிபர் சுத்திமணி என்பவர் சாப்பிட வந்தார். அப்போது அவர் ஓட்டலின் சமையல் கூடத்துக்கு சென்றார். இதற்கு புஷ்பராஜ் எதிர்ப்பு தெரிவித்து சுத்திமணியை சமையல் கூடத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் இருதரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

    அப்போது சுத்திமணி செல்பானில் பேசி நைனார்மண்டபத்தை சேர்ந்த தனது நண்பர்களான ஆனந்து, எழில், எலி ஆகியோரை வரவழைத்தார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். மேலும் புஷ்பராஜை கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு அவர்கள் 4 பேரும் சென்று விட்டனர்.

    இதையடுத்து புஷ்பராஜ் இது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவிசப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் வழக்குபதிவு செய்து சுத்திமணி உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகிறார்கள். ஓட்டலை சூறையாடிய சுத்திமணி மீது முதலியார்பேட்டை போலீசில் ஏற்கனவே பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வில்லியனூரில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் மெயின் ரோடு அரியூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது மகன் பாரதிராஜா (வயது 39). இவர், அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இவர், 5-ந் தேதி தனது தம்பி மனைவி பிரசவத்துக்கு அழைத்து சென்று விட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது 2 பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 14 பவுன் நகை, ரூ.16 ஆயிரம் ரொக்க பணத்தை காணவில்லை. முத்துலட்சுமியின் பீரோவை உடைக்க முடியாததால் அதில் இருந்த நகை- பணம் தப்பியது.

    இதுகுறித்து பாரதிராஜா வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன், உதவி சப்-இன்ஸ் பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவ செய்து மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கைரேகை நிபுணர் வர வழைக்கப்பட்டு ரேகையை பதிவு செய்தனர்.

    கோவை பீளமேட்டில் மாணவிகளிடம் விடுதி உரிமையாளர் அத்துமீறி சில்மி‌ஷத்தில் ஈடுபட முயன்ற வீடியோ காட்சிகள் போலீசாருக்கு கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவை:

    கோவை பீளமேட்டில் விடுதி மாணவிகள் 5 பேரை ஓட்டலுக்கு அழைத்து சென்று விருந்து கொடுத்து பெண் வார்டன் பாலியலுக்கு அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட விடுதி உரிமையாளர் ஜெகநாதன் (45) நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். தலைமறைவான பெண் வார்டன் புனிதா(32) கடந்த 1-ந் தேதி கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.

    புனிதா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நான் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தேன். எனக்கு 2குழந்தைகள் உள்ளனர். ஜெகநாதன் கூறியதால் மாணவிகளை ஓட்டலுக்கு விருந்துக்கு அழைத்து சென்று பீர் வாங்கி கொடுத்தேன். மாணவிகள் மறுத்த போது அவர்களை ஜெகநாதனுடன் செல்போனில் ‘வீடியோ கால்’ பேசி ஜாலியாக இருக்குமாறும், அவ்வாறு செய்தால் வசதியாக இருக்கலாம் என கூறி தவறான பாதைக்கு அழைத்தேன்.

    இதற்கு முன்பு எந்த பெண்ணையும் ஜெக நாதனுடன் பேச வைக்க வில்லை. முதல் முறையாக பேச வைத்த போது சிக்கலாகி விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டதை அறிந்ததும் நான் தப்பி சென்று உறவினர் வீட்டில் பதுங்கினேன். அப்போது தான் ஜெகநாதன் இறந்தது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்வார் என எதிர்பார்க்கவில்லை.

    என்னிடம் ரூ.10 ஆயிரம் மட்டுமே இருந்தது. இதை வைத்து அதிக நாட்கள் வெளியூரில் தங்கியிருக்க முடியாது என நினைத்தேன். எனது செல்போன் எண் மூலம் போலீசாரும் தேடுவதால் எப்படியும் மாட்டிக் கொள்வேன் என நினைத்து கோர்ட்டில் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புனிதாவின் வாக்கு மூலத்தை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர்.

    போலீஸ் காவல் முடிந்து புனிதா நேற்று மாலை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14-ந் தேதி வரை நீதி மன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கண்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து புனிதா கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    பெண்களிடம் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் அத்துமீறி சில்மி‌ஷத்தில் ஈடுபட முயன்ற காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன. இந்த காட்சிகள் ஓட்டலில் எடுக்கப்பட்டதா? அல்லது வேறு எங்காவது வைத்து எடுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை.

    சம்பவத்தன்று ஓட்டலில் என்ன நடந்தது? மாணவிகளுக்கு விருந்து கொடுத்து ஜெகநாதன் அத்துமீறினாரா? என்பதை கண்டுபிடிக்க ஓட்டல் உரிமையாளரை நேரில் வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெகநாதன் பெண்களிடம் அத்து மீறிய வீடியோ காட்சிகளை வழக்கின் முக்கிய ஆதாரமாக கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×