search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Halwa"

    • இது வட இந்தியாவில் அதிகமாக சுவைக்கப்படும் இனிப்பு ஆகும்.
    • இதில் வைட்டமின் ஈ, புரதச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    பாதாம் - 100 கிராம்

    காய்ச்சிய பால் - ½ லிட்டர்

    சர்க்கரை - 6 தேக்கரண்டி

    ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி

    குங்குமப்பூ - 1 கிராம்

    நெய் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் அதன் மேல் தோலை உரித்து, மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், அதில் பாதாம் விழுதை சேர்த்துக் கிளறவும். சிறிது சிறிதாக நெய் ஊற்றி அடிப்பிடிக்க விடாமல் பாதாம் பொன்னிறமாக மாறும் வரை நன்றாகக் கிளறவும்.

    பின்னர் அதில் குங்குமப்பூ போட்டு காய்ச்சியப் பாலை சேர்க்கவும்.

    பின்பு சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் நன்றாகக் கிளறி, ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

    கலவை வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது அடுப்பை அணைக்கவும்.

    இப்போது பாதாம் ஷிரோ தயார்.

    அதன் மேல் சிறிது பொடித்த பாதாம் மற்றும் குங்குமப்பூத் தூவி பரிமாறவும்.

    • சிறுதானியங்களில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று தினை அரிசியில் அல்வா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    தினை அரிசி மாவு - 200 கிராம்,

    வெல்லம் - 200 கிராம்,

    ஏலக்காய்த் தூள் - அரை தேக்கரண்டி,

    சுக்குத்தூள் - 2 சிட்டிகை,

    முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு - தலா 10 கிராம்,

    நெய் - 100 கிராம்.

    செய்முறை

    தினை அரிசி மாவுடன் வெல்லம், தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக்கொள்ளவும்.

    சட்டியில் சிறிது நெய்யை விட்டு சூடாக்கி, கரைத்து வைத்துள்ள மாவை, சிறிது சிறிதாக விட்டு, நன்றாகக் கிளறவும்.

    கட்டியாகாமல் பார்த்துக்கொள்ளவும்.

    இடைவிடாமல் சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும்.

    அல்வா, சட்டியில் ஒட்டாமல் வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை, சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும்.

    இப்போது சூப்பரான சத்தான தினை அல்வா ரெடி.

    • பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் இந்த அல்வா மிகவும் பிரபலம்.
    • இதை பஞ்சாபில் Gajar ka halwa என்று அழைக்கின்றார்கள்.

    தேவையான பொருட்கள் :

    துருவிய கேரட் - 3 கப்

    சர்க்கரை தலை தட்டி - 1 கப்

    பால் கோவா - 1/4 கப்

    நெய் - 1/2 கப்

    உலர் திராட்சை - 1 மேஜைக்கரண்டி

    முந்திரி - 1 மேஜைக்கரண்டி

    பாதாம் - 1 மேஜைக்கரண்டி

    ஏலக்காய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி

    தேவையான அளவு - எண்ணெய்

    செய்முறை :

    * முந்திரி மற்றும் பாதாமை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    * ஏலக்காயை பொடித்து வைத்துக் கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கால் கப்புக்கும் சிறிதளவு கூடுதலான நெய் மற்றும் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.

    * எண்ணெய் சூடானதும் அதில் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுத்து வைக்கவும்.

    * அடுத்து அதில் துருவி வைத்திருக்கும் கேரட்டை போட்டுபச்சை வாசம் போய் நன்கு வதங்கி வேகும் வரை வதக்கவும். (இது சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை எடுக்கலாம்.)

    * கேரட் வெந்ததும் அதில் சர்க்கரை மற்றும் பால் கோவாவை போட்டு நன்கு கேரட்டோடு ஒன்றோடு ஒன்றாக சேருமாறு கிளறி விட்டு அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்துக் கொள்ளவும்.

    * சர்க்கரை ஓரளவிற்கு உருகியதும் அதில் பொடித்து வைத்திருக்கும் ஏலக்காய் தூளை போட்டு நன்கு கிளறி விடவும்.

    * அடுத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய்யை இதில் சேர்த்து கிளறி விடவும்.

    * மிக கவனமாக அல்வா இளகிய பதம் இருக்கும் போதே இறக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் துருவிய பாதாம் துண்டுகளை அதன் மேலே தூவி சிறிது நேரம் ஆற விட்டு பரிமாறவும். (அல்வாவை சுருளாக வதக்கி விட கூடாது. அப்படி செய்தால் அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பத்தாவது நிமிடத்தில் அல்வா இறுகி கட்டியாகி விடும்.)

    * இப்பொழுது சூடான மற்றும் சுவையான கேரட் அல்வா தயார்.

    • பாசிப்பருப்பு அல்வா வட இந்திய மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • திடீரென உறவினர்கள் வந்தால் இந்த ரெசிபி செய்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாசிப்பருப்பு - 1 கப்,

    தண்ணீர் - 2 கப்,

    பால் - 1 கப்,

    சர்க்கரை - 11/2 கப்,

    வறுத்த ரவை - 1/4 கப்,

    நெய் - 4 டேபிள்ஸ்பூன்

    முந்திரி - விருப்பத்திற்கேற்ப

    ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்.

    செய்முறை :

    * முதலில் பாசிப்பருப்பை நன்கு கழுவி வடிகட்டி விட்டு குக்கரில் சேர்த்து ஈரப்பதம் இல்லாமல் வறுத்துக் கொள்ளுங்கள். பாசிப்பருப்பு வறுபட வறுபட ஒட்டாமல் வரும். அந்த சமயத்தில் கொஞ்சமாக நெய் சேர்த்து வாசம் வர வறுத்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து விடுங்கள்.

    * குக்கரில் 4 விசில் போட்டு பருப்பு வெந்ததும் குக்கர் மூடியை திறந்து வெந்த பருப்பை கரண்டி வைத்து மசித்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கப் அளவிற்கு காய்ச்சி ஆற வைத்த திக்கான பால் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சர்க்கரை சேர்த்து கலந்து விட்டால் சற்று தளர ஆரம்பிக்கும்.

    * அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பேன் வைத்து 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு அதில் முந்திரி பருப்புகளை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.

    * முந்திரி வறுபட்டதும் பாசி பருப்பை அதில் ஊற்றி கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். அதனுடன் வறுத்த ரவையை சேர்த்து கிண்டும் பொழுது பருப்பு திரண்டு அல்வா போல கெட்டியான பதத்திற்கு வரும்.

    * இந்த சமயத்தில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். நெய் தெளிந்து கரண்டியில் பாசிப்பருப்பு ஒட்டாமல் அல்வா பதத்திற்கு திரண்டு வரும் சமயத்தில் பொடித்து வைத்துள்ள ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அல்வாவை கரண்டியில் எடுத்து பேனில் போட்டால் பொத்தென்று அழகாக விழும். அது தான் சரியான பதம். இந்த சமயத்தில் அடுப்பை அணைத்து சுட சுட கரண்டியால் எடுத்து தட்டில் வைத்து பரிமாற வேண்டியது தான்.

    * ஆரோக்கியம் நிறைந்த தித்திக்கும் இந்த பாசிப்பருப்பு அல்வா நொடியில் செய்து விடலாம்.

    • அல்வா என்றதுமே நமக்கு நினைவில் வருவது திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா தான்.
    • இன்று தேங்காய் அல்வா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    துருவிய தேங்காய் - 2 கப்

    கொதிக்க வைத்து குளிர வைத்த பால் - 2 1/2 கப்

    சர்க்கரை - 7 டேபிள் ஸ்பூன்

    முந்திரி - தேவையான அளவு

    நெய் - 5 டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

    * பின் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    * அடுத்து அதில் கொதிக்க வைத்து குளிர வைத்த பாலை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்கவும்.

    * பாலானது சுண்டி நீரின்றி போகும் நிலையில் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறி விடவும். கலவையானது கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். இடைஇடையே நெய் சேர்த்துகொள்ளலாம்.

    * கடைசியாக அல்வா போன்று வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் போது வறுத்து வைத்த முந்திரி மற்றும் எஞ்சிய நெய்யையும் சேர்த்து கிளறி இறக்கினால், தேங்காய் அல்வா தயார்.

    * ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொண்டால், சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.

    * மற்ற அல்வாக்களைப் போல் இந்த அல்வாவிற்கு அதிக நெய் தேவைப்படாது.

    மில்க் அல்வாவை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் மில்க் அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பால் - 1 லிட்டர்,
    சர்க்கரை - 200 கிராம்,
    ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
    எலுமிச்சைச்சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்,
    பாதாம், பிஸ்தா - தேவையான அளவு
    குங்குமப்பூ - 1 சிட்டிகை,
    மைதா மாவு - 30 கிராம்,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்.


     
    செய்முறை :

    பாதாமை ஊறவைத்து தோல் நீக்கி நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

    பாலை நன்கு கொதித்த வைத்து இறக்கவும்.

    அதிலிருந்து 750 மி.லி. பாலைத் தனியே எடுத்து எலுமிச்சைச்சாற்றைச் சேர்த்து பாலைத் திரிய வைத்து, ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் திரிந்த பாலை ஊற்றி நன்றாக வடிக்கவும். தண்ணீர் முற்றிலும் வடிந்த பின்பு, லேசாகத் தண்ணீர் சேர்த்து பன்னீரை வீணாக்காமல் துணியிலே எலுமிச்சை வாடை போகும் வரை அலசவும். பின்பு இறுக்கப் பிழிந்து தனியே எடுத்து வைக்கவும்.

    அடிகனமான பாத்திரத்தில் மீதியுள்ள பால், மைதா சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறவும்.

    இத்துடன் சர்க்கரை சேர்த்து கிளறி, சர்க்கரை கரைந்ததும் அதில் நெய், பன்னீரை சேர்த்து மிதமான சூட்டில் கிளறவும்.

    கலவைத் திரண்டு வந்ததும் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ, பாதாம், பிஸ்தாவை சேர்த்து கலந்து இறக்கவும்.

    அகலமானத் தட்டில் நெய்யைத் தடவி, கிளறிய கலவையை கொட்டி பரப்பி விட்டு, சூடு ஆறியதும் விருப்பமான வடிவில் வெட்டி அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான மில்க் அல்வா ரெடி.

    குறிப்பு: 1 டேபிள்ஸ்பூன் சூடானப் பாலில் குங்குமப்பூவைச் சேர்த்து கரைத்து பயன்படுத்தலாம்.

     இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
    அல்வா செய்யும் போது சர்க்கரை, வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டியை பயன்படுத்தினால் அருமையாக இருக்கும். இன்று கருப்பட்டி சேர்த்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தினை அரிசி - 200 கிராம்,
    கருப்பட்டி - 175 கிராம்,
    முந்திரி - 30 கிராம்,
    திராட்சை - 30 கிராம்,
    பாதாம் - 20 கிராம்,
    பிஸ்தா - 20  கிராம்,
    நெய் - 100 கிராம்,
    தண்ணீர் - 200 மி.லி.,
    ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
    சுக்கு பொடி - 1 டேபிள் ஸ்பூன்.



    செய்முறை :

    தினை அரிசியை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

    கருப்பட்டியை நன்றாக பொடித்து கொள்ளவும்.

    பொடித்த கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து பாகு காய்ச்சி கொள்ளவும்.

    ஊற வைத்த அரிசியை நைசாக அரைத்து பால் எடுக்கவும். எடுத்த பாலை கிண்ணத்தில் மாற்றி 15 நிமிடம் தெளிய விடவும். 10 நிமிடம் கழித்து மேலே வந்த நீரை எடுத்து விடவும்.

    ஒரு  வாணலியில் 200 மி.லி. தண்ணீர் ஊற்றி தினை மாவு மற்றும் கருப்பட்டி பாகு சேர்த்து நெய் ஊற்றி அல்வா நன்றாக சுருண்டு வாணலியில் ஒட்டாமல் அல்வா பதம் வரும் வரை  நன்றாகக் கிளறவும்.

    பின்பு ஒரு டிரேயில் நெய் தடவி பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி சூடான அல்வாவை அதன் மேல் பரத்தவும். அல்வா முழுவதுமாக ஆறியவுடன் சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

    சூப்பரான தினை கருப்பட்டி அல்வா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து சுவையான உணவுகளை செய்யலாம். இன்று மாம்பழத்தை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மா‌ம்பழ‌ம் - 2
    சர்க்கரை - 1 கப்
    பால் - 2 கப்
    ஏல‌க்கா‌ய் - 2
    நெய் - தேவையான அளவு
    முந்திரி - சிறிதளவு



    செ‌ய்முறை :

    மாம்பழத்‌தி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு துண்டுகளாக‌ நறுக்கிப் போ‌‌ட்டு அதனை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

    முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்.

    சு‌த்தமான வா‌ய் அக‌ண்ட பாத்திரத்தில் ம‌சி‌த்த மா‌ம்பழ‌‌த்துட‌ன் சர்க்கரை, பால் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் கிளறுங்கள்.

    அடிக்கடி நெய் சேர்த்து கலவை பதமாக ஒட்டாமல் வரும் போது ஏல‌க்கா‌யை ‌சி‌றிது ச‌ர்‌க்கரையுட‌ன் சே‌ர்‌த்து ‌மி‌க்‌சி‌யி‌ல் அரை‌த்து சே‌ர்‌க்கவு‌ம்.

    பா‌த்‌திர‌த்‌தி‌ல் தளதளவெ‌ன்று அ‌‌ல்வா வ‌ந்தது‌ம், ‌வறுத்த முந்திரியை சேர்த்து சி‌றிது நெய் தடவிய த‌ட்டு அ‌ல்லது ‌‌‌ட்ரே‌யி‌ல் அ‌ல்வாவை ஊற்றி நன்கு ஆறிய பின்னர் துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.

    சூப்பரான மா‌ம்பழ அ‌ல்வா தயா‌ர்

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×