search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guru Bhagavan"

    • குரு இருந்து கொடுப்பதைவிட பார்த்துக் கொடுப்பது அதிகம்.
    • திருச்செந்தூர் குரு பகவானுக்கான விசேஷமான தலம் என்று குறிப்பிடப்படுகிறது.

    திருத்தேன் குடித்திட்டை :

    குடந்தையிலிருந்து தஞ்சை செல்லும் சாலையில் 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு வியாழ பகவான் தனிச்சன்னிதியில் சிறப்புற காட்சி தருகிறார். மற்ற சிவாலயங்களில் குருதோஷம் நீங்க தட்சிணா மூர்த்தியே குருவாக வணங்கப்படுகிறார். திட்டையில் மட்டும் நவக்கிரக பிரகஸ்பதி தனியான அந்தஸ்தும் செல்வாக்கும் பெற்று தனி சன்னிதியில் விளங்குகிறார்.

    பட்டமங்கலம் :

    ஞான குருவாக இருந்து கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்தார். அந்த இடம் தான் இப்போது பட்டமங்கலம் என்றழைக்கப்படுகிறது. அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் குருவடிவத்தில் சிவன் அமர்ந்து அடியவர்களுக்கு வேண்டியதை வழங்குகிறார். மணமுடிக்கவும், குழந்தைப் பேற்றுக்காகவும் பக்தர்கள் இங்கு வந்து குரு பகவானை வழிபடுகிறார்கள். மரம் முழுவதும் மஞ்சள் கயிறுகளும் மஞ்சள் துணியாலான சிறு தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன. கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த தட்சிணாமூர்த்தி இங்கு பட்டமங்கலத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூருக்கு 8 கி.மீ. தொலைவில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.

    திருச்செந்தூர் :

    குருதோஷம் நீங்க தேப் பெருமாநல்லூரில் உள்ள அன்ன தான தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் குரு பகவானுக்கான விசேஷமான தலம் என்று குறிப்பிடப்படுகிறது. திருச்சீரலைவாய் என்றும் அழைக்கப்படும் இத்தலம் வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ள முருகப்பெருமான் உறைகின்ற இடம். இங்குள்ள முருகப்பெருமானை வழி படுவதாலும் குருவின் அருள் கிடைக்கிறது. வியாழ பகவான் வழிபட்டு பேறு பெற்ற தலம் இது. குரு தோஷம் நீங்க இங்கு முருகப்பெருமானுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

    தேவூர் :

    கீழ்வேளூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரிலிருந்து செல்லலாம். வனவாசத்தின் போது பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து இறைவனைப் பூஜித்ததாக வரலாறு சொல்கிறது. தேவ குருவாகிய பிரகஸ்பதி சிறப்பான வழிபாடுகள் செய்து அருள்பெற்ற சிறந்த ஊர் இது. இந்திரன், குபேரன் முதலியோரும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர்.

    பாடி :

    சென்னையை அடுத்துள்ள பாடி என்ற புறநகர், திருவலிதாயம் என்று பண்டைய நாட்களில் அழைக்கப்பட்டது. பரத்வாஜ் முனிவர், அனுமான் ஆகியோர் பூஜித்த தலம். வியாழகுரு இங்கு வந்து சிறப்பு வழிபாடுகள் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு இருக்கும் இறைவன் திருவலிதாயநாதர், மற்றும் திருவல்சீஸ்வரர் என்று அழைக்கபடுகிறார். அம்பிகையின்பெயர் ஸ்ரீ தாயம்மை. ஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்களை பெற்ற புண்ணியதலம்.

    தக்கோலம் :

    அரக்கோணத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ளது தக்கோலம் எனப்படும் திருவூறல். இங்குள்ள தட்சிணாமூர்த்தியைப் போன்று சிறப்புடைய உருவத்தை வேறு எங்கும் காணமுடியாது. சடையோடு கூடிய முகம். சற்றே சாய்ந்த அழகிய திருக்கோலம். இருக்கையில் ஏற்றி வைத்த காலோடு மிகச்சிறப்பு கலை நயத்தோடு உள்ளார் தட்சிணாமூர்த்தி.

    குருவித்துறை :

    மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகில் இருக்கும் ஊர் குருவித்துறை.இங்கு சித்திரரத வல்லபப்பெருமாள் ஆலயம் உள்ளது. குருவின் பிரச்சினையைத் தீர்த்து சிறப்பாக அவருக்குக்காட்சி தந்தருளியபெருமாள் இவர். இந்த ஆலயத்தின் வெளியே குரு பகவானுக்குத் தனிக் கோவில் உள்ளது. வைஷ்ணவக் கோவிலில் இப்படி குருபகவான் குடி இருப்பது இங்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பு.

    திரிசூலம் :

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு எதிரில் திரிசூலம் என்னுமிடத்தில் நான்கு மலைகளுக்கு இடையில் சிவன் கோவில் அமைந்துள்ளது. நான்கு மலைகளும் நான்கு வேதங்களாவும் அவற்றின் மெய்பொருளாக சிவன் தோற்றமளிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு கருவறையில் திரிசூலநாதலிங்கத்துடன் திரிபுர சுந்தரி அம்மனும் சேர்ந்தே காணப்படுவது விசேஷமான ஒன்று.அம்மனின் உள்ளங்கை தங்கத்தாலானது.

    இங்கு துவார பாலகர்களாக முருகனும் கணபதியும் காட்சி தருகிறார்கள். இந்தத் திரிசூலநாதர் ஆலயத்தில் எல்லா மூர்த்திகளுமே திறந்த வேலைப்பாடு என்னும் படியாக எழுந்தருளியுள்ளார்கள். இங்கு குத்திட்ட கால்களோடு விராசனமாய் (வீராசன கோலத்தில்) எம்பெருமான் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். கலைநயம் மிக்க இம் மூர்த்தியின் தோற்றம் நெஞ்சை விட்டு அகலாத அழகு கொண்டது.

    மேதா தட்சிணாமூர்த்தி என்ற திருநாமத்தோடு சுருட்டப்பள்ளி, உத்திரமாயூரம்,திருவாய்மூர், திருக்கைக் சின்னம் போன்ற ஊர்களில் அழகிய கோலத்தில் தட்சிணா மூர்த்தியைக்காணலாம். சிவபெருமான் நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் அந்தக் கோலத்திலுள்ள தட்சிணாமூர்த்தியைக்காண லால்குடி,திருநெய்தானம், திருச்சக் கரப்பள்ளி, சூரியனார் கோயில், திருவாங்குளம், திருநாவலூர், கீழ்வேளூர் போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

    திருவொற்றியூர் :

    திருவொற்றியூரில் உள்ள குரு தட்சணாமூர்த்தி கோவில் சிறப்பனதாகும். ஏனெனில் அங்கே இருக்கும் குரு தட்சணாமூர்த்தி வடக்கு நோக்கி சுமார் 6 அடி உயரத்தில் இருப்பார். பொதுவாக குரு தட்சணாமூர்த்தி தெற்கு நோக்கியே வீற்றிருப்பார். ஆனால் இந்த கோவிலில் மட்டும் வடக்கு நோக்கி அழகாக வீற்றிருப்பார். பாடி திருவலிதாயம் ஈஸ்வரன் கோவிலில் உள்ள குரு தட்சணாமூர்த்தி சன்னதி மிகச்சிறந்த குரு பரிகார பூஜை தலமாக விளங்குகிறது.

    • உசிலம்பட்டி திடியன் கயிலாசநாதர் கோவிலில் 14 சீடர்களுடன் காட்சி தருகிறார் குரு பகவான்.
    • இந்தக் கோவிலில் தட்சிணாமூர்த்தி நந்தி மீது அமர்ந்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.

    சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் என நான்கு சீடர்களுடன்தான், தட்சிணாமூர்த்தி காட்சி தருவார். ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகிலுள்ள திடியன் கயிலாசநாதர் கோவிலில், 14 சீடர்களுடன் காட்சி தருகிறார், குரு பகவான். சிவபெருமானின் குரு வடிவமாகக் கருதப்படும் தட்சிணாமூர்த்தியிடம், ஆங்கீரசர், அத்ரி, காசியபர், பிருகு, கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், புலஸ்தியர், மரீசி, ஜமதக்னி, வசிஷ்டர், பார்கவர், மார்க்கண்டேயர், நாரதர் ஆகியோர் உபதேசம் பெற்றனர்.

    இவர்கள் பதினான்கு பேரும் அவரிடம் உபதேசம் பெற்ற கோலத்தில் இங்கு உள்ளனர். இத்தகைய வடிவத்தில் தட்சிணாமூர்த்தியின் அமைப்பை காண்பது மிகவும் அரிது. மலையடிவாரத்தில் அமைந்த இந்தக் கோவிலில், தட்சிணாமூர்த்தி நந்தி மீது அமர்ந்திருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை. இக்கோவிலுக்கு அருகிலேயே ருக்மணி- சத்யபாமா உடனாய கிருஷ்ணர் கோவிலும், மலைக்கு மேலே தங்கமலை ராமர் கோவிலும் உள்ளது.

    • ஜாதகத்தில் குரு கிரக தோஷம் இருப்பவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
    • இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.

    வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த வியாழ விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

    பிரகஸ்பதி எனும் குரு பகவானை குறித்து மேற்கொள்ளப்படும் இந்த வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து தலைக்கு ஊற்றி குளித்து முடித்து விட வேண்டும். பிறகு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அருகிலுள்ள கோயிலின் நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்து, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

    விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் இருப்பது விரதத்தின் முழுமையன பலன்களை தரும். அன்றைய தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது நல்லது. மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை ஏழ்மையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.

    பலன்கள்

    குரு பகவானுக்குரிய இந்த வியாழக்கிழமை விரதத்தை முறையாக மேற்கொள்பவர்களுக்கு வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும். சரியான காலத்தில் திருமணம் நடக்கும். ஜாதகத்தில் குரு கிரக தோஷம் இருப்பவர்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அவை நீங்கும். தொழில், வியாபாரங்களில் சரியான வருமானம் இல்லாதவர்கள், குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இல்லாதவர்கள் இந்த விரதம் மேற்கொள்வதால் குரு பகவானின் அருள் கிடைக்கப்பெற்று தொழில், வியாபாரங்களில் சிறந்து செல்வ வளம் பெருகும். மேலும் எதிர்பார்க்காத சிறந்த வாழ்க்கை உண்டாகும் என்பது நம்பிக்கை.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் யாழ்மூரிநாதர் கோவிலில் தட்சிணாமூர்த்தி, பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை காண்பது அபூர்வம்.
    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் யாழ்மூரிநாதர் கோவிலில் சிவன் யாழ் இசைத்தபோது, அவரது அம்சமான தட்சிணாமூர்த்தி அந்த இசையை ரசித்துக் கேட்டார். இசையில் மகிழ்ந்த அவர் தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும்விதமாக இங்குள்ள தட்சிணாமூர்த்தி, பின்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்கிறார். பொதுவாக மஞ்சள் நிற வஸ்திரம்தான் தட்சிணாமூர்த்திக்கு அணிவிப்பார்கள். ஆனால், இங்கு காவி நிற வஸ்திரம் சாத்தி பூஜைகள் செய்கிறார்கள். தட்சிணாமூர்த்தியின் இந்த கோலத்தை காண்பது அபூர்வம். மணம் முடிக்காமல், குரு அம்சமாக இருப்பதால் காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள். இங்கு சிவன் தன் கையில் யாழ் இசைத்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு வலப்புறம் சம்பந்தரும், இடப்புறத்தில் யாழ்ப்பாண நாயனாரும் இருக்கின்றனர்.

    * தட்சிணாமூர்த்தியை மூலவராக கொண்ட கோவில், கேரள மாநிலம் ஆலப்புழை அருகேயுள்ள சுகபுரத்தில் இருக்கிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவிலில் உள்ள மூலவரின் மீது தான், ஆதிசங்கரர் ‘தட்சிணாமூர்த்தி அஷ்டகம்’ இயற்றினார். சுகப்பிரம்ம மகரிஷிக்கு தட்சிணாமூர்த்தி ஞானஉபதேசம் செய்தது இந்த இடத்தில்தான் என தல புராணம் கூறுகிறது.
    எல்லா கோவில்களிலும் அபயமுத்திரையுடன் காட்சியளிக்கும் குரு பகவான், தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள திருலோக்கியில் அஞ்சலி முத்திரையில், கும்பிட்ட பெருமானாகக் காட்சி தருகிறார்.
    * மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகத்தூர். இங்கு சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.

    * பொதுவாக சிவன் கோவில்களில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, சிவன் சன்னிதியின் கோஷ்டத்தில் தெற்கு திசை நோக்கி அருள்பாலிப்பார். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருநறையூர் (நாச்சியார்கோயில்) சித்தநாதேஸ்வரர் கோவிலில், தட்சிணாமூர்த்தியை மேற்கு நோக்கிய கோலத்தில் தரிசிக்கலாம். இத்தலத்தில் மூலவர் சித்தநாதேஸ்வரரும், மேற்கு நோக்கியே இருப்பது கூடுதல் சிறப்பு. இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னிதி இருக்கிறது. ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரக சன்னிதியில் உள்ள குரு பகவானுக்கும் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

    * தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ளது, திருவிடைமருதூர். இங்கு மகாலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி ராஜ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் மனைவியுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    * திருவையாறு ஐயாறப்பன் கோவிலில் கபாலமும் சூலமும் ஏந்தியவராக தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். இவர் காலடியின் கீழ் ஆமை போன்ற உருவம் காணப் படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்த கோவிலிலும் காணமுடியாது.

    * தஞ்சாவூர் மாவட்டம் திருவைகாவூர் திருத்தலத்தில் வில்வவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வேறு எங்கும் இல்லாத வகையில், கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

    * தஞ்சாவூர் மாவட்டம் மேலைத்திருப்பூந்துருத்தியில் புஷ்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, கையில் வீணையுடன் ‘வீணா தட்சிணாமூர்த்தி’யாக அருள்பாலிக்கிறார்.

    * எல்லா கோவில்களிலும் அபயமுத்திரையுடன் காட்சியளிக்கும் குரு பகவான், தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள திருலோக்கியில் அஞ்சலி முத்திரையில், கும்பிட்ட பெருமானாகக் காட்சி தருகிறார்.
    நவக்கிரக குரு பகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பகவானால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும்.
    குருவைப் பற்றிய ‘ஸ்ரீகாண்டேயா’ என்ற சுலோகம், 7 வகையான குரு இருப்பதாக சொல்கிறது. அதாவது தேவகுரு - பிரகஸ்பதி, அசுரகுரு - சுக்ராச்சாரியார், ஞானகுரு - சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு - பிரம்மா, விஷ்ணு குரு - வரதராஜர், சக்தி குரு - சவுந்தர்யநாயகி, சிவகுரு - தட்சிணாமூர்த்தி என ஏழு குருக்கள் (சப்தகுரு) உள்ளனர்.

    இந்த ஏழு குருக்களையும், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள உத்தமர்கோவிலில் தரிசிக்கலாம். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்களில் ஒன்றான இந்தக் கோவிலில், பிரம்மாவிற்கு தனி சன்னிதி உள்ளது. நவக்கிரக குரு பகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பகவானால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும்.

    சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் காட்சி தரும் அற்புதத்தலம் இது.
    பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம், அபிஷேகமும் நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குமாரபாளையம் திருவள்ளுவர் நகரில் உள்ள மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. முன்னதாக சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் குமாரபாளையம் அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோவில், கோட்டைமேடு கைலாசநாதர் கோவில்களில் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம், அபிஷேகமும் நடந்தது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    அனுமந்தை ஆவணி அம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவையொட்டி கோவிலில் உள்ள குருபகவானுக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் உள்ள ஆவணி அம்மன் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள குருபகவானுக்கு பால், தயிர், இளநீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குருவித்துறை கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
    சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் முன்பு பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் சுயம்புவாக குருபகவான் உள்ளார். நேற்று முன்தினம் மகரராசியில் இருந்து கும்பராசிக்கு குருப்பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கொரோனா தொற்றுநோய் காரணமாக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுடன் குருப்பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர். யாகபூஜைக்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவில் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் சன்னதி அடைக்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் சன்னதி திறக்கப்பட்டு இரவு 7.30 வரை திறந்திருந்தது.

    அப்போது சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெற்றது. நேற்று விடுமுறை தினம் என்பதால் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    பொள்ளாச்சி ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு கணபதி பூஜை, நவகிரக ஹோமம், அபிஷேகம், அலங்காரம், 1008 சஹஸ்ரநாமம் அர்ச்சனை, மகா தீபாராதனை, நடைபெற்றது.
    பொள்ளாச்சி ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதனை முன்னிட்டு கணபதி பூஜை, நவகிரக ஹோமம், அபிஷேகம், அலங்காரம், 1008 சஹஸ்ரநாமம் அர்ச்சனை, மகா தீபாராதனை, நடைபெற்றது.

    இதில், பக்தர்கள் அபிஷேக பொருட்கள், மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை, ஹோமப்பொருட்கள், மலர்கள் போன்ற பொருட்களுடன் பூஜையில் கலந்து கொண்டனர். முன்னதாக, ரிஷபம், கடகம் கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகார சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இதில், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் சமூக இடைவெளியிட்டு திரளாக கலந்துகொண்டனர்.
    சூரியனார் கோவில் சிவசூரியபெருமான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவில் கிராமத்தில் சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. நவக்கிரகங்களுக்கு என்று பிரதானமாக அமைந்துள்ள இக்கோவிலில் உஷா தேவி, சாயா தேவியுடன் சிவசூரிய பெருமான் மூலவராக அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் சூரியனை பார்த்தவாறு குருபகவான் அமைந்துள்ளது சிறப்பம்சம் ஆகும்.

    மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு குருபகவான் நேற்று முன்தினம் மாலை பெயர்ச்சி அடைந்ததையொட்டி இக்கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது.

    இதில் குருபகவானுக்கு 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரை கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டு, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    இத்தலத்தில் தட்சிணாமூர்த்தியே பிரதானமான தெய்வம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக்கிழமையில் வரும் குரு ஓரை நேரத்தில் இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
    சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில், கிழக்கு நோக்கிய அனுக்கிரக தட்சிணாமூர்த்தி அருள்கிறார். இவரது சன்னிதியின் பின்புறத்தில், படர்ந்து விரிந்த பெரிய ஆல மரம் உள்ளது. இந்த ஆலமரத்தை தலவிருட்சமாகவும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப்போல பொற்றாமரைக் குளத்தையும் கொண்டு அமைந்திருக்கும் சிறப்புமிக்க ஆலயமாக இது திகழ்கிறது. பக்தர்கள் இந்த மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் குரு தட்சிணாமூர்த்தியின் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சன்னிதியின் முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தியே பிரதானமான தெய்வம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக்கிழமையில் வரும் குரு ஓரை நேரத்தில் (மதியம் 1-2 மணி), இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மதுரையில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும், திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக 90 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்பத்தூர் உள்ளது. இங்கிருந்து 8 கிலோமீட்டர் தூரம் சென்றால் பட்டமங்கலம் ஊரை அடையலாம்.
    ×