search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Glenn Maxwell"

    • டிராவிஸ் ஹெட் காயமடைந்ததால் 5-வது ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
    • வருகிற ஜூன் 29-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

    இலங்கைக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    அடுத்ததாக தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வீரர் மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல் டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் முக்கியமான வீரராகவும் மேட்ச் வின்னராகவும் திகழ்ந்து வருகிறார். ஆனால் 2013-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மேக்ஸ்வெல், வெறும் ஏழே டெஸ்ட் போட்டிகளில் ஆடி 339 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரு சதம் அடங்கும்.

    கடைசியாக 2017ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடினார். அதன்பின்னர் 5 ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் இடம்பெறாத மேக்ஸ்வெல்லுக்கு தற்ப்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது.

    டிராவிஸ் ஹெட் காயமடைந்ததால் 5-வது ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் ஹெட்டுக்கு பதிலாக மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வருகிற ஜூன் 29-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக போராடும்.

    ரிஷப் பந்த் பேட்டிங் செய்ய வந்தாலே டிவி பக்கம் திரும்பி விடுவேன். அவரின் திறமையில் ஒரு பகுதியைத்தான் நாம் பார்த்துள்ளோம் என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். #AUSvIND
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் செயல்பட்டு வருகிறார். 20 வயதே ஆகும் ரிஷப் பந்த் இங்கிலாந்திற்கு எதிரான கடைசி டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். தற்போது ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வருகிறார். பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடி வருகிறார்.

    7-வது நபராக களம் இறங்கும் ரிஷப் பந்த், கடைநிலை வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி விரைவில் அவுட்டாகும் நிலை ஏற்படுகிறது.

    இந்நிலையில் ரிஷப் பந்த் அபாயகரமான பேட்ஸ்மேன். அவரது திறமையில் ஒரு பகுதியைத்தான் நாம் பார்த்துள்ளோம் என்று மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ரிஷப் பந்த் குறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் மிகவும் சிறப்பான கிரிக்கெட் திறமையை பெற்றுள்ளார். ஆடுளத்தின் மீது ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருப்பதை போன்றுதான், ரிஷப் பந்தின் திறமையில் சிறிய பகுதியை மட்டுமே நாம் பார்த்துள்ளோம்.



    ரிஷப் பந்த் பேட்டிங் செய்யும்போதெல்லாம் நான் எனது டிவி-யால் இழுக்கப்பட்டு விடுவேன். அவர் களத்தில் இறங்கிவிட்டால், அவரது ஆட்டத்தை பார்க்க சூப்பராக இருக்கும்.

    ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக இருவரும் இணைந்து விளையாடிள்ளோம். அப்போது அபாரமான சில இன்னிங்ஸை எங்களுக்கு அளித்துள்ளார். மாறுபட்ட ஷாட் அடிப்பதற்கு ஏற்றபடி உடலை அவரால் எறிதாக மாற்றிக்கொள்ள முடியும்’’ என்றார்.
    களத்தில் இறங்கிவிட்டால் தடுத்து நிறுத்த முடியாத ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் மிகச்சிறந்த ஸ்டார் என்று மேக்ஸ்வெல் புகழாரம் சூட்டியுள்ளார். #AUSvIND
    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒருநாள் போட்டியில் அதிக இரட்டை சதங்களும், டி20 போட்டியில் அதிக சதமும் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளைமறுநாள் (21-ந்தேதி) பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் தடுத்து நிறுத்த முடியாத ரோகித் சர்மா ஒயிட் பந்து போட்டியில் மிகப்பெரிய ஸ்டார் என்று ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘ஒயிட் பால் கிரிக்கெட்டில் (ஒருநாள் மற்றும் டி20) ரோகித் சர்மாதான் ஸ்டார். ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் என்பது குறைத்து மதிப்பிடும் சாதனை கிடையாது. இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் விளாசிய இன்னிங்சை நினைத்து பார்த்தால், களத்தில் இறங்கிய விளாசிய பின்னர் அவரை தடுத்து நிறுத்த முடியாது.



    ரோகித் சர்மா பேட்டிங் செய்ய வரும்போது ஒரு நாள் கிரிக்கெட் ஈசியானது போன்று எண்ணத் தோன்றும். அவரது ஆட்டத்தை பார்க்க நான் விரும்புவேன். அவர் பந்தை எங்க அடிக்க விரும்புகிறாரோ? அங்கே பந்தை அடிக்கும் திறமை பெற்றவர். அது வேகப்பந்தாக இருந்தாலும் சரி, சுழற்பந்து வீச்சாக இருந்தாலும் சரி. அவர் விரும்பும்போது பந்தை வெகு தூரத்திற்கு விரட்டுவார்’’ என்றார்.
    நேற்று நடைபெற்ற மும்பை, டெல்லி இடையிலான போட்டியில், மேக்ஸ்வெல் மற்றும் போல்ட் இருவரும் இணைந்து இரண்டு கேட்ச்கள் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர். #VIVOIPL #IPL2018 #DelhiDaredevils #GlennMaxwell #TrentBoult

    புதுடெல்லி:

    ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    இதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில், விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அசத்தினார். மற்றொரு டெல்லி வீரரான விஜய் சங்கர் 30 பந்துகளில் 43 ரன்கள் குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. 

    175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. அந்த அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் மும்பை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்தது.


    இந்த போட்டியில் மும்பை அணி பேட்டிங் செய்த போது, சந்தீப் லமிசானே வீசிய பந்தை பொலார்டு சிக்சருக்கு அடிக்க முயன்றார். அந்த பந்தை டெல்லி அணி வீரர் மேக்ஸ்வெல் பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்து, பின்னர் பவுண்டரியைத் தாண்டுவதற்கு முன் சக வீரரான போல்ட்டிடம் பந்தை வீசினார். அந்த பந்தை போல்ட் கேட்ச் பிடித்ததன் மூலம் பொலார்டை அவுட் ஆக்கினர்.



    அந்த கேட்சை தொடர்ந்து, ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவையும் அதேபோல் மேக்ஸ்வெல் மற்றும் போல்ட் இருவரும் ஒன்று சேர்ந்து கேட்ச் பிடித்து அவுட்டாக்கினர். முன்னதாக பஞ்சாப் அணியின் மனோஜ் திவாரி, மயன்க் அகர்வால் இருவரும் இணைந்து இதேபோன்று கேட்ச் பிடித்து ஸ்டோக்சை ஆட்டமிழக்க செய்தனர்.

    இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் பல வீரர்கள் சிறப்பான கேட்ச்கள் பிடித்திருந்தாலும் இந்த தொடரில் கிளென் மேக்ஸ்வெல், டிரெண்ட் போல்ட் ஜோடி இரண்டு முறை கேட்ச் பிடித்து அசத்தியுள்ளது. #VIVOIPL #IPL2018 #DelhiDaredevils #GlennMaxwell #TrentBoult
    அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தகுதியானர் என்று முன்னாள் கேப்டன் ஆலன் பார்டன் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல். ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் இவருக்கு டெஸ்ட் போட்டியில் அதிக அளவில் இடம் கிடைத்தது கிடையாது. உள்ளூர் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே இதற்கு காரணம் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூறியது.

    இந்நிலையில், ‘‘மேக்ஸ்வெல் சுழற்பந்து வீச்சாளருடன் சிறப்பாக பீல்டிங் செய்யக்கூடியவர். இதேபோல் அதிரடியாக விளையாடக் கூடியவர். இதனால் தேர்வாளர்களின் பார்வை அவர் மீது விழுந்திருக்கும்’’ என்று முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளது.



    தற்போது பால் டேம்பரிங் விவகாரத்தில் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேக்ஸ்வெல்லிற்கு இடம் கிடைக்கலாம்.
    ×