search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Garudalwar"

    வாழ்வில் ஏற்படும் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வைத் தருவது கருட தரிசனம் ஆகும். எந்த கிழமையில் கருட தரிசனம் என்ன பிரச்சனையை தீர்க்கும் என்று பார்க்கலாம்.
    ஞாயிறு: ஞாயிற்றுக்கிழமையில் கருட தரிசனம் செய்ய சர்வ ரோகங்களை (நோய்கள்) நிவர்த்தி செய்து தேக, மன ஆரோக்கியத்தைத் தரும் என்பது பெரியோர்களின் வாக்கு! பிதுர் சாபம், தோஷம், பிதுர் துரோகம், தந்தை வர்க்காதிகளின் குரோத, விரோத எண்ணங்களின் தாக்கங்கள் போன்ற தோஷங்கள் விலக ஞாயிற்றுக்கிழமை கருட தரிசனம் செய்ய நல்ல பலன் கிடைக்கும். சூரியன் ஜாதகத்தில் 6, 8, 12 பாதகம், நீச்சம், பகை, செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற எதிரிடையான பலன்கள் விலகி சுபங்கள் ஏற்பட ஞாயிறு கருட தரிசனம் செய்ய வேண்டும்! சூரியனின் சிம்ம ராசி, லக்னம், உத்திரம், உத்திராடம், கிருத்திகை, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக் கிழமையில் கருட தரிசனம் செய்ய வேண்டும்.இதனால் வாழ்வில் நல்ல ஏற்றம், மாற்றம் காணலாம்.

    திங்கள்: ஜாதகத்தில் சந்திரபலம் பெறவும், சந்திரகிரக தோஷம் நீங்கி சுபிட்சம் பெறவும், மாதுர் தோஷம், சாபம் நிவர்த்தி அடைய திங்கட்கிழமை கருடதரிசனம் செய்யவும். கடகராசி, லக்னகாரர்கள் திங்கட்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் நல்ல உயர்வை எதிர்நோக்கலாம்.
    ஜாதகத்தில் சந்திரன் 6, 8, 12ல் இருப்பவர்களும் நீச்சம், சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற தீய கிரகங்களின் சேர்க்கை, பார்வை பெற்றிருப்பது போன்ற சந்திர பாதிப்படைந்த ஜாதகர்கள் திங்கட்கிழமையில் சந்திர ஓரையில் கருட தரிசனம் செய்வது சந்திர தோஷ நிவர்த்தியும், சந்திர அனுக்கிரகமும் பெற்றுத்தரும்!
    லக்னத்திற்கு 1, 5, 9ல் சந்திரன் இருப்பவர்கள் திங்கட்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் பெரிய முன்னேற்றங்களை அடையலாம்.

    செவ்வாய்: செவ்வாய் கிரகம் 6, 8, 12ல் உள்ளவர்களும், நீச்சம்- அஸ்தமனம், பகை, வக்ரம், பாதகஸ் தானம், சனி, ராகு, கேது தொடர்பு பெற்றிருத்தல் போன்ற நிலையில் உள்ள ஜாதகர்கள் செவ்வாய்க்கிழமை கருட தரிசனம் செய்வது செவ்வாய் கிரக தோஷம் நீங்கி, யோக பலன் கள் சித்திக்கும்.
    நிலம், வீடு, மனைகள் போன்ற வற்றில் குறைகள், பிரச்சினை கள் நிவர்த்தி அடைய செவ் வாய்க்கிழமை கருட தரிசனம் உத்தம பலன் தரும்!
    செவ்வாய்க்கிரகத்தின் ராசி, லக்னம், நட்சத்திரங் களில் கிழமையில், ஓரையில் பிறந்தவர்கள் செவ்வாய்க் கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் சிறந்த நிலை அடைய வழி வகுக்கும். வாழ்வில் ஏற்படும் அனைத்துவித துன்பங்களும், துயரங்களும் நீங்கிட, சுபிட்சம் ஏற்பட வேண்டுவோர் தவறாமல் செவ்வாய்க்கிழமை கருட தரிசனம் செய்ய வேண்டும்.



    புதன்: அறிவு கிரகமான புதன் கருடனை வாகனமாகக் கொண்ட ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சமாகும். கல்விகளில் ஏற்படும் தடைகள், தோல்விகள் நீங்கி வெற்றிகள் ஏற்பட புதன்கிழமை கருட தரிசனம் செய்ய வேண்டும்! புதனின் ராசி, லக்ன, நட்சத்திரங்களில் (மிதுனம், கன்னி, ஆயில்யம், கேட்டை, ரேவதி) பிறந்தவர்கள் புதன்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் நல்ல உயர்வு கிட்டும். புதன் ஜாதகத்தில் 6, 8, 12ல் பாதகம், நீச்சம், வக்கிரம், அஸ்தமனம், நீச்சாம்சம் போன்ற எதிரிடையான அமைப்பைப் பெற்றவர்கள் புதன்கிழமையில் கருட தரிசனம் செய்வது நல்லது.

    வியாழன்: வாழ்வில் ஏற்படும் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வைத் தருவது வியாழக்கிழமை மாலை நேர கருட தரிசனம் ஆகும். இன்றும் வியாழக்கிழமை கருட தரிசனத் திற்காக ஏரிக்கரைகளில் பல கருட தரிசன பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கும் வைபோகத்தைக் காணலாம்.
    குருவார கருட தரிசனத்தால் எடுத்த காரிய வெற்றி, பணவரவு, சத்ரு ஜெயம்,தேர்வுகளில் வெற்றி போன்றவைக் கிட்டுவது உறுதி ஆகும்!!
    புத்திரப்பேறு வேண்டுவோர் குருவார கருட தரிசன பலன் களை ஜோடியுடன் தரிசனம் செய்ய வேண்டும்.

    வெள்ளி: வெள்ளிக்கிழமை கருட தரிசனம் நோய், கடன், சத்ரு உபாதைகள் நீங்க வழிவகுக்கும். கொடுத்த கடன் வசூல் ஆகும். சுக்கிரன் ஜாதகத்தில் 6, 8, 12லும், நீச்சம், அஸ்தமனம், வக்கிரம், பாதகம், பகை, பாபிகளின் சூழல் போன்ற எதிரிடையான தன்மையில் இருந்தால் வெள்ளிக்கிழமை கருட தரிசனம் சுக்கிர கிரக சாந்திக்கு வழிவகை செய்யும்! சுபிட்சங்கள் உண்டாகும். சுக்கிரனின் ரிஷப, துலா ராசி, லக்னம், பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சுக்கிர வார கருட தரிசனம் செய்வது வாழ்வில் உன்னத நிலையைத் தரும்.

    சனி:
    வேலைக்காரர்கள், ஊழியர் கள், கடின உழைப்பாளிகள், வியர்வை சிந்த உழைப்பவர் கள்சனிக்கிழமை கருட தரிசனம் செய்வதால் வாழ் வில் நல்ல நிலை கிட்டும். சனி ஜாதகத்தில் 6, 8, 12லும், பாதகம், நீச்சம், பகை, அஸ்தமனம், வக்கிரம், செவ்வாய், சூரியன், ராகு, கேது போன்ற கிரக தொடர்புகள் பெற்று எதிரிடையாக இருப்பின், சனிக்கிழமை கருட தரிசனம் செய்வதால் சனியின் எதிர்மறை பலன்கள் தணியும். சுபங்கள் உண்டாகும்.
    எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) நிகழ்ச்சியிலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்.
    நம் நாட்டில், எந்தக் கடவுளுக்குரிய ஆலயங்களின் குடமுழுக்கு விழா (கும்பாபிஷேகம்) நிகழ்ச்சியிலும், குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் வானத்தில் கருடன் வட்டம் இடுகிறானா என்பதையே மிகவும் முக்கியமாகப் பார்ப்பர்.

    அவ்வாறு வட்டம் இடாமல் இருந்தால், யாகத்தில் ஏதாவது குறைபாடு இருக்கலாம் என்று முடிவு செய்வர். கருடன் வட்டமிட்ட பிறகே, திருக்குட முழுக்கு நடைபெறுவது வழக்கம்.

    இதற்கு காரணம் கருடன் வேத படிவமானவன். வேத மந்திரங்களை ஓதி செய்யப்படும் ஒரு சடங்கில் வேத வடிவமான கருடன் எழுந்தருள்வது தானே முறையாகும். ஆனால் சரியான வேத வேள்வி நடக்காத போது அவ்விடத்தில் அவனுக்கு என்ன வேலை? எனவேதான் கருட தரிசனத்திற்கு பிறகே திருக்குட முழுக்கை நடத்தி மகிழ்கின்றனர்.
    திருமாலுடன் எப்பொழுதும் உடனிருப்பவர் கருடன். பெருமாளின் அடியார் என்பதால் கருடாழ்வார் என்று சிறப்பிப்பர். சிறப்பு வாய்ந்த கருடாழ்வாரை எந்த நாட்களில் வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    திருமாலுடன் எப்பொழுதும் உடனிருப்பவர் கருடன். இவரை ‘பெரிய திருவடி’ என்பர். பெருமாளின் அடியார் என்பதால் கருடாழ்வார் என்று சிறப்பிப்பர். பெருமாள் கோவில்களில் கருவறை எதிரே கைகூப்பிய நிலையில் இவரைக் காணலாம். வளர்பிறை பஞ்சமி திதி இவரை வழிபட நல்ல நாள்.

    பாம்பு கனவில் வந்தாலோ அல்லது கண்ணில் பட்டாலோ கருடனை வழிபட்டு பரிகாரம் தேடலாம். பெரியாழ்வார் கருடனின் அம்சமாகத் தோன்றியவர். அநேக கோவில்களில் பெருமாள் எதிரே இருக்கும் கருடாழ்வார், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாள் மற்றும் ஆண்டாளின் அருகில் இருக்கிறார்.

    ஆதிமூலமே, என்று அழைத்த கஜேந்திரன் என்னும் யானையின் துன்பத்தைத் தீர்க்க பெருமாள் கருடன் மீது விரைந்து வந்து அருள் செய்தார். பக்தர்களின் துயர் போக்கிட எப்போதும் விரித்த சிறகுகளுடன் கருடாழ்வார் வைகுண்டத்தில் காத்திருக்கிறார் என்பது ஐதீகம்.

    திருநாங்கூர் என்னும் ஊரில் மட்டும் ஆறு திவ்யதேசங்கள் உள்ளன.திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு பதினொரு பெருமாள்கள் எழுந்தருள்வார்கள்.
    108 வைணவ திவ்யதேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளுள் திருநாங்கூர் என்னும் ஊரில் மட்டும் ஆறு திவ்யதேசங்கள் உள்ளன. இந்த திருநாங்கூரைச் சுற்றி சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் 5 திவ்யதேசங்கள் உள்ளன. இந்த பதினொன்றையும் சேர்த்து திருநாங்கூர் பதினொரு திவ்யதேசம் என்று வழங்குவர். அவையாவன:-

    திருக்காவளம்பாடி
    திருஅரிமேயவிண்ணகரம்
    திருவண்புருடோத்தமம்
    திருச்செம்பொன்செய்கோவில்
    திருமணி மாடக்கோவில்
    திருவைகுந்த விண்ணகரம்

    - இந்த ஆறுதலங்களும் திருநாங்கூருக்குள்ளேயே உள்ளன.

    திருத்தேவனார்த் தொகை
    திருத்தெற்றியம்பலம்
    திருமணிக்கூடம்
    திருவெள்ளக்குளம்
    திருப்பார்த்தன்பள்ளி

    ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு இந்தப் பதினொரு பெருமாள்களும் எழுந்தருள்வார்கள். இந்த பதினொரு பெருமாள்களையும் திருமங்கை யாழ்வார் ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களா சாசனம் செய்வார். பிறகு திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய் வார். இந்தக் கருட சேவையைக் காண்பதற்கு பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வருவார்கள்.

    ஒவ்வொரு வருடமும் இந்த பெருமாள்களை மங்களாசாசனம் செய்ய திருமங்கையாழ்வாரே இங்கு வருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். திருநாங்கூரைச் சுற்றியுள்ள வயல்வெளிகளில் கருட சேவைக்கு முதல் நாள் நள்ளிரவில் காற்றினால் நெற்பயிர்கள் சலசல என்று சப்தமிடும். இந்த சப்தத்தை கேட்டவுடன் திருமங்கையாழ்வார் ஊருக்குள் பிரவேசித்து விட்ட தாக பக்தர்கள் கூறுவார்கள். திருமங்கையால் மிதிக்கப்பட்ட வயல்வெளிகளில் அதிக நெல்விளையும் என்பதும் இங்குள்ள விவசாயிகளின் நம்பிக்கையாகும்.

    மணிமாடக்கோவில் எனப்படும் நாராயண பெருமாள் சன்னதியில் இந்தக் கருடசேவை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இந்தப் பதினொரு பெருமாள்களையும் கருடசேவையில் சேவிப்பது பதினொரு திவ்ய தேசங்களுக்கு சென்று வழிபட்டதற்கு நிகராகும்.
    ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் பிறவியிலேயே ஊமையாக இருந்து, பிறகு திருச்செந்தூர் முருகன் அருளினால் பேச்சாற்றல் மட்டுமின்றி, மறை ஞானமும், வாக்கு வன்மையும் அருளப் பெற்றார்.
    ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் பிறவியிலேயே ஊமையாக இருந்து, பிறகு திருச்செந்தூர் முருகன் அருளினால் பேச்சாற்றல் மட்டுமின்றி, மறை ஞானமும், வாக்கு வன்மையும் அருளப் பெற்றார். அப்போது ஒருமுறை, காசி மாநகரில் ஸ்ரீகுமரக் கடவுளுக்கு ஒரு மடம் அமைப்பதற்காக, அப்பகுதியை ஆண்டு வந்த முஸ்லிம் அரசனைப் பார்க்க அவனது அரசவைக்குச் செல்ல விரும்பினார் ஸ்ரீகுமர குருபரர். அப்பொழுது அவருக்கு வாகனமாக ஒரு சிங்கமே வந்தது.

    அதில் ஏறியபடி கம்பீரமாக அரண்மனையை அடைந்தார் சுவாமிகள். அரசனோடு சேர்ந்து அவையே அச்சம் அடைந்தது. இருப்பினும் ஒரு இந்து துறவிதானே என அலட்சியத்துடன் அவரிடம் உருது மொழியில் உரையாடினார் அரசர். கலை வாணியின் அருளால் ஸ்ரீகுமர குருபரரும் அம்மொழியிலேயே பதில் அளித்தார். அதைக் கண்டு மேலும் அதிர்ந்தார் அரசர்.

    இனி அவரது கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டியது தான் என்னும் நிலையில், அவ்வரசர் ஒரு வித்தியாசமான நிபந்தனையுடன் மடம் அமைக்க நிலம் தருவதாக ஒப்புக் கொண்டார். அது, காசியில் நாளைக் காலையில் கருடன் எவ்வளவு தூரம் வானில் வட்டம் இடுகிறதோஅந்த பகுதிகள் முழுவதையும் தானம் அளிப்பதாக அரசர் அறிவித்தார்.

    காசியில் கருடன் பறக்காது என்னும் இந்துக்களின் நம்பிக்கையையும், அவர் அப்படிப் பறந்து ஒரு போதும் காணாததாலும், அப்படிக் கூறி சாமார்த்தியமாக தானம் தருவதில் இருந்து தப்பிக்கலாம் என்று எண்ணினார்.

    மறுநாள் காலையில் அரண்மனை உப்பரிக்கை யில் அரசனும், ஸ்ரீகுமர குருபரரும் நின்று கொண்டு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென்று ஒரு கழுகு தோன்றி, அரசர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, காசியின் பெரும் பகுதி இடங்களை சுற்றி வளைக்கும் அளவிற்கு வட்டமிட்டு மறைந்தது.

    அரசருக்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் வாக்கு கொடுத்தபடி அந்நிலங்களை ஸ்ரீகுமர குருபரருக்கே தானம் அளிப்பதாக சாசனம் எழுதிக் கொடுத்தார். அந்த மடம் ஸ்ரீகௌமார மடம் என்னும் பெயரில் காசியில் இன்றும் உள்ளது. இதனை இந்துக்களுக்கு வழங்கிய பெருமை ஸ்ரீகருட பகவானையே சாரும்.

    சில சாஸ்திரங்களில் ஸ்ரீ கருடனது பார்வைகள் எட்டு வகைப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவரது பார்வையால் கிரக தோஷங்கள் விலகும் என்பது உறுதி.
    சில சாஸ்திரங்களில் ஸ்ரீ கருடனது பார்வைகள் எட்டு வகைப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:-

    1. விசாலா - மந்தஹாசமான பார்வை.
    2. கல்யாணி - மான் போல் சுழலும் பார்வை.
    3. தாரா - குறுக்குப் பார்வை.
    4. மதுரா - அன்பையும், அருளையும் பொழியும்.
    5. போகவதி - தூக்கக் கலக்கமான பார்வை.
    6. அவந்தீ - பக்கமாகப் பார்ப்பது.
    7. விஜயா - கணவன்-மனைவியரிடையே நேசத்தை வளர்க்கக் கூடியது.
    8. அயோத்யா - ஆசைகளைத் தோற்றுவிப்பது.

    ஐந்து வகையான பார்வையாக இருந்தாலும், எட்டு வகையான பார்வையாக இருந்தாலும் மொத்தத்தில் அவரது பார்வையால் கிரக தோஷங்கள் விலகும் என்பது உறுதி.
    கருட புராணம் என்பது நமக்காக ஸ்ரீமந் நாராயணனிடம் ஸ்ரீகருட பகவானே கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை உள்ளடக்கியதாகும்.
    வேத வியாச மகிரிஷி, உலக மக்களின் நன்மைக்காக, வேதங்கள் கூறும் தர்மங்களை புராண வடிவங்களாக்கி, அவற்றை பதினெட்டு பெயர்களில் படைத்து அருளி உள்ளார். அவற்றுள் பத்ம புராணம், விஷ்ணு புராணம், பாகவத புராணம், நாரதீய புராணம், வராக புராணம், கருட புராணம் ஆகிய ஆறும் சத்துவ குணம் பொருந்தியவை என்றும் ஸ்ரீமகாவிஷ்ணுவைப் பற்றியவை என்றும் வழங்கி வருகின்றனர்.

    அவற்றுள்ளும் கருட புராணம் என்பது நமக்காக ஸ்ரீமந் நாராயணனிடம் ஸ்ரீகருட பகவானே கேட்டுத் தெரிந்து கொண்ட விஷயங்களை உள்ளடக்கியதாகும். இந்த கருட புராணத்தில், கருட பகவான், “இவ்வுலகில் மனிதர்கள் ஏன் பிறக்கின்றனர்? அவர்கள் இறந்த பின் சிலர் நரகத்திற்கும் சிலர் சொர்க்கத்திற்கும் செல்வது எதனால்?

    சிலர் இரண்டிற்கும் செல்லாமல் பிரேத ஜென்மமாக ஆவியுருவில் அலைவது எதனால்? இந்த ஜென்மம் நீங்க என்ன செய்ய வேண்டும்? முக்தியை அடைய என்ன செய்ய வேண்டும், மரண காலத்தில் முன் செய்த பாவங்களைப் போக்கிக் கொண்டு முக்தி அடைய வழி ஏதாவது உண்டா? அத்தருவாயில் யாரை நினைக்க வேண்டும்? ஆகியவற்றுக்கு விடை கூறியுள்ளார்.
    இறைவன் மீது மாறாத பக்தி கொண்டு, இறைவனின் சேவையே பெரிது என்று முழுமையாகச் சரணடைந்ததால், கருடனை ‘கருடாழ்வார்’ என்று போற்றுகிறார்கள்.
    கருடனுக்குக் ‘கருடாழ்வார்’ என்ற பெயரும் உண்டு. கிருதயுகத்தில் அகோபிலத்தைக் கொடுங்கோலனாக ஆட்சி செய்து கொண்டிருந்தான், இரண்யகசிபு. அவனை அழித்துத் தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற விஷ்ணு எடுத்த மனிதன் மற்றும் சிங்க உருவிலான அவதாரமே நரசிம்மர் தோற்றமாகும்.

    பிரகலாதனைக் காக்க இறைவன் நரசிம்ம மூர்த்தியாக, இரண்யகசிபுவின் அரண்மணைத் தூணில் இருந்து வெளிவந்தார். அதனால் நரசிம்மர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்துத் தனியாக வரவேண்டியதாயிற்று. இது பற்றி அறிந்த கருடன் மிகவும் துயரமடைந்து, இறைவனிடம் தனக்கு நரசிம்மத் தோற்றக் காட்சியைக் காட்டி அருளும்படி வேண்டினார்.

    இறைவன் கருடனை அகோபிலம் சென்று தவமியற்றும்படி கூறினார். அதன்படி கருடனும் அகோபிலம் சென்று தவமியற்ற, இறைவன் அங்கிருந்த மலைக்குகையில், உக்ர நரசிம்மராய் அவருக்குக் காட்சியளித்தார். இறைவன் மீது மாறாத பக்தி கொண்டு, இறைவனின் சேவையே பெரிது என்று அவரிடம் முழுமையாகச் சரணடைந்ததால், கருடனை ‘கருடாழ்வார்’ என்று போற்றுகிறார்கள்.
    ×