search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிழமைகளும் கருட தரிசனமும் - தீரும் பிரச்சனைகளும்
    X

    கிழமைகளும் கருட தரிசனமும் - தீரும் பிரச்சனைகளும்

    வாழ்வில் ஏற்படும் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வைத் தருவது கருட தரிசனம் ஆகும். எந்த கிழமையில் கருட தரிசனம் என்ன பிரச்சனையை தீர்க்கும் என்று பார்க்கலாம்.
    ஞாயிறு: ஞாயிற்றுக்கிழமையில் கருட தரிசனம் செய்ய சர்வ ரோகங்களை (நோய்கள்) நிவர்த்தி செய்து தேக, மன ஆரோக்கியத்தைத் தரும் என்பது பெரியோர்களின் வாக்கு! பிதுர் சாபம், தோஷம், பிதுர் துரோகம், தந்தை வர்க்காதிகளின் குரோத, விரோத எண்ணங்களின் தாக்கங்கள் போன்ற தோஷங்கள் விலக ஞாயிற்றுக்கிழமை கருட தரிசனம் செய்ய நல்ல பலன் கிடைக்கும். சூரியன் ஜாதகத்தில் 6, 8, 12 பாதகம், நீச்சம், பகை, செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற எதிரிடையான பலன்கள் விலகி சுபங்கள் ஏற்பட ஞாயிறு கருட தரிசனம் செய்ய வேண்டும்! சூரியனின் சிம்ம ராசி, லக்னம், உத்திரம், உத்திராடம், கிருத்திகை, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஞாயிற்றுக் கிழமையில் கருட தரிசனம் செய்ய வேண்டும்.இதனால் வாழ்வில் நல்ல ஏற்றம், மாற்றம் காணலாம்.

    திங்கள்: ஜாதகத்தில் சந்திரபலம் பெறவும், சந்திரகிரக தோஷம் நீங்கி சுபிட்சம் பெறவும், மாதுர் தோஷம், சாபம் நிவர்த்தி அடைய திங்கட்கிழமை கருடதரிசனம் செய்யவும். கடகராசி, லக்னகாரர்கள் திங்கட்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் நல்ல உயர்வை எதிர்நோக்கலாம்.
    ஜாதகத்தில் சந்திரன் 6, 8, 12ல் இருப்பவர்களும் நீச்சம், சனி, செவ்வாய், ராகு, கேது போன்ற தீய கிரகங்களின் சேர்க்கை, பார்வை பெற்றிருப்பது போன்ற சந்திர பாதிப்படைந்த ஜாதகர்கள் திங்கட்கிழமையில் சந்திர ஓரையில் கருட தரிசனம் செய்வது சந்திர தோஷ நிவர்த்தியும், சந்திர அனுக்கிரகமும் பெற்றுத்தரும்!
    லக்னத்திற்கு 1, 5, 9ல் சந்திரன் இருப்பவர்கள் திங்கட்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் பெரிய முன்னேற்றங்களை அடையலாம்.

    செவ்வாய்: செவ்வாய் கிரகம் 6, 8, 12ல் உள்ளவர்களும், நீச்சம்- அஸ்தமனம், பகை, வக்ரம், பாதகஸ் தானம், சனி, ராகு, கேது தொடர்பு பெற்றிருத்தல் போன்ற நிலையில் உள்ள ஜாதகர்கள் செவ்வாய்க்கிழமை கருட தரிசனம் செய்வது செவ்வாய் கிரக தோஷம் நீங்கி, யோக பலன் கள் சித்திக்கும்.
    நிலம், வீடு, மனைகள் போன்ற வற்றில் குறைகள், பிரச்சினை கள் நிவர்த்தி அடைய செவ் வாய்க்கிழமை கருட தரிசனம் உத்தம பலன் தரும்!
    செவ்வாய்க்கிரகத்தின் ராசி, லக்னம், நட்சத்திரங் களில் கிழமையில், ஓரையில் பிறந்தவர்கள் செவ்வாய்க் கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் சிறந்த நிலை அடைய வழி வகுக்கும். வாழ்வில் ஏற்படும் அனைத்துவித துன்பங்களும், துயரங்களும் நீங்கிட, சுபிட்சம் ஏற்பட வேண்டுவோர் தவறாமல் செவ்வாய்க்கிழமை கருட தரிசனம் செய்ய வேண்டும்.



    புதன்: அறிவு கிரகமான புதன் கருடனை வாகனமாகக் கொண்ட ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அம்சமாகும். கல்விகளில் ஏற்படும் தடைகள், தோல்விகள் நீங்கி வெற்றிகள் ஏற்பட புதன்கிழமை கருட தரிசனம் செய்ய வேண்டும்! புதனின் ராசி, லக்ன, நட்சத்திரங்களில் (மிதுனம், கன்னி, ஆயில்யம், கேட்டை, ரேவதி) பிறந்தவர்கள் புதன்கிழமை கருட தரிசனம் செய்வது வாழ்வில் நல்ல உயர்வு கிட்டும். புதன் ஜாதகத்தில் 6, 8, 12ல் பாதகம், நீச்சம், வக்கிரம், அஸ்தமனம், நீச்சாம்சம் போன்ற எதிரிடையான அமைப்பைப் பெற்றவர்கள் புதன்கிழமையில் கருட தரிசனம் செய்வது நல்லது.

    வியாழன்:
    வாழ்வில் ஏற்படும் அனைத்துவித பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வைத் தருவது வியாழக்கிழமை மாலை நேர கருட தரிசனம் ஆகும். இன்றும் வியாழக்கிழமை கருட தரிசனத் திற்காக ஏரிக்கரைகளில் பல கருட தரிசன பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கும் வைபோகத்தைக் காணலாம்.
    குருவார கருட தரிசனத்தால் எடுத்த காரிய வெற்றி, பணவரவு, சத்ரு ஜெயம்,தேர்வுகளில் வெற்றி போன்றவைக் கிட்டுவது உறுதி ஆகும்!!
    புத்திரப்பேறு வேண்டுவோர் குருவார கருட தரிசன பலன் களை ஜோடியுடன் தரிசனம் செய்ய வேண்டும்.

    வெள்ளி: வெள்ளிக்கிழமை கருட தரிசனம் நோய், கடன், சத்ரு உபாதைகள் நீங்க வழிவகுக்கும். கொடுத்த கடன் வசூல் ஆகும். சுக்கிரன் ஜாதகத்தில் 6, 8, 12லும், நீச்சம், அஸ்தமனம், வக்கிரம், பாதகம், பகை, பாபிகளின் சூழல் போன்ற எதிரிடையான தன்மையில் இருந்தால் வெள்ளிக்கிழமை கருட தரிசனம் சுக்கிர கிரக சாந்திக்கு வழிவகை செய்யும்! சுபிட்சங்கள் உண்டாகும். சுக்கிரனின் ரிஷப, துலா ராசி, லக்னம், பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சுக்கிர வார கருட தரிசனம் செய்வது வாழ்வில் உன்னத நிலையைத் தரும்.

    சனி:
    வேலைக்காரர்கள், ஊழியர் கள், கடின உழைப்பாளிகள், வியர்வை சிந்த உழைப்பவர் கள்சனிக்கிழமை கருட தரிசனம் செய்வதால் வாழ் வில் நல்ல நிலை கிட்டும். சனி ஜாதகத்தில் 6, 8, 12லும், பாதகம், நீச்சம், பகை, அஸ்தமனம், வக்கிரம், செவ்வாய், சூரியன், ராகு, கேது போன்ற கிரக தொடர்புகள் பெற்று எதிரிடையாக இருப்பின், சனிக்கிழமை கருட தரிசனம் செய்வதால் சனியின் எதிர்மறை பலன்கள் தணியும். சுபங்கள் உண்டாகும்.
    Next Story
    ×