search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Garudalwar"

  • பக்தர்கள் 5 ஆயிரம் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
  • சுவாமிக்கு தங்ககவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

  தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதிகளில் குருவுக்கு அதிபதியாக விளங்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆடி சுவாதி திருவிழா கடந்த 17-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் கருடனுக்கு திருமஞ்சனம், திருவாய்மொழி சேவாகாலத்துடன் நடைபெற்று வந்தது. 10-ம் திருநாளான நேற்று முன்தினம் ஆடி சுவாதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

  காலையில் பெருமாளுக்கு கலச திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் ஏராளமான பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலம் கோவிலை சென்றடைந்தது. கோவில் வடக்கு மூலையில் உள்ள கருடாழ்வாருக்கு 2 ஆயிரம் லிட்டா் பால் அபிஷேகம் செயப்பட்டது. தொடா்ந்து மாவுப்பொடி, மஞ்சள், திரவியம், தயிா், பஞ்சாமிர்தம், தேன், இளநீா், சந்தனம் கொண்டு நவ கலச திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது.

  பக்தர்கள் 5 ஆயிரம் தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னா் சுவாமிக்கு தங்ககவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து பிரபந்தகோஷ்டியாரின் திருவாய்மொழி சாற்றுமுறை நடைபெற்று தீர்த்த விநியோகம் நடைபெற்றது.

  விழாவில் கோவில் செயல் அலுவலர் அஜித், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கருடாழ்வாரை தாிசனம் செய்தனா்.

  • கருடனை வழிபடுவதால் சகல தோஷங்களும் நீங்கும்.
  • யாரெல்லாம் கருடனை வணங்கவேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.

  கருடாழ்வாரை பெரிய திருவடி என்றும் ஸ்ரீஅனுமனை சிறிய திருவடி என்றும் சொல்வார்கள். பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திர நாளில் என்கிறது புராணம் இன்று ஆடி சுவாதி அனுஷ்டிக்கப்படுகிறது.

  இந்த நன்னாளில், விரதம் இருந்து கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்திருக்கும்!

  மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும். நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள். அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடைபெறும். இன்று ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீபெரும்புதூர், நாச்சியார்கோயில் திருவல்லிக்கேணி போன்ற அனைத்து வைஷ்ணவ ஸ்தலங்களிலும் கருட ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. கருடாழ்வார் பிறந்த ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருட வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் நீங்கும்.

  யாரெல்லாம் கருடனை வணங்கவேண்டும்?

  1. ராகுவின் சாரம் பெற்ற திருவாதிரை, ஸ்வாதி, சதயம் நக்ஷத்திரங்களிலும் கேதுவின் சாரம் பெற்ற அஸ்வினி, மகம், மூலம் நக்ஷத்திரங்களிலும் ராசி அல்லது லக்னம் அமைய பெற்றவர்கள்.

  2. ஜெனன ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவை திரிகோணங்களான லக்னம், பூர்வ புண்ணியம், பாக்கியம் மற்றும் பித்ரு ஸ்தானங்களில் ராகு/ கேது அமைய பெற்றவர்கள்.

  3. ராகுவை ஆத்மகாரகனாக கொண்டவர்கள்

  4. சூரியன் மற்றும் சந்திரனுடன் ராகு/கேது சேர்க்கை பெற்றவர்கள்

  5. கால ஸர்ப தோஷத்தில் பிறந்தவர்கள்

  6. பெண் ஜாதகங்களில் கணவனை குறிக்கும் செவ்வாயோடு ராகு சேர்க்கை பெற்றவர்கள்.

  7. கோசார ராகு/கேதுவினால் பில்லி சூனியம் போன்ற அபிசார தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய் ஏற்பட்டவர்கள்

  8. ஜெனன ஜாதகத்திலோ அல்லது கோசாரத்திலோ புதன்-கேது சேர்க்கை பெற்று தைரிய குறைவினால் பகைவர்களிடம் பயந்து நடுங்குபவர்கள்

  கருடன் 16 வகையான விஷத்தைத் தீர்க்க கூடிய மாபெரும் சக்தி பெற்றவர். விஷ ஜந்துக்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், பிறருக்கு ஏறிய விஷங்களை இறக்கவும் முற்காலத்தில் ஞானிகள் பலவகை கருட மந்திரங்களை லட்சக்கணக்கில் ஜெபித்து சித்தி செய்து வைத்திருந்தனர்.

  • கோபிநாதன் கையில் புல்லாங்குழலை ஊதுகின்ற தோரணையில் காட்சியளிக்கிறார்.
  • உற்சவ மூர்த்தி இரண்டு கைகளிலும் வெண்ணை உருண்டைகளை பக்தர்களுக்கு ஊட்டுவது போல அமைக்கப்பட்டுள்ளார்.

  திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் மலைமீது அமைந்துள்ளது பக்தர்களின் குறைகளை போக்கும் கோபிநாதசுவாமி ஆலயம். இத்தலத்தின் அடிவாரத்தில் மாங்கரை எனும் ஆறும் அமைந்துள்ளது.

  மலைமீது 619 அடிஉயரத்தில் உள்ள கோபிநாதனை படிகள் வழியாக ஏறிச்சென்று தரிசிக்கலாம். மலைமேல் நுழைவு வாயிலில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆசி வழங்குகின்றனர். கருவறையில் கண்ணபிரான் என்னும் கோபிநாதன் கையில் புல்லாங்குழலை ஊதுகின்ற தோரணையில் காட்சியளிக்கிறார்.

  அடுத்து உற்சவ மூர்த்தி இரண்டு கைகளிலும் வெண்ணை உருண்டைகளை பக்தர்களுக்கு ஊட்டுவது போல அமைக்கப்பட்டுள்ளார். இடப்புறம் தாயார் கோப்பம்மாள் கற்சிலை அமைந்துள்ளது.

  தல வரலாறு:

  நாயக்கர் காலத்தில் காசி யாத்திரை சென்ற ஓர் அந்தணர் வழியிடையில் பெல்லாரி தேசத்தை அடைந்தார். நீண்ட நாட்களாக மழை இல்லாததால் அங்கு வறட்சி நிலவியது.

  நாட்டை ஆண்டு வந்த வல்லாள மன்னனுக்கு கோப்பம்மாள் என்ற மனைவியும், கோபிநாதன் என்ற மகனும் இருந்தனர். அவர்களுக்கு கணக்கற்ற பசு மந்தைகள் இருந்தன.

  வறுமையில் இருந்த மன்னனிடம் தனது பசிப்பிணியை போக்குமாறு அந்தணர் கோரினார். பல சிரமத்திற்கு மத்தியில் அவருக்கு மன்னனும் உணவமுது கொடுத்து உபசரித்தான். பசி தீர்ந்த அந்தணர்... பாண்டிய நாடு சென்றால் வறட்சி நீங்கி வளமுடன் வாழலாம்.... பசுக்களுக்கும், தங்களுக்கும் நல்ல உணவு கிடைக்கும் என யோசனை கூறிவிட்டு யாத்திரையை தொடர்ந்தார்.

  வல்லாள மன்னனுக்கு பின்னர் அவனது மனைவியும், மகனும் சில பணியாட்கள் உதவியுடன் பசு மந்தைகளுடன் பாண்டிய நாடு நோக்கி புறப்பட்டனர். நுழைவு வாயிலான ரெட்டியார் சத்திரம் அருகில் ஓர் குன்றின் அடியில் தங்கினர். அப்பகுதி செழிப்பாக காட்சியளித்தது. அந்த இடத்தில் தங்கி பசுக்களை காத்து வந்தனர்.

  சில ஆண்டுகள் கழித்து படிப்படியாக மழை குறைந்து அப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு... மாடுகள் இறையின்றி வாடின. வறுமையில் வாடிய கோபிநாதன் மாடுகளுக்கு இரையாக புல்லும், முளைத்து வறுமை நீங்கினால் தன் உயிரை மாய்த்து காணிக்கை ஆக்குகிறேன் என இறைவனிடம் வேண்டிக் கொண்டான்.

  அன்று இரவு நல்லமழை பெய்து வெள்ளம் ஓடியது. புல் மலை முழுவதும் முளைத்தது. தன்னுடைய சங்கல்பம் நிறைவேறியதால் ஒரு வேப்ப மரத்தில் எருதுவை கட்டி விட்டு அதன் கொம்பில் விழுந்து இறந்தான்.

  இதைப் பார்த்த அவனது தாயும் உயிர் விட்டாள். இது நிகழ்ந்து சில ஆண்டுகளுக்கு பின்னர் மலை அருகிலுள்ள கன்னிவாடி ஜமீன்தார் மான் வேட்டைக்கு இம்மலைக்கு மாட்டு வண்டியில் வந்துள்ளார். அந்த மாடுகள் நடக்க முடியாமல் தரையில் படுத்துவிட்டன.

  கோபிநாதன் விட்டுச்சென்ற மாடுகள் ஜமீன்தாருக்கு மான் களாக காட்சியளித்தன. அவற்றை வேட்டையாட அவர் முயற்சி செய்தார். ஒன்றும் சிக்காததால் கவலையுடன் ஊர் திரும்பிய ஜமீன்தார் கோடாங்கியை அழைத்து குறிகேட்டுள்ளார்.

  அவர் முந்தைய கால அற்புதங்களை கூறிய அன்றே, அந்தி வேளையில் சித்தர் ஒருவர் தோன்றி இம்மலையில் கோபிநாதன் எழுந்தருளியுள்ளார். அவர் பசுக்களிடம் ஆசா பாசங்கள் கொண்டவர். அவருக்கு மாடுகளை காணிக்கை யாக்குகிறேன் என நேர்ந்து கொள்.

  நித்திய பூஜைகளும், திருவிழாக்களும் நடந்துவர சிலை அமைத்து கோயில் கட்ட ஏற்பாடு செய்க. மாடுகளும் நலம்பெறும், நீயும் உமது நாடும் இறையறுள் பெறுவாய் என கூறிவிட்டு மறைந்தார்.

  அதன்படி மலைமேல் வேப்பமரத்தடியில் குழல் ஊதுகின்ற பாவனையில் கோபிநாதனுக்கு, கஞ்சி கலயத்தை தலையில் சுமந்த நிலையில் தாயார் கோப்பம்மாளுக்கு சிலை அமைத்தார். ஏராளமான பசுக்களை மலையில் காணிக்கையாக செலுத்தினார்.

  • இன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.
  • கருடரை வழிபட தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

  அமாவாசைக்கு ஐந்தாம் நாளான பஞ்சமி திதியான அன்று கருட பஞ்சமியும் நாக பஞ்சமியும் அனுஷ்டிக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு தீங்கி ழைப்பவர்கள், தாங்கள் செய்த தீமையின் பலனை இறந்த பின்பு அனுபவிப்பார்கள். எந்தத் தவறுக்கு என்ன தண்டனை என்பதை கருடனுக்கு இறைவன் போதித்ததே 'கருட புராணம்' ஆகும். கருடன், மகா பலம் உடையவர். அனைத்து திசைகளிலும் வேகமாகவும், உயரமாகவும் பறக்கும் ஆற்றலைக் கொண்டவர். சர்ப்பங்களைக்கூட விழுங்கும் ஆற்றலைப் பெற்றவர். மகாவிஷ்ணுவின் தலங்களில் 'பெரிய திருவடி' என்று போற்றப்படுபவரே கருடாழ்வார்.

  மகா விஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதி சேஷனையும், அவருடைய வாகனமாகிய கருடாழ்வாரையும் விரதம் இருந்து வழிபட சிறந்த நாள் நாக/கருட பஞ்சமி. கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் இன்பமான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். ஆண் வாரிசு இல்லாதவர்கள் இந்த நாளில் விரதமிருந்து வழிபட்டால் கருடனைப் போல பலசாலியான, புத்திசாலியான, ஆண் வாரிசு கிடைக்கப் பெறுவர்.

  பெண்கள் கருட பஞ்சமியன்று கவுரி அம்மனை நாகவடிவில் அலங்கரித்து, நோன்பு இருந்து பூஜை செய்வது மிகவும் நல்லது. அதிகாலை நேரத்தில், கருடனை தரிசித்தால் நினைத்த காரியம் நடக்கும். சனி, வியாழக்கிழமை, பஞ்சமி திதி, சுவாதி நட்சத்திர நாட்களில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று கருடனை வழிபட்டு வர நாக தோஷம் விலகும்.

  விபத்து, நோய் நீக்கும், மருத்துவராகவும், பட்சிகளின் ராஜாவாக திகழும் கருட பகவானுக்கு கருட ஜயந்தி, கருட பஞ்சமி அன்று கருட ஹோமம் செய்வது நலம் தரும். கருட பஞ்சமியன்று விரதமிருந்து கருட வழிபாடு செய்ய தீர்க்க முடியாத கோர்ட்டு, கேஸ் பிரச்சினை, சட்ட நெருக்கடி, கடன் தொல்லை, உயிர்கொல்லி நோயான கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள், விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கருடரை வழிபட தோஷங்களில் இருந்து விடுபடலாம். பலன் இரட்டிப்பாகும்.

  இந்தோனேஷியாவில் உள்ள மிக கனமான சிலையாக இது கருதப்படுகிறது. இந்த சிலையை தயாரிக்க செம்பு, பித்தளை விரிப்பு, துருபிடிக்காத இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
  இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில் அமைந்துள்ள, இந்த கருட விஷ்ணு சிலை, 122 மீட்டர் உயரமும், 66 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த சிலையை அமைக்க 28 ஆண்டுகள் ஆனதாக சொல்லப்படுகிறது. இது 4 ஆயிரம் டன் எடை கொண்டது. இந்தோனேஷியாவில் உள்ள மிக கனமான சிலையாக இது கருதப்படுகிறது. இந்த சிலையை தயாரிக்க செம்பு, பித்தளை விரிப்பு, துருபிடிக்காத இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

  கான்கிரீட் தூண்கள் கொண்டும் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலைப் படைப்பை செய்து முடிக்க 21 ஆயிரம் இரும்பு பாளங்களும், 1 லட்சத்து 70 ஆயிரம் நட்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான செலவு கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.740 கோடி என்கிறார்கள்.
  கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
  கருட மாலா மந்திரம் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.

  ஓம் நமோ பகவதே, கருடாய;
  காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி
  கால நல லோல ஜிக்வாய
  பாதய பாதய மோஹய
  மோஹய வித்ராவய வித்ராவய
  ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய
  ஹந ஹந தஹ
  திருவேங்கடம் ஆலயத்தின் மதில் சுவற்றின் மேல் ஈசானிய மூலையில் தனி சன்னதியில் அதிசயக் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளார். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
  திருவேங்கடம் கோவிலின் இடப்பக்கத்திலே திருக்குளம் வெட்டும் பொழுது அங்கிருந்த ஒரு மரத்தில் முனீஸ்வரன் குடி கொண்டிருந்ததாகவும், மரத்தை வெட்டினால் முனிஸ்வரன் வெகுண்டு அத்தலத்திற்குத் தீங்கிழைத்து விடக் கூடுமாதலால், அம்முனீஸ்வரரைப் பாதமாகச் செதுக்கி அம்முனீஸ்வரருக்கு காவலாகத்தான் மூலைக்கெருடனை அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகின்றது. இச்செய்தி செவிவழிச் செய்தியாயினும், மூலைக்கெருட பகவானின் அபார சக்தியை நோக்குங்கால், உண்மை நிகழ்ச்சியாகத்தான் இருக்கக் கூடும் என எண்ணத் தோன்றுகிறது.

  எல்லாப் பெருமாள் கோவிலிலும் சன்னதி கருடன்தான் விசேடமாக ஆராதிக்கப்படுவார். ஆனால் இங்கு ஆலயத்தின் மதில் சுவற்றின் மேல் ஈசானிய மூலையில் தனி சன்னதியில் அதிசயக் கருடாழ்வார் எழுந்தருளி உள்ளார். இருபுறமும் சிம்மங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். ஒவ்வொரு மாதமும், சுவாதி நட்சத்திரத்தன்று இவருக்கு 108 குடங்களில் திருமஞ்சனமும் பூஜைகளும் நடைபெறுகிறது.

  ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று ‘மஹா சுவாதி’ என கருடனின் ஜென்ம நட்சத்திர வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
  பக்தர்களின் வேண்டுதல்களை அவ்வப்பொழுது நிறைவேற்றி வைக்கும் இவருக்குப் பக்தர்கள் சிதறு தேங்காய்களை அவர் அமர்ந்திருக்கும் மதில் சுவற்றில் உடைத்து நன்றி செலுத்துகின்றனர். இவரைத் தரிசித்து வழிபட் டால், ஏவல், பில்லி, சூனியம், மனவி யாதி அகலும். சத்ரு பயம் நீங்கி, வளம் பெருகும். நினைத்த காரியம் நிறைவேறும். 
  கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு. கருடனை எந்த கிழமையில் வழிபட்டால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து பார்க்கலாம்.
  கருடனை வணங்கினால் பகவானை வணங்கிய பலன் உண்டு. கருடனின் நல்ல, அழகான இறக்கைகள் யக்ஞங்கள் என்றும், காயத்ரி மகாமந்திரமே அவனுடைய கண்கள் என்றும், தோத்திர மந்திரங்கள் அவனுடைய தலை என்றும், சாம வேதமே அவனுடைய உடல் என்றும் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

  கருடனை ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் செய்தால் நோய்கள் நீங்கும்.
  திங்கள்கிழமை தரிசிக்க சுகங்கள் கிடைக்கும். துன்பங்களும் துயரங்களும் விலகும்.
  செவ்வாய்க்கிழமையில் தரிசிக்க துணிவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும்.

  புதன்கிழமைகளில் கருடனைத் தரிசித்தால் வஞ்சனை கொண்டவர் விலகுவர், விரோதிகள் அழிவர், வெற்றி உண்டாகும்.
  வியாழக்கிழமைகளில் தரிசிக்க நீண்ட ஆயுளும், செல்வங்களும் வாய்க்கும்.
  வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கருடனை தரிசனம் செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

  கண்திருஷ்டி தோஷங்கள் போன்ற தீவினைகள் நசியவும், பலவித எதிர்வினை சக்திகள் செயலிழக்கவும் செய்வது வளர்பிறை ‘பிரதமை’யன்று கருட தரிசனம் ஆகும்.
  எந்த திதியன்று கருட தரிசனம் செய்கிறோமோ அந்தத் திதியின் அதிதேவதையின் அருளாசியும்,சுபிட்சங்களும் நமக்கு கிடைக்கும். கல்வி,ஞானம், அறிவு, படிப்பில் நல்ல உயர்வு, வெற்றி கிடைக்க வேண்டுவோர் வளர்பிறை ‘நவமி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

  அஷ்ட ஐஸ்வர்யங்கள் லட்சுமி கடாட்சம் உண்டாக வேண்டுவோர் வளர்பிறை ‘அஷ்டமி’ திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும். கண்திருஷ்டி தோஷங்கள் போன்ற தீவினைகள் நசியவும், பலவித எதிர்வினை சக்திகள் செயலிழக்கவும் செய்வது வளர்பிறை ‘பிரதமை’யன்று கருட தரிசனம் ஆகும்.
  சந்திரனால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலக வளர்பிறை ‘திரிதியை’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

  சூரியனின் தோஷங்கள் விலக வளர்பிறை ஸப்தமி திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

  செவ்வாய் சம்பந்தப்பட்ட தோஷங்கள் நிவர்த்தி ஆக வளர்பிறை ‘சஷ்டி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

  விநாயகப்பெருமானின் அனுக்கிரகம் கிடைக்க ‘வளர்பிறை சதுர்த்தி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

  புதனின் தோஷங்கள் நிவர்த்தி ஆகவும் நல்ல புத்தி உண்டாகவும் வேண்டுவோர் வளர்பிறை ‘துவாதசி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

  கருட பகவானுக்கு உரிய திதி ‘பஞ்சமி’ ஆகும். எனவே ஆவணி மாதம் வருகின்ற கருட பஞ்சமி மிகவும் சிறப்பு. பொதுவாக பஞ்சமி திதி அன்று கருட தரிசனம் செய்வதால் ஈடு இணையற்ற சுப பலன்கள் உண்டாகும்.

  தோஷங்கள் யாவும் நிவர்த்தி ஆக திரயோதசி திதி அன்று பிரதோஷ வேளையில் கருடதரிசனம் செய்யவேண்டும்.

  மகாலட்சுமியின் அருளாசி உண்டாக வேண்டுவோர் ‘துவாதசி’ திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

  புத்திர பாக்கியங்கள் சம்பந்தமான விஷயங்களுக்கும், குரு தோஷங்கள் நிவர்த்திக்கும் வாழ்வில் நல்ல மேம்பாடு அடையவும் வேண்டுவோர் தேய்பிறை ‘தசமி’திதி அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

  முனிவர்களின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டுமானால் தேய்பிறை ‘சப்தமி’ அன்று கருட தரிசனம் செய்யவும்.

  குபேர சம்பத்து உண்டாக தேய்பிறை ‘பிரதமை’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும்.

  எமபயம் நீங்கவும் மரண பயம் விலகவும் தேய்பிறை ‘நவமி’ அன்று கருட தரிசனம் செய்யவும்.

  கோச்சார சனியால் ஏற்படும் பாதிப்புகள் விலக வேண்டின் தேய்பிறை ‘ஏகாதசி’ அன்று சனீஸ்வர வழிபாடு கொள்ள வேண்டும்.

  ராகு கேதுக்களின் அனுக்கிரகம் கிடைக்கவும் ராகு கேது தசாபுத்தி நடைமுறையில் உள்ளவர்கள் தேய்பிறை ‘அஷ்டமி’ அன்று கருட தரிசனம் செய்ய நல்ல பலன்கள் நடைமுறைக்கு வரும்.

  அமாவாசை திதி அன்று கருட தரிசனம் செய்வது பித்ருக்கள் ஆசீர்வாதத்தை பெற்றுத் தரும். இதனால் அளப்பறிய நன்மைகள் வாழ்வில் உண்டாகும்.

  ஆண்குழந்தை வேண்டுவோர் அமாவாசை அன்று கருட தரிசனம் தொடர்ந்து செய்ய பலன் நிச்சயம்.

  பெண் குழந்தை வேண்டுவோர் பவுர்ணமி அன்று கருட தரிசனம் செய்யவும்.

  சிவனின் அருளாசி கிட்ட தேய்பிறை ‘திரயோதசி’ பிரதோஷ காலத்தில் கருட தரிசனம் செய்ய வேண்டும்.

  திருமண பாக்கியம் உண்டாக தேய்பிறை ‘துவாதசி’ அன்று கருட தரிசனம் செய்ய வேண்டும். நல்ல வரன் கிடைக்கும்.

  ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றியும், லாபமும், அபிவிருத்தியும் கிடைக்க வேண்டுவோர் தேய்பிறை, ‘சஷ்டியில்’ கருட தரிசனம் செய்ய வேண்டும்.

  எந்த திதி அன்று கருட தரிசனம் செய்தாலும் அத்திதியின் அதி தெய்வ அருளாசியால் நமக்கு நல்ல பலன்களே விளையும்.

  எனவே ‘ நித்திய கருட தரிசனத்தை ஒரு வழக்கமாக பழக்கமாக, தவமாக, வழிபாடாகக் கொண்டால் வாழ்வில் சகல சுபிட்சங்களையும் பெற்று வாழலாம்.
  ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தில் தவறாமல் கருட தரிசனம் செய்தே ஆக வேண்டும்.
  ஒவ்வொரு இந்துவின் திருமணச் சடங்கிலும் ஸ்ரீகருடனுக்கு மிகச் சிறப்பான ஒரு இடம் உண்டு. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
  ஒவ்வொரு இந்துவின் திருமணச் சடங்கிலும் ஸ்ரீகருடனுக்கு மிகச் சிறப்பான ஒரு இடம் உண்டு. திருமாங்கல்ய தாரணம் என்னும் தாலி அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது, நாதஸ்வரக் கலைஞர்கள் கருடத்வனி என்னும் ராகத்திலேயே இசைக்கின்றனர்.

  இந்த கருடத்வனியானது வேதத்திற்கு ஒப்பாகும் என்று ஏற்கனவே அறிந்துள்ளோம். வேத மந்திரங்களைக் கூறி நடைபெறும் திருமணத்தில், வேத மந்திரங்களை ஒலிக்கும் போது ஏதாவது தோஷம் ஏற்பட்டாலும் கூட, இந்த கருடத்வனி அதனை நீக்கி விடுகிறது.

  மேலும் திருமணத்தின் முக்கிய அங்கமான திருமாங்கல் யம் என்னும் தாலியைச் செய்யக் கொடுக்கும்போது கருடனின் நட்சத்திரமான சுவாதியில் கொடுப்பது மிகவும் விசேஷமாகும். அல்லது திருமாங்கல்யத்தை வாங்கும்போதாவது சுவாதி நட்சத்திரத்தில் வாங்குவது நல்லது என்பது ஆன்றோர் வாக்கு.