என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 100434"

    பொருளாதாரம், வியாபாரத்தில் முன்னேற்றம் காண விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் மாற்றத்தை காணலாம்.
    "ஓம் கம் கணபதயே, உத்யோகலாபம், வித்யா லாபம் குருதே நமக''

    - என்று 108 தடவை ஜபம் செய்தபின் கையில் மலர்கள் எடுத்துக் கொண்டு தன்னையே சுற்றி வருகின்ற ஆத்ம பிரதட்சிணம் செய்து- கலசம் மற்றும் வைக்கப்படும் சிறு சிலை மேல் (பிரதீமை என்றும் சொல்வர்) போட்டு விழுந்து வணங்குதல் வேண்டும்.

    அடுத்தபடியாக, விநாயகருக்கு மங்கள ஆரத்தியை செய்யலாம்.

    ஓம் தத்புருஷாய வித்மகே வக்ர துண்டாய தீமகி
    தந்தோ கணேச ப்ரசோதயாத்- கற்பூர ஜோதிம் தர்சயாமி
    - என்றோ அல்லது அழகு தமிழில்

    ஜோதி ரூபனே கணேஸ்வரா ஜோதி மைந்தனே சர்வேசா!
    ஆனை முகத்தவா கணேஸ்வரா ஆனந்த ஜோதி கணேஸ்வரா!
    அழகன் அண்ணா கணேஸ்வரா!
    ஆதி நாதனே ஆனைமுக! மங்கள ஜோதி கணேஸ்வரா!
    பணிந்தோம் ஏகதந்தேஸ்வரா! தீப மங்கள் கணேஸ்வரா!
    என்றும் மங்களம் கணேஸ்வரா!

    பிறகு ஆரத்தி, விபூதி, குங்குமம் எடுத்துக் கொண்டு வந்திருப்பவர்கள் யாராயினும் இருந்தால் கொடுக்கவும். முதல் விரத பூஜை காலத்தில் ஒரு 7 வயது சிறுவனை மனைப் பலகையில் அமர வைத்து மஞ்சள், சந்தனம் கொடுத்து தட்டில் மூன்று பழங்கள், பாயாசம் தாம்பூலம் முடிந்த அளவு 5, 10 ரூபாய் காசுகள் வைத்து விநாயகராக அந்த சிறுவனை நினைத்து வணங்கி தானம் கொடுக்க வேண்டும். அப்போது தான் விரத பூஜையில் தவறு இருந்தால் அவர் ஏற்றுக் கொள்வதாக ஐதிகம்.

    கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.
    கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே
    வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே
    ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
    ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
    பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
    ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
    தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா
    கருட மாலா மந்திரத்தை தினமும் பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள் எந்த வித துன்பத்திற்கும் ஆளாக மாட்டார்கள். பகை விலகும். ஆபத்து அகலும்.
    ஓம் நமோ பகவதே, கருடாய;
    காலாக்னி வர்ணாய ஏஹ்யேஹி
    கால நல லோல ஜிக்வாய பாதய
    பாதய மோஹய மோஹய
    வித்ராவய வித்ராவய ப்ரம
    ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந தஹ
    தினமும் இம்மந்திரத்தை 108 முறை ஜெபித்து சாய் பாபாவை வழிபட, உங்களின் மனதிலிருந்த இருந்த இனம் புரியாத பயங்கள் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
    ஒருவரின் மனதில் உள்ள தேவையற்ற கவலைகள் மற்றும் பயங்களை போக்கும் வல்லமை கொண்ட சாய் பாபாவின் பதம் பணிந்து அவருக்கான இந்த சாய் பாபா மந்திரம் அதை ஜெபிப்பதன் மூலம் நமது கவலைகளும் துன்பங்களும் காற்றில் கரையும்.

    மந்திரம்:

    “ஓம் சாய் குருவாயே நமஹ
    ஓம் ஷீரடி தேவாயே நமஹ
    ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ”

    இம்மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்த பின்பு இறைவனை வணங்கி “ஸ்ரீ சாய் பாபாவை” மனதார நினைத்து இம்மந்திரத்தை 9 முறை கூறவேண்டும். மேலும் வியாழக்கிழமைகளில் சாய் பாபா கோவிலுக்கு சென்றோ அப்படி முடியாதவர்கள் வீட்டில் சாய்பாபா படமிருந்தால், அந்த படத்திற்கு முன்பு சிறிது முந்திரி பருப்புகளையோ அல்லது கற்கண்டுகளையோ நிவேதனமாக வைத்து இம்மந்திரத்தை 108 முறை ஜெபித்து சாய் பாபாவை வழிபட, உங்களின் மனதிலிருந்த இருந்த இனம் புரியாத பயங்கள் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்கள் மனத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகி உங்கள் மனம் சாந்தம் அடையும்.
    அஸ்வினி நட்சத்திரத்தின் தேவதைகளான அஸ்வினி குமாரர்களுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 27 வரை துதிப்பது நல்லது.
    அஸ்வினி தேவதே ஸ்வேத வர்நொவ்
    தாவஸ்விநௌ து மஹ
    சுதா சம்பூர்ண கலச கராலஜெள
    அஸ்வ வாசு கநௌ

    அஸ்வினி நட்சத்திரத்தின் தேவதைகளான அஸ்வினி குமாரர்களுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 27 வரை துதிப்பது நல்லது. மாதத்தில் வருகின்ற அஸ்வினி நட்சத்திர தினத்தன்று அஸ்வினி தேவர்களை மானசீகமாக வழிபட்டு, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதால் உங்கள் உடலில் இருக்கின்ற எப்படிப்பட்ட நோய்களும் நீங்கும். விபத்துக்கள், உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படாமல் காக்கும். தீய எண்ணம், நடத்தை கொண்ட மனிதர்கள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிடாமல் தடுக்கும்.
    அனைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம் விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம். கணவன் மனைவி ஒற்றுமைக்கும், குழந்தை பாக்கியம் அருளவும் வல்லது.
    அனைத்து திருமண தடைகளையும் தகர்த்து, திருமணம் விரைவில் நடப்பதற்கான ஒரே மந்திரம். மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும், அந்நியோன்யம் வளரவும், குழந்தை பாக்கியம் அருளவும் வல்லது. காயத்ரி மந்திரத்திற்கு இணையானது.

    ஓம் ஹ்ரீம் யோகினீம் யோகினி
    யோகேஸ்வரி யோக பயங்கரி
    ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய
    முக ஹ்ருதயம் மம வசம்
    ஆகர்ஷ ஆகர்ஷய நமஹ
    சொல்லும் முறை

    ஒரு வெள்ளி அல்லது திங்கட்கிழமையில் சாயங்கால வேளையில் சங்கல்பம் செய்து கொண்டு மந்திர வழிபாட்டுப் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். தினமும் அதே நேரத்தில் செய்து வர வேண்டும். 90 நாட்கள் தொடர்ந்து செய்து வர சௌபாக்கிய விருத்தி ஏற்பட்டுவாழ்வு வளம் பெறும்.
    இந்த ஸ்ரீகார்த்தவீர்யாஜுன மந்திரத்தை தினமும் பக்தி சிரத்தையுடன் சொல்லச் சொல்ல... பொருள்களை மட்டுமில்லாமல், இழந்த வாழ்க்கையைக்கூட நாம் திரும்பப் பெறலாம்.
    வாழ்க்கையில் நம்மால் தவிர்க்க முடியாதவை, நமக்கு ஏற்படும் சில இழப்புகள். சிலருக்கு பதவி, இன்னும் சிலருக்கோ பொன் பொருள். சிலர் விதி வசத்தால் தங்களது வாழ்க்கையையே கூட தொலைத்து விடுவது உண்டு. நாம் தொலைத்தது எதுவாக இருந்தாலும், இந்த ஸ்ரீகார்த்தவீர்யாஜுன மந்திரத்தை தினமும் பக்தி சிரத்தையுடன் சொல்லச் சொல்ல... பொருள்களை மட்டுமில்லாமல். இழந்த வாழ்க்கையைக்கூட நாம் திரும்பப் பெறலாம்.

    அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம் நஷ்டஸ்ய புனராகமம்,
    லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந் மயோதிதம்
    ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம:
    ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் ||.
    யஸ்ய ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே

    வராஹி அம்மனுக்கு உகந்த இந்த மூலமந்திரத்தில் தினமும் சொல்லி வந்தால் தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும்.
    “ஓம் க்லீம் வராஹமுகி ஹ்ரீம்
    ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன
    வசங்கரி தனம் வர்ஷய
    வர்ஷய ஸ்வாஹ:”

    பூஜை முறைகள்: வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும்.

    இதன் பலன்: தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.

    பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். குழந்தைகளை பாலாரிஷ்ட தோஷத்தில் இருந்து காக்கும் மந்திரத்தை பார்க்கலாம்.
    பிறந்த ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6,8,12-ம் இடங்களில் குரு கிரகம் நின்றாலும் அல்லது சூரியன், சந்திரன் நின்றாலும் 8-ம் இடமான ஆயுள் தானத்தில் ஆயுள் காரகன் சனி நின்றாலும் அது பாலாரிஷ்ட தோஷமாகும். இந்த குழந்தைகளுக்கு நோய் நொடிகள் பிறந்த காலத்திலிருந்து 1 அல்லது 2 ஆண்டுகள் வரை தரக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

    பாலாரிஷ்டம் என்ற சொல்லிற்கு சிறுவயதில் இறப்பது அல்லது சிறு வயதில் உடல்ரீதியாகத் கெடுவது என்ற பொருள். பிறந்த குழந்தை உயிருடன் இருக்குமா? எத்தனை காலம் இருக்கும்? இந்தக் குழந்தை பிறப்பினால் தாய்க்கும் ஏதாவது கஷ்டங்கள் இருக்குமா என்பதை பாலாரிஷ்ட தோஷம் சுட்டிக் காட்டும்.

    பால க்ரஹ விநாச்ச தர்மநேதா கிருபாகர:
    உக்ரக்ருத்யோக்ரா வேகச்ச உக்ர நேத்ர: சதக்ரது:

    இந்த மந்திரத்தை கூறி கடவுளை வழிபட்டு விபூதியை குழந்தையின் நெற்றியில் பூசலாம்.  

    சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.
    வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை. தன் பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.

    மந்திரத்துடன் கீழ்க்கண்ட பூஜை முறைகளையும் செய்ய வேண்டும்.

    மூல மந்திரம் :

    ஓம் க்லீம் வராஹ முகி
    ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
    ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா”

    பூஜை முறைகள் :

    வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன், மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து, பூஜை செய்ய வேண்டும். இதன் பலன் தன வசியம், தொழில் விருத்தி, மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.

    கடன் வாங்கி அதை திரும்பி செலுத்த முடியாமல் தவிப்பவர்கள் மற்றும் கடன் வாங்கும் சூழ்நிலை தவிர்க்க விரும்புபவர்கள் இந்த ரின் முக்தி மந்திரத்தை துதித்து வருவது நல்லது.
    “ஓம் விஸ்வதர்ஷன தேவ்தாய் நம்”

    இந்த மந்திரம் மிகவும் ஆற்றல் மிகுந்த ரின் முகி மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை நாம் வழக்கமான மந்திரம் துதிக்கும் முறையில் துதிக்க கூடாது. தினமும் காலையில் நீங்கள் குளிக்கின்ற போதே 18 முறை இந்த மந்திரத்தை துதிக்க வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் இம்மந்திரத்தை துதிப்பதை தவிர்க்க வேண்டும். மேற்கண்ட மந்திரத்தை தொடர்ந்து துதித்து வருவதால் கடன் பிரச்சனைகளில் சிக்கி தவிப்பவர்கள், அனைத்து கடன்களையும் சீக்கிரத்தில் அடைக்கும் நிலை உண்டாகும். கடன் சம்பந்தமான பிரச்சனை இல்லாதவர்கள் கூட மந்திரத்தை துதிப்பதால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

    கடன் வாங்கி அதை திரும்பி செலுத்த முடியாமல் தவிப்பவர்கள் மற்றும் கடன் வாங்கும் சூழ்நிலை தவிர்க்க விரும்புபவர்கள் இந்த ரின் முக்தி மந்திரத்தை துதித்து வருவது நல்லது.

    உன் அன்பின் ஆழத்தையும் உன் பக்தியின் தூய்மையையும் உன் நம்பிக்கை பொறுமை எதையும் எதிர்நோக்கி தாங்கும் உணர்வு உன் பலத்தையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை சாய்பாபா அறிவார்.
    ஒருவர் உன்னை எந்த வகையில் அலட்சியப்படுத்தினாலும் அதை நீ உன் மனதிற்குள் எடுத்துக்கொள்ளாதே. புறக்கணிப்பு என்ற இடத்தில் தான் உனக்கான சரித்திரம் உருவாகிறது அந்த இடத்தில் தான் இருந்து விருட்சகமாய் வளர போகிறாய்! நான் மட்டுமே அனுசரித்து போக வேண்டுமா என்று நினைக்காதே நீ இப்படி நினைத்தால் உன் எதிரில் இருப்பவர் என்ன நினைக்க கூடும் இப்படியே போய் கொண்டு இருந்தால் இறுதியில் சண்டையிலும் வாக்குவாதங்களிலும் தான் முடியும் அமைதியாய் இருப்பது சிறந்தது பல பிரச்சினைகளில் இருந்து உன்னை காக்கும் கவசமாய் அது விளங்கும்.

    உன் சாய்பாபாவின் வார்த்தை உனக்கான இரத்த ஓட்டத்தை போல் இனிமேல் என் நாவில் தோன்றும் சொற்களின் பேர் அருளை பெறுவாய். அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன். நீ உன்னில் பார்க்கும் அனைத்துமாய் அகிலத்தின் ரூபமாய் உனக்கு நான் இருப்பேன். உலகத்தில் என்ன மாறினாலும் நகன்றாலும் உன் தந்தை சாய்தேவா தூவாரகாமாயீ தாயுமாகிய நான் உன்னை விட்டு ஒருபோதும் அகலமாட்டேன் உன்னில் எப்போதும் நான் இருப்பேன். நீ என்று என்னை சாய்அப்பா என்று அழைத்து உன்னிடத்தில் நான் என்னும் சொல்லுக்கு சாய்தேவா என்ற அர்த்தத்தை கண்டாயோ அன்றே நீ என் உயிரான பொறுப்பு.

    உன் அன்பின் ஆழத்தையும் உன் பக்தியின் தூய்மையையும் உன் நம்பிக்கை பொறுமை எதையும் எதிர்நோக்கி தாங்கும் உணர்வு உன் பலத்தையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை உன் சாய்தேவா நான் அறிவேன். அதனால் எல்லாம் சரியாகிவிடும் எதற்கும் அஞ்சாதே உன்னோடும் உன் குடும்பத்தோடும் நான் என்ற உன் சாய்தேவா இருக்கிறேன். உன்னை நல்வழிபடுத்த வேண்டும் என்று பொறுப்பு உன் அனைத்துமாய் விளங்கும் உன் சாய்தேவா ஆன இந்த துவாரகாமாயீ தாய்க்கும் உள்ளது. என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ. உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை.
    ×