search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaja cyclone relief"

    டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தீவிரமாக தாக்கியுள்ள நிலையில், லைகா நிறுவனமாம் ரூ.1 கோடியே 1 லட்சம் நிவாரண நிதி வழங்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். #GajaCycloneRelief #Lyca
    கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

    புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

    நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் நிவாரணம் வழங்கியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். 



    இந்த நிலையில், லைகா நிறுவனம் ரூ.1 கோடியே 1 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். #GajaCycloneRelief #Lyca
    டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தீவிரமாக தாக்கியுள்ள நிலையில், நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ரசிகர் மன்றம் மூலம் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். #GajaCycloneRelief #Rajinikanth #Vijay #Vairamuthu
    கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

    புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். 

    நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சமும் நிவாரணம் வழங்கியுள்ளனர்.



    இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க ரஜினிகாந்த் உத்தரவிட்டுள்ளார். நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். விஜய் சார்பில் ரூ.6.5 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    கவிஞர் வைரமுத்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்குக் ரூ.5 லட்சம் வழங்கியிருக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கது. #GajaCycloneRelief #Rajinikanth #Vijay #Vairamuthu

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாகவும், நிவாரண பொருட்களாகவும் வழங்கப்படும் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். #GajaCycloneRelief #VijaySethupathi #Sivakarthikeyan
    கஜா’ புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

    புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும், 1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்து இருக்கின்றன. புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதேபோல் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

    புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.



    தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ.1. கோடி நிவாரண உதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி உதவும் வகையில் ரூ.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண  பொருட்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவிருப்பதாகவும் நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

    இதுதவிர நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் முதல்வர் நிவாரண நிதிக்கும், ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள் வாங்கவும் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதேபோல் நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், கருணாகரன் உள்ளிட்டோரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #GajaCycloneRelief #VijaySethupathi #Sivakarthikeyan

    ×