search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Medical camp"

    • நெசவாளர்க ளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு ரூ.8.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • இன்றைய விழாவில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களுக்கு மருத்துவ அட்டைகள் வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கைத்தறித்துறை சார்பில் 9வது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் வி.ஐ.பி. மஹாலில் அமைப்பட்டிருந்த கைத்தறி கண்காட்சியை மாவட்ட கலெக்டர் பூங்கொடி இன்று திறந்து வைத்து, நெசவாளர்க ளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு ரூ.8.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    விழாவில் கலெ க்டர் தெரிவித்ததாவது:-

    கைத்தறி நெசவாள ர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அரசு சார்பில் தொழில் கடனுதவிகள் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 2015-ம் ஆண்டு முதல் சுதேசி இயக்கத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ம் தேதியன்று தேசிய கைத்தறி தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், கைத்தறித்துறை சார்பில் இந்த ஆண்டு 9வது தேசிய கைத்தறி தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், கைத்தறி கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், வாழை நார் பட்டு சேலைகள், பம்பர் காட்டன் சேலைகள் உள்ளிட்ட கைத்தறி ஜவுளி ரகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்த ப்பட்டு ள்ளன.

    தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு, கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்காக திண்டுக்கல் வி.ஐ.பி மஹாலில் சிறப்பு பொது மருத்துவ முகாம் மற்றும் நாகல்நகர் பகுதியில் உள்ள செந்தா மஹாலில் இலவச கண் பரிசோதனை முகாம் ஆகியவை நடத்தப்படுகிறது.

    இன்றைய விழாவில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களுக்கு மருத்துவ அட்டைகள், கைத்தறி ஆதரவுத் திட்டத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்க 5 உறுப்பினர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் மதிப்பிலான தறி உபகரணங்கள், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் நெசவாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் 13 நபர்களுக்கு ரூ.8.60 லட்சம் மதிப்பிலான கடன் தொகைகள் உள்பட மொத்தம் ரூ.8.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை நெசவாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • அரசு மருத்துவமனையில் உள்ள ஆயுஷ் நல்வாழ்வு மையத்தில் நடைபெற்றது.
    • முகாமில் விழிப்புணர்வு ஆலோசனையும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    தேசிய மருத்துவர்கள் தினமான இன்று மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள ஆயுஷ் நல்வாழ்வு மையத்தில், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. துப்புரவு பணியாளர்கள், பாசி, மணி விற்கும் நரிக்குறவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவர் வாணதி நாச்சியார் முன்னிலையில், ஆயுஷ் மருத்துவம் குறித்து மூச்சு பயிற்சி, யோகா, மசாஜ், ஆயில் குளியல், தியானம், சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஆலோசனையும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சக ஊழியர்கள் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.

    • கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் ஆவின் சார்பில், மாபெரும் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம், வருகிற 27-ந் தேதி காலை 8 மணி முதல் நடைபெறு உள்ளது.
    • முகாமில், கால்நடை களுக்கு இன்சூரன்ஸ் செய்வது, கால்நடை வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கான பதில் அளித்தல், கால்நடை மருத்துவர் செயலி பயன்படுத்தும் முறை, நாய் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெறும்.

    நாமக்கல்:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின், நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சேந்தமங்கலம் ஒன்றியம், மலைவேப்பங் குட்டை, உத்திரகிடிகாவல் கிராமத்தில், நாமக்கல் கால்நடை பராமரிப்புத்துறை யுடன், கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் ஆவின் சார்பில், மாபெரும் கால்நடை மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம், வருகிற 27-ந் தேதி காலை 8 மணி முதல் நடைபெறு உள்ளது.

    இம்முகாமில், கால்நடை களுக்குத் தேவையான அனைத்து விதமான சிகிச் சைப் பணிகள், வெறிநாய் தடுப்பூசி, ராணிக்கட் தடுப்பூசி, சிறிய அறுவை சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல், அல்டரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, ஆய்வு செய்ய மாதிரிகள் சேகரித்தல், தாது உப்பு கலவை வழங்குதல், விவசாயிகள் பார்வையிட்டு பயன்பெறும் வகையில், அசோலா, புல்நறுக்கும் கருவி, புல்கரணைகள், தூய்மையான பால் உற்பத்தி, அறிவியல் முறையில் கால் நடை வளர்ப்பு தொடர்பான விவரங்கள் கொண்ட கண் காட்சி நடைபெறும். விவசா யிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அனைவரும் இக்கண்காட்சியை பார்வை யிட்டு பயன்பெறலாம்.

    முகாமில், கால்நடை களுக்கு இன்சூரன்ஸ் செய் வது, கால்நடை வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக் கான பதில் அளித்தல், கால்நடை மருத்துவர் செயலி பயன்படுத்தும் முறை, நாய் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெறும். முடிவில், சிறந்த கன்று பராமரிப்புக்கு பரிசு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    • தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்றது.
    • ஊர் முக்கிய பிரமுகர்கள் மாயகிருஷ்ணன், ஹேமாமாலனி, முருகன் மற்றும் செந்தில் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    சூர்யோதை தொண்டு நிறுவனம் சார்பில் அபிஷேகபாக்கம் கிராமத்தில் மருத்துவ முகாம்  நடைபெற்றது. இதில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் இருந்து மருத்துவக்குழு வருகை வந்து மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளையும் மருந்துகளையும் வழங்கினார்கள்.

    இதில், ஊர் முக்கிய பிரமுகர்கள் மாயகிருஷ்ணன், ஹேமாமாலனி, முருகன் மற்றும் செந்தில் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில், சூர்யோதை தொண்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஜெயராஜன், நிர்வாகிகள் புஷ்பராஜ் மற்றும் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமி 100-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

    • அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி நடந்தது
    • 300-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்

    அரக்கோணம்:

    அரக்கோணத்தில் அம்பேத்கர் 132 வது பிறந்தநாள் விழா, அன்னை மருத்துவமனை மற்றும் அன்னை பல் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு அம்பேத்கர் மன்ற செயல் தலைவர் அருள்மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் மோகன், மன்ற தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

    டாக்டர் ஸ்வப்னா மேற்பார்வையில் பல், மற்றும் கண் பரிசோதனை ரத்த கொதிப்பு பரிசோதனை, சர்க்கரை அளவு, ரத்த வகை கண்டறிதல், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதயம் மற்றும் எலும்பு நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கினர்.

    ஓய்வு பெற்ற போலீஸ் டோமினிக் சேவியோ, டவுன் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, கிருஷ்ணா கல்வி குழும செயலாளர் ரவிக்குமார், அரசு மருத்துவர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இலவச மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் பயனடைந்தனர்.

    இந்நிகழ்ச்சியின் முடிவில் ரவி நன்றி கூறினார்.

    • நாமக்கல் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனம் மற்றும் முள்ளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது.
    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெர பஞ்சோலை ஊராட்சி பாலப்பட்டி புதூரில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட மக்கள் கல்வி நிறுவனம் மற்றும் முள்ளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது .

    முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தங்கபழனி பாலுசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி கவுன்சிலர் சித்ரா சரவணன் முன்னிலை வைத்தார். மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் சரவணன் வரவேற்றார். மருத்துவ முகாமில் முள்ளுக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் , சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து உரிய மருந்து, மாத்தி ரைகளை வழங்கினார்கள்.

    முகாமில் பொது மக்க ளுக்கு இலவச முழுக்கவசம் வழங்கப்பட்டு பொது மக்களிடையே சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டது. முகாமில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சசிகலா, பரமேஸ்வரி, சுப்பிரமணி உட்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் கல்வி நிறுவன பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • நெஞ்சக நோய் டாக்டர் பாலா கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
    • முகாமில் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.

    நெல்லை:

    பாளை-சீவலப்பேரி ரோட்டில் அமைந்துள்ள ஷிம்ஸ் டிரஸ்ட் மருத்துவமனையில் ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் நெஞ்சக நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது. முகாமில் ஷிபா மருத்துவமனையின் நெஞ்சக நோய் டாக்டர் பாலா கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

    முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் நெஞ்சக நோய் கண்டறியும் பி.எப்.டி. பரிசோதனை கள் இலவசமாக செய்யப்பட்டது. முன்னதாக நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஹாஜி முகம்மது ஷாபி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் கே.டி.சி. நகர், சாந்திநகர், திம்மராஜபுரம், கீழப்பாட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • முகாமில் 345 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
    • கோகிலா, கார்த்தி, கோழிகடை விக்கி ,முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு 42-வது வட்ட தி.மு.க. மற்றும் ரேவதி மெடிக்கல் சென்டர்,தி ஐ பவுண்டேசன் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மருத்துவ முகாமை திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க. செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி. நாகராசன்,மாநில சுற்றுசூழல் அணி துணை செயலாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் பகுதி செயலாளர் மியாமி அய்யப்பன் ,வட்ட செயலாளர் எஸ். ஆர். ரமேஸ், 43- வது வட்ட கழக செயலாளர் கணேஸ், பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாரப்பாளையம் சிவா,வர்த்தக அணி பார்த்திபன், கொங்கு முருகேசன், சிங்கர் ஆறுமுகம், செல்வகுட்டி ,ஓதியப்பன், மும்மூர்த்தி , முனியாண்டி ,ராம்ராஜ், அருண் , கே .நாகராஜ் ,போஸ் , சரவணன்,ரைஸ் சிவா,கண்ணன்,சுப்புராஜ் ,காளியப்பன், ஆர். ஜீ. ,லெனின், தமிழ்மாறன், வெற்றி, சந்தோஷ் ,தேவராஜ் ,கோபி ,கணேஷ், வி.எம். விக்கி, மணிகண்டன் ,மகளிர் அணி நிர்வாகிகள் கனகலட்சுமி ,லட்சுமி , கலைச்செல்வி ,வசுமதி ,கோகிலா, கார்த்தி, கோழிகடை விக்கி ,முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 345 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • 200-க்கும் மேற்பட்டோர் மேல்சிகிச்சைக்கு கோவைக்கு அனுப்பி வைப்பு
    • ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் முன்னிட்டு சோளிங்கர் நகர திமுக, சோளிங்கர் லயன்ஸ் சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவ மையம், ஆயுக்தா மருத்துவமனை மோகன் அறக்கட்டளை இணைந்து கண் சிகிச்சை முகாம், உடல் உறுப்பு அறுவை சிகிச்சை முகாம், உடல் உறுப்பு தானம் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு சோளிங்கர் நகர திமுக செயலாளரும், சோளிங்கர் லயன்ஸ் சங்க தலைவருமான கோபி தலைமை தாங்கினார். லயன்ஸ் சங்க செயலாளர் திருமால் முன்னிலை வகித்தார். சங்க பொருளாளர் சலீம் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமிற்கு மாநில சுற்றுச்சூழல் துணைச் செயலாளர் வினோத் காந்தி கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாம் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார்.

    உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். சோளிங்கர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டு கண் அறுவை சிகிச்சைக்காக 200க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு அறுவை சிகிச்சைக்காக கோவை சங்கரா மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம் தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், நகராட்சி துணை தலைவர் பழனி, பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகராட்சி உறுப்பினர்கள் அன்பரசு, லோகேஸ்வரி சரத்பாபு, மாவட்ட பிரதிநிதி சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளியில் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு போட்டிகள் வைத்து பரிசு வழங்கி வருவதுடன் இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
    • மேலும் அரசு ஆஸ்பத்திரியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு பள்ளியில் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் திறன் மேம்பாட்டுக்கான பல்வேறு போட்டிகள் வைத்து பரிசு வழங்கி வருவதுடன் இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் குமாரபாளையம் போலீசார் சார்பில் மன மகிழ் மன்றம் தொடங்கப்பட்டு, தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் ஓவியப்போட்டி வைக்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் மலர்விழி பரிசுகள் வழங்கினர்.

    பெண்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அரசு ஆஸ்பத்திரியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. விடியல் பிரகாஷ், தீனா, இல்லம் தேடி கல்வி பயிற்றுனர்கள் சித்ரா, ஜமுனா உள்பட பலர் பங்கேற்றனர்.

    • பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
    • முகாமில் புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    விளாத்திகுளம்:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் முகாமில் வழங்கப்பட்டது.

    முகாமை மாவட்ட திட்ட அலுவலர் பெர்சியால்ஞானமணி தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறன் நல அலுவலர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    முகாமில் வட்டார கல்வி அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசெல்வி, கிருஷ்ணவேணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சித்ரா, ஆசிரியர் பயிற்றுநர்கள் ராமர், பூவையா, ஜெயசுதா, மிதிலை குமாரி, சிறப்பு ஆசிரியர் பயிற்சிநர்கள் ஆரோக்கியராஜ், ஞானராஜ், அருள்மேரிசுதா, இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவர்கள் சரவணவித்யா, பாலசுப்பிரமணியன், நிரஞ்சனாதேவி, பாண்டி பிரகாஷ், சிவப்பிரகாஷ் ஆகியோர் சிகிச்சை வழங்கினர்.

    • புதுவை கருவடி க்குப்பத்தில் நரிக்குறவர் மற்றும் ஒட்டர் பழங்குடியின மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • முகாமிற்கான ஏற்பாடு களை தன்னார்வ தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் அனிதா மற்றும் நந்தினி வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கருவடி க்குப்பத்தில் நரிக்குறவர் மற்றும் ஒட்டர் பழங்குடியின மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமை கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பிம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் குழுவினர் பழங்குடியின மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகளை செய்து மருந்துகள் வழங்கினர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை தன்னார்வ தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் அனிதா மற்றும் நந்தினி வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.முகாமில் 200-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் பயனடைந்தனர்.

    ×