search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shifa hospital"

    • விழாவிற்கு ஹாஜி முகம்மது ஷாபி தலைமை தாங்கினார்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நெல்லை:

    உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நெல்லை ஷிபா மருத்துவ மனை மற்றும் இந்திய மருத்துவ கழகம் நெல்லை கிளை சார்பில் ஷிபா மருத்துவமனையில் நடைபெற்ற விழாவிற்கு மருத்துவமனை யின் பங்குதாரர் ஹாஜி முகம்மது ஷாபி தலைமை தாங்கினார். முன்னாள் இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் பிரேம சந்திரன் கலந்து கொண்டு செவிலியர் தின சிறப்பு செய்தி வழங்கினார்.

    இந்திய மருத்துவ கழக தலைவர் டாக்டர் சுப்பிர மணியன், செயலாளர் டாக்டர் முகம்மது இப்ராஹிம், பொருளாளர் டாக்டர் பிரபுராஜ், மருத்துவமனை தலைமை செவிலியர் ஜெமிமா, ஷிபா பாரா மெடிக்கல் கல்லூரி துணை முதல்வர் ஸ்ரீதார ண்யா மற்றும் மருத்துவ மனை எலும்பு மூட்டு மருத்துவர் அகமது யூசுப் ஆகியோர் செவிலியர் தின வாழ்த்து செய்தி வழங்கினர்.

    ஷிபா மருத்துவ மனையின் செவிலியர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை ஷிபா மருத்துவ மனையின் மார்க்கெட்டிங் பிரிவினர் செய்திருந்தனர்.

    • நெஞ்சக நோய் டாக்டர் பாலா கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
    • முகாமில் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.

    நெல்லை:

    பாளை-சீவலப்பேரி ரோட்டில் அமைந்துள்ள ஷிம்ஸ் டிரஸ்ட் மருத்துவமனையில் ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் நெஞ்சக நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது. முகாமில் ஷிபா மருத்துவமனையின் நெஞ்சக நோய் டாக்டர் பாலா கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

    முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் நெஞ்சக நோய் கண்டறியும் பி.எப்.டி. பரிசோதனை கள் இலவசமாக செய்யப்பட்டது. முன்னதாக நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஹாஜி முகம்மது ஷாபி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் கே.டி.சி. நகர், சாந்திநகர், திம்மராஜபுரம், கீழப்பாட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • பேரணியானது கொக்கிரகுளம் அறிவியல் மையத்தில் இருந்து தொடங்கியது.
    • தலைகாய முதலுதவி சிகிச்சை முறைகளை பற்றி மருத்துவர் ஷியாவுல்லா விளக்கினார்.

    நெல்லை:

    நெல்லை ஷிபா மருத்துவமனை சார்பில் உலக தலைகாய விழிப் புணர்வு வாகன பேரணி இன்று நடைபெற்றது. கொக்கிரகுளம் அறிவியல் மையத்தில் இருந்து தொடங்கிய இப்பேரணிக்கு ஷிபா மருத்துவமனைகள் மருத்துவ இயக்குநர் டாக்டர் முஹம்மது அராபத் தலைமை தாங்கினார். டாக்டர்கள் சுப்பிரமணியன், முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை பாளை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியானது வண்ணார்பேட்டை, சமாதானபுரம் வழி யாக மேட்டுத்திடல் முஸ்லீம் அனாதை நிலைய வளாகத்தில் நிறை வடைந்தது. நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், சதக்அப்துல்லா கல்லூரி மாணவ-மாணவிகள், மருந்து விற்பனை பிரதிநிதி சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியின் முடிவில் தலைகாய முதலுதவி சிகிச்சை முறைகளை பற்றி ஷிபா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் ஷியாவுல்லா விளக்கினார்.

    உலக தலைகாய தின சிறப்பு செய்தியினை மருத்துவமனையின் மூளை நரம்பியல் மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேஷ், நரம்பியல் நிபுணர் டாக்டர் அழகேசன் ஆகியோர் உரையாற்றினர். சிறப்பு விருந்தினராக எம்.கே.எம். செய்யது அஹமது கபீர் கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மார்கெட்டிங் பிரிவினர் செய்திருந்தனர்.

    • ஷிபா காலேஜ் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் அண்டு ரிசர்ச் சென்டர் பட்டமளிப்பு விழா நடை பெற்றது.
    • விழாவில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை ஷிபா மருத்துவமனையின் 52-வது ஆண்டு மலர் வெளியீட்டு விழா மற்றும் ஷிபா காலேஜ் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் அண்டு ரிசர்ச் சென்டர் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடை பெற்றது. மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம். முகம்மது ஷாபி தலைமை தாங்கினார்.

    இதில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி, 52-வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார்.

    முதல் பிரதியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பெற்றுக்கொண்டார். விழாவில் தொழில் அதிபர் எம்.கே.எம். முகம்மது நாகிப், எம்.கே.எம். முகம்மது நாசர், அகமது கபீர், நெல்லை லாட்ஜ் நிக்மத்துல்லா, தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மருத்து வர்கள் முருகன், அழகேசன், கிரிஷ் தீபக், அகமது யூசுப், முகம்மது இப்ராஹீம், முகம்மது கனி, ஜியாவுல்லாஹ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை ஷிபா மருத்துவமனை மற்றும் ஷிபா கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

    • மாரத்தான் போட்டியானது ஆண்கள், பெண்கள் என 2 பிரிவாக நடைபெற்றது
    • வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 7,500-ம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23-ந்தேதி உலக இருதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள ஷிபா மருத்துவமனை சார்பில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியானது ஆண்கள், பெண்கள் என 2 பிரிவாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஷிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் முகமது ஷாபி கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்று பேசினார்.

    பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்த ஓட்டத்தை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் மற்றும் மாநகராட்சி துணை மேயர் ராஜூ ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    மாரத்தான் ஓட்டம் பாளை பஸ் நிலையம், மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகம், ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கை வந்தடைந்தது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ. 7,500-ம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. முடிவில் ஷிபா மருத்துவமனை மருத்துவ இயக்குனர் முகமது அரபாத் நன்றி கூறினார்.

    • முகாமில் எக்கோ, ஈ.சி.ஜி, ரத்தத்தின் சர்க்கரை அளவு, யூரிக் அமிலம், எலும்பு தாது அடர்த்தி, நுரையீரல் பரிசோதனை போன்றவைகள் இலவசமாக செய்யப்பட்டது.
    • 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

    நெல்லை:

    நெல்லை ஷிபா மருத்துவமனையின் நிறுவனர் எம்.கே.முகம்மது ஹீசைன் சாகிப் நினைவாக மருத்துவமனை வளாகத்தில், மாபெரும் இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது.

    முகாமில் ரூ.5ஆயிரம் மதிப்புள்ள எக்கோ, ஈ.சி.ஜி, ரத்தத்தின் சர்க்கரை அளவு, யூரிக் அமிலம், எலும்பு தாது அடர்த்தி, நுரையீரல் பரிசோதனை போன்றவைகள் இலவசமாக செய்யப்பட்டது.

    மேலும் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

    இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் எம்.கே.எம். முகம்மது ஷாபி கூறியதாவது:-

    ஆண்டுதோறும் ஜூன்10-ந்தேதி ஷிபா மருத்துவமனையின் நிறுவனர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    மருத்துவமனையின் நிறுவனர் அல்ஹாஜ் எம்.கே.முகம்மது ஹீசைன் சாகிப் நினைவாக நடைபெற்ற மருத்துவ முகாமை தொடர்ந்து இன்று மாலை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் மார்க்கெட்டிங் பிரிவினர் செய்திருந்தனர்.

    ×