search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmer sacrifice"

    • ராசாம்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகர் மீது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது
    • மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வரும் வழியில் இறந்ததாக கூறினர்

    கொடுமுடி,

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (58). விவசாயி. இவர் நேற்று தனது தோட்டத்தில் உள்ள மாடுகளில் இருந்து பாலை கறந்து சாலைப்புதூரில் உள்ள பால் சொசைட்டிக்கு 2 சக்கர வாகனத்தில் சென்றார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் சந்திரசேகர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவரை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் வரும் வழியில் இறந்ததாக கூறினர்.

    இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செல்வராஜ் (வயது 50). விவசாயியான இவர், கடந்த 26-ந் தேதி நாமக்கல் அரசு பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் ஏத்தாபாளையம் தாதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). விவசாயியான இவர், கடந்த 26-ந் தேதி நாமக்கல் அரசு பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். இதில் காயமடைந்த அவரை மீட்டு, நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாமக்கல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பால வாடியை சேர்ந்த முத்து (40) என்பவர் மோட்டார் சைக்கிளில் கொளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே மாமரத்து காடு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). விவசாயி. இவரது தோட்டத்தில் இருந்த மோட்டார் பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து அதன் பழுதை நீக்கி, சரி செய்வ தற்காக கோவிந்த பாடியை சேர்ந்த மெக்கானிக் ராமசாமி (40) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு மாமரத்துகாடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    இதே போல பால வாடியை சேர்ந்த முத்து (40) என்பவர் மோட்டார் சைக்கிளில் கொளத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கொளத்தூர் அருகே கோவிந்தபாடியை அடுத்த விநாயகபுரம் என்ற இடத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்தவிபத்தில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இதில் படுகாயமடைந்த பன்னீர்செல்வம், ராமசாமி ஆகியோர் சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாப மாக உயிரிழந்தார். தொடர்ந்து ராமசாமி அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முத்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் சிகிச்ைச பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நின்றபடியே உயிர் பிரிந்த பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே உள்ள கேசவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 55).விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வந்தார். இதற்காக வீட்டு அருகிலேயே இரும்பு கம்பி மற்றும் தகரங்களால் ஆன கொட்டகை அமைத்துள்ளார்.

    நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த காற்றுடன்மழை பெய்தது. அப்போது மின்கம்பி அறுந்து அவரது மாட்டு கொட்டகையில் விழுந்தது. இதில் மாட்டு கொட்டகை இரும்பு தகடு மற்றும் கம்பி தூண்களில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது.

    முருகேசன் மாலை 6.30 மணிக்கு மாடுகளை கட்டுவதற்காக கொட்டகைக்கு சென்றார். அங்குள்ள இரும்பு கம்பியை தொட்ட போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் உறைந்து போன முருகேசன் அப்படியே சுயநினைவு இழந்து கம்பியை பிடித்தவாறு நின்றார். முருகேசன் கம்பியை பிடித்துக் கொண்டு சாதாரணமாக நிற்கிறார் என அவரது மனைவி நினைத்துக் கொண்டார்.

    நீண்ட நேரம் அவர் அப்படியே நின்றதால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி முருகேசன் அருகே சென்று அவரை தொட்டார். அப்போதுதான் கணவர் மீது மின்சாரம் பாய்ந்தது அவருக்கு தெரியவந்தது.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முருகேசனை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அப்போதுதான் கம்பியை பிடித்தபடியே முருகேசனின் உயிர் பிரிந்தது தெரியவந்தது.

    இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
    • அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து ரமேஷை மீட்டு சிதம்பரம் காமராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45) விவசாயி. இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து அதே பகுதியிலுள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது வயல்வெளிகளில் தரையில் மின்சாரகம்பி கிடந்துள்ளது. எதிர்பாராத விதமாக ரமேஷ் மின்கம்பியை மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து ரமேஷை மீட்டு சிதம்பரம் காமராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வானூர் அருகே மின் வேலியில் சிக்கி விவசாயி பலியானார்.
    • வெங்கடேசனின் வீட்டைச் சேர்ந்தவர்கள் இது குறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உப்பு வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 50) விவசாயி. அதே பகுதியில் இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தில்  வெங்கடேசன் வேர்க்கடலை சாகுபடி செய்துள்ளார். அந்த பகுதிகளில் காட்டு பன்றிகளின் தொல்லை அதிக அளவில் இருந்து வந்துள்ளது. காட்டு பன்றிகளின் தொல்லையால் விளை நிலங்களில் பயிரிட்டுள்ள வேர்க்கடலை உள்ளி ட்டவைகளை நாசம் செய்து வந்தது. இதனால் வெங்கடேசன் தனது விவசாய நிலத்தை சுற்றி மின் வேலி அமைத்தார். நேற்றுவெங்கடேசன் தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராத விதமாக கவனிக்காமல் தான் வைத்த மின்வேலியில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    விவசாய நிலத்திற்கு சென்ற வெங்கடேசன் வீடு திரும்பவில்லை என்று வீட்டிலிருந்து உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்த போது வெங்கடேசன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த வெங்கடேசனின் வீட்டைச் சேர்ந்தவர்கள் இது குறித்து கிளியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கிளியனூர் போலீஸ் இ ன்ஸ்பெக்டர் பாலமுரளி சப்இன்ஸ்பெக்டர் வேலுமணி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்ப த்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பஸ் ஏறும் போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள மாளிகைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சௌந்தர பாண்டியன் (வயது 53). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    இன்று காலை சென்னைக்கு செல்வதற்காக பஸ்ஸில் ஏறும் போது டிரைவர் பஸ்சை எடுத்துள்ளார். இதில் கீழே தவறி விழுந்து அதே பஸ் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இது சம்பந்தமாக அவரது மனைவி காமாட்சி செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×