search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "England vs India"

    காயம் காரணமாக கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, மும்பையில் வலைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். #ViratKohli
    இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடும்போது காயம் அடைந்தார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டத்தின்போது கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் கவுன்ட்டி போட்டியில் சர்ரே அணிக்காக விளையாட இருந்ததில் இருந்து விலகினார்.

    தற்போது காயத்தில் இருந்து குணமாகி வருகிறார். ஜூன் 15-ந்தேதிக்குள் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்று பிசிசிஐ கூறியது.



    இந்நிலையில் நேற்ற மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பெசிலிடியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி மேற்கொண்டார். தற்போது இலேசான பயிற்சியை மேற்கொண்டுள்ளார். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் கழித்து மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வார்.

    இரண்டு வார பயிற்சிக்குப்பின் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் தேசிய அகாடமியில் உடற்தகுதியை நிரூபிப்பார். அதன்பின் இங்கிலாந்து தொடருக்கான பயிற்சியை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
    ஐபிஎல் தொடரில் கற்ற பாடத்தை இங்கிலாந்து தொடரில் செய்ய விரும்புகிறேன் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி இங்கிலாந்து சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த இரண்டு தொடருக்கான இந்திய அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார்.

    ஐபிஎல் தொடரில் கற்றுக்கொண்ட பாடத்தை இங்கிலாந்து தொடரில் செய்ய விரும்புகிறேன் என்று வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.

    இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரின் அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருந்தது. நேர்மையாக சொல்ல வேண்டுமெனில், ஆடும் லெவனில் இடம் பிடிப்பது தேர்வு குரூப்பைச் சார்ந்தது. ஆடும் லெவன் அணியில் இடம்பிடிக்கும்போது நான்கு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் அணி காம்பினேசன் மூலம் ஏராளமான விஷயங்கள் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். ஒட்டுமொத்தமாக ஏமாற்றம் ஏதும் இல்லை. ஐபிஎல் போன்ற நீண்ட தொடர்களில் விளையாடும்போது, நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதை தவிர கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன.



    நான் இதற்கு முன் இங்கிலாந்து சென்று விளையாடியது கிடையாது. இதுபோன்ற கண்டிசனில் சவால்கள் சிறந்த பந்து வீச்சை வெளிக்கொண்டு வரும். நான் பெரிய அளவில் மாற்றத்தை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. மனதளவில் தயாராக வேண்டிய அம்சங்கள்தான் முக்கியமானது. இதை என்னால் செய்ய முடியும் என்றால், சிறப்பாக பந்து வீச முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

    ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் கலந்து கொண்ட நான்கு விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தினார்.
    கவுன்ட்டி கிரிக்கெட் இல்லாமலும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சிறந்த வீரர்தான் என்று சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். #ViratKohli
    இந்திய அணி கேப்டனாக விராட் கோலி கடந்த முறை இந்திய அணி இங்கிலாந்து சென்று விளையாடிய போது மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின் ஆஸ்திரேலியா சென்ற தொடரில் இருந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார்.

    இந்தியா அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்கிறது. அப்போது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக சர்ரே அணியில் இணைந்து கவுன்ட்டி போட்டியில் விளையாட முடிவு செய்தார்.



    துரதிருஷ்டவசமாக கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் கவுன்ட்டி போட்டியில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் கவுன்ட்டி போட்டியில் விளையாடாவிட்டாலும், விராட் கோலி சிறந்த வீரர்தான் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘விராட் கோலிக்கு நன்றாக இருக்க வேண்டும். அவரது காயம் பயப்படக்கூடிய அளவிற்கு பெரிதானதல்ல. இங்கிலாந்து தொடருக்கு இன்னும் அதிக நாட்கள் உள்ளன. கவுன்ட்டி போட்டியில் விளையாடாவிட்டாலும், இந்த நேரம் அவருக்கு நல்லதாக அமையும்.

    ஏனென்றால், அவரது காயம் குணமடைய ஓய்வு தேவை. கவுன்ட்டி போட்டியில் விளையாடுவதை விட பெரிய அளவில் யோசிப்பது தயார் ஆவதற்கு சிறந்ததாகும். கவுன்ட்டி போட்டியில் விளையாடாவிட்டாலும் இன்னும் அவர் சிறந்த வீரர்தான்.’’ என்றார்.
    கவுன்ட்டி கிரிக்கெட்டில் விராட் கோலி விளையாடமாட்டார் என்றும், வரும் 15-ந்தேதி பிட்னஸ் டெஸ்ட் நடத்தப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. #viratKohli
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் இன்று காலை காயம் அடைந்தார் என்ற செய்தி வெளியானது. முதுகுத் தண்டில் லேசான காயம் ஏற்பட்டது என்றும், கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின. இதனால் கவுன்ட்டி போட்டியில் சர்ரே அணிக்காக விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்நிலையில் விராட் கோலிக்கு முதுகுத் தண்டில் காயம் ஏற்படவில்லை. சன்ரைசர்ஸ் ஐதராபாத்திற்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தின்போது கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது என்று விராட் கோலியின் காயம் குறித்த சந்தேகத்தை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.



    மேலும், காயம் காரணமாக சர்ரே கவுன்ட்டி போட்டியில் விளையாடமாட்டார் என்றும் கூறியுள்ளது. மேலும், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கு முன் குணமடைந்து விடுவார் என்றும், தற்போதில் இருந்து விராட் கோலி பிசிசிஐ மெடிக்கல் குழுவின் கண்காணிப்பில் குணமடைவதற்கான சிகிச்சையை மேற்கொள்வார். அடுத்த மாதம் 15-ந்தேதியில் இருந்து பயிற்சியை தொடங்கி, பிட்னஸ் டெஸ்டிற்கு உட்படுத்தப்படுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளார்.

    பிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி பெற்றால்தான் இங்கிலாந்து தொடரில் பங்கேற்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விராட் கோலியின் இங்கிலாந்து பயணம் ஜூலை 15-ல் தெரியவரும்.
    இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு நம்பமுடியாததாக இருக்கும் என வார்னே தெரிவித்துள்ளார். #ENGvIND #ViratKohli
    டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 50-க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலிதான். ஆஸ்திரேலியா, தென்ஆப்பரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தனது திறமையை நிரூபித்து விட்டார்.

    ஆனால் இங்கிலாந்து மண்ணில் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது. கடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா ஐந்து டெஸ்டில் விளையாடியது. அப்போது ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஸ்விங் பந்தில் திணறினார். இதனால் இங்கிலாந்து மண்ணில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் உலகின் தலைசிறந்த வீரர் என்று கருத முடியும் என முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்திருந்தார்.



    ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்தியா இங்கிலாந்து செல்கிறது. அப்போது ஐந்து டெஸ்டில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் விராட் கோலி கவுன்டி போட்டியில் விளையாடுகிறார்.

    இந்நிலையில் இங்கிலாந்து விராட் கோலிக்கு நம்பமுடியாத தொடராக இருக்கும் என ஷேர் வார்னே தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷேன் வார்னே கூறுகையில் ‘‘இந்தியா முதலில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. விராட் கோலியால் சாதிக்க முடியாத ஒரே இடம் அதுதான். இந்த வருடம் இங்கிலாந்து மண்ணில் அவர் சாதிப்பார். இங்கிலாந்து விராட் கோலிக்கு நம்ப முடியாத தொடராக இருக்கும் என நினைக்கிறேன். இங்கிலாந்தில் அசத்தும் அதே வேகத்துடன் அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலியா தொடரிலும் அசத்துவார்’’ என்றார்.
    இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஒருமாதம் தீவிர பயிற்சியில் ஈடுபடப்போவதாக சாஹல் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்தது.

    அதன்பின் இந்திய அணியில் குல்தீப் யாதவ், சாஹல் என்ற இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இடம்பிடித்தார்கள். இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தியதால் அஸ்வின், ஜடேஜா ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

    சாஹல் 23 ஒருநாள் போட்டியில் 43 விக்கெட்டுக்களும், 21 டி20 போட்டியில் 35 விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார். இந்திய அணி ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அயர்லாந்து, இங்கிலாந்து சென்று விளையாடுகிறது.

    தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்த மாதம் 27-ந்தேதியுடன் முடிவடைகிறது. ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் சுமார் ஒருமாதம் இடைவெளி உள்ளது. சாஹல் இங்கிலாந்து சென்று விளையாடியது கிடையாது.

    இதனால் இந்த ஒருமாதமும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில், சாஹல் அவருடைய பயிற்சியாளராக நரேந்த்ர ஹர்மானி உடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடருக்கு முன் நாங்கள் அயர்லாந்து சென்று விளையாட இருக்கிறோம். இங்கிலாந்து சிதோஷ்ண நிலைதான் அயர்லாந்திலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடர் முடிந்த உடன் ஒருமாதம் இடைவெளி உள்ளது. அப்போது பயிற்சிக்காக தேசிய அகாடமி செல்ல இருக்கிறேன். அங்கே என்னுடைய பயிற்சியாளர் ஹிர்மானியுடன் ஆலோசனை நடத்துவேன்.

    ஹர்மானி ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடியுள்ளார். ஆகவே, இங்கிலாந்து குறித்த சூழ்நிலை குறித்து கேட்டு அறிந்து கொள்வேன். இந்தியா ‘ஏ’ அணி முன்னதாக அங்கு செல்கிறது. என்னுடைய ஏராளமான நண்பர்கள் அந்த அணியில் உள்ளனர். அவர்களிடம் இருந்து கேட்டறிந்து புரிந்து கொள்ள முயற்சி செய்வேன்’’ என்றார்.
    ×