என் மலர்

  செய்திகள்

  ஐபிஎல் தொடரில் கற்ற பாடத்தை இங்கிலாந்து தொடரில் செய்ய விரும்புகிறேன் - வாஷிங்டன் சுந்தர்
  X

  ஐபிஎல் தொடரில் கற்ற பாடத்தை இங்கிலாந்து தொடரில் செய்ய விரும்புகிறேன் - வாஷிங்டன் சுந்தர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபிஎல் தொடரில் கற்ற பாடத்தை இங்கிலாந்து தொடரில் செய்ய விரும்புகிறேன் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
  இந்திய அணி இங்கிலாந்து சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த இரண்டு தொடருக்கான இந்திய அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளார்.

  ஐபிஎல் தொடரில் கற்றுக்கொண்ட பாடத்தை இங்கிலாந்து தொடரில் செய்ய விரும்புகிறேன் என்று வாஷிங்டன் சுந்தர் கூறியுள்ளார்.

  இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடரின் அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருந்தது. நேர்மையாக சொல்ல வேண்டுமெனில், ஆடும் லெவனில் இடம் பிடிப்பது தேர்வு குரூப்பைச் சார்ந்தது. ஆடும் லெவன் அணியில் இடம்பிடிக்கும்போது நான்கு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் அணி காம்பினேசன் மூலம் ஏராளமான விஷயங்கள் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும். ஒட்டுமொத்தமாக ஏமாற்றம் ஏதும் இல்லை. ஐபிஎல் போன்ற நீண்ட தொடர்களில் விளையாடும்போது, நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதை தவிர கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன.  நான் இதற்கு முன் இங்கிலாந்து சென்று விளையாடியது கிடையாது. இதுபோன்ற கண்டிசனில் சவால்கள் சிறந்த பந்து வீச்சை வெளிக்கொண்டு வரும். நான் பெரிய அளவில் மாற்றத்தை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. மனதளவில் தயாராக வேண்டிய அம்சங்கள்தான் முக்கியமானது. இதை என்னால் செய்ய முடியும் என்றால், சிறப்பாக பந்து வீச முடியும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

  ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் கலந்து கொண்ட நான்கு விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தினார்.
  Next Story
  ×