search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Earphone"

    • ஆப்பிள் நிறுவனம் புதிய வாட்ச் மற்றும் ஐபோன் மாடல்களுடன் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது.
    • தோற்றத்தில் ஒரே மாதிரி காட்சியளிக்கும் புது ஏர்பாட்ஸ் ப்ரோ ஏராளமான அப்டேட்களை பெற்று இருக்கிறது.

    ஐபோன் 14, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 வரிசையில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலையும் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆப்பிள் வயர்லெஸ் இயர்பட்ஸ் அதன் அளவுக்கு அதிக தரமுள்ள ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. புது இயர்பட்ஸ் தோற்றத்தில் முந்தைய மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இதன் உள்புற அம்சங்களில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலில் உள்ள H2 பிராசஸர் இருமடங்கு மேம்பட்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டிரான்ஸ்பேரன்சி மோட் மற்றும் ஸ்பேஷியல் ஆடியோ வசதிகளை வழங்குகிறது. இத்துடன் டச் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு பாடல்களை மாற்றுவது, வால்யும் அட்ஜஸ்ட் செய்வது உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். புது இயர்பட்ஸ் உடன் வழங்கப்படும் சார்ஜிங் கேஸ் சிறிய ஸ்பீக்கர் கொண்டிருக்கிறது.


    ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ அம்சங்கள்:

    ஹை டைனமிக் ரேன்ஜ் ஆப்ளிபையர் கொண்ட ஆப்பிள் டிரைவர்

    ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்

    ப்ளூடூத் 5.3 வயர்லெஸ் கனெக்டிவிட்டி

    தனித்துவம் மிக்க ஸ்பேஷியல் ஆடியோ மற்றும் டைனமிக் ஹெட் டிராக்கிங்

    இன் கேஸ் ஸ்பீக்கர், கான்வெர்சேஷன் பூஸ்ட், பிரெசிஷன் ஃபைண்டிங்

    அடாப்டிவ் டிரான்ஸ்பேரன்சி, அடாப்டிவ் இகியூ

    ஆப்பிள் H2 பிராசஸர்

    சார்ஜிங் கேசில் ஆப்பிள் U1 சிப்

    அதிகபட்சம் 6 மணி நேரத்திற்கான பிளேபேக் டைம்

    மேக்சேப் சார்ஜிங் கேஸ் சேர்த்தால் அதிகபட்சம் 30 மணி நேரத்திற்கான பிளேடைம்

    ஐந்து நிமிட சார்ஜில் ஒரு மணி நேரம் பயன்படுத்தும் வசதி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலின் முன்பதிவு செப்டம்பர் 9 ஆம் தேதி துவங்குகிறது. விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது. இதன் விலை ரூ. 26 ஆயிரத்து 900 ஆகும்.

    • நாய்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்பேண்ட் ரக இயர்போன் மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த இயர்போன் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது.

    நாய்ஸ் எக்ஸ்டிரீம் இயர்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது ப்ளூடூத் மூலம் இயங்கும் நெக்பேண்ட் ரக இயர்போன்கள் ஆகும். நாய்ஸ்பிட் கோர் 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலுடன் இந்த இயர்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் நீண்ட நேர பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டுள்ளது.

    புதிய நாய்ஸ் எக்ஸ்டிரீம் நெக்பேண்ட் இயர்போன்கள் ரியல்மி, ஒன்பிளஸ், போட் மற்றும் இதர பிராண்டு இயர்போன்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயர்போன் IPX5 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இதில் உள்ள இயர்பட்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ள ஏதுவாக காந்தம் வழங்கப்பட்டு உள்ளது.


    இதில் உள்ள ஹைப்பர்சின்க் தொழில்நுட்பம் சமீபத்தில் கனெக்ட் செய்யப்பட்ட சாதனத்துடன் தானாக கனெக்ட் ஆகும் வசதி கொண்டது, நாய்ஸ் எக்ஸ்டிரீம் நெக்பேண்ட் இயர்போன்களில் 10 மில்லிமீட்டர் டிரைவர் உள்ளது. இவை என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி கொண்டுள்ளது. அழைப்புகளின் போது ஏற்படும் வெளிப்புற சத்தத்தை இந்த அம்சம் பெருமளவு குறைத்து விடும்.

    முழு சார்ஜ் செய்தால் நாய்ஸ் எக்ஸ்டிரீம் இயர்போன் 100+ அதிக மணி நேர பிளேபேக் வழங்கும். இந்த இயர்போன் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதை கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 20 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

    நாய்ஸ் எக்ஸ்டிரீம் நெக்பேண்ட் இயர்போன் தண்டர் பிளாக், பிலேசிங் பர்பில் மற்றும் ரேஜிங் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நாய்ஸ் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் ப்ளிப்கார்டில் நடைபெறுகிறது.

    ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்ட புதிய இயர்போனான 'ஜெப்-ஜர்னி' யை அறிமுகம் செய்துள்ளது. #Zebronics #earphones



    ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஜெப் ஜர்னி என்ற பெயரில் இந்த இயர்போன் அறிமுகமாகி இருக்கிறது. 

    ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 13 மணி நேரங்களுக்கு தடையில்லா இசையை கேட்டு மகிழுலாம். வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் 'ஜெப்-ஜர்னி' மூலம் குரலால் நீங்கள் விரும்புவதை செய்யலாம்.

    'ஜெப்-ஜர்னி' இயர்போன்கள் பயனரின் கழுத்தில் சரியாக பொருந்தும் வகையில் வளைவாக உருவாக்கப்பட்டுள்ளது இது நடைப்பயிற்சி அல்லது ஒட்டப்பயிற்சி செய்யும் போது மிகவும் சௌகரியத்தைக் கொடுக்கிறது; இந்த இயர்போன்களின் பட்கள் மென்மையாகவும் காதுதுளையில் எளிதாக பொருந்தி் கொள்கிறது.



    வயர்லெஸ் வசதியை தவிர்த்து இந்த 'ஜெப்-ஜர்னி' இயர்போனில் மேலும் பல்வேறு வசதிகள் உள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். போன்களுக்கான வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி உள்ளது. இது உங்களின் ஒலி/கேட்கும் திறனை மேம்படுத்துகிறது. கேள்விகளை கேளுங்கள், பல வழிகளை தேடுங்கள் அல்லது பாடலைக் கேளுங்கள், இந்த குரல் உதவி தொழில்நுட்பம் இவை அனைத்தையும் மேற்கொள்ள உதவி செய்யும்.

    இரட்டை தொடர்பு வசதியைக் கொண்ட இந்த இயர்போன் தொலைபேசி அழைப்பு வசதியையும் கொண்டுள்ளது. இதில் இசை மற்றும் அழைப்புகளின் ஒலியைக் கட்டுப்படுத்த முடியும். மேலும் அழைப்புகள் வந்தால் அதிர்வலைகளை ஏற்படுத்தி உங்கள் கவனத்திற்கு கொண்டுவரும் வசதியும் உள்ளது. இதனுள் ரீசார்ஜபிள் பேட்டரி உள்ளது.

    புதிய இயர்போன்கள் பற்றி ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் திரு.பிரதீப் தோஷி கூறும் போது,
     
    "வயரில்லா தொழில்நுட்ப புரட்சியை தவிர்த்து, அதைவிட விட ஒரு சிறந்த, வயர் இல்லாத போன்கள் தொழிநுட்பத்தில் உச்ச கட்டமாக இது கருதப்படுகிறது. எங்களுடைய இந்த 'ஜெப்-ஜர்னி' என்னும் புதிய படைப்பில், வாய்ஸ் அசிஸ்டண்ட் எனும் தொழில்நுட்பத்தின் மூலம் நீங்கள் அதிகமாக செயல்படலாம். மேலும் இது அதிக நேரம் இயங்கக்கூடிய வல்லமை கொண்டது. இசை பிரியர்களுக்காகவே சிறப்பாக தயாரிக்கப்பட்டது.

    என தெரிவித்தார்.
    ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் 2 சாதனத்தின் வெளியீடு பற்றிய புதிய விவரங்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது. #Apple #AirPods2



    ஆப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், புதிய ஏர்பாட்ஸ் சாதனத்தில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஹேண்ட்ஸ்-ஃப்ரீ சிரி கண்ட்ரோல், புதிய வடிவமைப்பு உள்ளிட்டவை இடம்பெறலாம் என கூறப்படுகிறுது.

    அந்த வரிசையில், தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் 2 சாதனத்தை இந்த ஆண்டின் முதல் அரையாண்டிற்குள் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய ஏர்பாட்ஸ் 2 முற்றிலும் புதிய வடிவமைப்பு, உடல் ஆரோக்கியம் சார்ந்த வசதிகளை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.



    புதிய 2019 ஏர்பாட்ஸ் சாதனம் ஏர்பாட்ஸ் 2 என அழைக்கப்படலாம் என்றும் இதில் பயோமெட்ரிக் விவரங்களை பரிமாற்றம் செய்வவற்கான சென்சார்கள் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி டிஜிடைம்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களில் ஏர்பாட்ஸ் 2 சாதனத்தில் உடல்நலன் சார்ந்த அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

    எனினும், எதுபோன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. குறிப்பாக புதிய ஏர்பாட்ஸ் 2 புதுவித வடிவமைப்பு அம்சங்களுடன் 2019 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டிற்குல் அறிமுகமாகும் என டிஜிடைம்ஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏர்பாட்ஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் மூலம் ஆப்பிள் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியானது. அந்த வகையில், சர்வதேச அணியக்கூடிய சாதனங்கள் சந்தையில் ஆப்பிள் சாதனங்களுக்கு தொடர்பு வரவேற்பு கிடைக்கும்.



    புதிய ஏர்பாட்ஸ் சாதனத்தில் வழங்கும் அம்சங்கள் பற்றி ஆப்பிள் சார்பில் பதிவு செய்யப்பட்ட காப்புரிமைகளில் உடல்நலம் சார்ந்த அம்சங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதன்படி புதிய ஏர்பாட்ஸ் சாதனத்தில் பயனரின் இதய துடிப்பு, உடல் அசைவுகள், உடலில் எரிக்கப்பட்ட கலோரி விவரங்களை பரிமாற்றம் செய்ய வெல்னஸ் (wellness sensors) சென்சார்கள் வழங்கப்படுவதாக காப்புரிமையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    இதுதவிர, புதிய ஏர்பாட்ஸ் சாதனத்தில் மொபைல் கேமிங் செய்வதற்கான விசேஷ அம்சங்களும், வயர்லெஸ் ஸ்பீக்கர் போன்று ஏர்பாட்ஸ் கேஸ் இயங்கும் என கூறப்படுகிறது. ஏர்பாட்ஸ் 2 சாதனத்தில் இதய துடிப்பு டிராக் செய்யும் அம்சம் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது.
    ரியல்மி பிரான்டு இந்தியாவில் தனது புதிய யு1 ஸ்மார்ட்போன் மாடலுடன் ரியல்மி ப்ட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. #RealmeBuds



    ரியல்மி பிரான்டு தனது புதிய யு1 ஸ்மார்ட்போனுடன் அந்நிறுவனத்தின் முதல் இயர்போன்களை அறிமுகம் செய்தது. புதிய இயர்போன் மாடல்களில் 11 எம்.எம். ஆடியோ டிரைவர்கள், 160% வரை அதிக பேஸ் வெளிப்பாடு இருக்கும்.

    மேக்னெடிக் லாக்கிங் வசதி கொண்ட இந்தியாவின் முதல் வயர்டு இயர்போன் மாடலாக ரியல்மி பட்ஸ் இருக்கிறது. இதன் மூலம் புதிய இயர்போன்களை எளிமையாக பயன்படுத்த முடியும். கெவ்லர் ஃபைபர் கார்டு வழங்கப்பட்டு இருப்பதால் வையரிங் கிழியாமல் இருக்கச் செய்வோதோடு பார்க்கவும், பயன்படுத்தவும் பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.

    நீண்ட நேரம் பயன்படுத்தினாலும், காதுகளில் வலி ஏற்படாமல் இருக்க ஏதுவாக இயர் டிப்கள் 45 டிகிரி வரை வளைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று பட்டன் கொண்ட இன்-லைன் ரிமோட் வழங்கப்பட்டுள்ளது.



    ரியல்மி பட்ஸ் சிறப்பம்சங்கள்:

    - 11 எம்.எம். டிரைவர்கள்
    - இம்பென்டென்ஸ்: 32Ω
    - ஒலி அழுத்த அளவு: 106dB
    - ஹார்மோனிக் டிஸ்டார்ஷன்: <1% (1KHz, 1mW)
    - ஃபிரீக்வன்சி ரேட்: 20-20,000Hz
    - ரேட்டெட் பவர்: 3mW
    - இன்-இயர் ஹெட்போன்
    - இன்-லைன் ரிமோட்
    - 1.25 எம் கேபிள்
    - எடை: 13.5 கிராம்

    ரியல்மி பட்ஸ் தற்சமயம் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி பட்ஸ் விலை ரூ.499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அடுத்த மாதம் முதல் துவங்க இருக்கிறது.
    போர்டிரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய ப்ளூடூத் ஹெட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #bluetoothheadphones



    போர்டிரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் புதுய ப்ளூடூத் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மஃப்ஸ் ஆர் என அழைக்கப்படும் புது ப்ளூடூத் ஹெட்போன் மாடல் அன்றாட பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    புது மஃப்ஸ் ஆர் ப்ளூடூத் ஹெட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் மஃப்ஸ் சீரிஸ் வகைகளில் புதிய மாடலாக அறிமுகமாகி இருக்கிறது. மஃப்ஸ் ஆர் ஹெட்போனின் எடை குறைவாக இருப்பதோடு, அளவில் சிறியதாகவும் பயன்படுத்த சவுகரியமாக இருக்கும் என போர்டிரானிக்ஸ் தெரிவித்துள்ளது. 

    இதன் மெல்லிய மற்றும் எடை குறைவான வடிவமைப்பு காரணமாக இதனை நீண்ட நேரம் தொடர்ந்து உபயோகிக்க முடியும். தற்போதைய கேட்ஜெட்களில் பிரபல அம்சங்களில் ஒன்றாக இருக்கும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மஃப்ஸ் ஆர் ஹெட்போனில் வழங்கப்பட்டுள்ளது. 



    இதனால் சிறிது நேரம் சார்ஜ் செய்தால் நாள் முழுக்க பயன்படுத்த முடியும். மஃப்ஸ் ஆர் ஹெட்போன்களில் நெக்பேன்ட் வடிவமைப்பு மற்றும் நேர்த்தியான இயர்டிப்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஹெட்போன்களை பயன்படுத்தி, பயனர்கள் இசையை கேட்டு ரசிப்பதுடன், அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும். 

    இத்துடன் 3.5எம்.எம். ஆக்சில்லரி கேபிள் கொண்டு பில்ட்-இன் மைக் மற்றும் அழைப்புகள், பிளேபேக் உள்ளிட்டவற்றை இயக்க முடியும். ப்ளூடூத் வசதி கொண்ட இயர்போன்களில் 40 எம்.எம். இன்பில்ட் டிரைவர்கள் வழங்கப்பட்டு இருப்பதால், அதிகபட்சம் 10 மீட்டர் வரை ஆடியோவை கன்ட்ரோல் செய்ய முடியும்.

    புது இயர்போன்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 10 முதல் 15 மணி நேர டாக்டைம் மற்றும் தொடர்ச்சியாக 15 மணி நேரத்திற்கு ஆடியோ பிளேபேக் வழங்கும் என போர்டிரானிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில் போர்டிரானிக்ஸ் புதிய மஃப்ஸ் ஆர் ப்ளூடூத் ஹெட்போனின் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஒன்பிளஸ் நிறுவனத்தின் டைப்-சி புல்லெட்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #OnePlus #earphones



    ஒன்பிளஸ் நிறுவனத்தின் டைப்-சி புல்லெட்ஸ் இன்-இயர் இயர்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய இயர்போன்கள் 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புல்லெட்ஸ் வி12 இயர்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல் மட்டும் கிடையாது என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

    புதிய இயர்போன்களில் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு, சக்திவாய்ந்த ஆடியோ அனுபவம் மிகத்துல்லியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்டல் வடிவமைப்பு, கேபிள் உள்ளிட்டவை அரமிட் ஃபைபர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் டைப்-சி புல்லெட்கள் இழுக்கப்படும் போது அதிக உறுதியாக இருக்கும்.

    சர்கஸ் லாஜிக் உடன் இணைந்து டி.ஏ.சி. கொண்டிருப்பதால் அதிக டைனமிக் ரேன்ஜ், சக்திவாய்ந்த பேஸ், சிகனல்-டு-நாய்ஸ் ரேஷியோ உள்ளிட்டவை கொண்டிருக்கிறது. டைப்-சி புல்லெட்கள் அனைத்து டைப்-சி போர்ட்களுடன் இணையும் வசதி கொண்டிருக்கிறது. இதனால் ஒன்பிளஸ் தவிர மற்ற மாடல்களுடனும் பயன்படுத்தலாம்.

    ஒன்பிளஸ் டைப்-சி புல்லெட்கள் அந்நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் மாடலான ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனுடன் வெளியிடப்படுகிறது. இதன் விலை ரூ.1,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒன்பிளஸ் 6டி மாடலில் ஹெட்போன் ஜாக் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.
    ஆடியோ சாதனங்களை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான போல்ட் இந்தியாவில் புதிய இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. #Earphone



    ஆடியோ சாதனங்களை சுவாரஸ்ய அம்சங்களுடன் வழங்குவதில் பிரபல நிறுவனமாக அறியப்படும் போல்ட் ஆடியோ இந்தியாவில் புதிய வயர்டு இயர்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

    லூப் என அழைக்கப்படும் புதிய போல்ட் இயர்போன்களில் ஆங்கில்டு இயர் டிப்கள் மற்றும் பிரத்யேக இயர் லூப் ஃபாஸ்ட்னர் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. கெவ்லரின் கேபிள்களை கொண்டிருக்கும் இந்த இயர்போனின் ஸ்டேபிலைசர் சீரான ஆடியோ தரத்தை வழங்கும்.

    மேலும் இதில் உள்ள ஹை-ரிகிடிட்டி ஏ.எல். (High-rigidity AL) அலாய் ஹவுசிங்கள் தொடர் பயன்பாடுகளிலும் சிறப்பான அனுபவத்தை வழங்கும். இதன் சிலிகான் டிரான்ஸ்லூசென்ட் இயர் ஃபாஸ்ட்னர் காதுகளில் கச்சிதமாக பொருந்திக் கொண்டு அடிக்கடி கீழே விழாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உடற்பயிற்சி செய்யும் போது சிறப்பான ஆடியோ உத்வேகத்துடன் பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்த முடியும்.

    கூடுதலாக இதில் 3.5 எம்.எம். கனெக்டர் வழங்கப்பட்டு இருப்பதோடு உயர் ரக அழைப்புகள் மற்றும் வாய்ஸ் கமான்ட் செய்ய ஏதுவாக இயர்போனில் பில்ட்-இன் கன்டெசர் மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளது.



    போல்ட் ஆடியோ லூப் முக்கிய அம்சங்கள்:

    – உயர் ரக கேபிள் – ஆடியோ தரத்தை குறையாமல் பார்த்துக் கொள்கிறது
    – 3D சவுன்ட்- சின்க்ரோனைஸ் செய்யப்பட்டு மேம்பட்ட ஆடிட்டரி அனுபவம் வழங்க 3D அகௌஸ்டிக்ஸ்
    – 3.5 எம்.எம். கனெக்டர் – தங்க முலாம் பூசப்பட்ட சர்வதேச 3.5 எம்.எம். கனெக்டர்
    – பில்ட்-இன் மைக் – கன்டென்சர் மைக்ரோபோன் உயர் ரக அழைப்புகளுக்கு ஏதுவாக இருக்கும்
    – பில்ட்-இன் மைக்ரோ ஊஃபர்கள் – இயர்போனின் ஆடியோ தரம் மற்றும் ஒலியை சிறப்பாக வழங்குகிறது

    இந்தியாவில் புதிய போல்ட் ஆடியோ லூப் விலை ரூ.672 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, எனினும் மிந்த்ரா தளத்தில் ரூ.530 எனும் சிறப்பு விலையில் வாங்கிட முடியும்.
    ஹானர் நிறுவனத்தின் புதிய ஹெட்போன் உலகின் முதல் முறை அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    பீஜிங்:

    ஹூவாய் சப்-பிரான்டு நிறுவனமான ஹானர் தனது க்ளியர் ஹெட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 

    ஹானர் க்ளியர் ஹெட்போன் உலகில் முதல்முறையாக ரியல்-டைம் இதயத்துடிப்பு டிட்டெக்ஷன் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் உங்களது இதயத்துடிப்பை டிராக் செய்து, உங்களை அமைதிப்படுத்தும் வசதி கொண்டுள்ளது. ஹார்ட் ரேட் வேரியபிலிட்டி (Heart Rate Variability-HRV) அளவுகளை ஆய்வு செய்து, உடனடி பரிந்துரைகளை இந்த ஹெட்போன் வழங்கும்.

    ஹை-ரெஸ் ஆடியோ பிளேபேக் வசதியை ஹானர் க்ளியர் கொண்டிருக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ அனுபவமானது குறைந்த பிட்ரேட் கொண்ட ஆடியோக்களையும் அதிக துல்லியமாக, உயர் ரகத்தில் கேட்க வழி செய்யும். இதன் ரியல்-டைம் ஹார்ட் ரேட் டிட்டெக்ஷன் வலது புற இயர்பட்-இல் பொருத்தப்பட்டிருக்கும் ஆப்டிக்கல் ஹார்ட் ரேட் மானிட்டர் மூலம் டிராக் செய்யப்படுகிறது.

    ஹார்ட் ரேட் மானிட்டரிங் அம்சம் ஹூவாய், ஹானர் ஸ்மார்ட்போன்களை போன்றே ஹூவாய் ஹெல்த் ஆப் கொண்டிருக்கும் மற்ற ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் வேலை செய்யும் என ஹானர் தெரிவித்துள்ளது. இந்த ஹெட்போனில் வழங்கப்பட்டு இருக்கும் ஹார்ட் ரேட் இன்டெக்ஸ் சீனாவை சேர்ந்த அறிவியில் குழுமத்தின் உளவியல் பிரிவினரால் உருவாக்கப்பட்டுள்ளது.



    இந்த சாதனம் பயனரின் உளவியல் சார்ந்து மன அழுத்தத்தை இயக்கி, அதற்கேற்ற ஹார்ட் ரேட் இன்டெக்ஸ் தகவல்களை வழங்கும். இதன் இயர்பட்கள் மிகவும் மென்மையாகவும், மனித தோல்களில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையிலும், நீண்ட நேர பயன்பாடுகளிலும் சவுரகரியமாக இருக்கும் படி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஹானர் க்ளியர் ஹெட்போன்களின் இயர் ஃபின்கள் மற்றும் இயர்-டிப்கள் மூன்று வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. இத்துடன் MEMS மைக்ரோபோன், இன்-லைன் மியூசிக் மற்றும் வால்யூம் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. 

    வெள்ளை நிறத்தில் மட்டும் கிடைக்கும் ஹானர் க்ளியர் ஹெட்போன் சீனாவில் 129 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1,350) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை சீனாவில் இன்று (ஜூன் 7) முதல் துவங்குகிறது. இதன் இந்திய வெளியீடு குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    சென்ஹெய்சர் நிறுவனத்தின் புதிய இன்-இயர் வயர்லெஸ் ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சென்ஹெய்சர் நிறுவனத்தின் CX SPORT இன்-இயர் வயர்லெஸ் ஹெட்செட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 

    எடை குறைவாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஹெட்செட், வியர்வை மற்றும் ஸ்ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டுள்ள நிலையில், இந்த இயர்போன் ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் இதில் வழங்கப்பட்டு இருக்கும் ரிமோட் மூன்று பட்டன் கொண்டிருப்பதால் மிக எளிமையாக இயக்க முடியும். இத்துடன் வாய்ஸ் பிராம்ப்டகளையும் மிக சுலபமாக வழங்க முடியும். ஹெட்செட்-இன் ஃபின்கள் இயர்பட்களை சவுகரியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளும்.

    இந்த ஹெட்செட்-ஐ கழுத்தில் மாட்டிக் கொண்டோ அல்லது முன்பக்கம் வைத்து பயன்படுத்தவும் முடியும். இதற்கென கேபிள் ஆர்கனைசர் வழங்கப்பட்டிருப்பதோடு காலரில் பொருத்திக் கொள்ள க்ளிப் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.



    சென்ஹெய்சர் CX SPORT சிறப்பம்சங்கள்:

    ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்ட, சென்ஹெய்சர் டிரான்ஸ்டியூசர்கள்
    தெளிவான ஆடியோ மற்றும் டைனமிக் பேஸ் வசதி
    இம்பென்டன்ஸ்: 28 Ohm (பேசிவ்), 480 Ohm (ஆக்டிவ்)
    வியர்வை மற்றும் ஸ்ப்ளாஷ் ரெசிஸ்டண்ட்
    ப்ளூடூத் 4.2 மற்றும் மல்டி-பாயின்ட் கனெக்டிவிட்டி
    ஆடியோ கோடெக்கள்: apt-X  / apt-X  LL / AAC / SBC

    சென்ஹெய்சர் புதிய இன்-இயர் ஹெட்செட்கள் (S/M/L) என மூன்று வித ஃபின் அளவுகளிலும், (XS, S, M, L) என நான்கு வித அளவுகளில் இயர் அடாப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை வெளிப்புற ஒலியை கட்டுப்படுத்தி அதிகபட்சம் ஆறு மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும். 

    இத்துடன் க்விக் சார்ஜிங் வசதி கொண்டிருப்பதால் யுஎஸ்பி மூலம் சார்ஜ் செய்தால் பத்தே நிமிடங்களில் ஒரு மணி நேரத்திற்கும், 1.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.

    சென்ஹெய்சர் CX SPORT மாடலின் விலை இந்தியாவில் ரூ.9,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் ஜூன் 1-ம் தேதி துவங்குகிறது. ஜூன் 15-ம் தேதி வரை புதிய சென்ஹெய்சர் CX SPORT இயர்போன் முன்பதிவு செய்வோருக்கு புதிய இன்-இயர் ஹெட்செட் வாங்குவோருக்கு ரூ.3,990 மதிப்புடைய ஹெட்போன் இலவசமாக வழங்கப்படுகிறது. 
    ×