என் மலர்

  நீங்கள் தேடியது "drone attack"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நேற்று இரவு உக்ரைன் மீது ரஷியா 24 முறை ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்
  • மே மாதத்தில் மூன்றாவது முறையாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது

  ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளினைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அது வீழ்த்தப்பட்டதாகவும் ரஷியா கூறியது. அத்துடன், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் எனவும், அதிபர் புதினை கொலை செய்யும் முயற்சி என்றும் குற்றம்சாட்டியது. தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தது. இந்த குற்றச்சாட்டை உக்ரைன் நிராகரித்திருந்தது.

  இந்நிலையில், நேற்று இரவு உக்ரைன் மீது ரஷியா 24 ட்ரோன்களை அனுப்ப தாக்குதல் நடத்தியதாகவும், அவற்றில் 18 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் விமானப்படை கூறியிருக்கிறது.

  மே மாதத்தில் மூன்றாவது முறையாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவ நிர்வாக தலைவர் செர்ஜி பாப்கோ தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுபோன்ற தீவிரமான தாக்குதலை பார்த்ததில்லை. சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் பாகங்கள் கீவ் நகரின் பல்வேறு பகுதிகளில் சிதறின. ஆனால் இதில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் பாப்கோ கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது.
  • ஈரான் ராணுவ தொழிற்சாலையில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

  டெஹ்ரான்:

  ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுதங்களை வழங்குவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. அதுமட்டுமின்றி ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

  இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் தொடர்ந்து வருகிறது.

  இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 350 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இஸ்பஹான் நகரில் இருக்கும் ராணுவ தொழிற்சாலையின் மீது நேற்று முன்தினம் இரவு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

  வெடிகுண்டுகளுடன் 3 டிரோன்கள் வந்ததாகவும், அவற்றில் 2 டிரோன்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்ட நிலையில், ஒரு டிரோன் மட்டும் ராணுவ தொழிற்சாலை மீது விழுந்து வெடித்ததாகவும் ஈரான் ராணுவம் தெரிவித்தது.

  டிரோன் விழுந்து வெடித்ததில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பெரிய அளவில் தீப்பற்றியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் உயிர் சேதமோ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சவுதி அரேபியா நாட்டின் நர்ஜான் நகர விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் இன்று அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.
  ரியாத்:

  சவுதி அரேபியா மற்றும் ஏமன் நாட்டின் எல்லைப்பகுதியில் சவுதிக்கு சொந்தமான நர்ஜான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான நர்ஜான் நகர விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் இன்று ஏவுகணைகளை வீசி அதிரடியாக தாக்குதல் நடத்தினர்.

  வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காசிப்-கே2 ரக ஆளில்லா விமானங்களை ஏவி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சவுதி விமானப்படை போர் விமானங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  ×