என் மலர்
நீங்கள் தேடியது "Ukrane Russia War"
- போரில் குழந்தைகள் பெண்கள் உள்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- கட்டிடத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கார்கிவ்:
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2½ ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த போரில் குழந்தைகள் பெண்கள் உள்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீண்டு கொண்டே வருகிறது.
இந்த நிலையில் வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் வெடிகுண்டுகளை வீசியது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குழந்தைகள் உட்பட 40 பேர் படுகாயமடைந்தனர்.
அந்த கட்டிடத்தின் 9 மற்றும் 12 வது தளங்களுக்கு இடையில் தீ கொழுந்து விட்டு எரிகிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கட்டிடத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவின் ராணுவ விமான தாக்குதல்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
- உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றியது.
- ரஷியா-உக்ரைன் தலா 103 கைதிகளை பரிமாற்றம் செய்து கொண்டனர்.
ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷிய படைகள் கைப்பற்றியது.
இதற்கிடையே ரஷியா-உக்ரைன் இடையே கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த நிலையில் ரஷியா-உக்ரைன் தலா 103 கைதிகளை பரிமாற்றம் செய்து கொண்டனர். 2022-ம் ஆண்டு கிழக்கு உக்ரைனில் உள்ள அசோவ்ஸ்டல் எக்கு ஆலையைக் கைப்பற்றியபோது பிடிபட்ட உக்ரைன் வீரர்கள் மற்றும் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவத்தினர் ஊடுருவிய போது பிடிபட்ட வீரர்களை ரஷியா விடுவித்தது. அதேபோல் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைனில் சிக்கிய ரஷிய வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
- நேற்று இரவு உக்ரைன் மீது ரஷியா 24 முறை ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்
- மே மாதத்தில் மூன்றாவது முறையாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது
ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளினைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டதாகவும், அது வீழ்த்தப்பட்டதாகவும் ரஷியா கூறியது. அத்துடன், இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் எனவும், அதிபர் புதினை கொலை செய்யும் முயற்சி என்றும் குற்றம்சாட்டியது. தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தது. இந்த குற்றச்சாட்டை உக்ரைன் நிராகரித்திருந்தது.
இந்நிலையில், நேற்று இரவு உக்ரைன் மீது ரஷியா 24 ட்ரோன்களை அனுப்ப தாக்குதல் நடத்தியதாகவும், அவற்றில் 18 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைன் விமானப்படை கூறியிருக்கிறது.
மே மாதத்தில் மூன்றாவது முறையாக உக்ரைன் தலைநகர் கீவ் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவ நிர்வாக தலைவர் செர்ஜி பாப்கோ தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுபோன்ற தீவிரமான தாக்குதலை பார்த்ததில்லை. சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் பாகங்கள் கீவ் நகரின் பல்வேறு பகுதிகளில் சிதறின. ஆனால் இதில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் பாப்கோ கூறினார்.