search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District Collector"

    சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைநீரால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
    தாம்பரம்:

    சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையை அடுத்த தாம்பரம், பல்லாவரம், சிட்லபாக்கம் பகுதிகளில் மழைநீரால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? என காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார்.

    மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் தங்கு தடையின்றி செல்கிறதா? என பார்வையிட்ட அவர், சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றால் உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் பொன்னையா, நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் 2 நாட்கள் மழைநீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வெள்ள பாதிப்புகளை தடுக்க மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    பெரிய அளவில் எங்கும் மழைநீர் தேக்கம் இல்லை. சிறியஅளவில் மழைநீர் தேங்கினாலும், அவற்றை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    மாவட்டத்தில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 9 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளன. அந்த ஏரிகளால் தாழ்வான பகுதிகளில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மற்ற ஏரிகள் 25 முதல் 50 சதவீதம் வரை நிரம்பி உள்ளன.

    மழையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதையும் மீறி தனியார் பள்ளிகள் இயக்கப்படுவதாக புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், பெருங்களத்தூர், மாடம்பாக்கம், சிட்லபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்காமல் தடுக்க நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    பல்லாவரம் நகராட்சி பகுதியில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற 30 மின்மோட்டார்கள், பொக்லைன் எந்திரங்களுடன் 24 மணிநேரமும் நகராட்சி ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாக பல்லாவரம் நகராட்சி கமிஷனர் கருப்பையாராஜா தெரிவித்தார்.
    தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.
    தேனி:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ள தேனி மாவட்டம் முழுவதும் கடந்த 1 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. நேற்றும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. இன்றும் மழை பெய்தபடி இருந்தது. எனவே தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார். சிறப்பு வகுப்புகள் பள்ளிகளில் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

    கொடைக்கானல் மலை பகுதியிலும் கனமழை நீடித்து வருகிறது. எனவே இன்று கொடைக்கானல் தாலுகா அளவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வினய் பிறப்பித்துள்ளார்.

    அரசு முத்துரங்கம் கலைக்கல்லூரியில் ராகிங் புகாரை அடுத்து கல்லூரி விடுதியில் இருந்து 6 மாணவர்களை நீக்கி வேலூர் கலெக்டர் உத்தரவிட்டார்.
    வேலூர்:

    வேலூர் ஓட்டேரியில் அரசு முத்துரங்கம் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் ஆதிதிராவிடர் சமுகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரி அருகிலேயே தங்கும் விடுதி உள்ளது.

    விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அஜித், சுரேஷ், கிரண், விக்னேஷ், படையப்பா, மணிகண்டன், தங்கி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை கேலி கிண்டல் செய்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

    இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு முதலாம்ஆண்டு மாணவர்கள் புகார் தெரிவித்தனர். விசாரணையில் மாணவர்கள் ராகிங் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3-ம் ஆண்டு மாணவர்கள் 6 பேரையும் கல்லூரி நிர்வாகம் விடுதியில் இருந்து 12 நாட்கள் தற்காலிக நீக்கம் செய்தது. இடை நீக்கம் செய்யபட்ட 6 மாணவர்கள் மீண்டும் விடுதிக்கு திரும்பும் போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் அவர்களுக்கும் மோதல் சூழ்நிலை உருவாகியுள்ளதாக விடுதி அதிகாரிகள் செய்த விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து மற்ற மாணவர்களின் நலன் கருதி 6 மாணவர்களை விடுதியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.இதைத்தொடர்ந்து 6 மாணவர்களையும் விடுதியில் இருந்து நிரந்தமாக நீக்கம் செய்து கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். #tamilnews
    ராமநாதபுரம் மாவட்டத்தில் 26 வாக்குச்சாவடி மையங்களின் கட்டிடம் மற்றும் அமைவிடங்களை மாற்றியமைப்பதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்குச்சாவடி மறுசீரமைப்பு பணிகளின் அடிப்படையில் அரசுக்கு இறுதி பிரேரணை சமர்ப்பிப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் பணி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1307 வாக்குச்சாவடிகளில், ஊரகப் பகுதிகளில் 1200 மற்றும் நகர்ப்பகுதிகளில் 1400 வாக்காளர்களை விட அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகள், பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் 60 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டது.

    இந்த வாக்குச்சாவடிகளை 2 ஆக பிரிப்பதற்கும், அதே போல பொதுமக்களின் கோரிக்கை வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், ஒரே இடத்தில் அமைந்துள்ள 24 வாக்குச்சாவடிகளில், வாக்குச்சாவடிகளுக்கிடையில் பிரிவுகளை மாற்றம் செய்வதற்கும், தற்போதுள்ள வாக்குச்சாவடி கட்டிடங்களின் உறுதித்தன்மை மற்றும் பொதுமக்கள் கோரிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு 24 வாக்குச்சாவடி மையங்களின் கட்டிடம் மற்றும் அமைவிடங்களை மாற்றியமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 2.7.2018 அன்று வரைவு மறுசீரமைப்பு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.

    வரைவு பட்டியலின் மீது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து 9.7.2018 வரை கருத்துக்கள் கோரப்பட்டது.

    பொதுமக்கள் கோரிக்கை அடிப்படையில் 26 வாக்குச்சாவடி மையங்களின் கட்டிடம் மற்றும் அமைவிடங்களை மாற்றிய மைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு உரிய பிரேரணைகள் அனுப்பி வைக்கப்பட்டு ஆணைகள் பெறப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தேர்தல் வட்டாட்சியர் கல்யாணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    ×