search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disabled person"

    • ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என அனைத்து அரசு துறைகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.
    • வீல் சேர்வாட்டர் பெட், 2 ஊன்றுகோல், மாற்று திறனாளி உதவிதொகைமற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதார ண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் வசித்து வருபவர் மூதாட்டி நாகவள்ளி (வயது 68).

    இவரது கணவர் 8 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

    இந்த சூழலில் உடல் முழுவதும் ஊனமுற்ற மூளை வளர்ச்சி இல்லாத மாற்று திறனாளி மகன் 30 வயது நிரம்பிய பாலசுப்பி ரமணியனுடன் தனியாக ஒரு குடிசை வீட்டில் வருமானம் இன்றி தவித்து வருகிறார்.

    இவர்கள் படும் கஷ்டம் குறித்த வீடியோ நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ்க்கு கிடைத்தது .

    உடனடியாக தனது செல்போனில் வேதாரண்யம் வட்டார வளர்ச்சிஅலுவலர் தொடர்பு கொண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் இலவச வீடு கட்டி கொடுக்க வேண்டிய ஆவணங்களை சரிபார்த்து உடன் வீடு கிடைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும் துணை இயக்கு னர் சுகாதார பணிகள் தொடர்பு கொண்டு அந்த குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து மருத்துவ உதவிகளையும் மருத்துவமனைக்கு அரசு செலவில் அழைத்து சென்று மருத்துவ உதவியும்மாற்று திறனாளிகள் நல அலுவலரிடமும் வேண்டிய பொருட்களை உடன் வழங்கவும் 5 மாதமாக நின்று போனமாத உதவித்தொகை வீட்டிற்கே ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என அனைத்து அரசு துறைகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.

    உடனடியாக அனைத்து அரசு அதிகாரிகளும் நேரில் சென்று அனைத்து உதவிகளுக்கான பணிகளை யும் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.

    திடீரென்று மாவட்ட கலெக்டர்வீட்டிற்கு நேரில் வந்து வீல் சேர்வாட்டர் பெட், 2 ஊன்றுகோல், மாற்று திறனாளி உதவிதொகைமற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

    மாற்றுத்திறனாளி 30 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்த நிலையில் தகவல் கிடைத்தவுடன் 30 நிமிடத்தில் அனைத்து உதவிகளையும் செய்த கலெக்டர் அருண்தம்பராஜ் நேரில் சென்று அனைத்து உதவிகளையும் செய்தது ஆறுதல் கூறியது அந்த குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்தது. அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை பாராட்டி வருகின்ரனர்.

    நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர்ஜெயராஜ பெளலின், மாவட்ட மாற்றுதி றனாளி மாவட்டஅலுவலர் சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்புஅலுவலர் செய்வகுமார், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவல ர்கனகசுந்தரம், சமூக ஆர்வலர் சிவகுமார் மற்றும் சுகதார துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற சிறப்பு முகாம் வருகிற 1,2 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனா ளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதில் உள்ள சிரமங்களை மாற்றுத்திற னாளிகள் தவிர்க்கும் வகையில் கூடுதலாக வட்டார அளவில் அரசு மருத்துவ மனைகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு மாதமும் வரும் முதல் செவ்வாய்க்கிழமைகளில் காலை 10 மணி முதல் அரசு மருத்துவமனை திருமங்க லத்திலும், ஒவ்வொரு மாதமும் வரும் முதல் புதன்கிழமைகளில் காலை 10 மணி முதல் அரசு மருத்துவமனை மேலூரிலும் இணை இயக்குநர், நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம், மதுரை (இ) உசிலம்பட்டி கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் குழு மூலம் நடைபெற்று வருகிறது.

    நவம்பர் மாதத்தில் 1-ந் தேதி (செவ்வாய்) அன்று அரசு மருத்துவமனை திருமங்கலத்திலும், 2-ந் தேதி (புதன்) அன்று அரசு மருத்துவமனை மேலூரிலும் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் இதுவரை மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டையை புதுப்பிக்க வேண்டிய மாற்றுத்திறனாளிகள், மாவட்ட மாறுதலில் மதுரை மாவட்டத்திற்கு குடிபெயர்ந்து வரும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி களுக்கான தனித்துவ அட்டை பெறாத மாற்றுத்தி றனாளிகள், தங்களது குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-5 ஆகிய வற்றுடன் மேற்குறிப்பிட்ட தினங்களில் திருமங்கலம் மற்றும் மேலூர் அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று மாற்றுத்தி றனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர் சங்க கருத்தரங்கு நடந்தது.
    • உதவிப்பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் இளைஞர் மன்றம் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர் சங்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

    இதில் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியை அர்ச்சனாதேவி பங்கேற்று ''விடாமுயற்சி-வெற்றியின் திறவுகோல்'' என்ற தலைப்பில் பேசினார். மாணவர்கள் தமக்குள்ள திறமைகளைப் பயனுள்ள வகையில் வெளிகொணருவதற்கான வழிமுறைகளைத் எடுத்துரைத்தார்.

    இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் 40 மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் மன்ற அமைப்பாளர் விஜயலட்சுமி, மாற்றுத்திறனாளி மாணவர் சங்க அமைப்பாளர் மதுமதி ஆகியோர் செய்திருந்தனர்.

    2-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் அருண் பாண்டியன் வரவேற்றார். 3-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் ஜெயக்குமார் நன்றியு கூறினார்.

    சிறப்பு ெசாற்பொழிவு

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறை இலக்கிய மன்றம் சார்பில் சிறப்புச்சொற்பொழிவு நடந்தது. இதில் விருந்தினராக விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி உதவிப்பேராசிரியர் கயல்விழி பங்கேற்று ''நிகழ்நிலை நெறி முறைகளுக்கான வழிகாட்டுதல்'' என்ற தலைப்பில் பேசினார்.

    அவர் பேசுகையில், மாணவர்கள் நிகழ்நிலை தளங்களை பயனள்ள முறையில் பயன்படுத்துவதற்கான நெறிமுறைகளை செயல்பாடுகளின் மூலம் எடுத்துரைத்தார். முன்னதாக உதவிப்பேராசிரியர் அர்ச்சனாதேவி, வரவேற்றார்.

    துறைத் தலைவர் பெமினா தொடக்கவுரை ஆற்றினார். உதவிப்பேராசிரியர் சாந்தா கிறிஸ்டினா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். உதவிப்பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.

    • மாற்றுத்திறனாளி தவறி விழுந்து இறந்தார்.
    • தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    அனுப்பானடி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு (56). மாற்றுத்திறனாளி. நேற்று மதியம் இவர் ஏணிப்படியில் ஏற முயன்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ்பாபு பரிதாபமாக இறந்தார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • ழந்தைகள் இருவரும் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
    • குடும்பத்தை வழி நடத்துவது பெரும் சிரமமாக உள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 41). இவரது மனைவி பானுமதி( 36).இவர்களது மகன்கள் சந்தோஷ்குமார், (12) மனோஜ்குமார் ( 7) .பிறவி முதலே கணேசனுக்கு பார்வை தெரியாது .இதனால் வாழ்க்கை நடத்த சிரமப்படுவதாகவும்,அரசு சார்பில் குடியிருக்க வீடு தரவேண்டும் என திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளதாக கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:- நான் பிறந்தபோது மஞ்சள் காமாலை ஏற்பட்டு பார்வை பறிபோனது. பார்வை தெரியாததால் யாரும் வேலைக்கு சேர்க்க மறுக்கின்றனர். குழந்தைகள் இருவரும் அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர்.மனைவி, குழந்தைகளை கவனித்தபடி, வீட்டிலேயே பனியன் வேஸ்ட் பிரிக்கும் வேலை செய்து வருகிறேன். தன்னார்வலர்கள், ஊர் பொதுமக்கள் செய்யும் உதவியால் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். அரசு வழங்கும் உதவித்தொகை வாழ்வாதாரமாக உள்ளது. என்னால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது என்பதால், குடும்பத்தை வழி நடத்துவது பெரும் சிரமமாக உள்ளது.எனவே அரசு சார்பில் குடியிருக்க வீடு ஒதுக்கி கொடுத்தால், மனைவியின் வருமானம் மற்றும் உதவித்தொகை கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொள்வோம். இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×