search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Decoration"

    • பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அன்னவாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழாவையொட்டி கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அன்னவாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தார்.

    • மாலை சீதாதேவி சமேத விஜயராமர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளுகிறார்.
    • சிறப்பு திருமஞ்சனமும் தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேல வீதியில் அமைந்துள்ள விஜய ராமர் கோவில் மற்றும் அய்யன் கடை தெருவில் உள்ள பஜார் ராமசாமி கோவிலில் நாளை ( வியாழக்கிழமை) ராம நவமி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

    இதை முன்னிட்டு விஜய ராமர் கோவிலில் நாளை காலை 8 மணிக்கு சிறப்பு ஹோமமும், 9 மணிக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம், திருமஞ்சனம் நடைபெறும்.

    தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு சீதாதேவி சமேதராக ஸ்ரீ விஜயராமர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

    இதேபோல் பஜார் ராமசாமி கோவிலில் நாளை காலை 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • தீமிதி திருவிழா கடந்த 5-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் உள்ள முள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் 79-ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 5-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, 15 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் அம்பாளுக்குசிறப்பு அபிஷேகம்நடைபெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபா ராதனை காண்பிக்கப்படும்.

    அதனைத் தொடர்ந்து சாமி புறப்பாடு நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலுக்கு எதிரில் அமைக்கப்பட்டுள்ள தீக்குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பாதுகாப்பு பணியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • பெண்கள் பால், பழம் கொடுத்து ஆரத்தி எடுத்து சம்பிரதாய திவ்யநாமம் நடைபெற்றது.
    • சாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் கோதண்டராமர் சாமி கோவிலில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் 8 ஆம் ஆண்டு ஸ்ரீ ராதா கல்யாண நிகழ்வு நடைபெற்றது.

    காலை தென்பாதி விநாயகர் கோவிலில் இருந்து திருமணத்திற்கான சீர்வரிசை பொருட்களை மங்கல வாத்தியங்கள் முழங்க பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலை வந்தடைந்தனர்.

    தொடர்ந்து ராதா, கிருஷ்ணன் சுவாமிகள் ஊஞ்சலில் எழுந்தருள பெண்கள் பால், பழம் கொடுத்து ஆரத்தி எடுத்து சம்பிரதாய திவ்யநாமம் நடைபெற்றது.

    அதன் பின்னர் நடைபெற்ற ஆஞ்சநேயர் உற்சவத்தில் திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றுகூடி கோலாட்டம் மற்றும் நடனத்துடன் ராதா கல்யாண விழா களை கட்டியது.

    அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான ராதா கல்யாண உற்சவம் மங்கள வாத்தியங்கள், வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது.

    பின்னர் சுவாமிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை கட்டப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை நடராஜ.சட்டையப்பன் குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    • 2-ம் கால யாகசாலை பூஜைகள் இன்று காலை நடத்தப்பட்டு மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.
    • அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தில் உள்ள பழமையான வீரமணவாளன் கோயில் உள்ளது. கிராம மக்களால் கோயில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் திருப்பணிகள் முடிவுற்று யாகசாலை பூஜைகள் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் இன்று காலை நடத்தப்பட்டு மகா பூர்ணா ஹுதி நடைபெற்றது.

    பின்னர் கடங்களை தலையில் சுமந்து சிவாச்சாரியார்கள் கோவிலை வலம்வந்து கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.

    வீரமணவாள சுவாமி, காத்தாயி அம்மன், பச்சையம்மன், சப்த்தகண்ணிகள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவில் மன்னார்குடி, நெடுவாக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு யாகபூஜைகள் நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த செம்போடை மேற்கு கருமாரியம்மன் கோவிலில் உலக நலன் வேண்டி சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு யாகபூஜைகள் நடை பெற்றது.

    யாகத்தில் விக்னேஷ்வர பூஜையுடன், சுப்பிரமண்யர், ராமர், நவக்கிரஹக பரிகார பூஜைகளுடன் வேதவல்லி மற்றும் வாராகி அம்மனுக்கு உலக நன்மை வேண்டி பல்வேறு திரவியங்கள், நிகும்பல (மிளகாய்) வேள்வியுடன் பூர்ணாஹுதியும், தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    • அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • மாலை 6 மணிக்கு கோவிலின் எதிரே உள்ள மயானத்தில் அம்மன் எழுந்தருளினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே முடிதிருச்சம்பள்ளி கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மகா சிவராத்திரி உற்சவ மயான கொள்ளை விழா மாசி மாதம் அம்மாவாசையான நேற்று நடைபெற்றது.

    விழாவின் போது பக்தர்களால் வழங்கப்படும் வேகவைத்த தானியங்களை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். பிரசித்திப்பெற்ற இந்தக் கோயிலில் இந்த ஆண்டு மயானக் கொள்ளை விழா பூஜையுடன் தொடங்கியது.

    இதையொட்டி காலை கலச பூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    முக்கிய நிகழ்ச்சியான மகாசிவராத்திரி உற்சவம் மயானக்கொள்ளை விழாவை யொட்டி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்ட்டது.

    தொடர்ந் பரிவார தெய்வங்க ளுடன் சிறப்பு அலங்கா ரத்துடன் அங்கா ளம்மன் அன்ன வாகனத்தில் வீதியுலாக் காட்சி நடை பெற்றது.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோவிலின் எதிரே உள்ள மயானத்தில் அம்மன் எழுந்தருளினார்.

    அப்போது மயானத்தில் வாழை இலையில் வேகவைத்து கொட்டப்பட்டிருந்த சவாரிகட்ட கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு, பயறு வகைகள் உள்ளிட்ட தானியங்களை பக்தர்கள் வாரி இரைக்கும் (கொள்ளையடிக்கும்) நிகழ்ச்சி நடந்தது.

    இதில் சுற்று வட்டார பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் கோபி ராஜேந்திரன் செய்திருந்தனர்.

    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    • நந்தி பெருமானுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீபிரம்மபுரீசுவரர் கோவிலில் நேற்று காலை மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மூலவருக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து வாழைப்பழம், மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, முறுக்கு மற்றும் ரூபாய் நோட்டுகள் கோர்த்து நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் சிவாச்சாரியார் நடத்திவைத்தார். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • 16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும்.
    • ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

    சேலம்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. 16-ந் தேதி மாட்டுப் பொங்கலன்று, மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக அவைகளை குளிப்பாட்டி, வர்ணம் பூசி, புது மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு கட்டப்படும். இதை யொட்டி, சேலத்தில் பல்வேறு பகுதி களில் மூக்கணாங்கயிறு, கழுத்து

    கயிறு, ஜலங்கை உள்ளிட்ட அலங்கார பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து

    வியாபாரிகள் கூறுகையில், அயோத்தியாப்பட்டணத்தை சுற்றியுள்ள

    வலசையூர்,ஆச்சாங்குட்டப்பட்டி, அடி மலைபுதூர், சுக்கம்பட்டி, கூட்டாத்துப்பட்டி, பேளூர் உள்படபல்வேறு பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அயோத்தியாப்பட்டணத்திற்கு வந்து தங்கள் கால்நடைகளுக்கு தேவையான அலங்கார பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இதற்காக மூக்கணாங்கயிறு, ஜலங்கை உள்பட பல்வேறு அலங்கார பொருட்கள் குவிக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு கயிறு ரூ.250 முதல் ரூ.750 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

    • சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் அகத்தியர் ஜென்ம நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி சிறப்பு யாகம் நடந்தது.

    தொடர்ந்து அகத்தியர் மற்றும் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மானாமதுரை மகா பஞ்சமுகி பிரத்தியங்கராதேவி மாதவராமன் சுவாமிஜி செய்திருந்தார்.

    • மூலவருக்கும், உற்சவருக்கும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • மலர் அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது.

    விழாவில் திருவெம்பாவை பாராயணம் செய்யப்பட்டு கோவிலில் தனி சன்னதியில் உள்ள நடராஜர் மூலவருக்கும், உற்சவருக்கும் பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன், காசாளர் வெங்கடேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • மண்ணச்சநல்லூர் பகவதி அம்மனுக்கு தனலெஷ்மி அலங்காரம் நடைபெற்றது
    • தனலஷ்மி அலங்காரத்தில் அம்மனை தரிசிப்பதால் கடன் பிரச்சினை தீரும், செல்வ வளம் பெருகும் என்பதால் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ளது பகவதி அம்மன் திருக்கோயில், மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இத்தலத்தில் பெருந்திருவிழா கடந்த 31ம் தேதி தொடங்கியது. இதில் முக்கிய திருவிழாவான தனலெஷ்மிக்கு அலங்காரம் வெகு விமர்சையாக சமீபத்தில் நடைபெற்றது. இதில் ரூ.10 முதல் ரூ.2000 வரை அனைத்து மதிப்பிலான பணத்தையும் வைத்து உற்சவரை சுற்றி தோரணம் அமைக்கப்பட்டது. மேலும் தங்க நாணயங்களால் உற்சவருக்கு அலங்காரம் செய்து பக்தர்களை பிரமிக்கவும் வைத்திருந்தனர். இப்படி பல லட்ச ரூபாய் நோட்டுகளினால் பகவதி அம்மன் நேர்த்தியோடு அழகாக அமைக்கப்பட்டு தனலெஷ்மி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்த தனலஷ்மி அலங்காரத்தில் அம்மனை தரிசிப்பதால் கடன் பிரச்சினை தீரும், செல்வ வளம் பெருகும் என்பதால் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

    ×