என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் அருள்பாலிப்பு.
மாயூரநாதர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
- மூலவருக்கும், உற்சவருக்கும் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- மலர் அலங்காரம் செய்து தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் திருவெம்பாவை பாராயணம் செய்யப்பட்டு கோவிலில் தனி சன்னதியில் உள்ள நடராஜர் மூலவருக்கும், உற்சவருக்கும் பால், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன், காசாளர் வெங்கடேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






