search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "debt"

    கடன் பிரச்சினை காரணமாக ஸ்டூடியோ உரிமையாளர் தற்கொலை செய்த சம்பவம் தஞ்சையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 32). இவர் தஞ்சை பழைய பஸ் நிலைய பகுதியில் ஸ்டூடியோ நடத்தி வந்தார்.

    ரமேஷ், தனது ஸ்டூடியோ தொழில் அபிவிருத்திக்காக சிலரிடம் பணம் கடன் வாங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ரமேசுக்கு தொழில் சரிவர நடைபெறவில்லை என கூறப்படுகிறது. மேலும் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு ரமேசுக்கு நெருக்கடி கொடுத்தனர். கடன் தொல்லையால் ரமேஷ் மனமுடைந்து வந்தார்.

    இந்த நிலையில் ரமேஷ், கடந்த 3 நாட்களாக வீட்டுக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் அவரது தாய், இன்று காலை ரமேசை தேடி ஸ்டூடியோவுக்கு வந்தார்.

    அங்கு போட்டோ எடுக்கும் அறையில் உள்ள மின்விசிறியில் ரமேஷ் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதை பார்த்து அவரது தாய் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    இதுபற்றி தஞ்சை கிழக்கு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் கடன் தொல்லை காரணமாக ரமேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தூக்க மாத்திரைகளையும் அவர் சாப்பிட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    தற்கொலை செய்து கொண்ட ரமேசுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    நெட்டப்பாக்கம் அருகே கடன் தொல்லையால் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராப்பட்டு:

    நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிர்வேலு (வயது 54). இவர், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட நத்தமேடு பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

    இவர், சிலரிடம் பணம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் கதிர்வேல் திண்டாடி வந்தார்.

    பணம் கடன் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் கதிர்வேல் விரக்தியில் இருந்து வந்தார்.

    இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் நேற்று காலை பணிபுரிந்த குடிநீர்தேக்க தொட்டி அருகே உள்ள கட்டிடத்தில் துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட கதிர்வேலுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    செந்துறை அருகே கடன்தொகை செலுத்தாததால் டிராக்டர் பறிமுதல் செய்த டிரைவரை அரிவாளால் வெட்டிய விவசாயி கைது செய்யபட்டார்.
    செந்துறை:

    செந்துறை அருகே உள்ள கோசுகுறிச்சியை சேர்ந்தவர் பக்கீர்அகமது (வயது 23). விவசாயி. இவர், கம்பத்தை சேர்ந்த ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று டிராக்டர் வாங்கி இருந்தார். இதற்காக, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை நிதிநிறுவனத்துக்கு செலுத்தி வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 4 மாதங்களாக அவர் கடன்தொகையை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த நிதிநிறுவனத்தினர் 4 பேர், டிராக்டரை பறிமுதல் செய்வதற்காக நேற்று முன்தினம் கோசுகுறிச்சிக்கு வந்தனர். அப்போது பக்கீர்அகமது, அவருடைய தம்பி மீரான் (21) ஆகியோருக்கும், நிதிநிறுவன ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதற்கிடையே நிதிநிறுவன ஊழியர்களுடன் வந்திருந்த டிரைவர் சரவணன் என்பவர், அங்கு நின்று கொண்டிருந்த டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பக்கீர்அகமது, தான் வைத்திருந்த அரிவாளால் சரவணனை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து பக்கீர்அகமதுவை கைது செய்தார். இதற்கிடையே நிதிநிறுவன ஊழியர்கள் தாக்கியதில் காயம் அடைந்ததாக கூறி, துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் மீரான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #tamilnews
    கர்நாடக மாநிலத்தில் ரூ.500 கடனுக்காக நண்பரின் மனைவியை கடத்தி சென்று திருமணம் செய்த சம்பவம் குறித்து கணவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். #DebtIssues #WomenAbducted
    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் கோகாக் அருகில் உள்ள முராகிபாவி கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் கொன்னாவர். இவரது மனைவி பார்வதி.

    பசவராஜின் நண்பர் ரமேஷ் ஷாகாபூரில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். அவருடன் பார்வதியும் அதே ஓட்டலில் வேலை பார்த்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இந்தநிலையில் ரமேஷிடம் பார்வதி ரூ.500 கடன் வாங்கி இருந்தார். 2 மாதங்கள் ஆகியும் கடனை அவர் திருப்பித்தரவில்லை. இதனால் ரமேஷ் பார்வதியின் மனதை மாற்றி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார். கணவரிடம் சேர்ந்து வாழவிடாமல் தடுத்து விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பசவராஜ் இதுபற்றி போலீசில் புகார் செய்ய வந்தார். அவர் தனது மனைவியை நண்பர் ரூ.500 கடனுக்காக கடத்திச் சென்றதாக போலீசாரிடம் கூறினார். இவரது விசித்திரமான புகாரால் போலீசார் ஆச்சரியம் அடைந்தனர்.

    ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராததால் பசவராஜ் அங்குள்ள துணை கமி‌ஷனர் அலுவலகத்துக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்தனர். ஆனாலும் அவரது புகாரை போலீசார் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் பசவராஜ் போலீஸ் மீது நம்பிக்கை இழந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். #DebtIssues #WomenAbducted
    திண்டுக்கல் அருகே வாங்கிய கடனை தராததால் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்த தாதன் மனைவி முத்துலெட்சுமி (வயது 40). இவர்கள் குடும்ப தேவைக்காக அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் கடன் வாங்கி இருந்தனர். கடந்த சில நாட்களாக கடன் தொகையை கட்டாமல் இருந்தனர். இது குறித்து அவர்களுக்குள் பல முறை வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று சின்னவர், முருகன் ஆகிய 2 பேரும் கடன் தொகையை கேட்டு சென்றுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் முத்துலெட்சுமியை அடித்து தாக்கியதுடன் வீட்டில் இருந்த பொருட்களையும் சூறையாடினர்.

    படுகாயமடைந்த முத்துலெட்சுமி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    #tamilnews
    ×