search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dargah"

    • அய்யம்பேட்டை அருகே வழுத்தூரில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது.
    • நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    அய்யம்பேட்டை அருகே வழுத்தூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில், நாலு கொடி கந்தூரி விழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு பக்கீர்மார்கள் மற்றும் பொதுமக்கள் ஊர்வலமாக புறப்பட்டு இரவு முழுவதும் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தனர்.

    அப்போது உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த பக்கீர்மார்கள், பொது மக்கள் சிலம்பாட்டம், வீர விளையாட்டுகள் விளையாடி ஆன்மிக பாடல்கள் பாடி மீண்டும் பள்ளிவாசலை வந்தடைந்தனர். நிகழ்ச்சியில் வழுத்தூர், அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை தொழிலதிபர் அப்துல் ரவூப் முன்னிலையில் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஹாஜா மைதீன், ஓ.பி.பசீர் அகமது, கமாலுதீன் பைஜி, முகம்மது நஜீர், ராஜம்மா மற்றும் ஜமாத்தார்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

    • 5-ந்தேதி அரண்மனை கொடி ஊர்வலம் வந்து கொடியேற்றம் நடைபெறுகிறது.
    • 8-ந்தேதி 14-வது இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    தமிழ்நாட்டில் உள்ள புகழ் பெற்ற தர்காக்களில் பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தர்காவும் ஒன்று. தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் கந்தூரி விழாவிற்கு வருவது வழக்கம்.

    கந்தூரி விழாவையொட்டி நேற்று கீழூர் ஜமாத்தின் நிறைபிறை கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வருகிற 4-ந் தேதி பச்சை களை ஊர்வலம், 5-ந்தேதி அரண்மனை கொடி ஊர்வலம் வந்து கொடியேற்றம் நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து மேலூர் ஜமாத்தின் பத்தாம் இரவு கொடி ஊர்வலம் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் ரவண சமுத்திரத்தில் இருந்து புறப்பட்டு, 6-ந் தேதி அதிகாலையில் பள்ளிவாசல் வந்தடைகிறது.

    இனாம்தார் எஸ்.பி.ஷா மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகுவார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு தீப அலங்கார திடலில் தீப அலங்காரம் நடைபெறும். 8-ந் தேதி 14-வது இரவு ராத்திபு ஓதுதல் நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இனாம்தார் எஸ்.பி.ஷா, வக்கீல் முகமது ரபி, முகமது சலீம் மற்றும் பள்ளிவாசல் மேலாண்மை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • 23-ந்தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றுதல் நடக்கிறது.
    • 24-ந்தேதி சிறப்பு துவா மற்றும் நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.

    நெல்லை மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா (ரலி) தர்கா கந்தூரி ஆண்டு விழா வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது.

    ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), கணவர் ஹசரத் சேகு முகம்மது (ஒலி) பெயரால் நடைபெறும் இந்த விழாவில் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் மறுநாள் (திங்கட்கிழமை) வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    23-ந்தேதி காலை 5.30 மணிக்கு கத்முல் குர்ஆன் தொடக்கம், 7 மணிக்கு குர்ஆன் தமாம் செய்தல் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு இமாம் முகம்மது யூசுப் ஆலிம் தலைமை தாங்குகிறார். காலை 8 மணிக்கு அரண்மனை புலிமான்குளத்தில் இருந்து யானை மீது கொடி, சந்தனக்குடம் தர்காவுக்கு கொண்டு வருதல், 9 மணிக்கு கொடியேற்றுதல் நடக்கிறது.

    10 மணிக்கு சந்தனம் மெழுகுதல் நடைபெறுகிறது. இதில் பரம்பரை டிரஸ்டிகள் வ.நயாஸ் அஹ்மத் பிஜிலி, எச்.ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    மாலை 3.30 மணிக்கு மவ்லூது ஹரீப் ஓதுதல், 5.30 மணிக்கு ராத்திப்புத்துல் காதிரிய்யா திக்ரு மஜ்லிசில் காயல்பட்டினம் எஸ்.ஏ.எம்.சலாஹூத்தீன் பங்கேற்கிறார். இரவு 7.30 மணிக்கு ஹதீஸ் தொடங்குகிறது. இதில் பெட்டைக்குளம் காதர் மீரா சாகிப் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி ஹபீலுல் காதர், சென்னை கோடம்பாக்கம் மஸ்ஜிதே ரஹூமா தலைமை இமாம் சதக்கத்துல்லாஹ் பாகவி, மேலப்பாளையம் அலிய்யா அரபிக்கல்லூரி பேராசிரியர் சேக் அப்துல் காதர், நெல்லை மேலச்செவல் சேக் மதார் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைமை இமாம் காஜா ஹூசைன் ஆலிம் உஸ்மானி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    இரவு 12 மணி முதல் டாக்டர் நெல்லை ஜி.எஸ்.அபுபக்கர், டாக்டர் ஏ.ரகிமா பேகம் குழுவினரின் இஸ்லாமிய கச்சேரி நடக்கிறது. 24-ந்தேதி காலை 5.45 மணிக்கு சிறப்பு துவா மற்றும் நேர்ச்சை வினியோகம் நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் வ.நயாஸ் அஹ்மத் பிஜிலி, எச்.ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி ஆகியோர் செய்துள்ளனர்.

    • விழாவில் தினமும் இரவு நேரத்தில் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது.
    • திருவிழா நாளை (சனிக்கிழமை) வரை நடக்கிறது.

    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற குத்துபுல் ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்காவில் இந்த ஆண்டிற்கான உரூஸ் என்னும் சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா நேற்று தொடங்கி நாளை (சனிக்கிழமை) வரை நடக்கிறது. இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு திருவிழாவிற்கான கொடி ஏற்றப்பட்டது.

    அதை தொடர்ந்து இரவு 11.55 மணிக்கு சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்கியது. மின்சார விளக்குகள் அலங்காரத்துடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை நாட்டிய குதிரையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து தர்காவை வந்தடைந்தது. இந்த விழாவில் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் திரளாக கலந்து கொண்டனர்.

    விழாவில் தினமும் இரவு நேரத்தில் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையது பாபுஜான், சையது சமசுதீன், சையது ரசூல், சம்சூதீன் மற்றும் பரம்பரை தர்கா ஹக்தார்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • தர்கா முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
    • சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா நாளை நடக்கிறது.

    மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற குத்துபுல் ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் தர்காவில் இந்த ஆண்டிற்கான உரூஸ் என்னும் சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு திருவிழாவிற்கான கொடி ஏற்றப்படுகிறது.

    விழாவில் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் அன்று இரவு நடக்கிறது. அப்போது மின்சார விளக்குகள் அலங்காரத்துடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க, ஒட்டகம், யானை, நாட்டிய குதிரையுடன் சந்தனக்கூடு ஊர்வலம் கோரிப்பாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து தர்காவை வந்தடையும்.

    இந்த விழாவை காண உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூரில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் அனைத்து மதத்தினரும் பெருமளவில் கலந்து கொள்வார்கள். இதையொட்டி தர்கா முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா மேனேஜிங் டிரஸ்டி பாஷல்பாஷா, டிரஸ்டிகள் சையது பாபுஜான், சையது சமசுதீன், சையது ரசூல், சம்சூதீன் மற்றும் பரம்பரை தர்கா ஹக்தார்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • சந்தனம், மகானின் சமாதியில் பூசப்பட்டது.
    • இவ்விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு மலர்கள் வழங்கி வழிபட்டனர்.

    விளாத்திகுளம் அருகே உள்ள வைப்பார் கிராமத்தில் உள்ள மகான் செய்யது சமசுதீன் ஷஹீது வலியுல்லாஹ் தர்காவில், சந்தனக்கூடு திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை முதல் தொடங்கி விமரிசையாக நடைபெற்றது.

    இதை முன்னிட்டு நேற்று வாத்தியம் மேளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் எடுத்து வரப்பட்ட சந்தனக்கூடு பாரம்பரிய முறைப்படி கிராமத்தில் உள்ள இஸ்லாமிய இளைஞா்கள், பெரியவா்கள் ஒன்றுகூடி பாட்டுபாடி களிகம்பு ஆட்டம் ஆடி ஊா்வலமாக சென்றனா். பின்னர் சந்தனம், மகானின் சமாதியில் பூசப்பட்டது. அங்கு உலக நன்மைக்காக சிறப்புத் தொழுகை நடந்தது. இந்த விழாவில் வைப்பாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு மலா்கள் வழங்கி வழிபட்டனா்.

    விழா நாட்களில் ஊர்வலமாக எடுத்து வரப்படும் சந்தனக்கூட்டின் ஒவ்வொரு பகுதியையும், ஒவ்வொரு சமூகத்தினரும் செய்து அலங்கரித்து எடுத்து வருவதால், அனைத்து மதத்தினரும் கொண்டாடும் மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. முதலில் பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இப்பந்தயத்தில் 31 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. இந்த போட்டியை சுற்றுவட்டார கிராமமக்கள் திரண்டிருந்து கண்டுகளித்தனர்.

    • ஏர்வாடி, கீழக்கரை தர்காவில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் திடீர் ஆய்வு செய்தார்.
    • இந்த தர்கா தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்தது மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெருவில் அமைந்துள்ள தமிழ்நாடு வக்பு வாரியதிற்கு பாத்தியமான 18 வாலிபர்கள் தர்காவை தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல் ரஹ்மான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த தர்கா தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்தது மீட்கப்பட்டது என்பது குறிப்பிட–த்தக்கது. தர்கா வளாகத்தில் தொழுகை கூடம் கட்டி தரும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை அவர் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேலத்தெரு உஸ்வத்துன் ஹசனா முஸ்லீம் சங்க தலைவரும் மற்றும் ஜமாத் தலைவருமான யூசுப் சாஹிப், பொருளாளர் ஹமீத் இப்ராஹிம், 18 வாலிபர்கள் சஹீத் கல்வி மற்றும் அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) தலைவர் ஜாஹிர் ஹுசைன், செயலாளர் ஷாஹுல் ஹமீது மற்றும் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல் ரஹ்மான் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தர்காவில் மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் தலைமையில் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

    தொடர்ந்து தர்கா அலுவலகத்தில் நிர்வாகி களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தர்கா சுற்றுச்சூழல் மற்றும் பக்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து ஏர்வாடியில் உள்ள மனநல மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள வசதிகளை கேட்டறிந்தார். தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் பாக்கிர் சுல்தான், உதவி தலைவர் சாதிக் பாட்ஷா, ஏர்வாடி குத்பா பள்ளி செயலாளர் ஹாஜி செய்யது ஹூசைன், நிர்வாக உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் உடன் சென்றனர்.

    • 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை முகமது நபியின் புகழ்பாடும் மவுலீது ஓதப்பட்டு வருகிறது.
    • கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மவுலீது நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    கீழக்கரையில் முகமது சதக் அறக்கட்டளை குடும்பத்தினர் சார்பில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி சதக் அவென்யூ வளாகத்தில் உள்ள மஜ்லிஸில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய மாதமான ரபியுல்அவ்வல் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை முகமது நபியின் புகழ்பாடும் மவுலீது ஓதப்பட்டு வருகிறது.

    கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மவுலீது நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு மவுலீது நிகழ்ச்சி தொடங்கியது. முகமது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப்சாகிப் தலைமையில், இயக்குனர்கள் ஹாமீது இபுராஹிம், ஹபீப் முகமது சதக்கத்துல்லா, முகமது அஸ்லம், முகமது சதக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட அரசு காஜி சலாஹுதீன், கீழக்கரை டவுன் கத்தீப் காதர்பக்ஸ் உசேன் ஆகியோர் உள்பட கீழக்கரை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த ஆலிம்கள், உலமாக்கள், இமாம்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மவுலீது ஓதினர்.

    கீழக்கரை செய்யது ஹமீதா மற்றும் அரூஸியா தைக்கா உள்ளிட்ட அரபிக்கல்லூரி ஆலிம், உலமா மாணவர்களும் கலந்து கொண்டு மவுலீது ஓதினர். கீழக்கரை உஸ்வதுன் ஹசனா முஸ்லிம் சங்கம் உள்பட அனைத்து ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மவுலீது நிகழ்ச்சியை யொட்டி தினந்தோறும் இரவு உணவு வழங்கப்படுகிறது. 12-ம் நாள் மவுலீதின்போது ஆயிரக்கணக்கானோருக்கு நெய்சோறு அன்னதானமும், கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மீலாது நபி விழாவும் நடைபெற உள்ளதாக அறக்கட்டளை தலைவர் யூசுப்சாகிப் தெரிவித்தார்.

    • சந்தனம் பூசி தப்ரூக் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழாவில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம் தாலுகா, வடக்கு மாங்குடியில் உள்ள ஹஜ்ரத் அஷ்ஷெய்க் சையது முகமது இனாயத்துல்லா கந்தூரி விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் அஷ்ஷெய்கு பதர் மலங்கு சாஹிபு வலியுல்லாவுக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சியும், ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி தப்ரூக் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

    மேலும் தர்காவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட கொடி மற்றும் சந்தனக்குடம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, ரவ்லா ஷரீபில் சந்தனம் பூசி பாத்திஹா ஓதி மீண்டும் தர்காவை வந்தடைந்தது. விழாவில், ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாங்குடி ஜமாத்தலைவர் அப்துல்நாசர் மற்றும் பசீர்அகமது, ராஜ்முகமது, செயலாளர் அப்துல்மாலிக், ஜமாத் ஆலோசகர் ஜபுருல்லா மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், முனாபிக்கத்துல் அனாம் சங்கம், காயிதே மில்லத் படிப்பகம் ஆகியோர் செய்து இருந்தனர். பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சந்தனக்கூடு விழா வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது.
    • இதில் திரளான முஸ்லம்கள் கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்டம் நாகூரில் சில்லடி தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கந்தூரி விழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக தர்கா அலங்கார வாசலில் இருந்து கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு செய்யது பள்ளி தெரு, தெற்கு தெரு, புதுமனைதெரு, பீரோடும் தெருவழியாக சென்று சில்லடி தர்காவை அடைந்தது.

    இதை தொடர்ந்து தர்கா பரம்பரை கலிபா மஸ்தான் சாஹிப் துவா ஓதி கொடியேற்றப்பட்டது. இதில் போர்டு ஆப் டிரஸ்டிகள் மற்றும் திரளான முஸ்லம்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா வருகிற 6-ந் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

    • இஸ்லாமிய முறைப்படி ஆடல், பாடலுடன் பூஜை செய்து குடத்தில் இருந்த சந்தனத்தை தர்காவில் பூசினர்.
    • இரவு முழுவதும் விடிய விடிய ஹவாலி நிகழ்ச்சி நடந்தது.

    வேப்பனப்பள்ளி அருகே பெத்தசிகரலப்பள்ளி கிராமத்தில் இஸ்லாமிய சகோதரர்களின் உருஸ் திருவிழா நடந்தது. விழாவையொட்டி பெத்தசிகரலபள்ளி கிராமத்தில் துர்வேஸ் ஹசாம் அலி பீர் தர்காவில் மேளதாளங்களுடன் தொடங்கியது. நேற்று மாலை 5 மணி அளவில் இஸ்லாமிய சகோதரர்கள் சந்தன குடத்துடன் தர்காவில் இருந்து ஊர்வலமாக வந்து பெத்தசிகரளபள்ளி தர்காவில் பூஜை செய்து ஊர்மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.

    தொடர்ந்து சந்தனகுடத்துடன் ஊர்வலமாக சென்று தர்காவில் இஸ்லாமிய முறைப்படி ஆடல், பாடலுடன் பூஜை செய்து குடத்தில் இருந்த சந்தனத்தை தர்காவில் பூசினர்.

    நிகழ்ச்சியில் தர்காவின் சாபுதீன் தலைமையில் தர்கா நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பாக அல்லாவின் பாட்டு பாடி உருஸ் திருவிழாவை கொண்டாடினர். இரவு முழுவதும் விடிய விடிய ஹவாலி நிகழ்ச்சி நடந்தது. விழாவில் அன்னதானம் நடந்தது.

    உருஸ் விழாவை காண கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிகோட்டை, பாலகோடு, தர்மபுரி, திருப்பத்தூர், ஆம்பூர், வேலூர், காட்பாடி, வாணியம்பாடி, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    • வருகிற 18 -ந்தேதி தலைக்கிழமை நிகழ்ச்சி நடக்கிறது.
    • 28-ந் தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது.

    திருவாடானை தாலுகா பாசிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் நைனா முகமது ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த தர்காவின் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி ஸ்தானிகன் வயல் மாணவநகரி கிராமத்தில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள பாசிபட்டினம் சந்தனக்கூடு மைதானத்தை வந்தடைந்தது.

    அதனைத் தொடர்ந்து தர்கா கமிட்டியினர் நாட்டிய குதிரை, மேளதாளங்கள் முழங்க தர்காவிற்கு அழைத்து வந்தனர். அதன் பின்னர் தர்காவில் மகான் அடக்க ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்த சந்தனக்குடம் சந்தனக்கூட்டில் வைக்கப்பட்டது. அதன்பின்னர் சந்தனக்கூடு தர்காவை 3 முறை வலம் வந்தது. பின்னர் மகான் அடக்க ஸ்தலத்தில் சந்தன குடம் வைக்கப்பட்டு உலக நன்மைக்காகவும் மத நல்லிணக்கத்திற்காகவும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் பாத்தியா ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து மகான் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு சந்தனம், மல்லிகைப் பூ, சீனி, பேரிச்சம்பழம் போன்றவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    திருவாடானை தாசில்தார் செந்தில் வேல்முருகன், போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ், தொண்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகேசன், விழா கமிட்டியை சேர்ந்த அமீர்கான், சேகனாதுரை, முஸ்தபா கமல், அபூபக்கர், காமீது மைதீன், கலியநகரி ஊராட்சி தலைவர் உம்மு சலீமா நூருல் அமீன், வருவாய்த்துறை, காவல்துறையினர், மகான் வாரிசுதாரர்கள், தர்கா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.

    வருகிற 18 -ந் தேதி தலைக்கிழமை நிகழ்ச்சியும், 28-ந் தேதி கொடி இறக்கமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஒலியுல்லா பேரர்கள் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

    ×