search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வேப்பனப்பள்ளி அருகே துர்வேஸ் ஹசாம் அலி பீர் தர்காவில் உருஸ் திருவிழா
    X

    துர்வேஸ் ஹசாம் அலி பீர் தர்காவில் உருஸ் திருவிழா நடந்த போது எடுத்த படம்.

    வேப்பனப்பள்ளி அருகே துர்வேஸ் ஹசாம் அலி பீர் தர்காவில் உருஸ் திருவிழா

    • இஸ்லாமிய முறைப்படி ஆடல், பாடலுடன் பூஜை செய்து குடத்தில் இருந்த சந்தனத்தை தர்காவில் பூசினர்.
    • இரவு முழுவதும் விடிய விடிய ஹவாலி நிகழ்ச்சி நடந்தது.

    வேப்பனப்பள்ளி அருகே பெத்தசிகரலப்பள்ளி கிராமத்தில் இஸ்லாமிய சகோதரர்களின் உருஸ் திருவிழா நடந்தது. விழாவையொட்டி பெத்தசிகரலபள்ளி கிராமத்தில் துர்வேஸ் ஹசாம் அலி பீர் தர்காவில் மேளதாளங்களுடன் தொடங்கியது. நேற்று மாலை 5 மணி அளவில் இஸ்லாமிய சகோதரர்கள் சந்தன குடத்துடன் தர்காவில் இருந்து ஊர்வலமாக வந்து பெத்தசிகரளபள்ளி தர்காவில் பூஜை செய்து ஊர்மக்களுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.

    தொடர்ந்து சந்தனகுடத்துடன் ஊர்வலமாக சென்று தர்காவில் இஸ்லாமிய முறைப்படி ஆடல், பாடலுடன் பூஜை செய்து குடத்தில் இருந்த சந்தனத்தை தர்காவில் பூசினர்.

    நிகழ்ச்சியில் தர்காவின் சாபுதீன் தலைமையில் தர்கா நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பாக அல்லாவின் பாட்டு பாடி உருஸ் திருவிழாவை கொண்டாடினர். இரவு முழுவதும் விடிய விடிய ஹவாலி நிகழ்ச்சி நடந்தது. விழாவில் அன்னதானம் நடந்தது.

    உருஸ் விழாவை காண கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிகோட்டை, பாலகோடு, தர்மபுரி, திருப்பத்தூர், ஆம்பூர், வேலூர், காட்பாடி, வாணியம்பாடி, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×