search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீழக்கரை தர்கா"

    • ஏர்வாடி, கீழக்கரை தர்காவில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் திடீர் ஆய்வு செய்தார்.
    • இந்த தர்கா தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்தது மீட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெருவில் அமைந்துள்ள தமிழ்நாடு வக்பு வாரியதிற்கு பாத்தியமான 18 வாலிபர்கள் தர்காவை தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல் ரஹ்மான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த தர்கா தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்தது மீட்கப்பட்டது என்பது குறிப்பிட–த்தக்கது. தர்கா வளாகத்தில் தொழுகை கூடம் கட்டி தரும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை அவர் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மேலத்தெரு உஸ்வத்துன் ஹசனா முஸ்லீம் சங்க தலைவரும் மற்றும் ஜமாத் தலைவருமான யூசுப் சாஹிப், பொருளாளர் ஹமீத் இப்ராஹிம், 18 வாலிபர்கள் சஹீத் கல்வி மற்றும் அறக்கட்டளை (ஜகாத் கமிட்டி) தலைவர் ஜாஹிர் ஹுசைன், செயலாளர் ஷாஹுல் ஹமீது மற்றும் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல் ரஹ்மான் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தர்காவில் மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் தலைமையில் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

    தொடர்ந்து தர்கா அலுவலகத்தில் நிர்வாகி களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தர்கா சுற்றுச்சூழல் மற்றும் பக்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    தொடர்ந்து ஏர்வாடியில் உள்ள மனநல மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள வசதிகளை கேட்டறிந்தார். தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் பாக்கிர் சுல்தான், உதவி தலைவர் சாதிக் பாட்ஷா, ஏர்வாடி குத்பா பள்ளி செயலாளர் ஹாஜி செய்யது ஹூசைன், நிர்வாக உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் உடன் சென்றனர்.

    ×