search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Curry"

    சப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முள்ளங்கி இறால் குருமா. இன்று இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்  :

    இறால் - 1/2 கிலோ
    முள்ளங்கி - 1/4 கிலோ
    வெங்காயம் - 200 கிராம்
    தக்காளி - 200 கிராம்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    தேங்காய் துருவல் - 1/4 மூடி
    பட்டை - 2
    லவங்கம் - 2
    இஞ்சி, பூண்டு - 1 டீஸ்பூன்
    தயிர் - 1/2 கப்
    பச்சை மிளகாய் - 7
    உப்பு - தேவையான அளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி



    செய்முறை  :

    இறாலைச் சுத்தம் செய்து தயிரில் சிறிது நேரம் ஊற வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகாயை கீறிக் கொள்ளவும்.

    தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.

    முள்ளங்கியை வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை லவங்கம் போட்டுத் தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து சுத்தம் செய்த இறாலை, முள்ளங்கி சேர்த்து வதக்கவும்.

    தேவையான உப்பு சேர்த்து, அரைத்த தேங்காயை சேர்க்கவும்.

    முள்ளங்கியும், இறாலும் நன்கு வெந்ததும், நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சப்பாத்தி, நாண், சாதம், இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பஞ்சாபி சிக்கன் கறி. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    எலும்புடன் சிக்கன் - கால் கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
    ஏலக்காய் - 2
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    கரம் மசாலா - அரை தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    தயிர் - கால் கப்
    மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    பட்டை - ஒரு சிறுத் துண்டு
    லவங்கம் - 3
    பிரியாணி இலை - ஒரு சிறுத் துண்டு
    கொத்தமல்லி இலை
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி



    செய்முறை :

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து சிவக்க வதக்க வேண்டும்.

    இந்த அதை நன்றாக ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

    பின் மீண்டும் அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை போட்டு தாளித்த பின்னர் அதில் அரைத்த விழுது சேர்த்து வதக்கவேண்டும்.

    அடுத்து அதில் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவேண்டும்.

    பின் விழுதாக அரைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி பச்சை வாசம் போய் எண்ணெய் பிரியும் போது சிக்கன் துண்டுகளை சேர்த்து மூடி வேக விடவும்..

    சிக்கன் வெந்து மீண்டும் கலவை திரண்டு வரும் போது தயிர் சேர்த்து கலந்து நன்றாக கலவை கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான பஞ்சாபி சிக்கன் கறி ரெடி. 

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிலருக்கு காரசாரமாக சாப்பிட பிடிக்கும். இன்று பச்சை மிளகாயில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த குழம்பை தோசை, இட்லி, சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 15,
    புளி - சிறிய எலுமிச்சை அளவு,
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,  
    கடுகு - அரை டீஸ்பூன்,
    வெந்தயம் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    வறுத்துப் பொடிக்க :

    பச்சரிசி - 2 டீஸ்பூன்,
    துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    வெந்தயம் - அரை டீஸ்பூன்,
    தனியா - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயம் - சிறிதளவு.



    செய்முறை:

    வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து பொடித்து கொள்ளவும்.

    பச்சை மிளகாயைக் கழுவித் துடைத்து, காம்பை பாதி ‘கட்’ செய்யவும். நுனியைக் கத்தியால் கீறவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு, இதனை நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி… தனியே எடுத்து வைக்கவும்.

    புளியைக் கரைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, அடுப்பிலேற்றிக் கொதிக்கவிடவும்.

    அடுத்து அதில் உப்பு, மஞ்சள்தூள் போட்டு, புளியின் பச்சை வாசனை போனதும், வறுத்துப் பொடித்த பொடியை 2 டீஸ்பூன் போடவும்.

    குழம்பு நன்றாக கொதித்த பின் இறக்குவதற்கு முன் வதக்கிய பச்சை மிளகாயைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

    வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.

    சூப்பரான காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு

    இந்தக் குழம்பை மோர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ளலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×