search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corona Vaccine"

    • இதுவரை 90 சதவீத சீனர்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர்.
    • தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக இலவசமாக வழங்கப்படுகிறது.

    பீஜிங்

    கொரோனா வைரஸ் தொற்றின் ஊற்றுக்கண்ணாக கருதப்படும் சீனாவில் கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கொரோனாவை முற்றாக ஒழிக்க அந்த நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை கடைப்பிடித்து வருகிறது.

    குறிப்பாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை செலுத்துவதில் அரசு தீவிரம் கவனம் செலுத்தி வருகிறது.

    இதுவரை 90 சதவீத சீனர்கள் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர் என்றும், 57 சதவீதம் பேர் பூஸ்டர் டோசை பெற்றுள்ளனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வதை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஊசியின்றி வாய் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை சீனா பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த நாட்டின் வர்த்தக தலைநகராக கருதப்படும் ஷாங்காய் நகரில் நேற்று முதல் வாய் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தடுப்பு மருந்து, ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக இலவசமாக வழங்கப்படுகிறது.

    கொரோனாவுக்கு வாய் வழியாக வழங்கப்படும் உலகின் முதல் தடுப்பு மருந்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் தற்போது மக்களிடையே ஆர்வம் இல்லை.
    • பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு தேவை இல்லை.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து விட்ட நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதிலும் மக்களிடம் ஆர்வம் இல்லை.

    இந்நிலையில் புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதர் பூனவல்ல பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் கடந்த டிசம்பர் முதலே கோவிஷீல்டு தயாரிப்பை நிறுத்தி விட்டோம். அப்போது கையிருப்பில் இருந்த சுமார் 10 கோடி டோஸ்கள் காலாவதியாகி விட்டதால் வீணாகி விட்டது.

    பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்வதில் தற்போது மக்களிடையே ஆர்வம் இல்லை. இதனால் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு தேவை இல்லை.

    நாங்கள் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி தயாரிப்பில் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம். எங்களின் கோவாவேக்ஸ் தடுப்பூசி அதன் செயல் திறனுக்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பூஸ்டர் தடுப்பூசி அடுத்த 10-15 நாட்களில் ஒப்புதல் பெற வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா செய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய சார்ஸ் கோவிட்-2 தோற்றம் காரணமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்படக் கூடிய வயதினருக்கு 100 சதவீதம் தடுப்பூசி போட வேண்டும் என்றார்.

    • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.
    • மெகா தடுப்பூசி முகாமில் 21,678 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4-ம் அலையை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மைய ங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்பட்டன. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக போடப்பட்டது. மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    நேற்று முன்தினம் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 515 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 4 ஆயிரத்து 350 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 16 ஆயிரத்து 813 பேரும் என மொத்தம் 21,678 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர் தெரிவித்தனர்.

    இந்த மாதம் இறுதி வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • ஒரேநாளில் 7,846 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    • 38-வது சிறப்பு முகாம்

    பெரம்பலூர்

    தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 38-வது சிறப்பு முகாம்களை நேற்று நடத்தியது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 7,846 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    • 5,95,660 பயனாளிகளுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.
    • 37 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 5.43 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

    மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50,000 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடைபெற்றது.

    இதில் 12 வயதிற்கு மேற்பட்ட 7,75,193 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணையாக 29,729 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 1,49,804 பயனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 5,95,660 பயனாளிகளுக்கு

    பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.59% பேருக்கு முதல் தவணையாகவும் 91.61% பேர்களுக்கு இரண்டாம் தவணையாகவும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள.

    இதுவரை நடைபெற்ற 37 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 43 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள். இன்று (26.09.2022) கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்ப–ட்டன.
    • இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவ–மனை ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ–மனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளி–கள் உள்பட 1,597 மையங்க–ளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி முகாம் நடந்தது.

    இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்ப–ட்டன. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் இலவசமாக போடப்பட்டது. மாவட்டத்தில்

    1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை மட்டும் 675 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 4 ஆயிரத்து 244 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 19 ஆயிரத்து 805 பேரும் என மொத்தம் 24,724 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையினர் தெரிவித்தனர்.

    கடந்த முறை நடந்த முகாமை காட்டிலும் நேற்று நடந்த முகாமில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த மாதம் இறுதி வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எனவே இதுவரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவ–மனை ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று செலுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். 

    • ஒரே நாளில் 13,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    • 37-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது.

    அரியலூர்

    தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 37-வது சிறப்பு முகாம்கள் நேற்று நடந்தது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 2,521 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 10,545 பேருக்கும் என ஒரே நாளில் மொத்தம் 13,066 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது."

    • ஜூன் மாதம் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் காசநோய் பாதிப்பு உள்ளதாக தெரிவித்தனர்.
    • ஜூலை மாதம் நல்லத்தாய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

    நெல்லை மாவட்டம் பருத்திபாடு நடுத்தெருவை சேர்ந்தவர் மகாராஜன், தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனக்கு திருமணமாகி ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகள் நல்லத்தாய் என்பவர் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    எனது மகள் தடுப்பூசி செலுத்த விருப்பமில்லை என கூறிய நிலையிலும், 10-ம் வகுப்பு தேர்வு எழுத தடுப்பூசி கட்டாயம் எனக்கூறி ஆசிரியர்கள் அவருக்கு தடுப்பூசி செலுத்தினார்கள். அதன்பின்னர் எனது மகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பல்வேறு தனியார் மருத்துவமனையில் நல்லத்தாய்க்கு சிகிச்சை அளித்தோம். ஆனாலும் குணமாகவில்லை. இதனால் அவரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம்.

    ஜூன் மாதம் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மூளையில் காசநோய் பாதிப்பு உள்ளதாக தெரிவித்தனர். ஜூலை மாதம் நல்லத்தாய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் சற்று உடல்நிலை தேறிய நிலையில், தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    சுயநினைவு இல்லாமல் இருக்கும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கடந்த 3 மாதங்களாக நெல்லை அரசு மருத்துவமனையில் தங்கி இருந்து மகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். எங்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் இல்லை. எனவே நல்லத்தாய்க்கு உயர்தர சிகிச்சை அளிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் முன்பரிசோதனை செய்யாமல் நல்லத்தாய்க்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் 2000 சிறப்பு முகாம்கள் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள், தங்கள் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று செலுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து தீவிரப்பட்டு வருகிறது. 12 வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை பல்வேறு பிரிவுகளாக பிரித்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    இதுவரையில் 35 மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்கள் மூலம் 5 கோடியே 22 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    36-வது மெகா சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற முகாம்கள் மூலம் 12.28 லட்சம் பேர் பயன்அடைந்தனர்.

    நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.

    இந்த முகாம்களை இதுவரை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.

    அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும் முகாம்களில் எல்லா தடுப்பூசிகளும் போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    முன் எச்சரிக்கை என்னும் பூஸ்டர் தடுப்பூசி போட பொதுமக்களிடம் அதிக ஆர்வம் இல்லை. இந்த தடுப்பூசி வருகிற 30-ந்தேதி வரை இலவசமாக போடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் பின்னர் தொடருமா? இல்லையா? என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. மத்திய அரசு அறிவித்துள்ள இந்த கால அவகாசத்திற்குள் பொதுமக்கள் பூஸ்டர் தடுப்பூசியை கட்டணம் இல்லாமல் போட்டுக்கொள்ளலாம்.

    சென்னையில் 2000 சிறப்பு முகாம்கள் நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள், தங்கள் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று செலுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

    • கொரோனா வைரசால் உலகளவில் பெரும் பாதிப்புக்குள்ளான நாடு அமெரிக்கா.
    • பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு ஆண்டுக்கு ஒரு டோஸ் போடப்படும்.

    கொரோனா வைரசால் உலகளவில் பெரும் பாதிப்புக்குள்ளான நாடு அமெரிக்கா. அங்கு 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுதோறும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பை அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்டுள்ளார்.

    இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில், "நாங்கள் 2 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு புதிய தடுப்பூசியை தொடங்குகிறோம். இது புதிய அணுகுமுறை ஆகும். பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு ஆண்டுக்கு ஒரு டோஸ் போடப்படும். கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறி வருவதால், ஆதிக்கம் செலுத்துகிற உருமாறும் வைரஸ்களை இலக்காக கொண்டு, நமது தடுப்பூசிகளை புதுப்பிக்க முடியும்.

    வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசியைப் போலவே இந்த தடுப்பூசியை தொழிலாளர் தினத்துக்கும், ஹாலோவீனுக்கும் (இது அக்டோபர் மாதம் வரும்) இடையே நீங்கள் அதைப் போட்டுக்கொள்ள வேண்டும். இது பாதுகாப்பானது. இதைப் பெறுவது எளிது. இது இலவசம்" என தெரிவித்துள்ளார்.

    இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பைசர்-பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கி உள்ளன.

    • திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 48,528 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    • 35-வது சுற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

    திருச்சி

    தமிழகத்தில் 35-வது சுற்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 1,820 இடங்களில் இந்த முகாம் நடைபெற்றது. காலை 7 மணி முதல் நடைபெற்ற இந்த முகாம்களில் மாவட்டம் முழுவதும் 48 ஆயிரத்து 528 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் கோவிஷீல்டு முதல் தவணை ஆயிரத்து 865 பேரும், 2-வது தவணை 9 ஆயிரத்து 18 பேரும், பூஸ்டர் டோஸ் 3 ஆயிரத்து 216 பேரும் செலுத்தினர். கோவாக்ஸின் முதல் தவணை 306 பேரும், இரண்டாவது தவணை ஆயிரத்து 503 பேரும், பூஸ்டர் டோஸ் 2 ஆயிரத்து 920 பேரும் செலுத்திக்கொண்டனர்.

    • ஒரே நாளில் 10,289 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    • ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்

    பெரம்பலூர்:

    தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 35-வது சிறப்பு முகாம்கள் நடந்தது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 10,289 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 15,607 பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    ×